ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி என்று….(பகுதி-1) ( how to bathe with raincoat on…)


ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி என்று….(பகுதி-1)
( how to bathe with raincoat on…)

எப்போதும் ஹிந்தியிலேயே பேசி வருபவர் அண்மையில்
ஆங்கிலத்தில் சொன்ன ஒரு சொல் மிகவும் புகழ் பெற்று
விட்டது…. “Only Manmohan Singh can teach how to bathe
with raincoat on ”

இது குறித்து அடுத்த பகுதிக்கு போவதற்கு முன்னர்,
கீழே உள்ளவற்றை படித்து விடுங்களேன்… ( அரை மணி
நேர அவகாசத்தில் அடுத்த பகுதியுடன் வருகிறேன்..! ) –

——————————————————————-

நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..
Posted on செப்ரெம்பர் 4, 2014 by vimarisanam – kavirimainthan

நான் கீழே கொடுத்திருப்பது அத்தனையும் செய்திகள் –
செய்திகள் – செய்திகள் மட்டுமே….

என்னுடைய கருத்துக்கள் எதுவுமே இந்த இடுகையில்
இல்லை. எல்லாமே வெவ்வேறு இடங்களிலிருந்து
திரட்டப்பட்ட வேலியே பயிரை மேயும்
அதிர்ச்சி தரும் தகவல்களே.

டெல்லியில் –தற்போதைய புலனாய்வுத்துறை
தலைவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்திருப்பவர்கள்
பட்டியல் கிடைத்திருக்கிறது —

– மொய்ன் அக்தர் குரேஷி என்கிற meat exporter கடந்த
15 மாதங்களில் 90 தடவைகள் போய்ப் பார்த்திருக்கிறார்.

(இந்த குரேஷியின் வீட்டிலும், அலுவலகத்திலும்
கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறை ரெய்டு நிகழ்த்தியது.
வருமானத்தை மறைத்தது மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் சம்பந்தமாக இவர் மீது தீவிர விசாரணை நடந்து வருகிறது.)

– இந்த குரேஷி, சின்ஹாவிற்கு முன்னதாக
புலனாய்வுத்துறை தலைவர் பதவியில் இருந்த ஏ.பி.சிங்கிற்கு
மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். ஏ.பி.சிங் தான்
தற்போதைய தலைவரை குரேஷிக்கு அறிமுகம் செய்து வைத்தாராம்.

ஊழலில் தனக்கு ஒத்துழைக்கும் மூத்த
புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலருக்கும் வெளிநாடுகளில்
பணப்பரிமாற்றம் செய்யவும், பதுக்கவும், இந்த குரேஷி தான்
முக்கிய friend, phylosopher and guide.

இந்த குரேஷி சம்பந்தமாக நடந்து வரும் விசாரணை
விவரங்களை தங்கள் இலாகாவுடன் பகிர்ந்து
கொள்ளுமாறு வருமான வரி இலாகாவிடம் புலனாய்வுத்துறை
தலைவர் அதிகாரபூர்வமாகவே கேட்டுக் கொண்டுள்ளார் …..

(எதற்காக என்று தெரிகிறதா …?)

இந்த குரேஷியின் அலுவலகம் இயங்கி வரும் இடம்
ஒரு வாடகைக்கு குடி இருக்கும் இடம்.

இந்த இடத்திற்குச் சொந்தமானவர் – ஆவணங்களின்படி
– முன்னாள் புலனாய்வுத்தலைவர் ஏ.பி.சிங்கின் மாமியார்….!!!

குரேஷி – மே 2013 க்கும் டிசம்பர் 2013க்கும்
இடைப்பட்ட காலத்தில் -16 தடவைகளும்,
ஜனவரி 2014லிருந்து ஆகஸ்டு 2014க்கு
இடைப்பட்ட காலத்தில் 74 முறைகளும்
புலனாய்வுத் தலைவரின் இல்லத்திற்கு வருகை
புரிந்திருக்கிறாராம்.

-2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரிலையன்ஸ்
நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலமுறை
புலனாய்வுத்துறை தலைவரை அவரது இல்லத்தில்
சென்று பார்த்திருக்கிறாராம்.

– குரேஷியின் அலுவலகத்தில் நிகழ்ந்த வருமான
வரித்துறை இலாகாவின் ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட
கம்ப்யூட்டரின் மூலம், புலனாய்வுத்துறை முன்னாள் தலைவர் ஏ.பி.சிங் மற்றும் குரேஷிக்கு இடையில் உள்ள ‘நட்புறவு’ தெரிய வந்திருக்கிறது. \
அதன் அடிப்படையில், ஏ.பி.சிங்,
அவரது மனைவி, மற்றும் லண்டனில் உள்ள மகள்
ஆகியோருக்கு வருமான வரி இலாகா கடந்த ஜூன் 10ந்தேதி
நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. விசாரணை தொடர்ந்து வருகிறது.

இதில் வெட்கப்பட வேண்டிய இன்னுமொரு விஷயம் –
வருமான வரி இலாகாவின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குனர்
ஏ.பி.சிங் –


பதவி ஓய்விற்குப் பின்னர், UPSC உறுப்பினராக
நியமிக்கப்பட்டு இன்னமும், இப்போதும் – அதே பதவியில்
தொடர்கிறார்….

——————————————————————-

இந்த இரண்டு தேசபக்தர்களின் நியமனமும்
திருமதி சோனியா காந்தி அவர்களின் பரிபாலனத்தில்,
அவரது விசேஷ பரிந்துரைகளின்படி செய்யப்பட்டதாம்.

