அய்யகோ – வைகோ அவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்டார்களாமே…….!!!

தன்னை சுட்டுக்கொல்ல போலீசார் திட்டமிட்டதாக
வைகோ குற்றஞ்சாட்டுகிறார்….!!!
….

….

இந்த பேட்டியில் வைகோ கூறுகிறார் –

….

” அடுத்து சுடப்போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு …
வேன் மேல தனி ஆளா நிக்கறேன்…
I WAS AN EASY TARGET …
கிட்ட நெருங்கி வந்து சுட ரெடியாயிட்டாங்க…
இப்போ இருக்கற ஐஜி.. முருகன்…
அவர் வந்து தடுக்கல்லைன்னா –
என்னை சுட்டுருப்பாங்க…”

————–

அய்யையோ …..அப்படியா சமாச்சாரம்…?

திரு.வைகோ அவர்கள் இந்த பேட்டியில் கூறுவது
ஆகஸ்ட் 2015-ல், அவர், தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில்
நிகழ்த்திய டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தின்போது நடந்த
சம்பவத்தை தான்…

அன்று அங்கு உண்மையில் நடந்தது தான் என்ன…?
கொஞ்சம் பின்னால் போய் பார்ப்போமா…?

அன்று, அங்கு, என்ன கூத்தெல்லாம் நடந்தது என்பது
குறித்து விவரமாக விமரிசனம் வலைத்தளத்தில் -அப்போதே

“ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம் ”
….. திரு.வைகோ….. என்கிற தலைப்பில் -ஆகஸ்ட் 7, 2015
அன்று வெளிவந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது….

ஒரு லைவ் ரிலே மாதிரி இருந்த அந்த
இடுகையிலிருந்து இப்போதைக்கு இங்கு சில பகுதிகளை
மட்டும் கீழே தருகிறேன்….

போலீஸ் வைகோவை படுத்தியதா… அல்லது
வைகோ போலீஸை படாதபாடு படுத்தினாரா
என்பது புரியும்….!!!

( இதைப்படித்த பின்னர் கீழே உள்ள வீடியோவை பாருங்கள் –
தமாஷாக இருக்கும் …!!!)
—————————————————–

இவர் அந்த தொலைக்காட்சி நிர்வாகத்திடம்
உங்கள் TRP rating-ஐ
எகிற வைக்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
நேரடி தொலைக்காட்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்
என்று சொல்ல, தமிழ் நாட்டில் வேறு எந்த தொலைக்காட்சியும்
செய்ய முடியாத நிகழ்வாக outstation broadcasting van
2-ந்தேதி கலிங்கப்பட்டிக்கு வந்தது. பிராமிஸ் பண்ணியபடியே,
வைகோவும் “லைவ்” ஆக சுடச்சுட நிகழ்ச்சிகள் தயார்
செய்து கொடுத்ததை தான் தமிழக மக்கள் கடந்த ஞாயிறு
அன்று பார்த்தனர்.

1) 94 வயதான என் தாயாரே முன்னின்று போராட்டம் நடத்திய
பின்னரும் அந்தக் கடையை திறக்க உங்களுக்கு என்ன
துணிச்சல் என்று கர்ஜித்தார் வைகோ…

(94 வயது மூதாட்டி, தானாக சேரைத் தூக்கிக் கொண்டு
போராட்ட களத்திற்கு வந்திருப்பாரா…? பாவம் ..தள்ளாத
வயதிலிருக்கும் தாயாரையும் தன் அரசியல் லாபத்திற்காக
பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குப் போய் விட்டார்
அண்ணன்.)

2) டாஸ்மாக் கடைக்கு முன்னால், பாதுகாப்பிற்காக
நிறுத்தப்பட்டிருந்த காவலர்களை, தன் தொண்டர் ஒருவரை ,
சற்றுத்தள்ளி இருந்த செல்போன் டவரின் மீது ஏறி குரல்
கொடுக்கச் சொல்லி அங்கே போக வைத்தார் வைகோ….

