மோடிஜியின் தேர்தல் பிரச்சார யுக்திகள்….

modi-addresses-election-rally

….

ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரங்கள் கிட்டத்தட்ட முடிவிற்கு
வந்து விட்டன… மோடிஜியின் பிரச்சாரங்கள் எப்படி இருந்தன…?

நாட்டின் பிரதமர் என்கிற உயர்ந்த பதவியில் இருக்கும்
ஒருவர், மாநில தேர்தல்களில் அதீத ஈடுபாடு காட்டி,
மாநில அரசியல்வாதிகளை விட மோசமான அளவிற்கு
தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை நிகழ்த்துவது
என்பதை சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக
மோடிஜி பிரதமர் பதவி வகிக்கின்ற இந்த காலகட்டத்தில் தான்
காண்கிறோம் என்று சொல்ல வேண்டும்.

மாநில அரசியலில் மிகவும் கீழ்மட்ட அளவில் இறங்கி
விளையாடுவது, பிரதமர் என்கிற பதவியின் மதிப்பையும்,
மரியாதையையும் குறைக்கவே செய்யும்….

பிரதமரை அவமரியாதையாக பேசுகிறார்கள் என்றால்,
அதற்கு அவரே தான், அவரது செயல்பாடுகளே தான்
காரணம் என்று தான் சொல்ல வேண்டும்…

உதாரணத்திற்கு, உத்திர பிரதேச தேர்தலில் மோடிஜியின்
செயல்பாடுகள் எப்படி அமைந்திருந்தன என்று விவரிக்கிறார்
ஹிந்து ஆங்கில நாளேட்டின் துணை ஆசிரியர் ஸ்மிதா குப்தா
( தமிழில்: வெ.சந்திரமோகன் )

இந்த கட்டுரை கிட்டத்தட்ட உண்மை நிலையை
பிரதிபலிப்பதாகவே இருக்கிறது என்பது என் கருத்து…..

———————————–

‘வாக்காளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில்
பேசுவதில்லை’ என்று கூறிக்கொண்டே பிரிவினை விதைகளைத் தூவுகிறார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை உத்தர பிரதேசத்
தேர்தல் வெற்றி என்பது, ஒரு பிரதமராக அவரது ஆட்சிக்கான
மதிப்பீடாக மட்டும் அல்ல; 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான பாதையையும் தீர்மானிக்கக் கூடிய விஷயம். பாஜகவின் பிரதான பேச்சாளராக, உத்தர பிரதேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் அவர் சுற்றிவருவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல.

ஆனால், கட்சியின் முதல் வேட்பாளரே அவர்தானோ எனும் அளவுக்குக் கடுமையாகப் பிரச்சாரம் செய்துவருகிறார். பிரச்சினை அதுவல்ல.

காவிப் படையின் பிரதான தளபதியாக மேடைகளில் முழங்கும்
மோடி, “வாக்காளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை” என்று கூறிக்கொண்டே பிரிவினை விதைகளை அவரே தூவுகிறார். தேர்தல் களங்களில், ஏளனமும் ஆக்ரோஷமும் கலந்து அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் பாணிப் பேச்சைத்தான் இந்தத் தேர்தலிலும் அவர் பயன்படுத்துகிறார்.

முஸ்லிம் இளவரசர்கள் குறியீடு

தனது பிரதான எதிரிகளான சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிட்டுப் பேசும் அவர், அகிலேஷ் யாதவ் – ராகுல் காந்தி ஜோடியை, ‘ஷேஹ்ஸாதே’ என்று விளிக்கிறார். ஷா வம்சத்து இளவரசர்களைக் குறிக்கும் அந்த உருது வார்த்தையைப் பயன்படுத்தி,

அவர்களது எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதையே விமர்சிக்கிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும், ஒரு முதல்வராக அகிலேஷ் யாதவின் செயல்பாடுகளை சரமாரியாக விமர்சிக்கும் மோடி, சமாஜ்வாதி கட்சி பயன்படுத்தும் ‘காம் போல்தா ஹை’ (நிறைவேற்றப்பட்ட பணிகள் பேசுகின்றன) எனும் வாசகத்தை வைத்தே கேலிசெய்கிறார்.

