நெடுவாசல் … மறைக்கப்படும் உண்மைகள்…!!!

neduvaasal-3

…( இந்த பசுமை அழிவதற்கு மத்திய அரசே
காரணமாக இருக்கலாமா…? )

neduvaasal-4

நெடுவாசல் பிரச்சினை வெளிப்படையாக வெடிக்கத்
துவங்கிய பிறகு,

பாஜக தலைவர்கள் / அமைச்சர்கள் அதைப்பற்றி
பேசி வருவதனைத்தும் பிரச்சினையை மேலும் மேலும்
தீவிரப்படுத்த தான் உதவுகிறதே தவிர,

மக்களிடம் எந்தவிதத்திலும் நம்பிக்கை ஏற்பட உதவவே
இல்லை என்பது வருந்தத்தக்க ஒரு விஷயம்…

– 2009 -லேயே, மன்மோகன் சிங் அரசாலேயே எடுக்கப்பட்ட
முடிவிற்கு பாஜக அரசு எப்படி பொறுப்பாக முடியும்…?

– மாநில அரசு ஒப்புதல் கொடுக்காமலா துளை குழாய்
போட்டிருக்க முடியும்…?

– மக்கள் சம்மதித்து தானே நிலத்தை கொடுத்தார்கள்…?
இப்போது கூட சம்பந்தப்பட்ட மக்கள் எதிர்க்கவில்லை…
சில குழுக்கள், கட்சிகள் தான் தூண்டி விடுகின்றன…!

– நலத்திட்டங்கள் எதைக்கொண்டு வந்தாலும் அதை
எதிர்ப்பதே இந்த குழுக்களுக்கு / கட்சிகளுக்கு வேலையாகி
விட்டது.

– நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக,
தியாகம் செய்ய மக்கள் முன்வர இருக்க வேண்டும்…

– இதனால் ஏற்படும் லாப நஷ்டங்களை எல்லாம்
ஆராய்ந்து பார்க்க வேண்டும்….

இவை அனைத்தும் தமிழக பாஜக தலைவர்களும் –
அமைச்சரும் சொன்னவை.

—————————————————————-

கடைசியாக நேற்றிரவு பாஜக தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்
கூறி இருப்பது –

‘ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய பெட்ரோலியம்
மற்றும் எரிவாயு துறை அமைச்சர் மிகத்தெளிவாக
விளக்கங்களை எடுத்துக்கூறினார்.

அதில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் உள்ளது என்பதை
கண்டுபிடித்தது கடந்த 2008-ம் ஆண்டு.
(அப்போது மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு
ஆட்சியில் இருந்தது).

இதேபோன்று புதுச்சேரி, அசாம், அருணாச்சல பிரதேசம்,
குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் எண்ணெய்
மற்றும் எரிவாயு இருப்பதை வெளியே எடுப்பதற்கு முடிவு
செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை.
அப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்படுவதோடு, தமிழ்நாடு
அரசுக்கும் லாபம் கிடைக்கும்.

அவர் மேலும், இத்திட்டம் வருவதால் ஏதேனும் பாதிப்பு
யாருக்காவது வர வாய்ப்பு உள்ளதா என்று மேலும் கவனம்
கொடுத்து ஆய்வு செய்யப்படும். இத்திட்டம் குறித்து அப்பகுதி
மக்களின் கருத்தும் கேட்டறியப்படும்.

இது போன்றவற்றிற்குப் பிறகும் இத்திட்டம் தேவை இல்லை என்று
மக்கள் கருதுவார்கள் என்றால், அதை மீறி இத்திட்டத்தை
செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்பதையும் தெளிவுபட கூறினார்.

மேலும், தமிழக மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அது அப்பகுதி மக்களுக்கு
நல்லதா கெட்டதா என்று கூறும் தகுதி எந்த அரசியல் கட்சி
அல்லது அமைப்பின் தலைவர்களுக்கும் இல்லை…….

