திரு.ப.சி.சொல்வதால் – உண்மை – இல்லையென்று ஆகி விடுமா…?payment_gateway_logo_-_e-pay

யார் சொன்னால் என்ன – உண்மை எப்போதும்
உண்மை தானே…?

‘Cashless is not costless’ – நல்ல பஞ்ச் –
பச்சென்று நிஜத்தை மனதில் பதிய வைக்கிறது.

மத்திய அரசு வெளியே சொல்லாத,
ஒப்புக்கொள்ள விரும்பாத ஒரு உண்மை இது.

p-c

” டிஜிடல் முறையில் செய்யப்படும் ஒவ்வொரு
பணப்பரிமாற்றமும், 0.5 % முதல் 1.5 % வரை
நமக்கு தேவையற்ற கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.”

மிகவும் குறைவான முறையில் மதிப்பிட்டால் கூட,
இந்தியா முழுவதுமாக சேர்த்து, ஒரு நாளைக்கு
ஒரு லட்சம் கோடி ரூபாய் டிஜிடல் பரிமாற்றம் செய்வதாக
வைத்துக் கொண்டால் –
( நடைமுறையில் இன்னும் கூடுதலாக கூட இருக்கும்….)

– யாரோ இதன் மூலம் ஒரு நாளைக்கு 1,500 கோடி ரூபாய்
லாபம் அடையப்போகிறார்கள்… அது ஒரு சீன கம்பெனியின்
முதலாளியாக கூட இருக்கலாம்…!!! ”

cashless soceity -க்காக இந்திய மக்கள் கொடுக்கும் விலை இது….!!!

நிஜம் தானே….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திரு.ப.சி.சொல்வதால் – உண்மை – இல்லையென்று ஆகி விடுமா…?

 1. தமிழன் சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை. சார்,

  எந்த ஒரு டெக்னாலஜி, அல்லது ஆப்ஷனிலும், யாராவது ஒருவர் அல்லது பலர், அதன் மூலமாகப் பயன்பெறுவார். இது சாதாரணமானது. வங்கிக்குப் போகாமல் வீட்டிலிருந்தே ஒருவர் வங்கிக்கணக்கை ஆபரேட் செய்யும் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் கம்பெனி, இன்டெர்னெட் சர்வீஸ் ப்ரொவைடர், கணிணி தயாரிப்பவர்கள், அதைப் பழுதுபார்ப்பவர்கள், குறைந்த விலை சைனா உதிரிபாகம் தயாரிப்பவர் என்று பல்வேறுபட்டவர்கள் பலன் அடைவார்கள். அதனால், ஆன்லைன் வங்கிக்கணக்கு, ரிலையன்ஸுக்குக்கு பணம் சேர்வதற்காகத்தான் வந்தது என்று சொல்லமுடியுமா?

  கார்டு வழி பணம் என்பது, எல்லோருக்கும் பயன் உடையது. இதில் அதிகம் பயனடைபவர் கடைக்காரர். அவரிடம் வங்கி, 1.5% அல்லது 2.5% சார்ஜ் செய்யும். இதை கடைக்காரர், வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்வதில்லை (உலகெங்கிலும்). ஆனால் இந்தியாவில்தான் (சொல்வதற்கு மன்னிக்கவும்.. அயோக்கியர்கள்தானே தொழில் செய்கிறார்கள். அதனால்,) ஏமாந்தவன் எவன் என்று பார்த்து வாடிக்கையாளர்கள் தலையில் கை வைக்கிறார்கள். இந்த சார்ஜும், கடைக்காரர்களுக்கு நிறைய வால்யூம் சேல்ஸ் இருந்தால், அவர்கள் வங்கிகளிடம் 2.5%க்குப் பதிலாக 1.5% அல்லது 1% என்று குறைக்கமுடியும். நான் அறிந்த வரையில், தங்க நகைக்கடைகள் மாத்திரம், செய்கூலி ஓரளவு குறைவாக வாங்குவதால், பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறார்கள். நான் வாங்கும்போது, கிரெடிட் கார்டுனா, 2.5% சார்ஜ் செய்வோம் என்று சொல்லியிருக்கின்றனர் (வெளி’நாட்டில், நான் வசிக்கும் பகுதியில்)