உடனடியாக, இந்த வாசகத்தை வைத்தே சமாஜ்வாதி ஆட்சியின் தோல்விகளைக் கிண்டல் செய்யும் நூற்றுக்கண வாட்ஸப் குறுந்தகவல்களை பாஜகவின் சமூக ஊடக அணி அனுப்புகிறது.

யாதவ்களின் அரசா அகிலேஷின் அரசு?

சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் அகிலேஷ் யாதவின் தோல்வியைப் பிரதானப்படுத்திப் பேசும் மோடி, பாலியல் பலாத்காரச் சம்பவங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெண்களின் வாக்குகளைக் குறிவைப்ப தோடு மட்டுமல்லாமல், சாதிய வன் முறைகளில் பாதிக்கப்படும் தலித்துகள்
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதற்கே பாடுபடுவதைச் சுட்டிக்காட்டி, அவர்களையும் தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். காவல் நிலையங்களில் யாதவ் சமூகத்தினரைப் பணியமர்த்துவதன் மூலம், காவல் நிலையங்களை சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தின் நீட்சியாக அகிலேஷ் மாற்றிவருகிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.

மீண்டும் மதப் பிளவு அரசியல்

பிப்ரவரி 19-ல் பதேபூரில் பேசிய மோடி இன்னும் ஒரு படி மேலே சென்றார். “ஒரு கிராமத்துக்கு இடுகாடு கிடைத்தால், அங்கு சுடுகாடும் கிடைக்க வேண்டும். ரம்ஜான் பண்டிகையின்போது மின்சாரம் கிடைக்கிறது எனில், தீபாவளி சமயத்திலும் மின்சாரம் கிடைக்க வேண்டும்” என்று பேசினார்.

பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாததன் மூலம், இந்துக்களுக்கு ஒரு சேதியை
அவர் ஏற்கெனவே சொல்லிவிட்டார்.

ஆனால், அது மட்டும் போதவில்லை. வெறுப்பை உமிழும் பேச்சுக்குச் சொந்தக்காரரான கோரக்பூர் மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் மேற்கு உத்தர பிரதேசத்தில் முதன்முறையாகப் பிரச்சாரத்துக்கு
அழைக்கப்பட்டிருப்பதன் தொடர்ச்சி இது. இத்தனைக்கும் மோடிக்கோ, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கோ பிடித்தமானவர் அல்ல யோகி ஆதித்யநாத்.

அதிரடியாகப் பேசும் இவர், கைரானா
பகுதியிலிருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம், ராமர்
கோவில் விவகாரம், பொது சிவில் சட்டம், முத்தலாக் போன்ற
விஷயங்களைப் பற்றிப் பேசினார். பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விவகாரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

2007 மற்றும் 2012 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில், பாஜக களத்திலேயே இல்லை. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆனால், காவிப் படை கபளீகரம் செய்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71-ஐ கைப்பற்றியதைத் தொடர்ந்து, முன்பைவிட அதிக நம்பிக்கையுடன் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

எனினும், இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியபோது,
பாஜகவுக்குப் பெரிதாக எந்த அலையும் இல்லை. 2014-க்குப் பிறகு அக்கட்சிக்கான ஆதரவு குறைந்துதான் இருக்கிறது.

பழைய கணக்குகள் திரும்புமா?

