திரு.டி.டி.வி.தினகரன்….செய்தவை – குற்றமா, மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….?

திருவாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள்….செய்தவை – குற்றமா,
மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….?

– நமக்கு எப்படி தெரியும்…?
நம்ம ஊர் வழக்கப்படி,
நம்ம நாட்டு நீதிமன்றங்கள் –

இன்னும் ஒரு 30-40 வருடங்களில்
முடிவு செய்த பிறகு தானே தெரிய வரும் ….!!!

பாவம் எம்.ஜி.ஆர்….!

கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்….தான் உருவாக்கும்
இயக்கம், எதிர்காலத்தில் இப்படி ஒரு தலைமையின் கீழ் கூட
இயங்கக்கூடும் என்று…

( “கொடுத்து” வைத்தவர்கள் ….. ஆர்.கே.நகர்வாசிகள்…
அவர்கள் அதிருஷ்டமே அதிருஷ்டம்…..!!! )

அப்படி என்ன செய்து விட்டார்…
திருவாளர் தினகரன் அவர்கள்..?

அதுவும் நமக்குத் தெரியாது –
பத்திரிகைகள் சொல்வது தான்…..!!!

…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திரு.டி.டி.வி.தினகரன்….செய்தவை – குற்றமா, மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….?

 1. GVS சொல்கிறார்:

  K.M.

  I have great appreciation for your intelligent
  way of writing. இது உங்களுக்கு சட்டபூர்வமான
  பாதுகாப்பை அளிக்கும். ஆனால்,
  வந்து இறங்கக்கூடிய ஆட்டோ கும்பலிலிருந்து ?

 2. GVS சொல்கிறார்:

  ஜாக்கிரதையாக இருங்கள்.

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! // அப்படி என்ன செய்து விட்டார்…
  திருவாளர் தினகரன் அவர்கள்..? // பத்திரிகையில் சுட்டிக்காட்டியுள்ள பல வழக்குகள் போதாதா ” அவரும் ஒரு தேர்ந்த அரசியல்வாதிதான் ” என்பதற்கு …. இன்றைய காலக் கட்டத்தில் அதிகமான குற்றங்கள் செய்யும் ஒருவர் தான் அரசியலுக்கு லாயக்கானவர் என்பது மாபெரும் தகுதியாக இருக்கிறதா … ? ஏனென்றால் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ” கிரிமினல் வழக்குகளில் ” உள்ளவர்கள் தானே … ?

  திரு . தினகரன் காஃபிபோசா சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் சிறையில் தள்ளியது …COFEPOSA சட்டப்படி ஒருவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது சரியானது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட வருக்கு எதிராக SAFEMA சட்டம் பாயும். அவரது சொத்துக்கள் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களும் கூட பறிமுதல் ஆகும்என்று கூறுகிறார்களே … குறைந்தபட்சம் ஓரிரு சொத்துக்களாவது, அதாவது கணக்கு காட்டப்படுவதற்காக பறிமுதல் செய்யப்பட்டதா …. இல்லையே …!

  ஆனால் ஏப்ரல் 27, 2006 ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த உத்திரவை பிறப்பித்தும் இன்றுவரை ஒரு குண்டு மணியளவுக்குக் கூட சட்டம் தன் கடமையை செய்யாதது அவலமானது மட்டுமின்றி பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதற்கு இதுவே சரியான உதாரணம்…

  அதுவுமின்றி இன்று வரையில் பிரதான கட்சிகளான திமுக வும், காங்கிரஸூம் இந்த பிரச்சனையை எழுப்பாதது சசிகலா குடும்பத்தினரின் செல்வாக்கு எந்தளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது என்பதைத் தான் காட்டுகிறதா …. ? அல்லது இதைக் கிளப்பினால் எங்கே ” தங்களது வண்டவாளம் ” வெளியே வந்து நாறடிக்குமோ என்கிற பயமோ …. ? பாவம் …. எம்.ஜி.ஆர் …. ?

 4. புதியவன் சொல்கிறார்:

  சட்டம், எளியவர்களிடமும் ஏமாந்தவர்களிடமும்தான் நியாயமாக இருப்பதுபோல் நடிக்கும். இல்லையென்றால், பெரிய அரசியல்வாதி இறந்துவிட்டாரா என்று பார்த்துவிட்ட பிறகு தீர்ப்பு சொல்லும்.

  நடு ரோட்டிலேயே கேபிளைப் பதித்து, அரசுப் பணத்தைத் தன் சொந்த நிறுவனமான சன் நெட்வொர்க்கிற்குத் திருப்பிவிட்டவர்களையும், தினகரன் போன்றவர்களையும், கனிமொழி/ராசா 2 ஜி கும்பல்களையும், கலைஞர் தொலைக்காட்சி 250 கோடி லஞ்சத்தையும் கண்டுகொள்ளாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.