பாதி போலீஸ் அதை நோக்கிச் சென்றவுடன்,
வைகோவின் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை
அடித்து நொறுக்கி, உள்ளே இருந்த அத்தனை சாமான்களையும்
வெளியே தூக்கிப் போட்டு நெருப்பு வைத்தனர்.

3) இதனைத் தடுக்க, போலீசார் – மதிமுகவினரை தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டனர். நிலைமை மோசமாகவே
கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். சில நிமிடங்கள் கழித்து,
கடை முற்றிலுமாக நொறுக்கப்பட்டு விட்டதால்,
இனி அங்கே இருப்பதில் பயனில்லை என்று போலீஸ்காரர்கள்
அனைவருமே அந்த இடத்திலிருந்து சுமார் 200 அடி தள்ளிப்போய்
பேசாமல் கூட்டத்தையும், வைகோவின் பேச்சையும் கவனித்துக்
கொண்டு “தேமே”னென்றிருந்தனர்….

அன்று நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்
கொண்டிருந்தவர்கள்
அனைவரும் இதை கண்டிருக்கலாம்.

4) வேன் மீது ஏறி நின்று, ஒலிபெருக்கியை பிடித்துக்
கொண்டு, வைகோ கூறுகிறார் –

KALINGAPATTI-3

”அமைதியாக போராட்டம் நடந்தது. அப்போது எங்கள்
தொண்டர்கள் இங்கே இருந்த மதுபானக் கடையை அடித்து
நொறுக்கினார்கள். ( அமைதி….அடித்து நொறுக்கினார்கள்…..!!. )

kalingapatti-2

அப்போது போலீசாருக்கும், எங்களது தொண்டர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் கல்லை எடுத்து எறிந்தார்.
( வைகோ மொழியில் – இதுவும் அமைதி வழியே ….?)

அவரை நாங்கள் பிடித்து கட்டி வைத்தோம்….!

ஆனால், அதற்குள் காவல்துறையினர் எங்கள் கட்சியினர் மீது
தடியடி நடத்தியுள்ளனர். என் மீது குறிபார்த்து 6 கண்ணீர்
புகை குண்டுகளை வீசினர். குண்டுகளை வீசி என்னைக் கொல்ல
முயற்சித்தார்கள்…

( கண்ணீர் புகை குண்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலையில்
பணி புரிந்தவன் நான்…… கண்ணீர்புகை குண்டு
பட்டு யாரும் உயிர் இழந்ததாக சரித்திரமே கிடையாது…..!
உண்மையில் அதை குண்டு என்று சொல்வதே அபத்தம்…. )

எனது சொந்த ஊரில், நான் பிறந்த இந்த மண்ணில் சாவது
எனக்கு பெருமைதான் ” என்று கூறிய வைகோ இதன் பின்
அங்கிருந்து 200 அடி தள்ளி கைகட்டி, பேசாமல்
நின்றிருந்த போலீஸாரைப் பார்த்து –

“ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு ”
“காக்கி சட்டை போட்டிருக்க இல்ல … சுடு….
இறங்கி வரட்டுமா?
இதோ தனியா வர்ரேன்….” என்கிறார்.

இத்தனையும் “லைவ்” தொலைக்காட்சி கிடைத்ததனால்
உண்டான வேகம்….
நல்ல சூடான வியாபாரம் –
இவரால் தொலைக்காட்சிக்கு TRP- யும்,
தொலைக்காட்சியால் இவருக்கும் …!!

பின்னர் அவரிடம் சென்று கைதாகும்படி பணிவோடு
வேண்டிக்கொள்ளும் காவல் துறை அதிகாரியிடம் இவர்
கூறுகிறார்…

” நீ யார் என்னைக் கைது செய்ய …?
நீ பிறக்கும் முன்பிருந்தே அரசியலில்
இருப்பவன் நான்…..
போய் விடு இங்கிருந்து.. என்னை கைது
செய்தால் இங்கே கலவரம் வெடிக்கும் –
I don’t want to talk to you “

காவலர்களை கடைசி வரை கலவரம் வெடிக்கும் என்றே
பயமுறுத்தி விட்டு, இரவு எல்லாரும் கலைந்து போய்
விட்டார்கள்.

