ஜெயதேவரின் அஷ்டபதி ….

mahaprabhu

என்ன… எங்கேயோ போகிறேனே என்று யோசிக்கிறீர்களா…?

எவ்வளவு நாட்கள் அரசியலைப்பற்றி
மட்டுமே பேசிக்கொண்டிருப்பது ?
விமரிசனம் தளத்தின் பார்வையை
மற்ற பக்கங்களிலும் செலுத்தலாமே என்று தோன்றுகிறது…

அரசியலோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல்
இன்னும் பல தளங்களிலும்
பயணிக்கலாமே என்று தோன்றுகிறது.
அரசியலும், சமூக நலனும் நம்மோடு இணைந்தது…
ரத்தத்தில் ஊறியது –
எனவே அது தவிர்க்க முடியாதது…

ஆனால், அதோடு நில்லாமல்,
வாழ்க்கையின் மற்ற ரசனைகளையும்
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது…

74 வயதில் எத்தனையோ அனுபவங்கள்…
கண்டது, கேட்டது, பார்த்தது, படித்தது, பிடித்தது, ரசித்தது
என்று – இந்த பயணத்தின் பல அனுபவங்களையும் –
ஒப்பனை எதுவும் இல்லாமல் வெளிப்படையாக
சாதாரண வார்த்தைகளில், இயல்பாக –
சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது…

கூடிய வரை சுவாரஸ்யமானதாக இருக்கும்படி
பார்த்துக் கொள்கிறேன். அதற்குப் பிறகு ….
உங்கள் அதிருஷ்டம்… !!!
பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்…

இந்த வலைத்தளத்தின் பெருமைக்கு இதன்
வாசக நண்பர்களே முக்கிய காரணம்.
இந்த புதிய முயற்சியிலும்,
நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும்
பின்னூட்டங்களில் சேர்ப்பதன் மூலம்,
இடுகைகளுக்கு மேலும் வலுவும், பயனும் சேர்க்க முடியும்.
இவற்றிலும் ஆர்வத்துடன் முன்வருமாறு
நண்பர்களை வேண்டுகிறேன்.

———

அழைப்பு வரும் வரை …
பயணம்….. முடிவிற்கு வரும் வரை,

இயன்றதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்..
நினைக்க மட்டும் தானே நம்மால் முடிகிறது…!

புதிய விரிவாக்கத்தின் துவக்கம் – இன்று …

ஜெயதேவரோடு….!!!

—————————————————————–

ஜெயதேவரோடு துவங்க காரணம் –
சென்ற வாரம் நான் பார்த்த
ஒரு அற்புதமான இசை நாடகம் தான்…!

மஹாலக்ஷ்மி பெண்கள் நாடகக்குழுவின் சார்பில்
பாம்பே ஞானம் அவர்களால் இயக்கப்பட்ட,
முழுக்க முழுக்க பெண்களே பங்கு கொள்ளும்
“பக்த ஜெயதேவர்” என்கிற நாடகம் தான்.

whatsapp-image

அற்புதமான ஈடுபாடு, நல்ல நடிப்பு, இசை,நடனம் –
பொருத்தமான வசனங்கள் –

ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள அனைவரும் விரும்பி
ரசிக்ககூடிய ஒரு படைப்பு….!

பக்தி, ஆன்மிகம் செழிக்க ஆர்வத்துடன் பணியாற்றும்
பாம்பே ஞானம் குழுவினருக்கு நமது
உள்ளம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்…!

———————-

12-வது நூற்றாண்டில், ஒரிஸ்ஸாவில் வாழ்ந்த ஒரு
கிருஷ்ண பக்தர் – கவிஞர் ஜெயதேவர்..