ஏனெனில், அத்திட்டம் வருவதால் உள்ள நன்மை மற்றும்
தீமைகளை ஆராய்ந்து அறியும் விஞ்ஞான ரீதியான தெளிவை
எந்த அரசியல் கட்சி மற்றும் அமைப்பின் தலைவரும்
பெறவில்லை.

எனவே, நெடுவாசல் பகுதியில் வரும் இத்திட்டம், அப்பகுதி
மக்களுக்கு நலன் தருமா இல்லையா என்பதை நன்கு தெரிந்து
கொண்டு முடிவெடுப்பதே சிறப்பாக இருக்கும் என்று தான்
கருதுவதாக கூறினார்.’ என தெரிவித்துள்ளார்
பொன்.ராதாகிருஷ்ணன்.

——————————————————-

தமிழக பாஜக அமைச்சர் தானாக சமாதானம் கூறுகிறாரே
தவிர –

மத்திய அரசு நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் கருத்தை கேட்பது குறித்தோ, மறுபரிசீலனை செய்வது
பற்றியோ – எதையும் கூறவில்லை.

மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்தியே மீண்டும் விளக்கம்
கூறி இருக்கிறது.

மக்களின் போராட்டம் குறித்து மத்திய அரசு கவலைபடவே
இல்லை. திட்டம் தொடரும் என்றே அறிவித்திருக்கிறது.

——————————

உண்மையில், 2008-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவல்ல இது.

2008-ஆம் ஆண்டு யோசிக்கப்பட்டது உண்மை. ஆனால்,
இது குறித்து முடிவெடுத்தது பாஜக அரசு தான்…
அதுவும் கடந்த 15-ந்தேதி தான்.

பிப்ரவரி 15 அன்று பொருளாதார விவகாரத்திற்கான
கேபினட் குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்
நடைபெற்றிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில்தான் 44 இடங்களில்
ஹைட்ரோகார்பன்களைத் தோண்டியெடுக்கும்
ஒப்பந்தங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது…

இந்த ஒப்பந்தங்களை பெற்றவைகளில், ஒன்று தான்
நெடுவாசலில் தோண்டுவதற்கான அனுமதியைப் பெற்ற

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர்
ஒருவரின் குடும்ப நிறுவனமான ஜெம் லேபரட்டரீஸ்.

இதில் (44 இடங்களுக்கும் சேர்த்து ) மொத்த வருமானம்
46,400 கோடி ரூபாய் இருக்கும்
என்று தோராயமாக கணக்கு போட்டிருக்கிறார்கள்.
இது குறைந்த பட்ச எதிர்பார்ப்பு… உண்மை வருமானம்
இதைவிட பலமடங்கு அதிகமாக போகக்கூடும்.
நிலத்தடியில் என்ன இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது
என்பதை யார் உறுதியாகச் சொல்ல முடியும்…?

இதில் அரசுக்கு கிடைக்கப்போகும் பங்கு
வெறும் 14,300 கோடி ரூபாய். அதற்கு மேல் எவ்வளவு
கிடைத்தாலும் அது தோண்டி
எடுக்கும் நிறுவனங்களுக்கே சொந்தம்…

நெடுவாசல் ஒப்பந்தத்தை பெற்றிருப்பது
பாஜக கட்சிக்காரரின் நிறுவனம் என்பது தெரிய வந்திருக்கிறது…!!!
மீதி 16 கம்பெனிகளில் எந்தெந்த கம்பெனிகள்,
எத்தனை கம்பெனிகள் பாஜக வினரிடதோ தெரியவில்லை….!!!

விவசாயிகளின் ஜீவாதாரம் பாதிக்கப்படும்
என்கிறபோது, இதில் லாப நஷ்ட கணக்கு பார்த்து
செய்வோம் என்று அமைச்சர் சொன்னால் என்ன அர்த்தம்…?

மக்களிடம் கருத்து கேட்காமலே டெண்டர் விட்டது எப்படி…?
ஏல ஒப்பந்த ரேட் முடிவு செய்தது எப்படி ?
கம்பெனிக்கு தோண்டுவதற்கு லைசென்ஸ் கொடுத்தது எப்படி…?
பணியை துவக்கச் சொன்னது எப்படி…?

