” மோடிஜியை, கையாலாகாத பிரதமர் ” என்று திரு.சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறாரா … ? !!!

sskpcpc

திரு.சுப்ரமணியன் சுவாமி நேற்று நிகழ்த்திய செய்தியாளர்
சந்திப்பில், திரு.கார்த்தி ப.சி. குறித்தும், அவரது தந்தை
திரு.ப.சிதம்பரம் அவர்களைக் குறித்தும் பல குற்றச்சாட்டுகளை
கூறி இருக்கிறார்…
அவற்றை ஒரு கடிதத்தின் மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி
அவர்களுக்கு தெரிவித்து, அந்த கடித நகலையும்
செய்தியாளர்களிடையே கொடுத்திருக்கிறார்……

திரு.சு.சுவாமியின் செய்தியாளர் சந்திப்பு வீடியோவையும்,
பிரதமருக்கு அவர் எழுதிய கடித நகலையும், இடுகையின்
இறுதியில் தந்திருக்கிறேன்.

இந்த விஷயம் குறித்து வெளியாகியுள்ள ஒரு
செய்திச் சுருக்கம் கீழே –
(tamil.thehindu.com – 20 பிப்ரவரி, 2017)

———————————————–

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத நடவடிக்கை
மூலம் பெரிய அளவில் கறுப்புப் பணத்தை கார்த்தி சிதம்பரம்
சேர்த்ததாக பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத் துறையினருக்கு
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய
அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் சுவாமி குறிப்பிட்டார்.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் ‘மாறன் சகோதரர்கள் மீது
குற்றம்சாட்டப்பட்டது … ஆனால் உண்மையான குற்றவாளி
சிதம்பரம்தான்’ என்ற சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பான
ஆவணங்கள் தன்னிடம் உள்ளதைக் காட்டினார்.

“சட்ட விரோத ஒப்பந்தத்திற்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்தார்.
இதன்படி மலேசிய நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் 100%
பங்குகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 74%
பங்குகளையே வாங்க அனுமதிக்க முடியும்.

கார்த்தி சிதம்பரத்தினால் 21 அயல்நாட்டு வங்கிக் கணக்குகள்
தொடங்கப்பட்டன. இதில் ரூ.6 லட்சம் கோடி திரண்டுள்ளது,
மொத்தத்தில் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள தொகை
ரூ.120 லட்சம் கோடியாகும்.

2014-ல் கறுப்புப் பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு
வருவோம் என்று கூறினோம், இது குறித்து விசாரணை
முகமைகள் நிறைய ஆதாரங்களையும் தரவுகளையும் திரட்டின.

ஆனால் ஒன்றும் செய்யவில்லை.

கார்த்தி சிதம்பரத்தை நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ்
விசாரிக்க வேண்டும் என்று விசாரணை அமைப்புகள் கோரின,

ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

கறுப்புப் பண விவகாரத்தில் பிரதமர் மோடியை குறை கூறுவது
எளிது. ஆனால் ஆட்சியதிகாரம் இதில் ஒத்துழைப்பு
அளிக்கவில்லையெனில் நடவடிக்கை கடினமே” இவ்வாறு
கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது
ட்விட்டரில், “என்னைப் பற்றி அவதூறான சில குற்றச்சாட்டுகள்
பரப்பப்படுகின்றன. என்னுடைய கணக்கு வழக்குகள் சட்டத்திற்கு
இணங்க மிகச்சரியாக உள்ளது ” என்று மறுத்துள்ளார்.

——————————————-

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது,
திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி –

“பிரதமருக்கு நான் கடிதம் எழுதும்போதெல்லாம், அவரும்
மேல் நடவடிக்கைக்கு அனுப்பி விடுகிறார்… ஆனால்,
பிரதமரே நினைத்தாலும், சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு
தருவதில்லை –

– என்பதால் இந்த விஷயத்தில் இது குறித்து
மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை …
( அய்யோ பாவம்.. ? ) பிரதமர் என்ன செய்வார்..?” என்கிறார்.

அதாவது, நிதியமைச்சகத்தில் உள்ள சில அதிகாரிகளை
பிரதமராலேயே கையாள முடியவில்லையாம்… !!!

இதற்கு என்ன அர்த்தம்…..?
அந்த சு.சா. தான் செப்ப வேண்டும்…!!!

ssletter-1

ssletter-2

ssletter-3

ssletter-4

ssletter-5


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ” மோடிஜியை, கையாலாகாத பிரதமர் ” என்று திரு.சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறாரா … ? !!!

 1. selvarajan சொல்கிறார்:

  சு. சுவாமியின் டிவிட்டரில் இரண்டு : — முதலாவது Subramanian Swamy ✔ @Swamy39 My exposé tomorrow will be one politician. After his prosecution I will take up the next person. One at a time 4:04 PM – 19 Feb 2017
  // அரசியல்வாதி ஒருவரை பற்றி நாளை திடுக்கிடும் தகவல்.. சு.சாமி டிவிட்டால் பரபரப்பு //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/subramaniyan-swamy-speaking-about-expose-274616.html
  அடுத்தது // முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்… – கமல் ஹாஸனைத் திட்டும் சு சாமி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/subramanya-swamy-blasts-kamal-as-pompous-idiot-274655.html என்னதான் ” ஆச்சு சு.சுவாமிக்கு ” … ?
  மேலே குறிப்பிட்டுள்ள அரசியல்வாதி ” சிதம்பரம் & சன் ” தானோ … ?

