இவங்களும் நம்மவங்க தான்…. ” நியோகம் யுல்லோ” கேள்விப்பட்டிருக்கீங்களா…?


nyokum-yullo-festival

kiren-rijiju-during-celebrations-of-nyokum-yullo-festival

திரு.கிரென் ரிஜிஜு கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?
அதாங்க நம்ம மத்திய உள்துறை ராஜ்ய மந்திரி ( Minister of State )..
இவரைப்பார்த்தால் நம்ம ஊர் / நாடு மாதிரியே தெரியாது..

ஆமாம் – கிட்டத்தட்ட சீனாவுக்கு பக்கத்திலேயே,
அருணாசல் பிரதேசத்தில் இருக்கும் இந்தியர்களை
பார்த்தால் நமக்கே வித்தியாசமாக தான் இருக்கும்…
முக்கால்வாசி சீன முக ஜாடை தான்.

நேற்று ஒரு செய்தி பார்த்தேன்…
நமது அமைச்சர் கிரென் ரிஜிஜு Golden Jubilee celebrations
of Nyokum Yullo Festival – at Joram -ல் கலந்து கொள்ள,
சொந்த ஊருக்கு -அருணாசல் போயிருக்கிறார் என்று…

இந்த திருவிழா ” நியோகம் யுல்லோ ” என்பது அருணாச்சல்
பழங்குடிகளின் ஒரு பிரிவினரின் திருவிழா. நாம் பொங்கலை
கொண்டாடுவது போல், அவர்களும், நல்ல விளைச்சலை,
அறுவடையை, வழக்கமாக பிப்ரவரி மாதத்தில்
கொண்டாடுகிறார்கள். மண்ணோடு சேர்ந்திருப்பதில்
மகிழ்ச்சி கொள்கிறார்கள்…

அந்த திருவிழாவின் சாம்பிளை பார்த்தேன்…
வித்தியாசமாக இருந்தது …
நீங்களும் பார்க்க கீழே –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

7 Responses to இவங்களும் நம்மவங்க தான்…. ” நியோகம் யுல்லோ” கேள்விப்பட்டிருக்கீங்களா…?

 1. Pingback: இவங்களும் நம்மவங்க தான்…. ” நியோகம் யுல்லோ” கேள்விப்பட்டிருக்கீங்களா…? | rathnavelnatarajan

 2. tamilpani சொல்கிறார்:

  அருமை. பார்க்கும் வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி.

 3. GVS சொல்கிறார்:

  “இவங்களும் நம்மவங்க தான்” –
  அற்புதமாக யோசித்து தலைப்பு போட்டிருக்கிறீர்கள்.
  இத்தனை வேற்றுமைகளையும்,
  அதனூடே உடைக்க முடியாத ஒற்றுமையையும்
  உடையது தான் நமது நாடு.
  இது தானே நமது பெருமை !
  உங்களது தலைப்பிற்காகவும்,
  அருமையான உள்ளடக்கத்துக்காகவும்
  வாழ்த்துகள் காவிரிமைந்தன் சார்.

 4. தமிழன் சொல்கிறார்:

  ‘Joram’ – மிசோரமும் mi-joramதானா? வடகிழக்குப் பகுதிகளைப்பற்றி தென்னிந்தியர்கள் அறிந்திருப்பது 1 சதவிகிதம்கூட இருக்காது. இந்திய முகம், கன்யாகுமரியில் ஆரம்பித்து, காஷ்மீர், அருணாசலப்பிரதேசம், குஜராத் என்று ஒவ்வொரு இடத்திலும் முக வித்தியாசத்தைப் பார்க்கலாம். பரந்துபட்ட தேசம்.

  மா’நிலத்துக்கிடையே கலாச்சாரப் பரிவர்த்தனை நடக்கும்விதமாக, மிசோரம் நாள், தமிழ்’நாட்டிலும், (அதாவது ஒவ்வொரு மானில நாட்களும் தமிழ்னாட்டில் கொண்டாடப்படவேண்டும்), அருணாசலப்பிரதேசத்தில் தமிழக நாளும் கொண்டாடப்படவேண்டும். அப்போதுதான், இந்தியா என்ற ஒற்றுமை உணர்வு, எல்லோரும் ஒரே தேச மக்கள் என்ற எண்ணம் தோன்றும். இது பள்ளிகள் மட்டத்தில்ல் நடக்கவேண்டும்.

  பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   இந்த இடுகையை பதிவேற்றும்போது
   நேற்றிரவு ஒரு மணிக்கு மேல் இருக்கும்.

   பதிவேற்றிய பிறகு ஒரு கருத்து தோன்றியது….
   ஆனால் நிரம்ப நேரமாகி விட்டது…
   சரி நாளைக்கு பின்னூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம்
   என்று எழுந்து விட்டேன்.

   சொல்லி வைத்தாற்போல் –

   // மா’நிலத்துக்கிடையே கலாச்சாரப் பரிவர்த்தனை நடக்கும்விதமாக,
   மிசோரம் நாள், தமிழ்’நாட்டிலும், (அதாவது ஒவ்வொரு மானில நாட்களும்
   தமிழ்னாட்டில் கொண்டாடப்படவேண்டும்), அருணாசலப்பிரதேசத்தில்
   தமிழக நாளும் கொண்டாடப்படவேண்டும். அப்போதுதான், இந்தியா என்ற
   ஒற்றுமை உணர்வு, எல்லோரும் ஒரே தேச மக்கள்
   என்ற எண்ணம் தோன்றும்.//

   இன்று காலையில் அதே கருத்து –
   உங்கள் பின்னூட்டத்தில் வெளிப்பட்டிருக்கிறது…
   ஆனால், இது எனக்கு அதிசயமாக இல்லை…
   சில சமயங்களில் இப்படி நடப்பதை அனுபவித்திருக்கிறேன்….!!!

   நமது கல்வித்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள்
   கொஞ்சம் ஈடுபாடு காட்டினால், இவை நிச்சயம் சாத்தியமாகும்
   என்றே நினைக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இவங்களும் நம்மவங்க தான்…. அருமையான தலைப்பு குதூகலமான விழா கொண்டாட்டம் — அறுவடைக்குப்பின் மக்களின் மகிழ்ச்சியாட்டம் — அங்கே அப்படி …. இங்கே …? // நாம் பொங்கலை
  கொண்டாடுவது போல், அவர்களும், நல்ல விளைச்சலை,
  அறுவடையை, வழக்கமாக பிப்ரவரி மாதத்தில்
  கொண்டாடுகிறார்கள். மண்ணோடு சேர்ந்திருப்பதில்
  மகிழ்ச்சி கொள்கிறார்கள்…// … நல்ல விளைச்சல் , அறுவடை , பொங்கல் கொண்டாட்டம் — போன்றவைகள் நமக்கு — தமிழர்களுக்கு வரும் காலங்களில் …..?

  எட்டா கனியாக்க துடிப்புடன் செயலாற்றுபவர்களும் — மண்ணோடு சேர்த்து நம்மையும் மக்கி போக வைக்க எண்ணி ” ஹைட்ரோகார்பன் போன்ற ” திட்டங்களை செயலுக்கு கொண்டுவர முனைப்புடன் வேலைப்பார்ப்பவர்களும் — திட்டத்திற்கு எடுத்துள்ள இடம் வெறும் ” 1461 சதுர கி.மீ ” என்ற சிறு அளவிலான நிலம்தான் என்று { கிட்ட தட்ட இந்திய தலை நகர் டெல்லியின் பரப்பளவு தான் 1484 சதுர கி.மீ } கூறும் மத்திய அரசும் — தமிழக மண்ணின் மக்களை துச்சமாக நினைப்பவர்களும் கூட —- ” இவங்களும் நம்மவங்க தான் ” என்ற தகுதிக்கு ஏற்றவர்களா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நமது மண்ணை, மக்களை “துச்சமாக” நினைப்பவர்களை
   நாமும் துச்சமாக நினைத்து ஒதுக்கி விட வேண்டும்.
   முக்கியமாக நமது தொலைக்காட்சி, செய்தி நிருபர்கள்
   இதனை செய்ய வேண்டும். செய்வார்களா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.