பகுதி-2 – ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி….

apsingh

இது நேற்று வெளியாகியிருக்கும் செய்தி –

———————–

Just under a month after the Supreme Court ordered a probe into
former CBI director Ranjit Sinha for his private meetings with
some of the coal-scam accused,

another ex-CBI director, A P Singh, has come under the scanner of the agency.

Singh preceded Sinha and was chief from December 2010
to December 2012.

The CBI on Monday registered an FIR naming Singh and
meat exporter Moin Qureshi –
on a complaint of the Enforcement Directorate (ED).
After Ranjit Sinha, CBI To Probe Its Second Director AP Singh
for Corruption.

The present case registered under sections 8, 9, 13 (2) and 13 (1) (d) of prevention of corruption act, which deal with corrupt activities by public servants and private persons using public servants in lieu of any favour…

The complaint alleged that Qureshi, during the tenure of Singh
as CBI chief, obtained money from individuals and business entities for

allegedly favouring them in corruption cases,
influencing intelligence reports and seeking favours.

The CBI’s FIR accessed by The Indian Express cited the
Enforcement Directorate complaint stating that “Qureshi has been
indulging as a middleman for certain public servants and that
analysis of records disclose commission of cognizable offence.”

The ED report further said, “Qureshi has collected huge amount of
money in this manner as he was in connivance with said
public servants holding high public office and thereby been able to
illegally acquire immovable property situated outside India.”

These properties identified by ED include apartments in London, Dubai, New York and Singapore.
Raids, according to CBI, were conducted at the residences of Singh,
a 1974 batch IPS officer, and of Qureshi in Delhi and latter’s
premises in Ghaziabad.

Agency sources said Singh, who stepped down as member of the
Union Public Service Commission in January 2015
over his alleged links to Qureshi, may soon be called for questioning.

——————————————————————-

ஏ.பி.சிங் என்கிற இந்த ஆசாமி ( CBI Director ஆக இருந்து
2012-ல் பதவி ஓய்வு பெற்றவர்…) பற்றிய புகார்கள்
முதன் முதலில் வெளிவந்து சுமார் 5 வருடங்கள்
ஆகின்றன…

இவரது, மற்றும் meat exporter ஆன இவரது நண்பர்,
மொய்ன் குரேஷி ஆகியோரின் இருப்பிடம்,
அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பகம்,
ED, CBI ஆகிய ஏஜென்சிக்கள் 3 வருடங்களுக்கு முன்னரே
ரெய்டு நடத்தி, நிறைய ஆவணங்களையும் கைப்பற்றினார்கள்….

ரெயின் கோட் பிரதமரின் காலத்திலேயே, இவை எல்லாம்
நடந்து முடிந்து விட்டன. அடுத்து வழக்கு பதிவு செய்ய
வேண்டியது தான் பாக்கியாக இருந்தது.

அந்த தருணத்தில் தான் – செப்டம்பர் 2014ல் – புதிய பிரதமராக
பதவியேற்றிருந்த மோடிஜியாவது இந்த லஞ்ச ஊழல்
வழக்குகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வழி செய்ய
வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, பகுதி-1 இடுகையில்
நாம் வலியுறுத்தி இருந்தோம்.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்,
இந்த விஷயம் இம்மியும் நகரவில்லை….
இப்போது தான் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்று
தகவல் வெளியாகிறது.

2012-க்கு முன்னரே பதவியிலிருந்து
ஓய்வு பெற்று விட்ட ஒரு அதிகாரியின் மீது, அவர் பதவியில்
இருந்தபோது செய்த ஊழல்களுக்காக – இவ்வளவு ஆண்டுகள்
கழித்து இப்போது தான் அரைமனதோடு வழக்கு பதிவு
செய்கிறார்கள்.

2012-லேயே 157 கோடி ரூபாய் வரி மோசடி செய்ததாக
கூறப்படும் மொய்ன் குரேஷி என்கிற meat exporter மீதும்
இப்போது தான் வழக்கு பதியப்படுகிறது.

சிபிஐ, வருமான வரி இலாகா, அமலாக்கத்துறை போன்ற அரசு
ஏஜென்சிக்களிடம் இதைப்போல், இன்னமும் எவ்வளவு
வழக்குகள் இருக்கின்றன….. எவ்வளவு ஆண்டுகளாக
கிடப்பில் இருக்கின்றன….என்பது யாருக்காவது தெரியுமா…?

மாயாவதி, முலாயம் சிங், லாலு பிரசாத் போன்ற
அரசியல்வாதிகளை அவ்வப்போது மிரட்டி வைக்க மட்டும்
தான் இத்தகைய இலாகாக்கள் பயன்படுகின்றன என்கிற
பொதுமக்களின் அபிப்பிராயத்தை மாற்ற –

திருவாளர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர்
என்ன செய்திருக்கிறார்….?

இந்த ஊழல்வாதி அதிகாரிகள், மோசடி வரிஏய்ப்பு வியாபாரிகள்
தங்கள் ஏமாற்றி சேர்த்த சொத்துக்களை எல்லாம்
வெளிநாடுகளில் கொண்டு போய் பதுக்கி விட்டு,
தாங்களும் உரிய நேரம் பார்த்து தப்பித்து ஓடும்
நேரத்தில் தான் வழக்கு பதிவு செய்வது என்று சம்பந்தப்பட்ட
ஏஜென்சிக்கள் முடிவு செய்திருக்கின்றனவா…?

ம.மோ.சி. காலத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் நிகழ்ந்தன என்கிற
காரணத்தால் தான், இந்திய மக்கள் அந்த அரசை அகற்றி விட்டு,
மோடிஜி தலைமையிலான பாஜக அரசை பதவியில்
அமர்த்தினர்….

மோடிஜி வந்தும் வழக்குகள் இப்படித்தான் தூங்கும் என்றால்
அதற்கு ம.மோ.சி. யே இருந்து விட்டு போயிருக்கலாமே….

இப்போது என்ன மாறி இருக்கிறது….?
ம.மோ.சி. ரெயின் கோட்,
மோடிஜி ரெயின் கோட் ஆகியிருக்கிறது –
வேறு என்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன…?

நானே எதிர்பார்க்கவில்லை…அதுவாகவே அமைந்து விட்டது.
வரிசையாக 3 நாட்களாக
ஊழல் வழக்குகள் பற்றி தான் எழுதி இருக்கிறேன்..
மோடிஜி ஆட்சியில் ஒரு ஹாட்ரிக்….

எங்களுக்கு ஒரு ரெயின் கோட் போய்
இன்னொரு ரெயின் கோட் –
ஆட்சி வேண்டாம்…
விரைவான நடவடிக்கை தேவை
என்று மக்கள் கேட்கிறார்கள்….
அரசு அதை புரிந்து கொண்டு செயல்படுமா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to பகுதி-2 – ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.