  // 2014-ல் கறுப்புப் பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு
  வருவோம் என்று கூறினோம், இது குறித்து விசாரணை
  முகமைகள் நிறைய ஆதாரங்களையும் தரவுகளையும் திரட்டின.
  ஆனால் ஒன்றும் செய்யவில்லை // அதான் உள்நாட்டில் செல்லா நோட்டுக்கள் என்று அறிவித்து — கறுப்புப் பணம் — கள்ளப் பணத்தை ஒழித்து விட்டதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார்களே — அது போதாதா … ? கையாலாகா விட்டால் என்ன — செயலாக்காமலா இருக்க போகிறார் — சு.சுவாமியின் செய்தியாளர் சந்திப்பு கடிதத்தை பார்த்த பின்னும் ….?

 2. புதியவன் சொல்கிறார்:

  கண்ணுக்குத் தெரிந்து தேர்தல் அறிவுப்பு முறைகேட்டை யாராலும் தடுக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக இதனை ஆய்ந்து நீதி வழங்க முடியவில்லை.

  இப்படி அரசு அதிகாரிகளும், நீதிமன்றங்களும் குற்றவாளிகளின் சார்பாகச் செயல்படுவதால் வழங்கப்படும் நீதியின்மீது மரியாதை ஏற்படுவதில்லை.

  கண்ணுக்கு முன்னாலேயே பல்லாயிரம்கோடி சேர்த்த கார்த்தி சிதம்பரம். இவரைப்போல் பல நூறு பேர்.

  சு.சுவாமி என்ன சொல்லியும் பயன் இல்லை. நம் நாட்டில் இருக்கும் அமைப்பில் நீதி என்பது யாருக்கும் கிடைக்காது. பெரும்பாலும் முக்கிய அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகவே எல்லாம் நடைபெறுகிறது. இதில், நியாயம் பேச, எந்த அதிகாரியாவது முயல்வாரா? வழக்கு நடைபெற்று முடிவதற்குள் அவர் வயது 80 ஆகிவிடும்.

  சு.சுவாமியின் இத்தகைய கடிதங்கள், பலருக்கு வெறும் வாயில் மெல்லும் அவல்தான். மற்றபடி ஒரு பிரயோசனமும் இல்லை.

 3. Prasad சொல்கிறார்:

  -dailymail.uk says –

  In a letter to Modi on February 16, Swamy calls ‘the silence of IT authorities and finance ministry amazing’.

  Swamy has accused the top three babus in the finance ministry of helping Chidambaram. All three are alleged to have been handpicked by Jaitley.
  He has accused the attorney general, the top law officer of this country. Those in the legal fraternity know the bonding between A-G Mukul Rohatgi and Arun Jaitley.
  Swamy may not have named Jaitley, but have dropped enough hints about his real target.

  It’s no secret that Swamy and Jaitley share an acrimonious relationship. It’s widely believed that Jaitley was not in favour of Swamy joining BJP.
  And once again, the acrimony has put the BJP, and more so, the Prime Minister in a tight spot.
  Swamy has actually now thrown the ball into Modi’s court.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியை PMO வுக்கு கொண்டு வர
  பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்திருத்தத்தையே கொண்டு வர
  முடிந்த ஒரு திறமைசாலியான, வேகமாகச் செயல்படும் பிரதமரை –

  நேர்மையான நடவடிக்கைகளுக்கு குறுக்கே நிற்கும்
  இரண்டு மூன்று அதிகாரிகளை தூக்கியெறிந்து விட்டு,
  சட்டபூர்வமான நடவடிக்கைகளை
  மேற்கொண்டு விரைவாக தொடர இயலாமல் –

  தடுப்பது எது,,,? அல்லது யார்…?

  இந்த கேள்வியை பின்னூட்டங்களில் யாராவது எழுப்புவார்கள்
  என்று எதிர்பார்த்தேன்….

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. Sundar Raman சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது சரி தான் மோடிக்கு தடை போடுவது யார் … மறைந்திருந்து பார்க்கும் அதன் மர்மமான நபர்கள் யார் .. எனக்கு தெரிந்து ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் …இரண்டு தூண்கள் … பத்திரிக்கை மற்றும் நீதி மன்றங்கள் , வெளிப்படையாகவே அரசுக்கு எதிராக , குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல் படுகிறது … அப்பறம் அந்த அரசு அதிகாரிகள், நிறைய சமூக சேவை என்ற போர்வைகளில் உள்ள தேச விரோத கும்பல்கள் , பாகிஸ்தான் போன்ற நாடுகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நட்பு நாடு என்ற பேரில் USA , … நாட்டுநலனில் அக்கறை இல்லாத எதிர் கட்சிகள் … பூரணம் இல்லாத மக்களின் பங்கு ….இதை எல்லாம் தாண்டி அவரும் ஏதோ செய்து விட்டு போகணும்ன்னு நினைக்கிறார் …ஊழல் மற்றும் இதர குற்றங்களுக்கு தண்டனை வேண்டும் … இது ரொம்ப அவசியம் .. கொஞ்சம் முதுகெலும்பு வேண்டும் .

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Mr.sundarappsdba,

  மன்னிக்கவும். இங்கு பதிவு செய்வதற்கே லாயக்கில்லாத
  ஒரு விஷயத்தை பதிவு செய்து, அதனைப்பற்றி நான்
  விரிவாக வேறு எழுத வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள்.

  நான் திருவாளர் சு.சா.வை பற்றி என்ன அபிப்பிராயம்
  கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால்,
  இங்கு அவரைப்பற்றி நான் போட்டிருக்கும் இடுகைகளைப்
  பாருங்கள்… அவையே போதுமானவை.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.