கீதையின் நாயகன் கண்ணனின் மீது மிகுந்த ஈடுபாடு
கொண்டவர். ராதைக்கும், கண்ணனுக்கும் இடையே இருந்த
உறவை … நாயகன், நாயகி என்கிற பார்வை இல்லாமல் –

ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே
ஏற்பட்ட உறவாக பாவித்து, அவர்களின் தெய்வீகக் காதலை
வர்ணித்து அவர் எழுதிய பாடல்கள் தான் “அஷ்டபதி”
என்றழைக்கப்படுகின்றது. எட்டெட்டாக, 24 பாடல்கள் –
அதான் அஷ்டபதி..!!!

பக்தி, ஞானம், கர்மம் என்று இறைவனை அடையும்
வழிகளில் மிகவும் சுலபமானதும்,
பெரும்பாலான மக்கள் மேற்கொள்வதும் பக்தி மார்க்கம் தான்.

வாழ்க்கைப் பயணத்தில் துன்பங்களை சந்திக்காதவர் யார்…?
துன்பம் நேரும்போதெல்லாம் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டால்
பயணம் எப்படி தொடரும்…?

இறைவன் இருக்கிறான்…பார்த்துக் கொள்வான்..
துன்பத்திலிருந்து நம்மை காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கை
தான் பெரும்பாலான மக்களை பைத்தியம் பிடிக்காமல்
காப்பாற்றுகிறது.

இந்த நம்பிக்கை தான் பக்தி…
இந்த பக்தியோடு இசையும் சேர்ந்தால்…?
ஆனந்தம்… ஜெயதேவர் அனுபவித்ததும் –
நமக்கு அனுபவிக்க கொடுத்ததும் அந்த ஆனந்தம் தான்…!!!

panca-tattva_altar

பக்தியின் உச்சத்தில் ஜெயதேவர் இயற்றிய பாடல்களை
வெளியுலகிற்கு கொண்டு சென்றவர்
அதற்குப் பின்னால் –

15-ம் நூற்றாண்டில் வந்த, கௌடிய வைஷ்ணவத்தை
நிறுவிய சைதன்ய மஹாபிரபு (வங்காளம்)..
ஊர் ஊராக, தெருத்தெருவாக சென்று,
கூடும் கூட்டங்களோடு சேர்ந்து பாடி, ஆடி –
கண்ணனை கொண்டாடியவர்..!

ஜெயதேவரைப்பற்றி படிப்பதை விட,
அவர் பாடல்களை கேட்பது இன்னமும் சிறப்பாக இருக்கும்…

வலையில் தேடி, சிறப்பான சில பாடல்களை
தொகுத்திருக்கிறேன்…

திரு.பாலமுரளிகிருஷ்ணா, திரு.கண்டசாலா,
திரு.கே.ஜே.யேசுதாஸ், திருமதி சுசீலா…
(சில தனி பாடல்கள், சில திரைப்பட பாடல்கள்…)
நிதானமாக அனுபவியுங்கள்….

சொல்ல மறந்து விட்டேனே…
ஜெயதேவர் பாடலை ஆடலுடன் ரசிக்க வேண்டாமா..?
ஒரிஸ்ஸாவின் மிகச்சிறந்த நடனக்கலைஞரான
திரு.கேளுசரண் மஹாபத்ராவின் ஒடிஸி நடனம் ஒன்றும்
கடைசியில் இருக்கிறது….!

Priye Chaaruseele – Yesudas & Susheela-
( from telugu movie Meghasandesam )

Priye Charuseele – ghantasala –

Radhika Krishna – Yesudas & Susheela –

Raase Hari Miha – Balamuralikrisha –

Kelucharan Mohapatra, Rati Sukha Sare-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஜெயதேவரின் அஷ்டபதி ….

 1. R KARTHIK சொல்கிறார்:

  இந்த படைப்பிற்கு நன்றி 🙂

 2. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் எதைச்செய்தாலும் நன்றாக இருக்கிறது.
  நீங்கள் எழுதும் எதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
  நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்
  எங்களுக்கு வேண்டியது அவ்வளவு தான். நன்றி.

