திரு.இல.கணேசன் – நாடு நலம் பெற பாஜக வை தியாகம் செய்யலாம் ….!!!

26-1488082447-neduvasal54545

neduvaasal

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி திரு.இல.கணேசன்
கூறியுள்ள கருத்து –

நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும்
மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும்
என பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும்.
மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால்,
அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய அளவிலோ
எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. எதிர்க்கட்சி என்றால் அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது விதியும் அல்ல. நல்ல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றது.

ஆனால் இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாக எடுத்து சொல்லி மக்கள் மனதை மாற்றி விடுகின்றனர்.
இதனால் மக்கள் தங்களுக்கு எந்த திட்டம் நல்லது
என்று தெரியாமலேயே போராட்டத்தை நடத்துகின்றனர்.
ஆனால் மத்திய அரசு விவசாயத்திற்கு எப்போதும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது எனக் கூறினார்.

மேலும் நிலக்கரி, பெட்ரோல், ஹைட்ரோ கார்பன், இரும்பு தாது
போன்றவை ஒரு மாநிலத்தின் இயற்கை வளமாகும். இவற்றை
பயன்படுத்தும்போதுதான் அந்த மாநிலத்தின் தொழில்வளம் பெருகும், பொருளாதார வளர்ச்சி உயரும் என இல. கணேசன் குறிப்பிட்டார்.

———————–

திருமதி.தமிழிசை கருத்து –

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஹைட்ரோ கார்பன்
திட்டத்தில் தெளிவற்ற நிலை தான் தற்போது காணப்படுகிறது.
தெளிவான நிலையின்றி தான் போராட்டங்கள் நடைபெற்று
வருகின்றன.

————-

bjp-logo-for

திரு.பொன் ராதாகிருஷ்ணன் கருத்து –

எந்த திட்டம் வந்தாலும் அது லாபமா, நஷ்டமா என்பதை
தெரிந்து கொண்டு அதற்கு பிறகே முடிவெடுக்க வேண்டும்.
தற்போது ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு
மேற்கொள்ள மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுகுறித்த நேர்மாறான தகவல்கள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முழுமையாக தெரியாமலேயே
எதிர்க்க தொடங்குகின்றனர். திட்டம் நிறைவேற்றப்பட்டால் லாபமா
அல்லது நஷ்டமா என்பதே தெரியாமல் எதிர்ப்பு தெரிவித்தால்,
அது தமிழகத்துக்கு செய்யக்கூடிய துரோகமாகும்.

———————–

நமது கருத்து –

விவசாயம் நமது முதுகெலும்பு.
பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம்… உயிர்நாடி…

விவசாயிகளையும், விவசாயத்தையும் –
பாதிக்கக்கூடிய எதுவாக இருந்தாலும்,
அது எத்தனை லட்சம் கோடிகளை கொண்டு வந்து
குவிப்பதாக இருந்தாலும் அது நமக்கு
வேண்டவே வேண்டாம் …

ஆராய்ச்சி பணிகளை துவக்கும்போதே,
விவசாய நிலங்கள், பெருமளவில் மக்கள் வசிக்கும்
இடங்கள் ஆகியவற்றை தவிர்த்து விட்டு,

பாலைவன பிரதேசங்களிலும், பயிர்செய்ய வாய்ப்பில்லாத
இடங்களிலும், கடல் பரப்புகளிலும் மட்டுமே
ஆராய்ச்சிகளை துவக்க வேண்டும்.

இதுவே அரசின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து, தோண்டி எடுத்து, ஆராய்ச்சி செய்து பார்த்து –
லாபமா, நஷ்டமா என்று கணக்கு பார்க்க வேண்டிய
அவசியமே இல்லை.

மக்களின் இந்த உணர்வை,
இந்த அடிப்படை தேவையை,
புரிந்து கொள்ள முடியாத –
எந்த அரசோ, அரசியல்வாதியோ, கட்சியோ எதுவும்
நமக்கு தேவை இல்லை.