மேற்கு உத்தர பிரதேசத்தில், குறிப்பாக 2013-ல் நடந்த முஸாஃபர் நகர் கலவரம் போன்ற சம்பவங்கள், மதரீதியான பிளவை ஏற்படுத்தியது, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இன்றைக்கு மதரீதியான வெறுப்பின் சுவடுகள், அழிக்க முடியாத கறைபோல், உத்தர பிரதேசத்தின் சமூகப் பரப்பில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அத்துடன் பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சாதி கூட்டணிகள், தனிப்பட்ட பகைகள் என்று பல விஷயங்களும் இந்தத் தேர்தலில் இடம்பெற்றிருக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த யாதவ்களும்
தலித்துகளும் இந்தத் தேர்தலில் முறையே சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஆதரவாகத் தங்கள் நிலைப்பாட்டை
மாற்றியிருக்கிறார்கள். செல்வாக்கு வாய்ந்த ஜாட் மக்கள், ராஷ்ட்ரிய லோக் தளக் கட்சியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.

ஆனால், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உயர் சாதியினரில் பெரும்பாலானோரும், யாதவ்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இணைந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாஜகவின் கல்யாண் சிங்குக்கு 1990-களில் ஆதரவு தெரிவித்ததுபோல் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களின் வாக்குகளையே இப்போது பிரதானமாக நம்பியிருக்கிறது பாஜக.

பின்னணியில் பெரிய அளவிலான பிரச்சினைகள் இல்லாத இந்தத்
தேர்தலில் மோடியையே தனது ஒரே அஸ்திரமாகப் பயன்படுத்தும்
பாஜக, கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் அமைதியான
வாக்காளர்களையும், தேர்தலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருக்கும் வாக்காளர்களையும் திரட்டுவதன் மூலம்
வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடலாம் என்று கருதுகிறது.

அதனால்தான் பழைய கணக்கை நம்பும் பாஜக பழைய உத்தியையும் கையில் எடுத்திருக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to மோடிஜியின் தேர்தல் பிரச்சார யுக்திகள்….

 1. selvarajan சொல்கிறார்:

  எப்போதுமே மோடிஜியின் தேர்தல் பிரச்சாரம் தான் ஒரு மதசார்பாற்ற அரசாங்கத்தின் பிரதமர் என்பதை மறந்துவிட்டு எதிலும் மத பார்வை என்பது இவரது ஸ்டைலாக மாறிவிடுகிறது என்பது தான் உண்மை …

  பீகார் தேர்தலில் மாட்டையும், மதத்தையும் மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்தார் …. அந்த டைப் பிரச்சாரம் உத்தரப்பிரதேசத்தில் எடுபடாது என்பதை அறிந்துகொண்டு, தனது தாயாரை பயன்படுத்தி ” “எனது அம்மா இன்றும் விறகடுப்பில்தான் சாப்பாடு செய்கிறார்கள் ” . அவரது கண்களில் கண்ணீர் வருவதைக் கண்டு நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அதே நிலை உங்களுக்கும் இருக்கிறது என்று எனக்கு தெரிகிறது என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதும் ஒரு வேடிக்கை …

  தன்னுடைய பதவியின் தன்மையை மறந்து ” ஜாதி ரீதியாக, மத ரீதியாக ” பிரிவினையைத் தூண்டும் விதமாகப் பேசி வருவது தேர்தல் பேச்சு என்று எடுத்துக்கொள்ள முடியுமா … ? தோல்வியை அடையக்கூடாது என்பதற்கு அவர் எத்தகைய ரீதியிலும் பிரச்சாரம் செய்வார் என்பதற்கு ” தன் 90 – வயதான தாயாரைப் பயன்படுத்துவதில் இருந்து புரியும் ….

  ஒரு வேலை ” சென்ற வை.கோ. அவர்களைப்பற்றிய இடுகையில் ” குறிப்பிட்டு இருந்ததை போல —- வை.கோ தனது 94 — வயதான தாயாரை டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்து — தன் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குப் போனது போல் … திரு மோடிஜியும் சென்றது தான் ” வேதனையின் உச்சம் ” … அப்படித்தானே …? ” மதச்சார்பின்மை என்பது ” …. ?

