ஹைட்ரோ கார்பன் – இதை அரசோடு கூட, தனியார் துறையும் – தீவிரமாக பரிசீலிக்கலாம்….

neduvasal_

அந்த காலத்தில் பல்பொடி விற்பவர்கள்,
கூட்டம் சேரும் இடமாக –
பஸ் ஸ்டாண்டு, கடைத்தெரு, சந்தை, ரெயில் நிலையம் – மாதிரி இடங்களுக்கு போய் பல்பொடி விற்பார்கள்….

தானாக சேர்ந்திருக்கும் கூட்டம் உள்ள இடங்களில்
போய் வியாபாரம் செய்வது சுலபம்.

எதற்கு இந்த உதாரணம் என்கிறீர்களா…?
மரீனா அனுபவத்தில் அரசியல்வாதிகள்
கற்றுக்கொண்ட பாடம் இது.
எங்கே யார் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அழையாத
விருந்தாளிகளாக போய் விளம்பரம் தேடிக்கொள்வது.

இப்போது நெடுவாசல் சீசன். அதுவும் நிச்சயம் favourable
ஆக முடியக்கூடிய விஷயம் என்பது உறுதியாகி விட்டது.
ஒரு வாரமோ, பத்து நாட்களோ – போராட்டம் வெற்றிகரமாக
முடிவுக்கு வந்து விடும். அதற்குள் வரிசையாக – ஒவ்வொரு
அரசியல்வாதியாக அங்கே சென்று வருவதை
பார்த்துக் கொண்டிருக்கிறோம்…..!

மெரினாவில் – இளைஞர்கள் அரசியல்வாதிகளை ஜாக்கிரதை
உணர்வோடு தவிர்த்தார்கள்… ஆனால், நெடுவாசல்,
இவர்கள் பெரும்பாலும் கிராமவாசிகள் – ஆதலால்,
அரசியல் தலைவர்கள் தங்கள் கிராமத்திற்கு வருவதை
பெருமையாக நினைத்து வரவேற்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்…

நான் இந்த இடுகையில் சொல்ல வந்தது…

அமெரிக்காவில் சில ஆண்டுகள் பொறியாளராக
பணி புரிந்து விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம்
திரும்பிய – பிரேமானந்த் சேதுராஜன் என்கிற இளைஞர்
“Lets Make Engineering Simple” என்ற பெயரில் அறிவியல்
முடிச்சுகளை எளிய மக்களுக்குப் புரியும் வகையில்
வீடியோக்களாக எடுத்து யூட்யூபில் பதிந்து வருகிறார்.

முதலில் இந்த வீடியோவை பார்த்து விடுங்கள் –

வீடியோவே விஷயத்தை தெளிவாக புரியவைத்து விடுகிறது.

அவர் சொல்வது –

பல நாடுகளில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கெடுதல் ஏற்படுத்துவதை
நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், அதற்கு பதிலாக எளிய
முறையில் நம்மிடம் கொட்டிக்கிடக்கும் ஒரு மிகப்பெரிய
பொக்கிஷத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்க முடியும்.
இந்த முறையில் எடுத்தால் விவசாயம் காப்பாற்றப்படுவதோடு
மட்டுமல்லாமல், விவசாயத்தை வளர்க்கவும் முடியும்.
‘குப்பை’…தான் அந்தப் பொக்கிஷம் என்கிறார்…

அவர் வீடியோவில் சொல்வதை சுருக்கமாக –

அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மக்கும்
குப்பையிலிருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன.
ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவிற்கான குப்பைகளை
இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது..
அமெரிக்காவில் “லேண்ட்ஃபில்” (LandFill) முறையில்
குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.

1 டன் குப்பை = 40கிலோ மீத்தேன் = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.

சென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4,500 டன் அளவிலான
குப்பை கொட்டப்படுகிறது. இந்தியா முழுக்க உள்ள 200
மாநகராட்சிகள்ல ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.

அதுமட்டுமல்லாமல், மொத்தம் மத்திய அரசு 44 இடங்களில்
“ஹைட்ராலிக் ப்ராக்சரிங்” கொண்டு வந்து
அதன் மூலமா 1 பில்லியன் கிலோ அளவிற்கான மீத்தேனை
எடுக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தக்
குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப்படுத்தினால்
1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு
90 லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும்.
அதுகொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, விவசாய
நிலங்களாக நம்மால் மாற்ற முடியும். ”

biogas_plant_14006

ஹைட்ராலிக் ப்ராக்சரிங்கை விட இந்தத் தொழில்நுட்பம்
அதிக செலவு பிடிக்குமோ என்கிற கேள்விக்கு –

” கட்டுமான செலவுகளை ஒப்பிடும்போது சிறியளவிலான
வேறுபாடு இருக்கும்தான். ஆனால், அதையும் தாண்டி
இயற்கை உரங்கள் தயாரிப்பது, விவசாயத்தை மேம்படுத்துவதன்
மூலம் வரும் உபரி வருமானம் அதை ஈடுசெய்துவிடும்.