மக்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்யும்
கட்சிகள் – காங்கிரசோ, பாஜக வோ –
வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி
அதை “தியாகம்” செய்து தொலைத்து விட
தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

இதை பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய பிறகு தான்
அவர்களை உணர வைக்க முடியும் என்றால் –
அது நமது துரதிருஷ்டம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to திரு.இல.கணேசன் – நாடு நலம் பெற பாஜக வை தியாகம் செய்யலாம் ….!!!

 1. Prasad சொல்கிறார்:

  // மக்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்யும்
  கட்சிகள் – காங்கிரசோ, பாஜக வோ –
  வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி
  அதை “தியாகம்” செய்து தொலைத்து விட
  தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.//

  I welcome and second it.

 2. இளங்கோ சொல்கிறார்:

  தலைப்பை இப்படி போட்டிருக்கலாமே சார்.

  “நாடு நலம் பெற பாஜக வை தியாகம் செய்யலாம்”
  – இல.கணேசன் கருத்து.

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! மீத்தேன் போன்ற வாயுக்களின் கலவைகளின் பொதுப்பெயர் தானே இது ….. !! // நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: தொடரும் துயரம்! // http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/feb/24/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2655346–1.html — இந்த கட்டுரையை அப்படியே … பா .ஜ . க . வின் ” தியாக செம்மல்களுக்கு ” அனுப்பி வைக்க வேண்டும் …. இதை முழுவதுமாக படித்த பின்னும் தமிழகத்தை என்ன எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம் அவர்கள் …. !!! அப்படித்தானே … ? தமிழக மக்களை எப்போதுமே பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் — என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார்களோ …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி செல்வராஜன்.

   —————————————————-

   நண்பர்களின் வசதிக்காக, மேலே கூறியுள்ள தினமனி கட்டுரையை
   இங்கேயே தந்திருக்கிறேன்…

   ————-

   தினமணி கட்டுரை – 26/02/2017

   நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்:
   தொடரும் துயரம்!

   —————
   ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?

   இந்த கேள்விக்கு பதிலளிக்க நீங்கள் கொஞ்சம் உங்கள் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடங்களை இப்போது நினைவுக்கு கொண்டு வர வேண்டும்.

   ஹைட்ரோகார்பன் என்பது ஹட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த ஒரு கனிம கலவையாகும். இந்த ஹைட்ரோகார்பன்களில் ஆல்கேன் (alkanes), ஆல்கீன் (alkenes), ஆல்கைன் (alkenes), சைக்ளோ ஆல்கைன் (cycloalkanes) என 14 வகைகள் உள்ளன. .

   சுருக்கமாக சொலவதென்றால் மீத்தேன் வகை வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டவற்றில் ஆல்கேன் என்பது ஒற்றை பிணைப்பு வகையாகும். இதன் சூத்திரம் CnH2n+2 . நாம் குறிப்பிடும் மீத்தேன் இவ்வகையை சார்ந்தது தான். இதன் கெமிக்கல் பார்முலா CH4 ஆகும். இது குரூட் ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் சாண எரிவாயுவில் காணப்படும். இதற்கு சதுப்பு நில வாயு என்ற பெயரும் உண்டு. எரியும் பொழுது மீதமின்றி முழுதாக எரிந்துவிடும் தன்மையும் இதற்குண்டு. இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வாயு வெளிப்படுவது பார்ப்பதற்கு ‘திடீர்’ என்று ஒரு தீப்பந்தம் எரிவது போல் இருப்பதனால் இதனைக் ‘கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று அழைப்பது உண்டு.

   எப்படி உருவாகிறது மீத்தேன்?