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! “தூய்மை இந்தியா ” …(ஸ்வாச் பாரத்) என்று நமது பிரதமர் கூறி செயல்படுத்த முனைப்போடு இறங்கி ” தன் கையில் துடைப்பத்தை ” எடுத்தாரே …. அவ்வாறு கூட்டி எடுக்கும் குப்பைகளை கொண்டு ….

  ஒரு நெடுவாசல் என்ன அதைவிட பல நெடுவாசல்களை உருவாக்கி ” ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ” தற்போதைய பிரச்னைக்குரிய முறையில் எடுக்காமல் அமல் படுத்த முடியும் — என்பதைப்பற்றிய ஒரு செய்தி : — // Posted Date : 17:42 (02/03/2017) Last updated : 17:41 (02/03/2017)
  நெடுவாசலில் மட்டுமல்ல… தமிழகம் முழுக்கவே ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே!? – அரசின் கவனத்துக்கு // http://www.vikatan.com/news/miscellaneous/82496-we-support-hydro-carbon-project—says-a-tamil-youth.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=9069 —- தங்களின் கருத்து …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இது குறித்து தனியே இடுகை வருகிறது….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  காமை சார்… உங்களுடைய observation மற்றும் கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  மதச்சார்பின்மை என்பது என்ன? வெளிநாட்டிலிருந்து நம் நாட்டின் balanceஐக் கெடுக்கும் வண்ணம் charity என்ற பெயரில் எத்தனை ஆயிரம் கோடிகள் மதமாற்றத்தைக் குறிவைத்து இறக்கப்படுகிறது என்பது தெரியுமா? எத்தனை சிறுபான்மையினக் கல்லூரி என்று அவர்கள் மதத்தைப் பரப்பவும் அவர்களை முன்னேற்றுவதையும் அஜெண்டாவாக்க் கொண்டு இயங்குவது தெரியுமா? சென்னையிலேயே எத்தனை கல்லூரிகள் இந்த மதம் என்றால் 60 சதவிகிதம் கட் ஆஃப் இந்து என்றால் 90% என்று இயங்குகிறது என்பதை அறிவீர்களா? அதனால் பாஜக இந்துத்துவாவைக் கையில் எடுப்பது தவறில்லை. ஏனென்றால் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றி, ஓட்டுக்காக இஸ்லாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. இந்துக்களுக்காக, சனாதன மத்த்துக்காக பாஜக பேசுவதை வரவேற்கிறேன். இது பாஜகவின் முதன்மையான கொள்கை என்பதால்தான் ஜக்கி போன்ற இந்துத்துவா அடிநாதமுடையவர்களை பாஜக, அவர்கள் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விடுகிறது. மோடி தன்னளவில் நேர்மையாக இருந்தாலும், பாஜக கட்சியின் வெற்றிக்காக polarize செய்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? சில விஷயங்களை (உண்மைகளை) பொதுவெளியில் அவரால் சொல்லமுடியாது.

  இந்தியா மதச்சார்பின்மை என்பதை common civil rule, Govt will not be flexible based on religion (சிறுபான்மை கல்லூரி என்பதே இந்தியாவில் கிடையாது), no foreign funds allowed for any private citizen.. all will go to govt. கட்டாய மதமாற்றம் நடந்தது என்று complaint வந்தால் FIR and non bailable offense, no party based on religion என்று level playing ground வந்த பின்புதான் மோடிஜி, பாஜக போன்றவர்களைக் குறை சொல்லமுடியும் என்பது என் எண்ணம்.

  அதே சமயம் மத சுதந்திரம், மத ஒழுக்கங்களை within rule பேணும் சுதந்திரம் வேண்டும். Common civil rule must be followed. கன்னிகா தானம் என்பதும் உடன் கட்டை ஏறுதல் என்பதும் இந்துமதப் பழக்கமாக இருந்தபோதும் எப்படி சட்டம் தவறு என்று சொல்கிறதோ அதுபோல.

  இது நிச்சயமாக கா.மை. சாருக்கு ஏற்கக்கூடிய கருத்தல்ல. ஆனால் எனது கருத்தில் அர்த்தம் இருக்கிறது என்று நம்புகிறேன்.

