இவர்கள் மாறுவது எப்போது…. இவர்களை மாற்றுவது எப்படி…..????????????


olai paai, palagai thalaiyanai, bootha kannaadi - kanchi munivar( படுத்திருப்பது ஓலைப்பாயில்,
மரப்பலகை தான் தலையணை,
சிறிய எழுத்துக்களைப் படிக்க பக்கத்தில் பூதக்கண்ணாடி-
நம்மால் கனவில் கூட காண முடியாத ஒரு எளிமை …

——

kanchi sage

காஞ்சி மாமுனிவர் ஒருமுறை சொன்னர் –
” மனுஷனாய் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல்
அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே…
எதற்காக?

தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான்…!
வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை.

ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை.
அதனால் வருகிற சுகம் தீர்ந்துபோகிறது.
இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான்.
அவற்றைப் பெறவே அலைகிறான்.

இவனுக்குள்ளேயே ” இயல்பான உள் ஆனந்தம்”
என்கிற ஒன்று
மகா சமுத்திரம் மாதிரி நிறைந்திருப்பதை அவனால்
உணற முடிவதில்லை.

பதவி, பணம், கௌரவம், பப்ளிசிட்டி என்று
வெளியிலிருந்து தான் நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக
எண்ணிக்கொண்டு ஓயாமல் அதற்காக பிரயத்தனம் செய்வது,
எப்படி இருக்கிறது என்றால் –
அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல்
ஒரு சொட்டு ஜலத்துக்காகத் தவிக்கிற மாதிரிதான்”

சத்தியமான வார்த்தை …!

ஆனால் இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள்
மனசாட்சியே இல்லாமல், இப்படி அலைகிறார்களே…
இறுதியில் இவர்கள் கொண்டு போகப்போவது தான் என்ன ..?

—————————————————————

page-1
page-2
page-3
page-4

————————-

பின் குறிப்பு –

இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து எதாவது
சீரியசாக எழுத வேண்டும் என்று தான் துவங்கினேன்.

எதேச்சையாக, ஒரு நண்பர் எடுத்து பார்த்திருக்கும்
இரண்டு வருடத்திற்கு முந்தைய பழைய இடுகை ஒன்றை
பார்த்தேன்.

இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக இருக்கவே
சிறு மாற்றங்களுடன் மீண்டும் பதித்திருக்கிறேன்.

மீண்டும் தேர்தல் விரைவில் வரலாம்… ஆனால்….?
இவர்களில் யாராவது தானே மீண்டும் வருவார்கள்…?

நமது இன்றைய அரசியல் அவலம்
மாற வேண்டுமானால் –
முற்றிலும் புதியவர்கள்,
இன்று இருப்பவர்களின் மூச்சுக்காற்று கூட
தங்கள் மீது படாத புதியவர்கள் –
வர வேண்டும்….
இல்லையேல் –
நமக்கு விடிவேதும் இருப்பதாக தோன்றவில்லை…

” இன்றில்லா விட்டாலும் –
நாளையாவது மாறும் அல்லவா ? ”

– என்கிற நம் கனவு, நனவாக
அந்த இறை நமக்கு துணை நிற்கும் என்று நம்புவோம்…!!!

—————–

இந்த சமயத்தில் மகிழ்ச்சியான ஒரு செய்தியையும்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.,,,

இந்த வலைத்தளத்தின் வருகை எண்ணிக்கை ( ஹிட்ஸ் )
கடந்த டிசம்பர் மாதமே இருபது லட்சங்களை
தாண்டி விட்டது…!!!

உங்கள் அன்பிற்கு ஆயிரம் நன்றிகள் …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to இவர்கள் மாறுவது எப்போது…. இவர்களை மாற்றுவது எப்படி…..????????????