  நீங்கள் குறிப்பிட்ட 1500 கோடி (அதற்கு அதிகமாகவே இருக்கும்), வங்கிகள், தன்னுடைய சர்வீஸ் சார்ஜாகப் பெறுகிறார்கள் (அதிலும் ஏகப்பட்ட வங்கிகள்). இதற்காக, ஒவ்வொரு கடையிலும் ஒன்றோ அதற்கு மேலோ Bank POS என்று சொல்கிற (Verifone என்றும் சொல்வார்கள்) பெரும்பாலும் சைனா மேக் Device வங்கிகள் கொடுக்கின்றனர். அதற்கான சாஃப்ட்வேர் செய்யும் கம்பெனிகள் இருக்கின்றன. இந்த கனெக்ஷனுக்கு (பெரும்பாலும் இப்போது) லேண்ட் லைன் தொலைபேசி வசதி வேண்டும். வங்கிகளும் விசா, மாஸ்டர் போன்ற கார்டுகளுக்கான provider இடமும் பணம் கொடுக்கவேண்டும் ( விசா அல்லது மாஸ்டர் என்பதைப் பொறுத்து). இப்படி ஏகப்பட்டபேர் பயனுறுவர். இது ‘ஜகஜம்’

  ப.சி. பஜனை பாடுவதும் ‘ஜகஜம்’தான்.

 2. LVISS சொல்கிறார்:

  Not fully true — There should be no free lunch if you ask me –Many companies including Banks ,not only chinese will benefit– So many transactions are being conducted thro BHIM ,an initiative of RBI, and bank digital payments –The link below says 595 crore worth of transactions was done through BHIM in February alone -BHIM doesnt charge anything for this –Who will benefit by this , –
  I think upto Rs2500 there is no charge for digital transactions —-

  http://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/all-bank-customers-to-be-nudged-towards-netbanking/articleshow/57489985.cms
  I have net banking It has its own advantages — The big advantage is you can do so many things sitting at home without travelling to EB office or Corporation office ,mobile shops to recharge ur mobiles —

 3. gopalasamy சொல்கிறார்:

  Recently I purchased IFB 8 KG washing machine. In show room the price was around 38000 rupees. Through on line the price was 34500 rupees. Why this much difference ?

  • LVISS சொல்கிறார்:

   Mr Gopalasami the online goods are cheaper may be because the manufacturers wont have to incur exopenses in setting up a shop or find a shop –Also they can reach customers throughout the country —

 4. Sundar Raman சொல்கிறார்:

  சார் , டிஜிட்டல் பரிவர்த்தனையில் பொய் சொல்ல முடியாது , எல்லாம் கணக்கில் வரும் அது தான் அதனுடைய பலம். ப .சிதம்பரம் சொலவ்து உண்மைகள் என நம்புவது உங்களின் பலவீனம் . சின்ன மற்றும் பெரிய வியாபாரிகள் , தங்கள் வருமானத்தை பணம் மூலமாகவே செய்வதால் , நிறைய வரி ஏய்ப்பு நடக்கிறது என்பது நிதர்சனம் , எத்தனை ரைடு நடந்தாலும் அவர்கள் சாமர்த்தியமாக ஏமாற்றி , பதுக்கி கடைசியில் மடிந்தும் போகிறார்கள் .

  Digital leaves its foot print , its part of the history you can not change it. So they get caught ultimately

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப Sundar Raman

   // ப .சிதம்பரம் சொல்வது உண்மைகள் என நம்புவது
   உங்களின் பலவீனம் . //

   யார் எதை சொன்னாலும்,
   நான் எடுத்துக் கொள்ளவேண்டியதை மட்டும் தான்
   எடுத்துக் கொள்வேன்.

   மோடிஜி செய்வது அத்தனையையும் கண்ணை
   மூடிக்கொண்டு ஆதரிப்பது –
   உங்களை போன்றவர்களின் பலவீனம் அல்ல
   பாஜக பக்தர்களின் அடிப்படை தகுதி …
   basic qualification…

   பெரிய பெரிய வியாபாரிகளிடமிருந்து ஒழுங்காக
   வரி வசூலிக்க துப்பில்லை என்றால் அது அரசின் பலவீனம்.
   ஒழுங்காக வரி வசூலிக்க வழி கண்டு பிடிக்க
   முடியவில்லை என்றால்
   ராஜினாமா செய்து விட்டு ஓடட்டும்.

   அந்த பலவீனத்திற்காக பொதுமக்கள்
   ஏன் கட்ட வேண்டும் 1.5 % தண்டம்….?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. LVISS சொல்கிறார்:

  One advantage of digital transaction is that the trader can substanciate his sales when he applies for loans.what is charged in digi transactions is not tax.

 6. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  why online purchase is cheaper?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.