-கீழே இருப்பவர் பெயர் திருவாளர் ஏ.பி.சிங் –
மன்மோகன் சிங் அரசில் வெளிநாட்டில்
பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை
கண்டுபிடிக்கும் பொறுப்பு இவரிடம் தான் கொடுக்கப்பட்டிருந்தது.

a.p.singh

-கீழே இருப்பவர் பெயர் – திருவாளர் ரஞ்சித் சின்ஹா –


2 ஜி வழக்கிலும், முக்கியமாக கேடி பிரதர்ஸ் வழக்கிலும்
தீவிரமாக, அசராமல் தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் மலேசியாவில் துப்புத் துலக்கி விட்டு – கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொன்னவர் இவர் தான்.

Ranjit-Sinha-

இந்த தேசபக்தர்களுக்கு “உரிய” மரியாதை
உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே
நமது ஒரே ஆசை, விருப்பம், வேண்டுகோள் -எல்லாமே..!

——————————————————————-

( பகுதி-2 ) – நாறும் மத்திய புலனாய்வுத் துறை ……
Posted on செப்ரெம்பர் 5, 2014 by vimarisanam – kavirimainthan

————

(நேற்றைய ” நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி
மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..”

என்கிற தலைப்பில் வெளியான இடுகையின் தொடர்ச்சி …)
———

நேற்று (04/09/2014) காலையில் வழக்கு கோர்ட்டில்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது என்றும், சிபிஐ
டைரக்டர் ரஞ்சித் சின்ஹா இந்த விஷயங்களை
மீடியாவில் வெளியிடவோ, விவாதம் நடத்தவோ தடை விதிக்க
வேண்டும் என்று கோரப்போகிறார் என்றும் தகவல் கிடைத்தது.

அதனால் தான் காலையில் வெகுசீக்கிரமாகவே நான்
எனக்குக் கிடைத்த தகவல்களை எல்லாம் வெளியிட்டேன்.

எதிர்பார்த்தது போலவே, கோர்ட்டில், ரஞ்சித்சின்ஹா
செய்திகளை மீடியாவில் வெளியிடவும், விவாதிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், கோர்ட் வழக்கை திங்கள் வரை ஒத்திவைத்தது.
இடைக்காலத்தடை எதையும் விதிக்க முடியாது என்றும்
கூறி விட்டது.

எனவே, நேற்று மாலை-இரவு, டெல்லி தொலைக்காட்சிகளில் இது குறித்து விவரமான விவாதங்கள் நடைபெற்றன.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி,கோர்ட் விரும்பினால்,
தான் 2ஜி வழக்கிலிருந்து விலகியிருக்கத் தயார் என்று
சின்ஹா கோர்ட்டில் மனுப் போட இருக்கிறாராம்.

கோர்ட் இதை அப்படியே ஏற்றுக்கொண்டால் –
இவர் வெகு சுலபமாக தான் செய்த குற்றங்களிலிருந்து
தப்பித்து விடுவார்.

விசாரணை அதிகாரி என்கிற பொறுப்பில் இருந்தும் கூட,
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக,
இவர் பதவியிலிருந்து தற்காலிக வேலைநீக்கம்
(ஸஸ்பெண்ட்) செய்யப்பட்டு, இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு
செய்யப்பட வேண்டும்.

இதற்குள்ளாகவே இவர் 2ஜி வழக்கில் எவ்வளவு
சாட்சியங்களை, எவ்வளவு ஆதாரங்களை அழித்து விட்டாரோ -யார் கண்டது…?

நேற்றைய விவாதங்கள் அனைத்துமே தற்போதைய
டைரக்டர் ரஞ்சித் சின்ஹா பற்றியது மட்டும் தான்.
இவருக்கு முன்னதாக பதவியில் இருந்த ஏ.பி.சிங்
சம்பந்தப்பட்ட பல விவரங்கள் நேற்றைய இடுகையில்
சொல்லப்பட்டிருக்கின்றன.அவர் பற்றிய விவரங்கள் எதுவுமே
இன்னமும் விவாதத்திற்கு வரவில்லை.

வருமான வரி இலாகா ஜூன் 10ம் தேதி அவருக்கு
கொடுத்த நோட்டீசுக்குப் பிறகு இதுவரை எத்தகைய மேல்
நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய செய்திகள் எதுவும்
இன்னமும் வெளிவரவில்லை.

அரிச்சந்திரனுக்கு அண்ணன் போல் அப்பாவியாகத்
தோற்றமளிக்கும் ( முதல் புகைப்படம் )

இந்த மனிதர் இன்னமும்
மத்திய தேர்வாணைய குழு (UPSC ) உறுப்பினராகத்
தொடர்வது மத்திய அரசுக்கு மிகவும் அவக்கேடு.
அவர் மீதான வருமான வரித்துறையின் வழக்கு
துரிதப்படுத்தப்பட வேண்டும். அந்த வழக்கு முடியும் வரை
அவர் UPSC உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தில் உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றுபவர்களை கண்காணிக்கவும், இத்தகைய “களை”களை வளரவிடாமல்,
உருவாகும் நிலையிலேயே – உடனுக்குடன் “களைய”வும் புதிய
உத்திகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ரெயின் கோட்’டுடன் குளிப்பது எப்படி என்று….(பகுதி-1) ( how to bathe with raincoat on…)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.