இப்போது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதும் –
மக்களிடம் கருத்து கேட்போம் என்கிறார்கள்….
அதையும் தமிழக பாஜக அமைச்சர் சொல்கிறாரே தவிர,
மத்திய அரசோ, பெட்ரோலியம் அமைச்சரோ சொல்லவில்லை…

13 நாட்களாக தமிழகம் அமர்க்களப்படுவது அமைச்சர்
கண்களுக்கு புலப்படவில்லையா…?
கிராம மக்கள் திரண்டெழுந்து, இராப்பகலாக அமர்ந்து
போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது தெரியவில்லையா…?

இதற்கு மேல் இன்னும் யாரிடம், எதற்காக –
போய் கருத்து கேட்கப்போகிறார்கள்…..?

மக்கள் அரசிடம் நம்பிக்கை இழந்து விட்டார்கள்…
அமைச்சர்களும், தலைவர்களும் பேசும் விதம்
நம்பிக்கை தருவதாக இல்லை….
ஆளுக்கு ஒரு விதமாக பேசுகிறார்கள்.
மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை…

போராட்டம் பெரிய அளவில் பரவும் முன்னர்,
விஷயத்தின் தீவிரத்தை புரிந்து கொண்டு,
லாப-நஷ்டம் பார்க்காமல்,
வீண் கவுரவம் பார்க்காமல்
மத்திய அரசு நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்வது நல்லது.

முடிவை மறுபரிசீலனை செய்ய தாமதப்படும் ஒவ்வொரு நாளும்
எதிர்ப்பு பெரிய அளவில் வளர அரசே காரணமாகிறது.

இந்த விஷயம் குறித்து கடந்த 15-ந்தேதி தான் மத்திய அரசால்
முடிவெடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் கீழே –

17 உள்நாட்டு கம்பெனிகள், 1 வெளிநாட்டு கம்பெனி…

nv-1

nv-2

nv-3

nv-4

nv-5

nv-6

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to நெடுவாசல் … மறைக்கப்படும் உண்மைகள்…!!!

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! ” டகோடா பைப்லைன் திட்டம் ” — கேள்விப்பட்டிருப்பீர்கள் … அமெரிக்கா கொண்டுவந்த எரிவாயு திட்டத்தின் பெயர் …. பூர்வகுடிகள் மற்றும் பலரின்பல மாத தொடர் எதிர்ப்புகளுக்கு பிறகு ” ஒபாமா ” பதிவியை விட்டு செல்லுபோது இடைக்கால தடைவிதித்து சென்றார் …

  ஆனால் பதவிக்கு வந்த ட்ரம்ப் – பதவியேற்ற நான்கே நாட்களில் திட்டத்தை செயல்படுத்த உத்திரவு இட்டார் … ஏனெனில் அந்த திட்டத்தை ” செயல்படுத்தும் நிறுவனங்களில் (Energy Transfer Partners) ” ட்ரம்ப் முக்கியமான பங்குதாரர்….. இதைப்பற்றி விரிவாக அறிய ….. :– Posted Date : 10:09 (27/02/2017) Last updated : 09:53 (28/02/2017)
  // அதே எரிவாயு… அதே அதிகார கும்பல்.. அழிக்கப்பட்ட அமெரிக்க நெடுவாசல்..! // http://www.vikatan.com/news/world/82072-destruction-of-americas-neduvasal-for-natural-gas.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=8968 இந்த கட்டுரையில் கடைசியில் உள்ள வாக்கியங்கள் நம்மை உற்று நோக்கி — யோசிக்க வைக்கிறது — அந்த வரிகள் :–