எல்லாவற்றுக்கும் மேல் இந்தத் திட்டத்தின் மூலம் பூமி
வெப்பமயமாதலையும் குறைக்க முடியும்” என்கிறார்.

—————————

நடைமுறையில் இது சாத்தியம் என்பதற்கு ஜெர்மனி, ஸ்வீடன்,
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கெனவே இந்த முறை
செயல்படத்துவங்கி விட்டது என்பது சாட்சியாக நிற்கிறது.

ஒரே ஒரு சந்தேகம் தான் எழுகிறது…
பொருளாதார ரீதியாக இது பலனளிக்குமா…?
லாபம் பயக்கக்கூடியதாக இருக்குமா ? –
என்கிற சந்தேகம் எழத்தான் செய்கிறது…

ஒரு டன் குப்பைக்கு – 2 LPG சிலிண்டர்
என்றால் பண மதிப்பில் சுமார் 1000 ரூபாய் என்று
வைத்துக் கொள்ளலாம்.

சென்னையை உதாரணமாக எடுத்துக் கொண்டால்,
ஒரு நாளைக்கு 4500 டன் குப்பை என்றால் –
4500 x1000 = 45,00,000 ரூபாய் – 45 லட்சம் ரூபாய்…?

சென்னை நகரம் முழுவதுமிருந்தும் குப்பையை சேகரித்து,
தரம் பிரித்து, கொண்டு போய் குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க –
ஆட்கள், உபகரணங்கள், வண்டிகள், குப்பை லாரிகள்,
எரிபொருள் – என்று எல்லா செலவுகளையும் சேர்த்தால்
பொருளாதார ரீதியாக லாபகரமானது என்றே தோன்றுகிறது.
துவக்கத்தில் இல்லாவிட்டாலும், போகப்போக லாபம்
உறுதியாகலாம். தேவையான அளவில், தேவையான இடங்களில்
plant-களை அமைத்து, அவற்றை தொடர்ந்து நிர்வகிக்கவும்
(maintain, run ) முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள்…

இதில் பல மாங்காய்கள்…
-எரிபொருள் தயாரிப்பு,
-உர தயாரிப்பு,
-வேலை வாய்ப்பு,
-சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு etc. etc.

இதில் தனியார் துறையை தாராளமாக ஈடுபடுத்தலாம்.
துவக்கத்தில் தேவைப்படும் கட்டுமானங்களை ( infrastructure )
அரசு செய்து கொடுத்து விட்டு, தனியார் துறையை இதில்
ஈடுபடுத்தலாம்….

எதாவது ஒரு இடத்தில் முதலில் செய்து காண்பித்தால் –
பின்னர் போட்டி போட்டுக் கொண்டு செய்ய முன்வருவார்கள்.

என்ன – dirty job – என்பதால்,
ஒழுங்கான வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்..
ஊருக்கு வெளியே ஒழுங்காக கொண்டு போய் சேர்க்க வேண்டும்..
உழைப்பவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும்..

இதற்காக மத்திய அரசை எல்லாம் எதிர்பார்க்க வேண்டிய
அவசியமே இல்லை…. மாநில அரசே தகுந்த அதிகாரிகளையும்,
சுற்றுச்சூழல் நிபுணர்களையும் கொண்ட குழுக்களை நியமித்து,

எக்ஸ்னோரா போன்ற நிறைய தொண்டு நிறுவனங்களையும்
சேர்த்துக் கொண்டால் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது…
( தமிழ்நாட்டில் ஏற்கெனவே சில நகராட்சிகள் சிறிய அளவில்
இதை செய்யத் துவங்கி இயக்கிக் கொண்டிருக்கின்றன ….)

துவக்கத்தில் மலைப்பாக தெரிந்தாலும்,
சந்தேகங்கள் உருவானாலும் கூட –
எல்லாவற்றிற்கும் ஒரு “துவக்கம்” தான் தேவை..
வெற்றிகரமான துவக்கமே,
பாதி செயல் முடிந்து விட்டது போலத்தான் என்பார்கள்.

தமிழக அரசு இது குறித்து தீவிரமாக பரிசீலனை
செய்ய வேண்டும் என்று இந்த வலைத்தள நண்பர்களின்
சார்பாகவும் சேர்ந்து வேண்டுவோமே.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஹைட்ரோ கார்பன் – இதை அரசோடு கூட, தனியார் துறையும் – தீவிரமாக பரிசீலிக்கலாம்….