———————————————————

அந்த இடுகையை எழுதும்போது, எனக்கு அது குறித்த வீடியோ
க்ளிப்ஸ் கிடைக்கவில்லை…. பின்னால் கிடைத்தவற்றை
கீழே தந்திருக்கிறேன்… பாருங்கள்…. சுவாரஸ்யமாக இருக்கும்…

திரு.வைகோ அவர்களை சுட்டு வீழ்த்த போலீஸ்காரர்கள்
என்னவெல்லாம் செய்தார்கள், என்ன பாடு பட்டார்கள்
என்பது விளங்கும் ….

அன்று எடுக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி வீடியோக்களை
வைகோ சுத்தமாக மறந்து விட்டார் போலிருக்கிறது…

——————–
அதான்…..

“சுட்டுக்கொல்ல முயன்றார்கள்.. 🙂 🙂 🙂 ”

……………….

சாட்டை –
1.41 நிமிடங்கள் ….

………………..

jannal web tv –
முதல் எட்டு நிமிடங்கள் பார்த்தால் போதுமானது ….

———————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to அய்யகோ – வைகோ அவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்டார்களாமே…….!!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Rowdism Atrocity-Dravida culture -vetkakedu

 2. புதியவன் சொல்கிறார்:

  கருணானிதி, நிச்சயம் தனக்கு வைகோ மகனாகப் பிறக்கவில்லையே என்று எண்ணி வருந்தியிருப்பார். கருணானிதியிடம் வளர்ந்த சீடன் அல்லவா? நிறையபேர் (ஈழத் தமிழர்கள்), பிரபாகரன், வைகோ மேல் மரியாதை வைத்திருந்ததனாலும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாலும் வைகோமேல் அன்பு வைத்திருக்கின்றனர்.

  வைகோ அடிக்கும் ஸ்டன்ட் எல்லாம் கருணானிதியை ஞாபகப்படுத்தும். அது ரயில் போகாத தண்டவாளத்தில் தலையை வைத்து ரயில் மறியல் செய்வதாகட்டும், பாளையங்கோட்டைச் சிறையில் பாம்புகளுக்கும் தேள்களுக்கும் இடையில் அல்லலுற்றேன் என்று டகால்டி வேலைகளைக் காட்டுவதாகட்டும், ‘இருப்பது ஒரு உயிர் அது போவது ஒரு முறை. அது இன்றே போகட்டும்’ என்று வெட்டி வசனங்கள் பேசுவதாகட்டும், வைகோ, கருணானிதி என்ற ஜாடிக்கேத்த மூடி. ஸ்டாலினைவிட ஆளுமை மிக்கவர். அதனால்தான் ஸ்டாலின் இந்த அளவுக்கு வைகோவை வெறுக்கிறார்.

  அந்தகோ…. திமுகவை விட்டு வெளியேறியபின், அவர் நிலைமை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தேயத்தொடங்கிற்று. காலம் அவரை திமுகவுக்கு எதிராகச் செயல்பட வைத்ததன் மூலம், அவர்மேல் சாஃப்ட் கார்னர் கொண்டிருந்த திமுகவின் ஒரு பகுதியினரையும் வெறுப்படைய வைத்தார்.

  கடந்த 3-4 வருடங்களாக அரசியல் ஜோக்கராகவும் ஆகிவிட்டார். சசிபெருமாளைத் தாங்கிப் பிடித்ததாகட்டும், மது உடல் நடத்துக்குக் கேடு ஆனால், சிகரெட் நல்லது என்று சொல்லி சிகரெட் ஏஜென்சியைத் தன் மகனுக்கு வாங்கித் தந்ததாகட்டும்…. அவர் போராட்டமெல்லாம் வெத்து வேட்டு. போகப்போக, அவருடைய தரத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டுசென்றே தீருவது என்றே கங்கணம் கட்டிச் செயல்படுகிறார். அதுவும், சிவாஜியின் சாயலே தெரியாதபடி, மேடைகளில் கட்டபொம்மன்போல் வசனம் பேசுவதிலாகட்டும், நினைத்த மாத்திரத்தில் கட்டுக்கடங்காமல் உணர்ச்சிப்பெருக்குற்று கண்ணீர் விடுவதிலாகட்டும், அவர் மிகச் சிறந்த நடிகர். என்ன செய்வது, அரசியல் நடிப்புகளுக்கு தேசிய விருது இல்லையே.