 3. Srini சொல்கிறார்:

  KM Sir, You are back to track. Please I request you don’t change it. Age is not a barrier to anything. You can do wonderful things to change. TN will change one day, if not today, atleast tomorrow. I read an article on Swami Prabhupada AC Baktivedanta. 74 is not an age at all.. you can do wonders. Related to the age issue, if one is determined to do something, he is a great example. I am not giving the full story. There is enough material on the net. But a gist is below.

  He travelled to USA in 1965. He was at the time aged 69 years. In his possession were a suitcase, an umbrella, a supply of dry cereal, about eight dollars worth of Indian currency, and several boxes of books.

  Between 1965 to 1977 (death)…. In the twelve years from his arrival in New York until his final days, he:

  circled the globe fourteen(14) times on lecture tours that took him to six continents

  initiated many disciples, awarding sannyasa initiations.

  introduced Vedic gurukul education to a Western audience

  directed the founding of the Bhaktivedanta Book Trust which claims to be the world’s largest publisher of ancient and classical Vaishnava religious texts

  founded the religious colony New Vrindavan in West Virginia

  authored more than eighty books (with many available online) on Vedantic philosophy, religion, literature and culture (including four published originally in Bengali)

  introduced international celebrations in the capitals of the world like that of Jagannatha processions

  watched ISKCON grow to a confederation of more than 108 temples, various institutes and farm communities
  Today there are more than 400 + major ISCKCON temples in the world

  Bhaktivedanta Swami translated over sixty volumes of classic Vedic scriptures (such as the Bhagavad Gita and the Srimad Bhagavatam) into the English language.

  Bhagavad-Gītā As It Is was published by Macmillan Publishers, in 1968 and unabridged edition in and is now available in over sixty languages around the world and some other books by Bhaktivedanta Swami are available in over eighty different languages.

 4. தமிழன் சொல்கிறார்:

  இன்னும் பாட்டு கேட்கவில்லை. இடுகை நன்றாக இருக்கிறது. பல்சுவைகள் நிரம்பியதுதானே வாழ்க்கை. ஏற்கனவே அரசியலைத் தவிர அப்போ அப்போ இது மாதிரி எழுதுவீர்கள். இனி கொஞ்சம் ஜாஸ்தியா எழுதப்போறீங்கன்னு தோணறது. தொடருங்கள்.

  ஜெயதேவரைப் பற்றி எழுதுகிறேன். பிறகு வருகிறேன்.

 5. Sundar Raman சொல்கிறார்:

  ஆஹா , அருமை … இங்கு ( துபாயில் ) ராதா கல்யாணம் மற்றும் சீதா கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும் , பெரிய பெரிய பாகவதர்கள் வருவார்கள் .. எப்போதுமே மிஸ் செய்வதில்லை , அதுவும் அஷ்டபதி பாடும் நேரத்தில் ஒவ்வருவரும் ஒரு விதம் , மனதில் அப்படியே நிற்கிறது .. மோகனூர் ஸ்ரீ காந்த் …. என்ற பாகவதர் , புஸ்தகத்தை பார்க்காமலே அஷ்டபதி மற்றும் ஸ்லோகங்கள் சொல்வது அவ்வளவு அழகு.

 6. selvarajan சொல்கிறார்:

  மாதங்களில் மார்கழி என்று கூறுவதே ஒரு கிளுகிளுப்பான அனுபவம் — விடியலில் எழுந்து இதமான குளிரில் ” உடல் தூய்மை செய்து ” — வீதியில் பாடி வருகிற பஜனை கோஷ்டியோடு கலந்து — திருப்பாவை — திருவெம்பாவை — அஷ்டபதி பாடல்களை கேட்டுக்கொண்டே வீதிகளில் வருவது ஒரு ” உள்ள தூய்மையான ” அனுபவம் …!

  பாடல்கள் தெரியாத போதும் – பாடுவதை கேட்பாதே பெரும் பாக்கியமாக இருந்த காலங்களை — இனி எங்கே காண்பது … ? கிராமங்களில் இப்போதும் இது தொடரும் என்கிற ஒரு நம்பிக்கை உள்ளது … !!

  ” பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ — எனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ ” …. என்ற பாடலில் — கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாதா என்றும் வரும் பாடல் அடிகள் — ” ஜெய தேவரின் அஷ்டபதியின் ” தாக்கத்தின் விளைவு தானோ …. ?மிஸ்ஸியம்மா என்ற திரைப்படத்தில் வரும் இந்த பாடல் — கேட்கும் போது கண்ணனின் புல்லாங்குழல் இசையும் நம் காதுகளில் தானாகவே ஒலிக்கும் தானே …. ? மீண்டும் வருமோ அக்காலங்கள் … ?

 7. gopalasamy சொல்கிறார்:

  Meghasandesam is a very good movie. P.Susila got national award for best female singer.

 8. புதியவன் சொல்கிறார்:

  நாயகன் நாயகி பா(B)வத்தோடு இறைவனை எண்ணிக் கவிதை எழுதுவது, பாடல்கள் புனைவது, அவற்றை உள்ளன்போடு பாடுவது என்பது, சனாதன தர்மத்திலும் (பெரும்பாலும் கிருஷ்ணனை, கோபிகைகள் அல்லது ராதை பாடுவதைப் போன்றது), சூஃபி முறையிலான பக்திமார்க்கத்திலும் (இஸ்லாமிய.. இதற்கு ஈரான் origin என்று சொல்வார்கள்) உள்ள பொதுவான முறை.

  ஜெயதேவரின் அஷ்டபதியில், ‘சாருசீலே’ என்ற பாடலே இருமுறை இங்கு கொடுத்துள்ளாரே.. படத்திலும் அதனையே பயன்படுத்தியிருக்கிறார்களே என்ற சந்தேகம் தோன்றலாம். ஜெயதேவர் அஷ்டபதியைத் தன்னை மறந்து லயித்து எழுதும்போது, ராதை! உன் பாதங்களை என் சிரசில் வை (விரகதாபத்தினால்) என்று கண்ணன் சொல்வதாக எழுதிவிட்டார். உடனே, என்ன அபசாரம் செய்துவிட்டோம் என்று நினைத்து எழுதிய ஓலையைக் கிழித்துவிட்டார். பிறகு எண்ணெய் ஸ்னானம் செய்வதற்காக ஆற்றுக்குச் சென்றார். இடையே கண்ணன், இவரைப்போல் வீட்டுக்கு வந்து, ஜெயதேவரின் மனைவி பதுமாவதியிடம், கவிதை மறப்பதற்குள் எழுத வந்தேன் என்று சொல்லி, அதே வரிகளை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றுவிடுகிறார். பூஜை எல்லாம் முடிந்தபின், அன்று ஜெயதேவர், மனைவியிடம் ஓலைச் சுவடிகளைக் கேட்டார். அதில், கடைசி ஓலையில் ‘சாருசீலே’ என்று எழுதிய வரிகள் இருக்கக்கண்டு, பதுமாவதி! நீ ஏதாவது எழுதினாயா என்று கேட்க, அவர், நீங்கள்தான் ஆற்றுக்குப் போனவர், இடையில் வந்து எழுதினீர்களே என்று சொன்னாள். அவனை நினைந்து உருகின தனக்குத் தராத அவன் காட்சியை, தன் மனைவி பதுமாவதிக்குக் கொடுத்ததை எண்ணி, அவன் அருள் தனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.

  ஜெயதேவரின் அஷ்டபதி 28 ஸ்லோகங்கள் கொண்டது. அதில் 21ஐ ஜெயதேவர் எழுதினார் என்றும் மீதி 7, மீராவின் அரச கணவன் கும்பராணா எழுதியது என்பார்கள்.

  ஜெயதேவரின், வட மொழி நூலான கீதகோவிந்த மஹாகாவியத்தை, எட்வின் அர்னால்ட் என்பவர் Song of the Songs என்று மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.

 9. paiya சொல்கிறார்:

  super collection.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.