  // உலக நாடுகளின் முன்னோடியாகத் திகழும் வல்லரசு அமெரிக்கா. அந்த நாட்டு மக்களே ஒரு திட்டத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். கடுமையாக எதிர்க்கிறார்கள்…… அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து இறக்கும் குழந்தை, ராணுவ புல்லட் புரூப் உடைகளிலேயே ஊழல் செய்யும் அரசாங்கம், பிரபல நடிகையாக இருந்தாலும் சரி, மூன்று வயது பிஞ்சுக் குழந்தையாக இருந்தாலும் சரி… யாரும் இங்கு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலை, கேரள காசர்கோட்டில் அரசாங்கமே என்டோசல்ஃபான் தெளித்து இரண்டு தலைமுறைகளை அழித்த கொடூரம், “ஒரு நாடு, ஒரு மதம்” என்ற கொள்கையில் முனைப்போடு இயங்கும் அரசாங்கம் என மக்களை நசுக்கும் இந்த அரசாங்கத்தை எப்படி நம்புவது? அவர்கள் தரும் உறுதிகளை எதன் அடிப்படையில் ஒப்புக்கொள்வது?

  மிஸோரி அமெரிக்க நெடுவாசல்….. நெடுவாசல் இந்திய மிஸோரி. ட்ரம்ப் – மோடி. மோடி – //

  நெடுவாசல் திட்டத்தில் யாரெல்லாம் பங்குதாரர்கள் என்று விளக்கியுள்ளீர்கள்… ” மறைந்திருக்கும் பினாமிகள் ” யார்– யாரோ … ?
  ” தவறு என்பது தவறி செய்வது — தப்பு என்பது தெரிந்து செய்வது … தவறை செய்தவன் வருந்தியாகணும் — தப்பை செய்தவன் திருந்தியாகணும் ” — என்ற பாடல் வரிகளையாவது நினைத்து பார்ப்பார்களா … ?

 2. புதியவன் சொல்கிறார்:

  காமை சார்,

  1. Demonitizationக்காக ஒரு குழுவை நியமித்து சந்திரபாபு நாயுடுவைத் தலைவராகப் போட்டதாக ஒரு செய்தி வந்ததே. அதனுடைய பயன் என்ன?

  2. எந்தத் திட்டத்துக்கும், மக்கள் கருத்தை ஆராய்வோம் என்று பொய் சொல்லி, மக்களின் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதுதான் மத்திய அரசுகளின் வேலை.

  3. 2 ஜி புகழ் ஆ.ராசா, குறுகிய காலத்தில், ஏகப்பட்ட கம்பெனிகளை ஆரம்பித்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கு சொல்லப்பட்டுள்ள ஏகப்பட்ட கம்பெனிகளும் ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருக்கும். இதையெல்லா யாராவது நாட்டு நலம் விரும்பி ஆராய்ந்தால்தான் உண்டு. அதிலும் கர்னாடக பாஜக தொழிலதிபர், காவிரியை எதிர்காலத்தில் அனுப்பத் தேவையே இல்லாமல் இருக்கும்படி செய்ய, இந்தத் திட்டத்தில் நுழைந்துள்ளார் போலிருக்கிறது. இதனைக்காட்டியாவது இத் திட்டத்தைத் தடுக்க வேண்டும்.

  4. இன்னும் பலர் ஆ.ராசா நேர்மையானவர் என்று சொல்கிறார்கள். எப்படி அவருக்கு குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் வந்தது என்று யாரும் கேட்பதில்லை (அவர் மனைவி, சகோதரன் மற்றும் பல உறவினர்கள், ஏழைப் பின்புலத்திலிருந்து ஒரே இரவில் கோடீஸ்வரரான கூத்தும் இங்குதான் நடந்தது.

  5. வேலை வாய்ப்பு பெருகும் என்று வாய் கூசாமல் புளுகுகின்றவர்களுக்கு எந்த வித நரகம் சம்பவிக்கும் என்று தெரியவில்லை.

  6. இன்றைக்கு இன்னொரு செய்தியைப் பார்த்தேன். மம்தா பானர்ஜி ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐ.ஆர்.டி.சி.யிடமிருந்த பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் வேலையைத் தனியாரிடம் தாரை வார்த்தார். அதிலாவது, குறைகள் இருந்தால், வேறு ஒரு தனியாரிடம் ஒப்படைக்க இயலும் (அந்த அந்த இடங்களில்). இப்போது பாஜக மீண்டும் ஐ.ஆர்.டி.சிக்கு இந்த உணவு தயாரிக்கும் பணியை அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. அரசால் நடத்த முடியாத பணிகளை ஏன் அரசு எடுத்து நடத்த முயற்சி செய்கிறது?

