மோடிஜியின் “ஜன்-தன்” பிள்ளையாரும் – நம்ம வீட்டு தேங்காயும் …!!!

-அல்லது வழுவூர் துரைசாமி அய்யங்காரின்
நாவல் தலைப்பு மாதிரி
இப்படியும் சொல்லலாம்…. ” ஊரான் வீட்டு நெய்யே…….”

முதலில் நான் வரிசையாக கீழே சொல்லிக்கொண்டு
வருவது நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகளே…!!!

——————–

பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில்,
‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ என்ற திட்டத்தை பற்றி
அறிவித்தார்.

பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana)
வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய
திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி 28 ஆகஸ்டு 2014
வியாழக்கிழமை அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு
ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை.
எந்தவித குறைந்த பட்ச தொகையும் வேண்டியதில்லை.
வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு
வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த திட்டம் முக்கியமாக எதற்காக துவங்கப்படுகிறது…?

அரசுத் துறைகளின் திட்டங்களின் கீழ் மான்யங்கள்
பெறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசு
அதற்கான தொகையை சிரமமின்றி செலுத்துவதற்காக….!!!

பிப்ரவரி,1, 2017 அன்று நாடு முழுவதுமாக
ஜன் தன் யோஜ‌னா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட
24.10 கோடி வங்கிக் கணக்குகளும் ஜீரோ பேலன்ஸ் வங்கிக்
கணக்குகள். இவற்றை பெரும்பான்மையான மக்கள்
பயன்படுத்தவே இல்லை… ( demonetization கணக்கு
விவரங்கள் தனி…)

————————————————————

சென்ற வாரம் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளருக்கான
ஒரு புதிய செயல் திட்டத்தை அறிவிக்கின்றன…

புதுடில்லி : வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ
அறிவித்துள்ளது.

மினிமம் பேலன்ஸ் ரூ.5000 :

பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக
ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு
வர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

குறைந்தால் அபராதம் :

இந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட
எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில்
வசூலிக்கப்படும். உதாரணமாக,
50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால்
அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து
வசூலிக்கப்படும்.

50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

இந்த நிலையில், ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன..

( மோடிஜியின் – குதிரை குப்புற தள்ளியதோடு அல்லாமல்,
குழியையும் பறிக்கிற மாதிரி – பெனால்டியோடு கூடவே
அதற்கு சர்வீஸ் டேக்ஸும் வசூலிக்கிறது…… 15 % extra….! )

———————————————–

இந்த அபராதம், சர்வீஸ் டேக்ஸ் – எல்லாம் எதற்காக…?
வாடிக்கையாளர்கள் ( வேறு யார்…? நாம் தான்…!!! )
திடீரென்று என்ன பாவம் செய்தார்கள்…?

வாடிக்கையாளர்கள் எந்த பாவமும் செய்யவில்லை…

மோடிஜி அறிவித்த ” ஜன் தன் ஜீரோ பேலன்ஸ் கணக்கு” களை
“மெயின்டெயின்” பண்ண வங்கிகளுக்கு கூடுதலாக செலவு
பிடிக்கிறது…. எனவே, அவற்றின் லாபத்தின் அளவு குறைகிறது… (கவனிக்கவும்… நஷ்டம் ஏற்படவில்லை – லாபம் குறைகிறது..)
எனவே அதனை ஈடுகட்டவே இந்த புதிய “தண்டனை சிஸ்டம்”..
என்று என்று …………

சொல்வது யார் பாருங்கள்……..


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to மோடிஜியின் “ஜன்-தன்” பிள்ளையாரும் – நம்ம வீட்டு தேங்காயும் …!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  சூப்பர் கே.எம்.சார்.
  தலைப்பே போதும்;
  எவர் காசை பிடுங்கி – எவர் திட்டம் போடுவது?
  நம்ம காசை வைத்து இவர் என்ன ஓசி அக்கவுண்ட் கொடுப்பது ?
  அரசு திட்ட மான்யங்களை கொடுக்க தானே ஜன் தன் கணக்கு ?
  அரசே கொடுக்கட்டும் வங்கிகளின் செலவவை ;
  நாம் ஏன் கட்ட வேண்டும் பெனால்டி ?

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! ஒரு பிளாஷ் பேக் :—- // சாதாரண, நடுத்தர மக்களுக்கான திட்டங்கள், எதிர்காலத்தை
  பற்றிய நம்பிக்கைகள் – எதையுமே தரத் தவறி விட்டது பட்ஜெட்……
  “” இருப்பதையும் பறித்துக் கொள்வதில் தான் மத்திய அரசுஆவலாக
  இருப்பதாகத் தெரிகிறது. “” கிடைக்கிற சந்தர்ப்பங்களை
  எல்லாம் பயன்படுத்திக் கொண்டு, மான்யங்கள் அனைத்தையும்
  ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொள்ளவே முயல்கிறது.