   இது மீத்தேனின் வேதியியல் அமைப்பு. இது விஷத்தன்மை பொருந்தியதாகும். இலை, மரங்கள், உயிரின உடல்கள் மட்கி பாக்டீரியாவினால் அழிக்கப்பட்டு கார்பனாக மாறி, காற்று மாசிலுள்ள ஹைட்ரஜனுடன் சேர்ந்து மீத்தேனாக மாறுகிறது. பூமிக்குள் இருக்கும் இந்த மீத்தேன் வாயுவானது தொடர்ச்சியாக நகரும் பண்புள்ளது, இவ்வாறு நகரும் மீத்தேன் இறுதியில் பூமிக்கு அடியில் உள்ள படிவுப்பாறைகளில் தங்கிவிடுகிறது.

   இந்தியாவில் இது போன்ற வாயு படிவுப்பறைகள் கங்கை சமவெளியில் மிகுந்து காணப்படுகிறது. பூமியில் துளையிட்டு இந்த வாயுவை எடுத்த பின் அங்கு உருவாகும் வெற்றிடத்தில் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பாறைகள் எலாஸ்டிக் போல் வந்து நிரப்பிக் கொள்ளும், அத்துடன் அருகிலுள்ள நிலத்தடி நீரும் அங்கு நிரப்பிக் கொள்ளும். இவை போதாதென்று பூமியின் மேற்பரப்பிலுள்ள நீரும் சிறிதளவு கீழே செல்ல வாய்ப்பு மிக அதிகம்.

   முன்னோடியான மீத்தேன் எரிவாயு திட்டம்

   2011-இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு குஜராத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேசன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இந்த திட்டத்தின் படி பசுமை வளம் கொழிக்கும் தஞ்சை டெல்டா வயல்களில் வேதிக் கரைசல்களைச் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுக்கப்படுவதாக திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் நிலங்கள் முற்றிலும் பாழாகும். நிலத்தடி நீர் நஞ்சாகும், சுற்றுச் சூழலும் நாசமாகும் என்பதால், விவசாய இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அப்பொழுது,அது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மீத்தேன் திட்டத்தின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசும் மீத்தேன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்தது.

   தற்போதைய ஹைட்ரோ கார்பன் திட்டம்

   புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

   ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது நாம் முன்னரே பார்த்த, ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களான மீதேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டு எடுப்பதுதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்று பிரிக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

   திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

   நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. எரிவாயுவை எடுப்பதற்கு செங்குத்தாகவும், படுக்கை வசமாகவும் பூமியில் 1000, 5000 மீட்டர் துளைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெளியே உறிஞ்சப்படும் என்கிறார்கள் அவர்கள்.

   இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர்வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் முக்கிய எதிர்ப்புக்குக் காரணம்.

   புதுக்கோட்டைக்கு கூடுதல் பாதிப்பு?

   காவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் வளம் முற்றிலும் அழிந்து விவசாயம் முற்றிலும் வீணாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் என்கிறார்கள் பலர்.

   என்ன செய்ய வேண்டும் மத்திய அரசு?

   நெடுவாசலைத் தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் செறிவுள்ள கங்கை சமவெளியை விட்டு தமிழகத்தில்தான் எடுக்க வேண்டுமென்ற கட்டயமில்லை.

   இதனால் தமிழகத்திற்கோ தமிழக மக்களுக்கு என்ன பிரதி பலன் செய்ய போகிறோம் என்பதை மத்திய அரசு சொல்லவில்லை. குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகளில் எரிவாயு எடுக்கக்கூடாது என்ற விதிகள் இல்லையென்றாலும், கடலோர, மக்கள் வாழாத இடங்களில் இம்முயற்சியை செய்யலாம், மாற்று வழியாக இதே மீத்தேனை சாண எரிவாயு மூலம் எடுப்பதை ஊக்குவிக்கலாம்.

   தமிழகத்திற்கு பெரிதும் உதவக் கூடிய AIIMS மருத்துவ கல்லூரி அமைப்பது போன்ற விசயங்களில் மெத்தனம் காட்டி விட்டு, மக்கள் விருப்பமில்லாத இதுபோன்ற திட்டங்களை அமுல்படுத்துவது தன் மூலம் ஆட்சியளர்கள் மீது மக்கள் வெறுப்பை சம்பாதிப்பதே மிச்சம்.

