லண்டனில் சுற்றும் “FRAUD” -ஐ டெல்லியில் தேடும் இந்திய ஏஜென்சிக்கள்…..!!!

pilatus-trainer-jets

PILATUS JET TRAINER

சஞ்சய் பண்டாரி – டெல்லி அரசு வட்டாரங்களில்
“புகழ்பெற்ற” ஆயுத விற்பனை தரகர் ….

sanjay-bhandari_new

வாத்ராவுக்கும் தோழர் கஜபதி ராஜூவுக்கும் நண்பர் – “பணம்” இருந்தால் போதாதா….?

முன்னதாக காங்கிரஸ் கூட்டணி அரசிலும் சரி,
தற்போதைய பாஜக கூட்டணி அரசிலும் சரி –
“செல்வாக்கோடு” திகழ்ந்த ஒரு நபர்…
எந்த அரசாக இருந்தாலென்ன….?
“பணம்” தானே நுழைவுகோல்….?

bhandari-with-minister

பாதுகாப்புத்துறையின் சில ரகசிய ஆவணங்களுடன்
( classified documents) காணாமல் போய் விட்டதாக –
பாதுகாப்புத்துறை, டெல்லி போலீஸ், வருமான வரி
இலாகாவின் “புலனாய்வுப்பிரிவு” அத்தனை
மத்திய அரசு ஏஜென்சிக்களும் இங்கே
தேடிக்கொண்டிருக்கும்போது –
பாஸ்போர்ட்டை முடக்கி விட்டதாக
பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போது –

” பண்டாரி சார்” லண்டனில்
( Bourdon Street, Mayfair area of London )-ல்
நடமாடிக் கொண்டிருந்ததை கையும் களவுமாக
படம் பிடித்து காட்டி இருக்கிறது CNN-NEWs 18 tv.

வழக்கம் போல், நாட்டை விட்டு ஓட அனுமதித்து விட்டு,
இப்போது, தேடிக்கொண்டிருப்பதாக “பாவ்லா” நடக்கிறது…

போன வருடம், ஏப்ரல் 2016-ல் அவரது வீடு, அலுவலகத்தில்
சோதனை நடத்தி, எக்கச்சக்கமான மோசடிகளுக்கான
ஆதாரங்களை கண்டுபிடித்த வருமான வரித்துறை –
வழக்கம்போல் வி-ரை-வா-க நடவடிக்கை எடுத்ததன் விளைவு,
அய்யா லண்டனுக்கு எஸ்கேப்.

போவதற்கு முன்னர் சுமார் 200 கோடிகளுக்கும் மேற்பட்ட
தனது சொத்துக்களையும், துபாய்க்கு மாற்றி விட்டாராம்…!!!

அதெப்படியோ தெரியவில்லை –
தமிழ் சினிமாக்களிலும் சரி,
இந்த மாதிரி விவகாரங்களிலும் சரி,
போலீசும், ஏஜென்சிக்களும் விவகாரங்கள் எல்லாம்
கச்சிதமாக முடிக்கப்பட்ட பிறகு, சரிய்ய்ய்யாக ஆஜராகி
விடுகிறார்கள்.

இங்கே இளிச்சவாயர்கள் ஒழுங்காக வரி கட்டும்
இந்த நாட்டின் சாதாரண முட்டாள் குடிமக்கள் தானே….?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to லண்டனில் சுற்றும் “FRAUD” -ஐ டெல்லியில் தேடும் இந்திய ஏஜென்சிக்கள்…..!!!

 1. LVISS சொல்கிறார்:

  A possible explanation on how he would have escaped —

  http://timesofindia.indiatimes.com/india/arms-dealer-sanjay-bhandaris-flight-without-passport-stumps-sleuths/articleshow/56162758.cms
  Another news that channels flashed was that UK has agreed to extradite Vijay Mallya soon–

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   A senior officer said,
   “He (Bhandari) didn’t have his passport with him,
   which means if he has fled to London,
   he may have used a fake passport using a
   different identity.”

   – this means …
   it is so easy to obtain a fake passport
   in India.

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்,

    போலி பாஸ்போர்ட் இப்போது எளிதல்ல.. ஆனால் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். கிடைத்தாலும், பின்னால் மாட்டிக்கொள்ளும்போது, யார் தவறு செய்தார் என்று அறிவது எளிது. (எந்த பாஸ்போர்ட் ஆபீசில் அல்லது எங்கே இந்தத் திருட்டு நடந்தது என்று கண்டுபிடிப்பது).