  இவ்வளவும் இருந்தபோதிலும், வைகோ, தமிழகத்துக்குப் பாதகமான திட்டங்களை எப்போதும் எதிர்த்துக் குரல் கொடுத்துவந்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காக தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களை ஆதரித்ததில்லை. தான் பதவி பெற வேண்டும் என்று அவர் நினைத்ததுமில்லை. அவருடைய கொள்கைகளும், அதை நடத்தும்விதமும் சர்ச்சைக்குரியது என்றாலும், நேரடியாக வைகோவைத் தவறு செய்தார் (அரசியலில் கொள்ளையடித்தார், பெண்கள் விஷயத்தில் ‘ஸ்’,’க’ போல் தவறு செய்தார், நிலங்களை அபகரித்தார்) என்று கூற இயலாது. அவர், இந்தக் காலத்தில் ஓரளவு டீசன்ட் அரசியல்வாதி. (அதாவது மற்ற கட்சித் தலைவர்களிடமும், அகில இந்திய அளவில் சீனியர் அரசியல்வாதிகளிடமும் அவர் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடந்துவந்திருக்கிறார்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நீங்கள் வைகோ அவர்களைப்பற்றி
   மிகச்சரியாக மதிப்பிட்டிருக்கிறீர்கள்…

   நீங்கள் கூறுவதை நான் அப்படியே ஏற்கிறேன்.

   அவரைப் பார்த்தால் சில சமயங்களில் எரிச்சலாகவும்,
   சில சமயங்களில் பரிதாபமாகவும் இருக்கிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. sundarappsdba சொல்கிறார்:

  vai ko’s one achievement which I can vouch for is, his work on getting court judgement for eliminating seemai karuvelam (Prosposis Juliflora) trees .
  Rest everything are in sync with what you’ve mentioned above.

  Apart from this one interesting article, which I want to brint it to you:

  …..

  Is it true ??, If you have anything on your memory, kindly write an article or share with us.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப sundarappsdba,

   உங்களுக்கும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வலைத்தளத்திற்கும்
   என்ன சம்பந்தம்…? எதற்காக மீண்டும் மீண்டும் அந்த தளத்திற்கு
   இங்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள்…?
   ஏற்கெனவே ஒரு தடவை இங்கே அது குறித்து கூறி விட்டேன்.

   தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தும் தளங்களை
   நான் ஊக்குவிக்க மாட்டேன். உங்களுக்கு அது பிடித்திருந்தால் –
   படித்து விட்டுப் போங்கள்… அதற்கு இங்கே விளம்பரம் வேண்டாம்.

   இனி அந்த தளத்தைப்பற்றி இங்கே எழுத வேண்டாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • sundarappsdba சொல்கிறார்:

    திரு கா மை,

    நான் அந்த இணைய தளத்திற்கு விளம்பரம் தேடுவதற்காக அதன் இணைப்பை தரவில்லை.

    அதிலுள்ள நல்ல விஷயங்களை மட்டும், உங்களால் பிரித்து எடுத்துக்கொள்ளும் வயதும் பக்குவமும் உங்களிடத்தில் இருப்பதாலும், அதன் மூலம் நான் (மற்றும் விமரிசனம் தளத்தை படிப்போர் ) மேலதிக தகவல்களை உங்களிடத்திலிருந்து பெறலாம் என்ற முனைப்புடன் உங்களுக்கு இணைப்பை பகிர்ந்தேன்.