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நல்ல செய்தி …இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ள ” பா.ஜ . க . குடும்ப கம்பெனிக்கு ” எதிராக அரசுகள் செயல் படுமா … என்பதே ஒரு கேள்விக்குறி ….. // ஹைட்ரோ கார்பன் – இதை அரசோடு கூட, தனியார் துறையும் // …. ” தனியார் துறை ” [ சிலவற்றை தவிர்த்து ] என்றாலே ஒருவித பயம் ஏற்படுகிறது — அதுவும் அரசு நியமிக்கும் தனியார் என்றாலே கொஞ்சம் நடுக்கம் தான் ….

  அது இருக்க …. தனியார்களை பற்றிய ஒரு செய்தி பத்திரிக்கைகளில் : // வங்கிக்கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்… எப்படி வசூலிப்பாங்க தெரியுமா?
  Read more at: http://tamil.oneindia.com/news/business/a-breakdown-on-how-the-rs-150-fee-works-275747.html // ஒரு பக்கம் டிஜிட்டல் பரிவர்த்தனை என்று அரசின் கெடுபிடி — மறு பக்கம் ” தனியார் வங்கிகளின் கட்டண வசூல் ” என்று பகல் கொள்ளைகள் — ஒரு சாதாரண மனிதன் ” தன் சொற்ப சேமிப்புக்கு ” எவ்வளவு தான் தெண்டம் அழுவது … இவ்வளவு தான் போட வேண்டும் — எடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்தவேதனை வேறு …

  அதுமட்டுமின்றி // இனி வங்கி கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ ரூ.5000 இருக்கனும் // http://www.dinamalar.com/news_detail.asp?id=1723574 நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது. — ஒரு வழியாக்காமல் விடமாட்டார்கள் போல இருக்கு …. மக்களின் நலன் நாடும் அரசு …. ?

  • LVISS சொல்கிறார்:

   Referring to the charge levied by SBI , this was there till 2012 and was suspended — Now they have resumed the levy of charge — If I am not wrong , not only SBI many other banks insist on a minimum alance — What will they do with zero balance accounts unsder Jan Dhan –The charge is levied to meet the cost of servising the accounts – The minimum average balance(not minimum balance) in rural areas in lessre Rs 1000 /-

 2. Sundar Raman சொல்கிறார்:

  நிச்சயமாக நல்ல திட்டம், குப்பையை பிரித்து போடுவதில் தான் பிரச்சனை அல்லது சூட்சமம், இந்த ஆரம்பம் சரியாகி விட்டால் வெற்றி நிச்சயம். மக்களுக்கு பொறுப்புணர்வு வரணும் , அதை கொண்டு வருவதற்கு , பத்திரிக்கை, TV , சினிமா மூலம் , பிரபலங்கள் விழிப்புணர்வை கொண்டு வர முயற்சிக்கலாம் . அரசாங்கம் இலவசங்களை கொஞ்சம் குறைத்து , பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் , ஸ்டார் மருத்துவமனைகள் , நகை கடைகள் , பெரிய ஜவளி கடைகள் , பெரிய கம்பனிகள் , பிரபலங்கள் , … இவர்கள் எல்லாம் , ஆளுக்கு ஒரு ஊரை எடுத்து , அணைத்து இந்த திட்டங்களை செயல் படுத்தலாம் ( ஊர் ரொம்ப பெரிது என்றால் , தெருவை எடுக்கலாம் ) . அந்தந்த ஊரில் உள்ள , நல்ல வருமானம் உள்ள கோவில் , சர்ச், மற்றும் மசூதிகள் கூட கை கொடுக்கலாம்.

 3. ராகவேந்திரா சொல்கிறார்:

  அதெல்லாம் சரி ஆனால் அரசியல் வாதிக்கு வருமானம் எதிலே?

 4. Bala Vish சொல்கிறார்:

  Please Read this report

  http://www.seas.columbia.edu/earth/wtert/sofos/Rodriguez_thesis.pdf

  It is not so cheap as you think! this report is for one of the Islands in Caribbean
  The report is 5 years old, add escalation of 2.5% a year for a waste to energy plant.
  What I read from your article is very basic theory, but implementation is not not a cup of tea.
  It comes approximately 3500 Crores in Indian rupees and also see the operations cost even if you get garbage free to generate.
  Extraction of methane is not easy to extract . You need a massive dump sites minimum of 10 acres and they to bio degrade you need to cap and close with liners underneath to stop the pollution seeping in to ground water. The air pollutants from exhaust is also much.
  I request you not to jump in to conclusions . I doubt the writer is ignorant about a lot of things regarding this subject. I see the media is making a big hype about this.
  If you need any further information, I can get you the information about one plant in Linden NJ .
  It is heavily subsidized by Fedeal and State.