 1. LVISS சொல்கிறார்:

  Mr K M I started reading your blog one or two years back -It was accidental that I bumped into ur blog when I was searching for a Tamil blog to read – I have been a regular reader since and sometimes I put my weight on the blog inviting some muck — I find that some regular contributors are not commenting in the blog —
  In T Nadu politics we have limited choice like in every other state –.In kerala it is UDF or NDF in UP it is SP or BSP ,in W Bengal it is TMC and CPM –The national parties are in a hurry to set foot in states and so they dont want to go it alone and build their base gradually —I do not know whether we will have an election soon –That is only if there is another secret ballot trust vote —
  2o lacs hits is an achievemnt for a language blog –Congrats and keept up —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
   யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் –
   அயராமல் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தின் மூலம்
   தெரிவித்து வருகிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Srini சொல்கிறார்:

  Respected KM sir,

  You were always an inspiration to many of us. Prayers for a healthy life and All the best..
  regards
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி ஸ்ரீநி.
   எல்லாவற்றிற்கும் உங்களைப் போன்ற நண்பர்கள்
   கொடுக்கும் ஊக்கம் தான் காரணம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Nakeeran சொல்கிறார்:

  KM Sir, your handwritten letter is inspiring and suits for anytime, lifetime. I am your regular visitor, cannot stay away from your site even on holidays. Keep going and hearty wishes for your soonest 1 Crore hits.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நக்கீரன்….
   பேராசை….
   அது வரை தாங்க மாட்டேன்….. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப புதுவசந்தம் அன்பு,

   நான் இந்த முயற்சியில் தோற்று விட்டேன்…!!!
   இனி அந்த யானைகளே பார்த்துக் கொள்ள வேண்டியது தான்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  முண்டாசு கவிஞனின் உருவத்தை தாங்கியுள்ள ” விமரிசனம் தளம் ” மற்றும் ” எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும் ” என்கிற வரிகள் … அய்யா காவிரி மைந்தன் அவர்களின் அடையாளங்கள் ….

  பாரதியின் மனத்துணிச்சலுக்கும் — தமிழ் நாட்டின் மீதும் ,தமிழின் மீதும் அவனுக்கு இருந்த சூடு – சொரனையும் – அக்கறையும் ” மஹாத்மா காந்தியையே ” அசர வைத்துள்ளது ….

  ஒரு முறை மஹாத்மா தமிழ்நாட்டு வருகையின் போது ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி விட்டு சென்றார் … அது குறித்து பாரதி அவருக்கு ஒரு கடிதம் எழுதினர் – அதில் — தாங்கள் தமிழ்நாட்டில் பேசிய போது ஒன்று உங்களின் தாய் மொழியான ” குஜராத்தியிலோ ” அல்லது பொதுவான ” ஹிந்தியிலோ ” பேசாமல் — ஏன் நாம் விரட்டி அடிக்க நினைக்கிற வெள்ளையனின் மொழியான ஆங்கிலத்தில் பேசினீர்கள் என்று கேட்டிருந்தார் ….

  அதற்கு மஹாத்மா பதில் போடும்போது – நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை – அடுத்தமுறை வரும் போது கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் என்று கடிதம் எழுதிவிட்டு … பின் குறிப்பு : நீங்கள் ஏன் இதை ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்டு இருந்தார் …

  அதற்கு பதிலாக மீசையுள்ள பாரதி : — ” எனக்கு பிடிக்காத எதையும் — எனக்கு பிடிக்காத மொழியில் தான் எழுதுவேன் ” என்று பதில் போட்டு ” தேசப்பிதாவையே அசர வைத்தவன் — எங்கள் பாரதி …

  இதை ஏன் எங்கே குறிப்பிடுகிறேன் என்றால் — திரு .கா.மை . அவர்கள் ” தன் மனதில் பட்டதை ” — நாட்டின் நடப்பை — எந்த சமரசத்திற்கும் — இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் — சமுதாய அக்கறையோடு குறித்த நேரங்களில் ” இடுக்கைகளாக ” பதிவிட்டு வருவது தான் ” இருபது லட்சம் ஹிட்ஸ்களை ” தாண்டி பயணிக்கிறது ….