   ———————————

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. bandhu சொல்கிறார்:

  என்ன ஒரு அரகன்ஸ்! மக்களுக்குத் தெரியவில்லை. தெளிவில்லாததால் போராட்டம். என்கிறார்களே. எந்த அளவுக்கு அரசு மக்களுக்கு இந்த திட்டத்தின் நன்மை தீமைகளை விளக்கியுள்ளது? ‘யாரோ’ நலம் பெற யார் ‘தியாகம்’ செய்ய வேண்டும். தியாகம் என்பது வாழ்வாதாரத்தை விட்டுக் கொடுப்பதா?

  விளை நிலங்களெல்லாம் போய் கொண்டேயிருந்தால் எல்லோரும் எதைத் தின்பார்கள்? விவசாயத்தை குழி தோண்டிப் புதைக்கும் காரியத்தை செய்துகொண்டே ‘இந்த அரசு விவசாயிகளின் நண்பன்’ என்று எப்படி கூசாமல் சொல்ல முடிகிறது?

  பேய்கள் செய்யும் ஆட்சி!

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பெருக்க தென்னக நதிகளை இணைக்கலாம்,தமிழகத்திற்கு தேவையான புதிய சாலைவசதிகள் இரயில் வசதிகள் நீர் நிலைகளை புதுபித்தல் போன்ற என்னற்ற வசதிகளை தமிழ்நாட்டிற்க்கு செய்தால் யார் எதிர்க்க போகிறார்கள் மன்னை மலடாக்கும் விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை யார் கேட்டார்கள். தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை எதிர்க்கத்தான் செய்வோம்.இராதா, இல்.கணேசன் அவர்களே…..தயவு செய்து தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரித்து விடாதீர்கள்.

 6. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நீங்கள் பல நேரங்களில் நம் ராணுவ வீரர்களின் கடமையுணர்ச்சியையும் — கண்துஞ்சா நிலையையும் — கடுங்குளிரில் அவர்கள் நமக்காக செய்கின்ற தியாகங்களை பற்றியும் பதிவிட்டு அவர்களை மேன்மைப்படுத்தி இருக்கிறீர்கள் …. அவ்வாறான சிறப்புகள் இனி வரும் காலங்களில் தொடருமா … இந்த செய்தியை படித்தபின் ….. ? // ராணுவ ஆளெடுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்.. ரூ. 2 லட்சத்திற்கு விற்பனை.. 18 பேர் கைது! //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/army-recruitment-exam-cancelled-275247.html …. என்னே ஒரு விழிப்புணர்வோடு இருக்கிறது பாதுகாப்புத்துறை … உடனே சிலர் வரிந்துக்கட்டிக் கொண்டு வருவார்கள் — அதான் அவர்களை பிடித்து விட்டோமே என்று … !! சுத்தமான யோக்கியர்கள் ஆட்சி …. ?

 7. புதியவன் சொல்கிறார்:

  இல கணேசன் அவர்களின் arrogant (இதற்குச் சரியான தமிழ் வார்த்தை என்ன?) கருத்தைப் படித்தேன். என்ன ஒரு தைரியம். அவருக்கு எதற்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

  நம் அரசியல்வாதிகளில் பெரும்பான்மையோர், வெறும் சுய’நலவாதிகள். தன் குடும்ப நலத்துக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள். பின்னால் மாட்டிக்கொண்டால், அதைப் பற்றி அறிந்துகொள்ளாமல் கையெழுத்துப் போட்டுவிட்டேன் என்று கூசாமல் சொல்லும் குணம் உடையவர்கள். (மீத்தேன் திட்டத்திற்குக் கையெழுத்துப்போட்ட ஸ்டாலின் நினைவுக்கு வருகிறதா?). அதேபோல், ஒரு கட்சியிலேயே, பல முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், ஒவ்வொரு விதமாகக் கருத்தளிப்பார்கள். (கட்சிக்குப் பாதகமாயிடக்கூடாதாம்). கடுமையான எதிர்வினை மக்களிடமிருந்து வந்தால், அப்போது கட்சி, ‘இது அவரது சொந்தக் கருத்து’ என்று கழன்றுகொள்ளும். சொந்தக் கருத்து என்று சொல்லிவிட்டுப் பிறகு தன் கருத்தைச் சொல்லாததற்காக, அவர்களின்மீது கட்சி நடவடிக்கை எடுப்பதுதானே நியாயம்? அல்லது, கட்சி, இவர், இவர் சொல்வதுதான் கட்சியின் நிலை என்று தெளிவுபடுத்த வேண்டாமா?