  Appreciate your comments
  Bala V

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி பாலா,

   thank you for your contribution…

   இந்த மாதிரி விஷயங்களை விவாதிக்கும்போது தானே
   அதன் முழு பரிமாணமும் தெரிய வருகிறது…

   நமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறிய அளவில் வேண்டுமானால்,
   இதை மேற்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
   தமிழ்நாட்டில் சில சிறிய நகராட்சிகளில் இதை ஏற்கெனவே
   முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Bala Vish சொல்கிறார்:

  Please read the article about Superbug bacteria.
  Indian doctors are prescribing excessive quantities of Antibiotics even for a minor ailments.
  See where is it leading to?
  Does anything the Indian Center of disease control doing about that.

  I am just attaching the article in NY Times
  We can take action and turn the tide or lose the drugs we have
  The rise of deadly superbug bacteria and their resistance to antibiotics.

 6. சிவா சொல்கிறார்:

  இதைவிட சிறந்த யோசனை என்னவெனில் தமிழர்கள் காய்கறிகளை கீரைகளை பச்சையாக உண்ண பழகிக்கொள்ளலாம். Raw Food diet என இணையத்தில் தேடினால் பல ரெசிப்பீகள் கிடைக்கும். இதை அனைவரும் பின்பற்றினால் கேஸ் தேவையே இருக்காது.

  பயணம் செய்ய கார், பைக்குகளுக்கு பதிலாக நமது முன்னோர்களைப் போல் மாட்டு & வண்டி குதிரை வண்டிகளை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இதனால் நாட்டு மாடுகள் காப்பாற்றப்படும். மேலும் குதிரை & மாடு போடும் சாணியை வைத்து பயோகேஸ் உற்பத்தி செய்து சிலிண்டரில் அடைத்து ஏற்றுமதி செய்து அன்னியச் செலவாணி ஈட்டலாம்.

  இப்படியாக இயற்கை உணவு, இயற்கையோடு இணைந்த வாழ்வு என முன்னோர் வாழ்வினை வாழ்ந்து உலகத்திற்கே வழிகாட்டலாம் தமிழகம்! இதைவிடுத்து ஹைட்ரோகார்பன் என அலைவது நல்லது அல்ல!

  • இளங்கோ சொல்கிறார்:

   சிவா உங்கள் ஊர் எந்த ஊர் ?

   • சிவா சொல்கிறார்:

    எதுக்குணே ஆட்டோ… அனுப்பவா?

    உங்களுக்கு நாட்டு மாட்டு வண்டி ஓட்டப்பிடிக்கலைனா சைக்கிள் ஓட்டுங்க. பச்சையாக உணவு சாப்பிட இயலாவிடில் விறகு/ சூரிய அடுப்பில் (renewable energy) சமையுங்கோ. இரவிலும் சமைக்கும் சூரிய அடுப்பினை சென்னை எம்ஜியார் பல்கலைகழகம்கூட உருவாக்கியுள்ளது.
    https://www.engineeringforchange.org/wp-content/uploads/2015/10/SudarshanChakrvarthy.pdf

    தமிழ்நாட்டுல ஏற்கனவே பலபேரு ரொம்ப பின்னாடி போய் பேலியோ காலத்திற்கே போயிட்டாங்க. நான் கொஞ்சம் முன்னாடி வாங்கன்னு சொல்லுறேன். அதுக்குப் போய் இப்படியா பயமுறுத்துவது?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     சிவா,

     இவ்வளவு புத்திசாலித்தனமாக
     ஆலோசனை சொல்கிறீர்களே என்று
     இளங்கோ ஆச்சரியப்பட்டு கேட்டிருப்பார்…

     அதற்கு போய்…. 🙂 🙂 🙂

     நான் பாராட்டுகிறேன்…
     உங்கள் ஆலோசனைகள் அருமை…!!!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 7. சிவா சொல்கிறார்:

  நன்றி சார், சும்மா ஹைட்ரோகார்பன் வேணாம். கூடங்குளம் வேண்டாம், நீயுட்டிரினோ திட்டம் வேணாம் என்று போராடினால் மட்டும் போதுமா. இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க மாற்றுத்திட்டங்களையும் சிந்திக்க வேண்டும். இதை ஒட்டி நீங்கள் சொன்ன குப்பை ஹைட்ரோகார்பன் திட்டம் போல பல சிந்தனைகளை கேட்டு அவற்றை ஏற்றவற்றை நடை முறை படுத்தவேண்டும். இடையில் நானும் இரண்டை சொன்னேன், அவ்வளவுதான். நகரவாழ்வில் என்னாலும் மாட்டுவண்டி ஓட்ட முடியாதுதான். ஆனாலும் லல்லுமகன் போல குதிரையில் போக ஆசை. ஆனால் அரசு மனம் வைத்துதான் இவற்றை சாத்தியப்படுத்த முடியும். இப்போதைக்கு முடிந்த அளவுக்கு சைக்கிள் மற்றும் சாலட்டில் ஓடுகிறது வண்டி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.