  சும்மா மனதில் தோன்றிய பெயரில் எல்லாம் திட்டங்களை
  அறிவிக்கிறார்கள்….. கீழே சில மத்திய அரசு திட்டங்களின்
  பெயர்களைத் தருகிறேன். அவை அனைத்தையும் பற்றிய
  சரியான தகவல்களை தருபவர்களுக்கு பெரிய பரிசு
  கொடுக்கலாம்.

  பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீமா யோஜனா –
  பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா –
  அம்ருத் மஹோத்சவ் –
  ஸ்வச்ச பாரத் அபியன் –
  ஸ்வச்ச பாரத் செஸ் –
  ஸ்வச்ச பாரத் கோஷ் –
  பிரதான் மந்த்ரி வித்யா லக்ஷ்மி கார்யக்ரம் –
  சுகன்யா சம்ரித்தி ஸ்கீம் –
  தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌஸல் யோஜனா –
  அடல் பென்ஷன் யோஜனா –
  ஜன் தன் –
  ஜன் கல்யாண் – // இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் பதிவிட்டது தான் ….. // மோடிஜி சர்க்காரின் ” ஜன கண மன ” ……!!!
  Posted on மார்ச் 1, 2015 by vimarisanam – kavirimainthan //
  ஜன் தன் ஒரு திட்டத்திற்கே வங்கிகளின் “தண்டனை சிஸ்டம்”.என்று கூறும்போது — மேலே குறிப்பிட்டுள்ள மற்ற திட்டங்களினால் என்னென்ன …. பலன்கள் மக்களுக்கு இதுவரை கிடைத்துள்ளது …. ?
  // “உரலுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டு –
  உலக்கைக்கு பயந்தால் முடியுமா … !!! // என்று தாங்கள் அன்று வினவியது … எப்போதுமே ” முடியாது ” என்கிற அர்த்தத்தில் தானே …. ?

 3. LVISS சொல்கிறார்:

  SBI had suspended levying charges for not maintaining balance in 2012 when banks were allowed to levy charges and Modi was in Gujarat. The bank is reviving the charges after 4 years. Where does Modi come here. It is a decision of the banks. The govt collects tax from the rich and salaried people to fund schemes for the poor. So what is wrong in banks charging fees from customers to service zero balance Jan Dhan accounts. If you are not happy with one bank which you feel is charging more you can change your bank.Why crib about it when all banks are charging for servicing accounts

  • Hariharan சொல்கிறார்:

   SBI -2012-ல் பெனால்டியை சஸ்பெண்ட் செய்யும்போது
   இருந்த மினிமம் பேலன்ஸ் எவ்வளவு என்று
   உங்களுக்கு தெரியுமா ?

   இப்போது திரும்ப revive பண்ணும்போது அது 5000
   என்பதாவது உறைக்கிறதா ?

   இப்போது திரும்ப revive பண்ணும்போது SBI சேர்மன்
   சொல்லி இருக்கும் காரணம் என்ன என்று
   பார்த்தீர்களா ?
   ” SBI needs minimum account balance penalty to Offset
   Jan Dhan costs – says Arundathi Bhattacharya”

   மோடி ” ப்ரதான் மந்த்ரி ஜன் தன் ” என்று
   ஜம்பமாக திட்டம் கொண்டு வந்து விட்டு,
   மக்கள் பாக்கெட்டில் கை வைப்பது ஏன் ?
   அரசாங்கமே காம்பென்சேட் பண்ண வேண்டியது தானே ?

   நீங்கள் சொல்லுகிறீர்கள் :
   //The govt collects tax from the rich and salaried people
   to fund schemes for the poor. //

   5000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைக்க முடியாமல்
   பெனால்டி கட்டுபவன் உங்கள் கண்களில் “ரிச்”சா ?

   • Hariharan சொல்கிறார்:

    அதான் பஞ்சாப்ல சிங் எல்லாம் சேர்ந்து
    உங்களுக்கு வெச்சான்
    ஆப்பு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.எல்விஸ்,

   உங்கள் வாதம் வெறும் விதண்டாவாதம் என்று
   உங்களுக்கே தெரியவில்லை..?

   22 கோடி free jan-dhan account- ஐ திறக்கச் சொல்லி
   வங்கிகளுக்கு உத்திரவு போட்டது யார்…?
   அதை maintain செய்ய ஆகும் செலவை
   எவர் கொடுப்பது என்று
   ஏன் அப்போதே யோசிக்கவில்லை ?
   கன்னா பின்னாவென்று திட்டங்களை அறிவித்துக்
   கொண்டே போவது…. எதுவும் உருப்படியாக
   நடப்பது இல்லை.
   தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு வருடா வருடம்
   மத்திய அரசு subsidy கொடுக்கிறதே – எதற்காக ?
   5000 ரூபாய் minimum balance வைக்க முடியாமல்
   திண்டாடுபவரிடம் தான் penalty வசூலிக்க போகிறர்கள்..
   5000 ரூபாய் balance வைக்க முடியாதவர்கள்
   பணக்காரர்களா..? அவர்களிடமிருந்து அரசின்
   முட்டாள்தனத்திற்கு பெனால்டி வசூலிப்பதை
   நீங்கள் எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும் ?

