துக்ளக் – கார்ட்டூன் – குருமூர்த்தி சார் கவனிக்க தவறி விட்டார் போலிருக்கிறது….!!!


முதலில் இந்த துக்ளக் கார்ட்டூனை பார்த்து விடுங்கள்.

இரண்டு விஷயங்கள் –

குருமூர்த்தி சார் கவனிக்கத்தவறி
விட்டார் போலிருக்கிறது….!

1) இந்த கார்ட்டூன் கடந்த வாரம் ராணுவ நுழைவுத்தேர்வு
கேள்வித்தாள் ” லீக் ” ஆனது பற்றியது….
லீக் ஆனது மஹாராஷ்டிரா – பாஜக ஆளும் மாநிலம் …
சம்பந்தப்பட்ட விஷயம் – பாதுகாப்பிலாகா –
மத்திய அரசின் கீழ் வருகிறது..!!!

பாஜகவை நக்கலடித்து துக்ளக்’கில் கார்ட்டூனா…?
எப்படி விட்டார்… திரு.எஸ்.ஜி..?

2) கார்ட்டூனில் பாதுகாப்பு அமைச்சருக்கு வேட்டி, துண்டு
அணிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எப்போதும் தமிழ்நாடே
சிந்தையில் இருக்கிறது போலும்…. !!!

பாதுகாப்பு அமைச்சர் – கோவாவை சேர்ந்தவர் –
எப்போதும் பேண்ட்-ஷர்ட் தான் அணிவார்…. 🙂 🙂 🙂

துக்ளக் கார்ட்டூனிஸ்ட்டை நான் அறிவேன்…
(ஆனால் அவருக்கு நான் தான்
காவிரி மைந்தன் என்பது தெரியாது…! )
என் மீது கோபம் வேண்டாம் நண்பரே –
சும்மா ஒரு comedy effect – க்குக்காக தான் எழுதினேன்…!

———————————–

மற்றபடி இது ஒரு ஒரிஜினல்
துக்ளக் ஸ்டைல் அட்டைப்பட கார்ட்டூன் –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to துக்ளக் – கார்ட்டூன் – குருமூர்த்தி சார் கவனிக்க தவறி விட்டார் போலிருக்கிறது….!!!

 1. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமை,
  இரண்டாவது கார்ட்டுனின் பதிலை ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு சற்று முன்பாக (10.30 மணி என நினைக்கிறேன்) தந்திடிவியின் கலந்துரையாடலில் சொல்லிவிட்டார்களே..
  பாண்டே கேள்வியின் போது, “ஒருவேளை ஒருவேளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் சிக்கல் என்ற சூழ்நிலை வருமானால் உங்கள் கட்சி அதை எப்படி எதிர்கொள்ளும்? வாரிசு என்று யாரையும் ஜெயலலிதா முன்மொழியவில்லையே ” என்று கேட்டபோது

  அதிமுக சார்பில் பேசிய கௌரிசங்கர், தடாலடியாக “இல்லையே. அப்படியெல்லாம் இல்லை. அம்மா (ஜெ) சொல்லியிருக்கிறார்கள் – கட்சித்தலைமையாக சின்னம்மாவையும், ஆட்சித்தலைமையாக ஓபிஎஸ்ஸையும் சொல்லியிருக்கிறர்கள்” என்றார்

  அதற்கு பாண்டே இடைமறித்து, இல்லையே, இதுவரை அதுமாதிரியான செய்திகள் வந்ததில்லையே, யாரிடம் சொன்னார்கள் என்று கேட்டதற்கு,

  கௌ.ச. இல்லையில்லை, மருத்துவமனையில் வைத்து அம்மா சொல்லிவிட்டார்கள், சின்னம்மாதான் கட்சிதலைமை, ஓபிஎஸ்தான் ஆட்சித்தலைமை என்று எங்களிடம் (கட்சிப் பொறுப்பாளர்களிடம்) சொல்லியிருக்கிறார்கள். அதனால் அம்மாவுக்கு ஏதேனும் ஒன்று என்றாலும் கட்சியோ ஆட்சியோ பாதிக்காது என்று

  அதிமுக சார்பில் பேசினார். அது லைவ் ஆக ஒளிபரப்பானது.