    உங்களுக்கு “நான் குறிப்பிட்ட” இணைய தளத்தை பிடிக்கவில்லை என்று இப்போது அறிந்துகொண்டேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப sundarappsdba,

     எனக்கு ” அந்த ” தளத்தை பிடிக்காமல் போவதற்கு
     காரணம், தரம் குறைந்த வார்த்தைகளால்,
     தனிப்பட்ட முறையில் தாக்குவது தான் என்பதையும்
     இங்கே கூற வேண்டும்…

     நீங்கள் அத்தகைய நடையை ஏற்கிறீர்களா…?

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார் எழுதுவார். என் நினைவில் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் அவர்கள் மூப்பனாரிடமும், காங்கிரசிடமும் ஒட்டுறவோடு இருந்தார். இந்தியன் வங்கி மக்கள் பணத்தைத் தத்தம் செய்ததில் கோபாலகிருஷ்ணனுக்கு பங்கு உண்டு. எப்போதும்போல் அரசியல்வாதிகள் எஸ்கேப் (சுரேஷ் கல்மாடி கேஸில் நடந்ததுபோல். அவர் மாட்டிக்கொண்டார். காமன்வெல்த் விளையாட்டுப் பணத்தைப் பங்குபோட்ட அரசியல்வாதிகள் எஸ்கேப்). அந்த சமயத்தில், கருணானிதி, அறிக்கை மூலமாக, ‘திமுக இந்தியன் வங்கியை நம்பாததால், அங்கிருந்து திமுக கட்சிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றுகிறேன்’ என்று சொன்ன ஞாபகம்.

 5. NS RAMAN சொல்கிறார்:

  Vaiko talk about all international politics
  But every year at least 20,workers killed or injured in fire works factory in and around his place. Not a single agitation against such factory owners
  Why because they are from same caste or paying to party
  Without the support of
  his pay masters LTTE he is really struggling in politics

  • தமிழன் சொல்கிறார்:

   அன்புள்ள ராமன்… நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயம் தவறு என்று கருதுகிறேன். சாதி என்ற கட்டுக்குள் வைகோவை அபடைப்பது பொருத்தமற்றது என்று நான் கருதுகிறேன். அவர், சாதிக்குமட்டும் உழைப்பவராயிருந்மால் தெலுகு பேசும் பெல்டில் அவருக்குப் பெரும் ஆதரவும் கட்சிக்குப் பிடிப்பும் இருந்திருக்கவேண்டும். நிற்க, சாதீயச் சிந்தனையில்லாத தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் (கொஞ்சம் exaggeratedஆகத் தோன்றினாலும்)

   சிவகாசி மத்தாப்பு, வெடித் தொழில் லட்சக்கணக்கானவருக்கு வாழ்வாதாரம். பீடி, புகையிலைத் தொழிலும் அப்படித்தான். இந்தத் தொழில்கள் அதில் ஈடுபடுபவர்களுக்குப் பெரும் ரிஸ்க் என்றபோதிலும். (பீடித், தீப்பெட்டித் தொழிலில் பயனுறுபவர்கள் படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள்). இந்த மக்களுக்கு அரசு உரிய வாழ்வாதாரம் கொடுக்கமுடிந்தால் மட்டுமே இத்தகைய தொழில்களுக்கு மாற்றோ, நெறிப்படுத்துதலோ செய்யமுடியும். கம்யூனிஸ்டுகள் ஓரளவு இவர்களுக்காக்க் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் கடுமையாகப் போராடி தொழிலை நசிப்பதை அங்குள்ள மக்களே விரும்பமாட்டார்கள். அரசு நெறிச் சட்டங்களைக் கடுமையாக்குவது, Inspecting and implementing authoritiesஐ மேலும் மேலும் பணக்கார்ர்களாக்குமே தவிர தொழிலில் உழைக்கும் மக்களுக்குப் பயன் இல்லை.

   இதுபோன்றே சாக்கடை, மலம் அள்ளுவதற்கும் மாற்று வழியும், அதில் இதுவரை உழைத்தவர்களுக்கு வாழ்வாதாரமும் சேர்ந்து செய்யவேண்டும். வெறும்ன போராடி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதில் பயனில்லை.

  • chandramouly venkatasubramanian சொல்கிறார்:

   Mr vaiko has to fight against Mr stalin only(that was the motto evicted him from DMK)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.