  You can choose not to publish. அது உங்கள் உரிமை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   உங்கள் கருத்தை நான் ஏற்கிறேனா இல்லையா என்பது
   வேறு விஷயம். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும்
   இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை…

   // You can choose not to publish //

   மாற்று கருத்துகளுக்கு நான் இங்கே இடம் கொடுக்காத
   நேரம் உண்டா…? நாகரிகமாக எழுதப்படும் அத்தனை
   பின்னூட்டங்களும் இங்கே அப்படியே பதிவேறுகின்றன
   என்பது உங்களுக்கு தெரியாதா…?
   நீங்கள் இந்த வார்த்தையை எப்படி எழுதலாம்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    என்னுடைய அடிப்படை கருத்து…

    இந்த நாட்டில் எல்லா மதத்தினரும்,
    எல்லா ஜாதியினரும்,
    அவரவருக்கு பிடித்த வழியில்,

    முழு சுதந்திரத்துடன், யாரிடமிருந்தும்
    எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் –
    நிம்மதியாக வாழ வழி செய்யப்பட வேண்டும்.

    யாரும், யார் மீதும் – எதையும் திணிக்கவும் கூடாது.
    யாரும், யாரையும் – பயமுறுத்தவும் கூடாது.

    ——————-
    பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர்,
    யோகி ஆதித்யநாத் மொழியில் பேசுவது ஏற்கத்தக்கதல்ல….
    என்பதை கொஞ்சம் யோசித்த பிறகாவது
    நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நமக்கு மதத்தீவிரவாதிகளும்
     (எந்த மதமானாலும் சரி …)
     வேண்டாம்….
     போலி செகுலர்வாதிகளும் வேண்டாம்…

     மதத்திற்காக யாரையும் வெறுக்காமல்,
     மனிதர்களாக வாழ்வோம்..
     அனைவரையும் நேசிப்போம்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… “You may choose not to publish” என்று எழுதிய காரணம் மாற்றுக் கருத்து பற்றியதல்ல. சரியான வார்த்தைகளில் எழுதப்படும் இடுகைக்குச் சம்பந்தமான கருத்தை எப்போதும் வெளியிட்டிருக்கிறீர்கள். சமயத்தில் மாற்றுக்கருத்துக்கான வேளை சரியில்லாமல் இருக்கலாம். It may not be an appropriate time to raise. அதனால்தான் அப்படி எழுதினேன்.

    முதலில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், மற்ற எல்லாம் அதற்குப் பிறகுதான் (உணவு, உடை, இருப்பிடம்)

 4. LVISS சொல்கிறார்:

  Let us wait for the election result to see how the campaign of the PM benefited the party –One thing is certain –This election will have no bearing on the general election in 2019 , rather no state election would on any general election —
  Very soon after the election we may get to see the UP CM and the PM sitting next to each other enganged in deep conversation — Everyone has a role to play for his party in election CM and PM are no exceptions —
  UP election is more crucial to Akilesh and Raghul’s Congress party than to the BJP –If BJP wins and forms a govt I will be surprised —

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Hindus (majority) are minority in india .very sad situation.Politics should be in such away that —,purely service oriented— no monetary gain except salaries for M.L.A.&M.P s —- severe punishment for corruption—People s upporting I.S.IS.should be deported from India.

 6. NS RAMAN சொல்கிறார்:

  No doubt that PM should maintain dignity of his chair. But THE HINDU supports anti national and terrorists in the name of secularism got no moral rights to talk about this.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப NS RAMAN,

   ஹிந்து நாளிதழுக்கு தார்மீக உரிமை இல்லை என்று
   நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்.
   போலி secularism பேசுபவர்கள் தான் இவர்களும்….

   ஆனால், இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு
   என்பதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. seshan சொல்கிறார்:

  Election ground is like war/play ground………..we have to choose how to play the game else you will be thrown out….like congress……so we cannot instruct how to play others…….