  வீடியோ கிடைக்கிறதா (இன்னமும் எடிட்டாமல் 🙂 ) என்று பார்க்கிறேன். கிடைத்தால் இணைக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Horrible…

   ஜெயலலிதா அவர்கள் இருக்கும்போதேயா
   இப்படி பேசினார்கள்…? நான் அந்த நிகழ்ச்சியை
   பார்க்கவில்லை.

   கொலைகாரப்பாவிகள்…
   காலம் தான் இவர்களை தண்டிக்க வேண்டும்.

   வீடியோ கிடைத்தால் அவசியம் இணையுங்கள்…

   நன்றி நண்ப today.and.me .

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  நண்பர் டு-டே-ஆன்ட்-மீ யைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  பொதுவாக எப்போதும் பாண்டே நிகழ்ச்சிகளையும், கருத்துவிவாதங்களையும் பார்க்கும் நான், உப்பு சப்பில்லாமல், சரியான காரணங்களை அடுக்காமல், உப்புமா சாப்பிட்டார், ஊறுகாய் சாப்பிட்டார் என்று அதிமுக தொடர்பாளர்கள் பேசுவதை (ஜெ. அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது… 2ம் நாளே வாட்ஸப்பில் அவர் ஐ.சி.யூவில் இருப்பதுபோல் புகைப்படம் வெளியாகி ரொம்ப மன வருத்தத்தைத் தந்த நேரம்) கேட்டு வெறுப்புற்று பல நிகழ்ச்சிகளைப் பார்க்கவேயில்லை.

  அதுவும் தவிர, டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகச் சொல்வது மாதிரியும், பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக குத்துச்சண்டை போட்டி போன்றவற்றில் சொல்வார்களே.. இதோ ஜெயித்துவிடுவார் போலிருக்கிறது.. இந்தக் குத்தில் நாக்-அவுட் ஆக்கிவிடப்போகிறார்.. என்பதுபோல, அப்போலோவும் (ஜெ. குணமாகிவிட்டார். அவர் எப்போது செல்லலாம் என அவரே முடிவு செய்வார்), செய்தித்தொடர்பாளர்களும் (இதோ அஷ்டமி, நவமி முடிந்து கிளம்புகிறார், நாளை மறுனாள் வீட்டுக்குச் செல்கிறார் என்று) புளுகு, கடைசியில் எல்லோரது வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டனர். அன்று, 5.30 மணிக்கு, ‘ஜெ. மறைந்தார்’ என்று தினமலரும், தந்தி தொலைக்காட்சியும் தெரிவித்தபோதே… கதை முடிந்துவிட்டது என்று தெரிந்துபோய்விட்டது.

  வீடியோவை அவசியம் இணையுங்கள்.

  கடந்த 6 வருடங்களுக்கு மேலாகவே, ஒவ்வொரு ரீஜனுக்கும் அவர்களது ஆட்களை இன்சார்ஜாகப் போட்டு கள்ள வேலை பார்த்திருக்கிறார்கள். ராவணண் கொங்கு பெல்ட், அங்கு சசிகலாவை சப்போர்ட் செய்யும் ஆட்கள் கட்சிப் பதவியில் என்று திட்டம்போட்டுச் செய்திருக்கிறார்கள்.

  அதனால், ஓட்டுப்போட்டு பொதுச்செயலாளர் தேர்தல் வைத்தாலும் தீயசக்திகள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஒரே வழி, இடைத்தேர்தல் முதல்கொண்டு, வாய்ப்புக்கிடைக்கும்போது, மன்னார்குடி ஆட்களைத் தோற்கடிக்கவேண்டும். அப்போது கட்சி சரியான நபர் வசம் செல்லும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.