  இல கணேசன் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் அவர் கெடுத்துக்கொண்டார்.

  நாடு நலம் பெற தனி மனிதர்கள் தியாகம் செய்ய வேண்டுமானால், முதலில் இவர் தனக்கு எம்.பி. பதவியை பதவி வெறியோடு ஏற்றுக்கொள்ளாமல், நாட்டின்மீது அக்கறை கொண்ட மற்றவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கலாமே? இல.கணேசன் போன்றோர் எட்டப்பன் பரம்பரை என்பது இது நாள்வரை தெரியாமல் போயிற்று.

  இவர்களைப் போன்றவர்களுக்குத் தானே, ‘கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குபவர்கள்’ என்ற சொல்லே இருக்கிறது. இல. கணேசனைக் கண்டிக்கிறோம். ஏற்கனவே இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு நன்மை செய்யாமல், கெடுதலை மட்டும் சமூகம் செய்கிறது. அவர்களை ஒரேயடியாக அழித்துவிட வேண்டாம். அதுவும் அரிசிச் சோறு சாப்பிடும் இல.கணேசன் போன்றவர்கள் இந்த எட்டப்பன் வேலையைச் செய்யவேண்டாம்.

 8. புது வசந்தம் சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு. இவர் ஒருத்தர் தான் உருப்படியாக பேசி கொண்டிருந்தார். இப்போ இவரும் அவங்க கட்சி உறுபினர்களுடன் ஐக்கியமாகிவிட்டார். எங்கிருந்து வாராங்க இப்படியெல்லாம் பேசுவதற்கு ?

 9. LVISS சொல்கிறார்:

  If there is objection to any project the centre should not try to push it through —

 10. செ. இரமேஷ் சொல்கிறார்:

  மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறுகிறது. அவங்க ஆட்சி செய்யற மாநிலங்களை எல்லாம் விட்டு விட்டு நம்ம தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வந்து இருக்காங்க.. அவ்வளவு நல்லவங்க அய்யா இந்த மத்திய அரசு. நமக்கெல்லாம் எப்போவுமே நல்லது செய்யணும் அவங்க முழு மூச்சை செயல்படுறாங்க.. எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் தமிழ்நாட்டு எதுக்கு, ஏன்னா இங்க இருக்க மக்கள் எல்லாம் வியாதியோடவா இருக்காங்க.. நல்ல ஆரோக்கியமா இருக்காங்க. அப்பறம் எதுக்கு.. நம்ம எல்லாரும் வாயில விரலை வச்சி சூப்பிகிட்டே இருக்கணும்.. நமக்கு நல்லலலலலது மட்டுமே நினைப்பாங்க இந்த மத்திய அரசு..

 11. Bagawan சொல்கிறார்:

  Sir, I saw this news in foreign media,
  http://news.asiaone.com/news/asia/indian-politician-nabbed-over-illegal-adoption-ring-kids-reportedly-sent-singapore-too
  These are all the acts by BJP leader for the country’ welfare?
  See how the welfare measures are done (One said the accused ran health camps to identify poor and unmarried pregnant women and persuaded them to give up their babies for adoption after paying them). – See more at: http://news.asiaone.com/news/asia/indian-politician-nabbed-over-illegal-adoption-ring-kids-reportedly-sent-singapore-too#sthash.CqzaIFoC.dpuf

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.