 8. ராஜமாணிக்கம் வீரா சொல்கிறார்:

  காவிரி மைந்தன் ஐயா,
  உங்கள் கட்டுரைகள் பெரும்பாலும் நடு நிலையாகவும், நியாயமாகவும் தான் இருக்கின்றன. இந்த மோடி எதிர்ப்பு உங்களையும் பிடித்து ஆட்டுகிறது என்பதை தான் என்னால் வியப்புடன் நோக்க முடிகிறது. உங்களது வலைப்பூவை நான் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பின் தொடர்கிறேன்.ஆனால் சில நேரங்களில் நீங்கள் மோடி எதிர்ப்பு என்ர நிலைப்பாட்டிற்காக ப.சிதம்பரத்தின் கருத்துக்களை எல்லாம் ஆதரிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
  இந்த கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்துள்ளது. தமிழ் ஹிந்துவின் அனைத்து கட்டுரைகளும் பெரும் இந்து மத காழ்ப்பு,மோடி வெறுப்பு, இவைகளை மையப்படுத்தியே வருகிறது.காயத்ரி பிரஜாபதி எனும் கற்பழிப்பு குற்றவாளியை, ஒய் பாதுகாப்பில் உள்ளவனை அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவனை காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லும் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி கூட்டணி மிகச்சிறப்பானது என்று பிரச்சாரம் செய்யும் இவர்களின் நடு நிலை பற்றி என்ன கருத்து சொல்கிறீர்கள். இந்த காயத்ரி பிரஜாபதிக்கு ஆதரவாக ராகூல் காந்தி பிரச்சாரம் வேரு செய்தார். ஆனால் எந்த கட்டுரையும் அது தொடர்பாக இது வரை ஊடகங்களில் வர வில்லை.
  பிரதமர் பதவியின் மதிப்பு மரியாதை என்று எதை சொல்கிறீர்கள் மன்மோகன் போல 2ஜியும், ஆந்த்ராஸ் தெவாஸில் ஊழல் நடக்கும் போதும், சுரங்க நிலக்கரி திருட்டின் போதும் திருதராஷ்ட்ர குருட்டுதன்மையோடு இருப்பதா அல்லது தேவ கவுடா போல இருப்பதா, அல்லது குஜ்ரால் போல தன்னை வளர்த்து உளவாளியாக்கிய ரஷ்யாவிற்கு விசுவாசமாக நம் நாட்டின் அனைத்து உளவு நிறுவன பிளாண்டர்களையும் அயல் நாடுகளுக்கு காட்டி கொடுத்து அவர்களை அழித்து இந்திய உளவு நெட்வொர்க்கை நாசம் செய்வதா? ராஜிவ் காந்தி போல போபர்ஸ் ஊழலில் ஊறுவதா, நரசிம்ம ராவ் போல ஹர்ஷத் மேத்தா, சந்திராசாமி கூட தொடர்பு வைத்து நாட்டை நாசமாக்குவதா?
  “/ தனது பிரதான எதிரிகளான சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிட்டுப் பேசும் அவர், அகிலேஷ் யாதவ் – ராகுல் காந்தி ஜோடியை, ‘ஷேஹ்ஸாதே’ என்று விளிக்கிறார். ஷா வம்சத்து இளவரசர்களைக் குறிக்கும் அந்த உருது வார்த்தையைப் பயன்படுத்தி,

  அவர்களது எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதையே விமர்சிக்கிறார்

  “/ இதில் என்ன தப்பு இருக்கிறது அகிலேஷிம், ராகுலும் அந்த இஸ்லாமிய ஓட்டுக்களாகத்தானே அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். அதை வைத்து அவர்களை வெளிப்படுத்துவதில் என்ன தவறு.

  “/ யாதவ்களின் அரசா அகிலேஷின் அரசு?

  சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் அகிலேஷ் யாதவின் தோல்வியைப் பிரதானப்படுத்திப் பேசும் மோடி, பாலியல் பலாத்காரச் சம்பவங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெண்களின் வாக்குகளைக் குறிவைப்ப தோடு மட்டுமல்லாமல், சாதிய வன் முறைகளில் பாதிக்கப்படும் தலித்துகள்
  காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதற்கே பாடுபடுவதைச் சுட்டிக்காட்டி, அவர்களையும் தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். காவல் நிலையங்களில் யாதவ் சமூகத்தினரைப் பணியமர்த்துவதன் மூலம், காவல் நிலையங்களை சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தின் நீட்சியாக அகிலேஷ் மாற்றிவருகிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.”/

  இதில் உள்ள ஏதாவது நடக்க வில்லையா? தலித் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டதும், அதை செய்த சமாஜ்வாதி எம் எல் ஏ மீது, அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூட பதிய மறுத்தது அநியாயமல்ல, ஆனால் அதை கேள்வி எழுப்பும் மோடி மோசக்காரர் என்று சொல்லும் ஸ்மிதா வின் நிலைபாட்டை கேள்வி கேட்கிறேன். அதில் என்ன நியாயத்தை நீங்களும் வழி மொழிகிறீர்கள் என்று பார்க்க விழைகிறேன்.

 9. LVISS சொல்கிறார்:

  The other side,, of the PM which is not publicised –Campaigning is ordained by his party —

  http://indiatoday.intoday.in/story/letters-to-modi-children-write-letters-to-the-pmo-received-response/1/610997.html

  • GVS சொல்கிறார்:

   This is another story of 2016.
   When he can respond even to urchins,
   why not he respond to the demands
   being handed over during everyvisit
   by our CMs. ?

   • LVISS சொல்கிறார்:

    How can you use the word urchin–
    I do not remember to have posted this link and the other before — Anyway the purpose was to show the compassionate side of the PM —
    How many times this subject of the PM’s campaigning has appeared in this blog ?
    Neither you nor I are privy to the actual number of letters written by the CMs to the PM or the present status of those letters — So let us not get into that subject – I could not get any confirnmed info on this —

 10. Sundar Raman சொல்கிறார்:

  Sir , it is true that Modi’s relatives including his mother leads a very normal life – can you say this to any of the opposition leader ? Akilesh Yadav’s brother drives around a imported luxury car , wife owns prime properties – Mulayam’s brother , his two wife’s, daughter in laws ..all super rich – whats wrong in Modi is saying that his mother is leading a simple life ..is it wrong ? it is true that Modi has not fulfilled many of his promise ( certainly 15 lakh to every citizen is not a promise he made ), crimes need to be punished , be it is Sunanda’s murder or Jayalalitha’s death – CCTV is out of order , on whose order we do not know, here and there they have arrested some people with black money or tax evasion. I think , it is my personal opinion, he might do all this either in his second term or towards the end of the first term. If you are given statistics , they say statistics lies – Agriculture production is high , GDP increased ( or maintained despite of demonetization) – stats says that allotment of money for kabristhan is more despite their population is relatively smaller… appeasement politics has a limit , if it is beyond certainly parties like BJP will come to the scene, the problem for you is BJP perform too, and it has no major corruption scandals . Only one Nitish was there , you don’t have a leader with character in opposition .

 11. visujjm சொல்கிறார்:

  மீண்டு வந்திருக்கிறேன் உயிரும் துச்சமென நான் என்னும் ego அறுத்தும் நடப்பனவற்றை கூர்ந்து கவனிப்பவனாக …..

  உரக்க சொல் சங்க தமிழ் வளர்ப்போம் தமிழர்கள் என்பதை…..

  ஜெய்ஹிந்த்…..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Hello visujjm,

   என்ன ஆயிற்று உங்களுக்கு – இவ்வளவு நாட்களாக
   எங்கே போயிருந்தீர்கள்… ஆளையே காணோமே…?

   எங்கே இருக்கிறீர்கள்… நாகர்கோயிலில் தானே…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.