  தளத்தின் மேன்மைக்கும் — மாண்புக்கும் — பாணிக்கும் — எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் ” பின்னூட்டங்களை ” இடுவதும் — மறு மொழிகளை பதிவதும் ” நம் நண்பர்களின் ” தனி சிறப்பு … பயணங்கள் தொடரட்டும் கா.மை அவர்களின் உள்ளன்பின்படியே …. !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நான் மேலே சொல்லி இருப்பது போல்
   உங்களைப் போன்ற நண்பர்களின் பின்னூட்டங்கள்
   இந்த தளத்திற்கு வலிமையும், சுவாரஸ்யமும் சேர்க்கின்றன.
   உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. avudaiappan சொல்கிறார்:

  congratulation….we will ever with you

 6. Thanmanamigu Thamizhan சொல்கிறார்:

  Ayya neengal Thennattu Anna HAZARE..Avar congress aatchi kaalathil mattum poradinaar,neengal yaar aatchiyil irunthalum vittuvaippathillai..karuthu suthanthiram namathu valaithalathil eppozhuthum uyirottamaga irukkirathu.HAZARE oru gandhiya vaathi,neengal thennatu gandhiya vaathi..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (Thanmanamigu Thamizhan)

   நான் அந்த அளவிற்கெல்லாம் தகுதி உடையவன் அல்ல.
   இருந்தாலும் உங்கள் நல்வாழ்த்துக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. seshan சொல்கிறார்:

  after long time gap seeing the hand written letter and happy to read.
  best wishes for future (awareness) articles.

 8. gopalasamy சொல்கிறார்:

  Congratulations. Pray God for your good health .

 9. D. Chandramouli சொல்கிறார்:

  KM, wish you all the best, good health, peace of mind and happiness.

 10. தமிழன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் கா.மை. சார். தொடருங்கள் உங்கள் விமரிசனத்தை. சரியோ தவறோ, விமரிசனத்தின் காரணம் ‘நல்லது நடக்கவேண்டும்’ என்ற தெள்ளிய ஆசைதான் என்பதைப் புரிந்துவைத்துள்ளோம்.

  உத்வேகத்தோடு தொடருங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்ப தமிழன்.

   பழகியவர்கள் என்னை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்
   என்பது புரிவதால் தான் நான் தொடர்ந்து மனதில் தோன்றுவதையெல்லாம்
   இங்கு கொட்ட முடிகிறது.

   உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 11. புதியவன் சொல்கிறார்:

  உங்கள் நோக்கத்தைப் பாராட்டுகிறேன். இன்னும் இதைப் பற்றி எழுதவில்லையா என்று அடிக்கடி தளத்தைப் பார்வையிடுகிறேன். அதற்கு உங்கள் நேர்மையான விமரிசனம் காரணம். வாழ்த்துக்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி “புதியவன்”.

   உங்களைப் பார்த்தால் “புதியவன்”- ஆக எனக்கு
   தோன்றவில்லை…. 🙂 🙂

   நன்றாக எழுதுகிறீர்களே அதை வைத்து சொல்கிறேன்… 🙂 🙂

   நன்றி… தொடர்க…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. Sundar Raman சொல்கிறார்:

  நமஸ்காரம் சார் , பல வருஷங்களாக உங்களில் பதிவை படித்து வருகிறேன் , அண்மையில் தான் தைரியத்தை வரவழைத்தது , பின்னூட்டம் எல்லாம் எழுதினேன் , சில சமயங்களில் உங்கள் கோபத்துக்கும் ஆளானேன் … வாழ்த்துக்கள் , நிச்சயமாக அந்த சிறு பொறி தெறித்து விட்டாயிற்று … இனி அது அதன் வேலையை செய்யும் …

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சுந்தர் ராமன்,

   வணக்கம். நல்லவேளை இப்போதாவது வெளிப்படையாக
   சொன்னீர்களே… கோபம் எல்லாம் ஒன்றுமில்லை..
   கருத்து மோதல்கள் நேரும்போது உண்டாகும் ஒரு வேகம்.. அவ்வளவு தான்.
   nothing personal…

   தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
   நாம் சொல்வதை அப்படியே மற்றவர்களும் ஏற்றாக வேண்டும்
   என்று நான் எப்போதும் கட்டாயப்படுத்துவது கிடையாது…

   என்ன … கொஞ்சம் ஆணித்தரமாக சொல்வேன்… அவ்வளவு தான்.

   வாழ்த்துகளுக்கு நன்றி…. நானும் திருச்சிக்காரன் தான்… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.