“It is too late & too little ” – திரு.மைத்ரேயன்….!!!

maitreyan

ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்த
திரு.மைத்ரேயன், செய்தியாளர்களிடம் சொல்கிறார்…

———————————–

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.

75 நாட்களாக யாரையுமே பார்க்க அனுமதி தரவில்லை.
நானும் ஒரு டாக்டர்தான். அதிலும், ரத்த புற்றுநோய்
சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்ட் நான்.

செப்டிசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க
யாரையுமே அனுமதிக்க கூடாது என்பதெல்லாம் பொய்.
எனவே ஜெயலலிதாவை யாரையுமே சந்திக்கவிடாமல்
தடுத்தது ஏன்? என்று புரியவில்லை.
அப்பல்லோவில் இதற்கு முன்பு எந்த நோயாளியையும்
இப்படி தனிமைப்படுத்தி வைக்கவில்லை.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே சந்தேகம் எழுந்தது.

செப்.22ம் தேதிக்கும் முன்பும், அதற்கு பின்னரும்
ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சைகள் குறித்து விசாரணை
நடத்த வேண்டும்.

திடீரென டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு, மாரடைப்பு என்று கூறினர். இதன்பிறகு உயிர் பிரியும் நேரத்தில், ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்ட, வென்டிலேட்டரை அகற்ற அனுமதித்தது யார்?

பொதுவாக இந்த அனுமதியை நோயாளியின் ரத்த சம்மந்தம் கொண்டவர்கள்தான் எடுக்க வேண்டும்.
அவ்வாறு அனுமதித்தது யார்?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மரணமடைந்தார்.
எனவே அவர் சீரியசாக இருந்தபோது, அவரின் அமைச்சரவையில் 2வது இடத்தில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்டோரிடம்
மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.

எனவே இதுகுறித்து உரிய விசாரணை தேவை….

————————————————

சாதாரண பொதுமக்களாகிய நாங்கள் எப்போதோ இந்த
கேள்விகளையும், டிமாண்டையும், இன்னமும் பலவற்றையும்
இந்த வலைத்தளத்தின் மூலம் எழுப்பி விட்டோம்…
எதற்கும், யாரிடமிருந்தும் பதிலும் இல்லை –
விளக்கமும் இல்லை…!

—————-

திரு.மைத்ரேயன் அவர்களைக் கேட்க விரும்புகிறோம் –

2002-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ராஜ்ய சபா உறுப்பினராக
உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்கள் தலைவி
ஜெயலலிதா அவர்கள் மீது நீங்கள் காட்டியுள்ள பரிவு,
அக்கரை, விசுவாசம் இது தானா…? இவ்வளவு தானா…?

அவர் உயிருடன் இருந்தபோது, தினமும் அப்போல்லோ
வராண்டாவில் நின்று தவம் செய்து கொண்டிருந்தபோது
ஒரு தடவையாவது இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கலாமே..?

மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டிருக்கலாமே…?

ரகசியமாகவாவது நெருங்கியவர்கள் யாரிடமாவது,
இது குறித்து எதாவது செய்ய முடியுமா என்று
விவாதித்திருக்கலாமே… ?

கட்சியின் மற்ற முன்னணி தலைவர்களுடன் இதற்காக,
சண்டை கூட போட்டிருக்கலாமே… ?

இதில் எதாவது ஒன்றை செய்திருந்தால் –
ஒருவேளை ஜெ. பிழைத்திருக்க கூட
வாய்ப்பிருந்திருக்கலாம் அல்லவா…?

எங்கள் இதயம் –
நினைக்கும்போதெல்லாம் வருந்துகிறது….

உங்கள் மனசாட்சி உங்களை
உறுத்தவில்லையா Mr.Maitreyan …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “It is too late & too little ” – திரு.மைத்ரேயன்….!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  இவருக்கு கடந்த ஓரிரு வருடங்களாக, ஜெ.விடம் நல்ல பெயர் இல்லை. அதன் காரணம் சசிகலாவாக இருக்கமுடியும். எல்லோரும், ஜெ. மீண்டு வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கையாக இருந்ததாலும், ஜெ. அவர்கள் தன்னைக் கவனித்துக்கொள்ளும் உதவியாளராக சசியைக் கூடவே வைத்திருந்ததாலும் யாருமே அந்த 72 நாட்கள் பேசவே துணியவில்லை. அதைப்பற்றி நினைக்கவும் துணியவில்லை. அவர் இதோ வருகிறார், அதோ வருகிறார் என்ற நிலைமைதான் இருந்தது (ஆஸ்பத்திரியின் பத்திரிகைச் செய்தி போன்றவை) கடைசி 3 நாட்கள் நிலைமை எல்லோருக்கும் அதிர்ச்சிதான். அதனால் வேறு எதையும் சிந்தனை செய்யும் நிலைமை இல்லை.