    94களில், பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கிடையே Data தொடர்போ அல்லது central repositoryயோ கிடையாது. அதனால் நிறைய போலி பாஸ்போர்ட் வழக்கத்தில் இருந்தது. (அதில் ஒரு நியாயமான பலனும் இருந்தது. துபாய் போன்ற இடங்களில் முன்னால், ஒருவர் வேலையை விட்டுச் செல்லும்போது 2 வருட ban பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்வார்கள். சிலர் வேலையை விடுவதே வேறு வேலை கிடைப்பதனால்தான். அப்போது மீண்டும் வேறு பாஸ்போர்ட்டில் துபாய்க்கு (எமிரேட்ஸுக்கு) வந்துவிடுவார்கள்). இது கேரளா ஏஜென்டுகள் பெரும்பாலும் பண்ணுவது (அப்போது). என்னிடம் கூட ஒருவர் 3000 திர்’ஹாம் (94ல்) கொடுத்தால் இன்னொரு பாஸ்போர்ட் (backup) வாங்கித்தருகிறேன் என்றார். இதேபோல், 94களில், எமிரேட்ஸ், இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்த qualification என்றும், Family Status கொடுக்கணும்னா, அதற்கேற்ற degree படிப்பு இருக்கவேண்டும் என்றும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தது. (அவர்களது அப்போதைய எதிர்பார்ப்பு, ஹாங்காங்கிலிருந்து நிறைய பேர் துபாய்க்கு வருவார்கள், அப்போது கீழ்மட்டத்தில் அல்லது சாதாரண வேலையில் இருக்கும் இந்தியர்களுக்கு நெருக்கடி தந்து அவர்களது எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்ற எண்ணம்). அப்போது, 2000- 3000 திர்’ஹாம் கொடுத்தால் (94ல்) எந்த வித டிகிரி certificateம் (பல்கலைக்கழகத்திலிருந்து issue செய்தது. நான் பார்த்தது மஹாராஷ்ட்’ரா பல்கலைக்கழகமோ அல்லது மும்பையைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் certificate) கிடைக்கும் (தரகர் மூலமாக) என்ற நிலை வந்தது. என் நண்பர் ஒருவர் (அங்கு வியாபாரம் செய்பவர்), என்ன certificate வேண்டுமானாலும், எம்பிஏ, டாக்டர், எஞ்சினீயர் போன்று, வாங்கித்தருகிறேன் வேண்டுமா என்று கேட்டார் (‘நட்பின் அடிப்படையில்).

    திருட்டுக்களையும், இந்த மாதிரி புல்லுருவித்தனம் செய்பவர்களையும் தடுக்கவே இயலாது.

    இந்தியாவைப் பொறுத்த மட்டில், யார் திருடினாலும், அவனுடைய குடும்பம்தான் benefit ஆகிறது. அப்படி இருக்கும்போது, ஒருவன் தப்பித்தால், அவன் குடும்பத்தைச் சிறையில் வைப்பதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்? விஜய் மல்யாவின் பையனை உள்ளே வைத்திருந்தால், எப்போதோ 6000 கோடி வந்திருக்கும். அவர் பையன், ஐ.பி.எல் மேட்சில் நடிகையுடன் எப்படி உல்லாசமாக இருக்க முடிந்தது? மல்லையா ஆட்டையைப் போட்ட பணம்தானே? இது பண்டாரிகளுக்கும், கஜபதி வகையராவுக்கும் பொருந்தாதா?

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இது என்ன புதுசா … ? எல்லாமே பழக்கப்பட்டு போன விஷயங்கள் தானே …. போலி பாஸ்போர்ட் — பட்டனை தட்டி ” சொத்துக்களை ” வேறு நாட்டுக்கு மாற்றுவது எல்லாம் — நமக்கும் { அந்தளவுக்கு பிரபலமாகவும் — மோசடிகளை செய்து சொத்து சேர்த்திருந்தால் } கற்றுக்கொடுத்து — வழி காட்டுவார்கள் நம் அரசியல்வாதிகளும் — அலுவலர்களும் …

  என்ன ” லலித் மோடி ” வெளிநாடு சென்று சில ஆண்டுகள் தானே ஆகிறது … அதன் பிறகு நடந்த பல நிகழ்வுகள் பற்றிய விரிவான — விளக்கமான செய்திகள் பல — ” நம் தளத்திலேயே ” — இருக்கிறது …
  இன்டர்போல் சீப் — சுஷ்மா — வசுந்தரா போன்றவர்களின் தொடர்பும் — நாடாளுமன்ற நிகழ்வுகளும் கூட விலாவாரியா இருக்கிறது ….

  சாம்பிளுக்கு ஒன்று // “தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ?
  Posted on ஜூன் 15, 2015 by vimarisanam – kavirimainthan // படித்து நம் கவலைகளை மறக்கலாம் …. !!
  இங்கே தேடுவது என்பது … // பாதுகாப்புத்துறை, டெல்லி போலீஸ், வருமான வரி இலாகாவின் “புலனாய்வுப்பிரிவு” அத்தனை
  மத்திய அரசு ஏஜென்சிக்களும் // … இந்த துறைகளின் ” தலையாய கடமைகளில் ” ஒன்று தானே … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.