  7. நெடுவாசல் திட்டத்தினால், தமிழகத்துக்கு 40 கோடி ரூபாய் வருமானம் வருமாம். நமக்கு டாஸ்மாக் வருமானமே ஆயிரங்களில் இருக்கும்போது, இன்னொரு மக்களை அழிக்கும் திட்டத்தால் 40 கோடி ரூபாய் வருமானம் எதற்கு?

  இப்படி மக்களை அழித்து வருமானம் பார்ப்பதற்குப் பதிலாக, நாட்டின் பகுதிகளை வெளி’நாடுகளுக்கு ரியல் எஸ்டேட் மூலமாக விற்று பணம் பார்த்துவிடலாம். இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன், செல்வராஜன்,

   மத்திய அரசு தற்போதைக்கு தன் நிலையை மாற்றிக் கொள்ளப்போவதாக
   தெரியவில்லை. திரு.பொன்.ரா. அவர்கள் தங்களை, தமிழக பாஜகவை –
   தமிழ் மக்களின் கோபத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக,
   மக்களின் கருத்தை அறிந்து செயல்படுவோம் என்று சொல்கிறார்….
   மத்திய அமைச்சகம் நேற்றிரவு அதிகாரபூர்வமாக வெளியிட்ட
   அறிக்கை அப்படி சொல்லவில்லை…

   சட்டம், ஒழுங்கு – மாநில பிரச்சினை என்பதால், இது தமிழக அரசின்
   தலைவலி தானே என்று அலட்சியமாக மத்திய அரசு நினைப்பதாக
   தெரிகிறது…. நிலைமை தீவிரமாகும் வரை, திருந்தப்போவதாக,
   திருத்திக் கொள்ள போவதாக தெரியவில்லை…
   தமிழகத்தில் -சட்டம், ஒழுங்கு பிரச்சினை கெடுவதற்கு மத்திய அரசே
   காரணமாக இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

   இன்னொரு விஷயம், திரு.பொன்.ரா. அவர்கள் –
   இந்த திட்டத்திற்கு தமிழகத்தை தவிர வேறு எந்த இடத்திலும் எதிர்ப்பு
   தெரிவிக்கவில்லை என்று சொல்கிறார்.
   தமிழகத்தில் விளைநிலத்தில், மக்கள் வசிக்கும் இடத்தில் கொண்டு
   வந்திருப்பதால் தானே எதிர்ப்பு…
   மற்ற மாநிலங்களில் அத்தகையை நிலை இல்லாமல் இருக்கலாம்.

   உள்ளூர் மக்களின் கருத்தை அறியாமல் இவர்கள்
   நடைமுறைப்படுத்துவது – சட்டப்படி செல்லாது.

   எதாவது பொதுநல அமைப்புகள், போராட்டங்களுடன் கூடவே,
   நீதிமன்றத்தையும் அணுகுவது நல்லது.

   இங்கே மக்கள் இன்னொரு விஷயத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
   எந்த தனிப்பட்ட கட்சியும் இதில் நுழைந்து அரசியல் லாபம்
   தேடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  The central govt. should drop this project in Neduvasal and pursue the other 43 projects if there is no protest for them —
  Until I read this article I thought that the project was conceived by the NDA govt –But it transpires that the decion was taken , ideaa not floated , by the UPA govt —
  whatever it be if the people do not want it , it is better to drop it –

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இது ” ஸ்பெஷலாக ” உங்களுக்கு மட்டும் ….. ! என்றால் — நண்பர்கள் கோபம் கொள்வார்கள் … எனவே அனைவருக்கும் … !!! // இளையராஜாவின் இந்த 9 பாடல்களில் ஒன்றையாவது மிஸ் செய்திருப்பீர்கள்! #RareRajaSongs // http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/82208-we-bet-definitely-you-might-have-missed-any-one-of-these-rare-ilayarajas-songs.html