  ஆனால், 77வது நாள் (அடக்கத்திற்கு மறு நாள்) இவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டிருந்தது எதற்காக? இவர்களுக்குச் சந்தேகம் இருந்திருந்தால், அப்போதல்லவா குரல் எழுப்பியிருக்கவேண்டும்.

  இப்போது குரல் எழுப்புவதால் ஒரு பயனும் இல்லை. சசிகலா அவர்கள் உள்ளே இருப்பதால், நிறையபேருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தைரியம் வர ஆரம்பித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அதாவது, இவர்கள் யாருக்குமே உண்மையின்பால் நிற்கும் எண்ணம் இருந்ததில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதற்கு ஒரு விதிவிலக்காக நான் நினைப்பது, முனுசாமி அவர்களை. அவர்தான் முதன் முதலில் தைரியமாகப் பேசியவர்.

  ஜெ. அவர்கள் இன்று இருந்திருந்தால் நிலைமை இப்படியா இருந்திருக்கும்? அவர் சிறையில் இருக்க நேரிட்டிருந்தாலும், தமிழ்நாட்டை விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். சர்க்காரியா விசாரணைக் கமிஷனுக்காக சரணாகதி அடைந்த கருணானிதிபோல் ஜெ. கிடையாது. 2ஜி போன்ற ஊழல்களினான விசாரணைகளைச் சந்திக்க இயலாமல், இலங்கைத் தமிழர் மீதான போரின்போது மத்திய அரசை எதிர்த்து தைரியமாகக் குரலெழுப்ப முடியாமல் எலிபோல் பதுங்கியிருந்த கருணானிதி அல்ல. மீத்தேன் எடுக்க அனுமதி அளித்த பேப்பரில் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று சொன்ன ஸ்டாலின் போன்றவரல்லர் ஜெ. தைரியம் மிக்கவர். தமிழக நலனுக்காகப் பாடுபட்டவர். அவர் மறைவு தமிழகத்துக்குப் பெரும் இழப்பு.

 2. selvarajan சொல்கிறார்:

  ஜனாதிபதி — பிரதமர் இன்னும் பிறரிடம் ” மனுக்களை ” கொடுப்பதால் என்ன பயன் … ?

  // ஜெயலலிதாவின் மரணம் குறித்து தீவிர தேடுதலில் இறங்கினோம். அவரது மரணம் நேர்மையாக அமையவில்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்” – கவலை தோய்ந்த முகத்துடன் நம்மிடம் பேசினார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இவரும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியும் , ‘ தமிழக முதல்வரும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அவரது உடல்நிலையும்’ என்ற தலைப்பில் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர். // என்ற விகடனின் பேட்டியையும் ….

  இது போன்ற தகுந்த ஆணித்தரமான ஆதாரங்களையும் — வெளிநாட்டு பீலே மற்றும் இரு டாக்டர்கள் அளித்த முன்னுக்கு பின் முரணான பேட்டிகள் — பல தரப்பிலிருந்து எழுப்ப படுகிற சந்தேகங்கள் ….

  கூழைக் கும்பிடு மந்திரிகளின் சமீபத்திய காமெடியான பத்திரிக்கை செய்திகள் : 1 . // ஆச்சரியப்பட வைக்கும் ஜெ.வின் அப்பல்லோ உரையாடல்கள்… “70 எம் எம்” காட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/minister-srinivasan-s-controversy-speech-on-jayalalithaa-s-apollo-days-275300.html 2 . கண்ணாடி வழியே விரலை அசைத்துக் காட்டினார் என்று கூறும் செங்கோட்டையனும் … 3 . // ஜெ. நாடித் துடிப்பு குறைய குறைய ஒப்பாரியே வைத்த சசிகலா… ஒரேபோடு போட்ட ராஜேந்திர பாலாஜி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-cried-well-when-jayalalitha-s-pulse-rate-had-gone-down/slider-pf223910-275467.html எல்லாவற்றையும் இணைத்து வலுவான வழக்காக போடுவதை விட்டுவிட்டு மனு கொடுப்பது போன்ற பழைய புராணங்களை கூறுவதால் ஏதாவது உருப்படியான பலன் கிடைக்குமா … ?

  தீர்ப்பு வந்த பின் ஆயிரம் குறைகளை சிலர் ஜெயாவின் மீது கூறினாலும் — தற்போது அவர் இருந்திருந்தால் — கட்சி பாகுபாடில்லாமல் பொது மக்களும் மற்ற கட்சியினரும் உட்பட அனைவரும் — மக்கள் விரோத திட்டங்கள் வந்திருக்குமா என்று கண்டிப்பாக அவர் இல்லாததை பற்றி நினைப்பார்கள் — என்பது தான் உண்மை … !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.