 5. Bala Vish சொல்கிறார்:

  Piece see the approximate income currently the US utilities pay to land owners , I have assumed the bare minimum output and the world gas prices in the international market

  Oil and Gas Royalties
  What a royalty is. How it is calculated. What is it based on?
  Whenever oil or gas production begins, the landowner is entitled to part of the total production. A royalty is agreed upon as a percentage of the lease, minus what was reasonably used in the Lessee’s production costs. The royalty is paid by the Lessee to the owner of the mineral rights, the Lessor in the Lease. It is based on a percentage of the gross production from the property and is free and clear of all costs, except for taxes.

  Traditionally, royalty can be 1/8 of production or 12.8 percent of production; however, it can be any fraction of production, depending on the royalty clause in a lease. The landowner should negotiate for as high a royalty as can be arranged.

  Previously, landowners bargained for an overriding royalty. The override was 1/16 taken from the Lessee’s interest. Today, mineral owners negotiate for a firm royalty percentage without any override.

  Oil royalties may be paid in oil. The Lessor may receive oil from the Lessee and then market the oil. Unless the Lessor is wise and understands the market, electing to receive the royalty in this manner, could be a disadvantage and the landowner, electing for this arrangement, may not benefit from it. Most landowners choose to receive the royalty in cash at the posted price of the oil. A Lessor deciding to receive the oil as the royalty payment can market the oil royalty back to the Lessee for marketing and receive cash through that arrangement.

  Gas royalties usually are paid in the monetary units of the country, as in dollars. Gas price is also difficult to value given the fluctuating and volatile markets. Gas royalty clauses usually state a royalty as proceeds, market value or in kind

  A landowner can specify separate royalties for oil and gas production. Landowners in negotiating the lease can place a due date for receipt of royalty payments and if timely payments are not made there can be an interest charge for late payment placed in the lease.

  A royalty clause in the oil and gas lease specifies the amount of royalty to be paid to the Lessor and it can include other terms and conditions of payment.

  Natural Gas Royalty Estimate

  Here is the data that you entered
  12.5 Your royalty rate.
  $4.29 Average wellhead gas price.
  1 Average well production rate in millions of cubic feet per day.
  1 Acres you own within the well’s production unit.
  1 Number of acres in the well’s production unit.
  $16,087.50 Your expected royalty payment per MONTH (before expenses)
  This is equal to 1.08 million rupees a month for one acre, I have assumed just 1 million cft a day.
  Usually a good we’ll produce 5m Cft a day.
  This is the reality in USA
  Now you can see the profit the gas companies make and the politicians make.

  Even if they buy the property for 10 lake per acre, it is just one month production

  Don’t assume that you are rich yet. Learn about natural gas well decline rates

  This the report by Deloitte for investment in Natural gas
  Do you understand the magnitude of the money involved. This is my rough Estimate of the income and expenditure.

  Throwing a couple of crores of bribe just not even a drop.

  All these drilling contracts are not bid and foreign companies are not called in to bid.
  They are the Subcontractors to these Indian companies
  In US the companies pay to Federal and state in addition to paying the land owner.

  In India that portion may be 10% goes to the politicians

  India is looted left and right
  Try to pass the this info.
  https://www2.deloitte.com/content/dam/Deloitte/global/Documents/Energy-and-Resources/gx-er-oilandgas-india.pdf

  • Balavish சொல்கிறார்:

   This is just for 12.5% of income , usually the net will be around 55 to 60% for the drilling companies i.e around 60 million rupees per acre per month.
   Also remember they need not occupy all the property, imagine it is like triangle down for the suction and you fell your well like an inverted umbrella. Land owners adjoining the well area may be aware that the gas underneath is sucked. In USA they map it and calculate the exact amount of gas extracted according to the contours.
   If you see the allotment of the fertile areas will be for private entities and Public sectors give contracts to companies like shell or Exxon and pocket the commission

   Please share your input

   The voids filled by gas after taking out has to be filled with groundwater and the water table will go down dramatically and it will be contaminated.

   Do we need to tap now?
   We are not in energy crisis

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.