   //If you are not happy with one bank which you feel
   is charging more you can change your bank.//

   நீங்கள் யார் இதைச் சொல்வதற்கு ?
   உங்களுக்காக, உங்கள் முட்டாள் அரசுக்காக,
   நான் 20 வருடங்களாக கணக்கு
   வைத்திருக்கும் வங்கியை மாற்ற வேண்டுமா ?
   இப்படி எல்லாம் கண்களை மூடிக்கொண்டு
   எல்லா முட்டாள்தனங்களையும்
   ஆதரிப்பவர்களைத்தான் மீடியாவில் “பக்த்”
   என்று சொல்கிறார்கள்.
   அதில் எந்த தவறும் இல்லையென்றே
   எனக்கும் தோன்றுகிறது.
   பக்தர்கள் தானே பகவானை கேள்வியே கேட்காமல்,
   யோசனையே செய்யாமல் புகழ் பாடுகிறார்கள் ..?

   • R KARTHIK சொல்கிறார்:

    //If you are not happy with one bank which you feel
    is charging more you can change your bank.//

    “If people dont have bread to eat, why dont they eat cake instead.” above words sounds like that.

    If SBI only is charging so much, how can we expect private banks to be lenient? Please dont ask us to go to CITIBANK and other american banks we cant have 2 lakhs as minimum balance.

  • R KARTHIK சொல்கிறார்:

   Dear Mr. LVISS,

   “The govt collects tax from the rich and salaried people to fund schemes for the poor.” Are you sure about it? I recollect the words from the book “Rich Dad Poor Dad” where Robert Kiyosaki says,
   ————————
   “I remember in school being told the story of Robin Hood and his Merry Men. My schoolteacher thought it was a wonderful story of a romantic hero … My rich dad did not see Robin Hood as a hero. He called Robin Hood a crook.”

   Kiyosaki believes that the poor and the middle class romanticize the story of Robin Hood and feel that the rich should give to the poor in the form of taxes. He points out that in reality the rich are barely affected by taxes. They find tax loop-holes and avoid paying the full amount of taxes they theoretically owe, while the middle class is taxed more heavily and provides the most assistance to the poor.
   ————————
   How much will they collect from middle class? How much we (salaried) will be penalized for being transparent and religiously paying tax (anyhow no way to hide)?

 4. LVISS சொல்கிறார்:

  All banks have minimum balance requirement . Penalty for not maintaining minimum balance is not applicable to JanDhan accounts.The govt has requested the SBI to reconsider it’s decision to levy charges.Apparently it is the Banks decision and not govt instruction to levy charges.

  • bandhu சொல்கிறார்:

   LVISS – நீங்கள் சொல்வது எல்லாமே உண்மையான தகவல். ஆனாலும், விதண்டாவாதம். ஜன்தன் கணக்குகளுக்கு ஆகும் செலவை அரசு ஏற்றுக்கொண்டிருந்தால் SBI அதை அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் சுமத்தாது இல்லையா? அதே போல், மினிமம் பேலன்ஸை உயர்த்திவிட்டு, குறைந்தால் அபராதம் என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

   • LVISS சொல்கிறார்:

    Mr Bandhu I think there is some misunderstanding here.I am merely stating what I came to know.I am not arguing ( vadham). SBI is not the only bank authorised to open JanDhan accounts.27 public sector banks and most of the private banks can open these accounts.It is not minimum balance but minimum average balance that will be taken account.
    Even otherwise the Banks charge for other services .Since SBI came out with a statement we think that is the only bank charging for average minimum balance.

  • Ilango சொல்கிறார்:

   Mr.elvis,
   what is yr. answer for these …?

   // ஜன்தன் கணக்குகளுக்கு ஆகும் செலவை அரசு
   ஏற்றுக்கொண்டிருந்தால் SBI அதை அக்கவுண்ட்
   வைத்திருப்பவர்கள் சுமத்தாது இல்லையா? //

   // If SBI is charging so much, how can we expect
   private banks to be lenient ? //

 5. Srini சொல்கிறார்:

  Pillayaro, thengayo.. Rhyminga padika naala iruku… I am not bothered today. Its BJP in UP and I am happy. This should give more confidence to Modiji to introduce more programs and policies that can bring in long term results, even if it hurts the common man in the short term and not liked by his opponents. Why restrict only to Tamil Nadu. Bharat… indru illavittal naalai marum…

 6. selvarajan சொல்கிறார்:

  திடீரென்று ஒரு இரவில் செல்லா நோட்டு என்று அறிவிக்கவும் — அடுத்த நாள் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்றுரைக்கவும் — பல உத்திரவுகளை [ கெடுபிடிகளை ] தொடர்ந்து அரசு சார்பில் கூறி– கூறி எல்லோருடைய சேமிப்புகளையும் வங்கிகள் பிடிங்கி கொண்டு — அல்லாட விட்டதிற்கும் — காரணமாக இருந்தவர்கள் தான் — தற்போது அதே வங்கிகள் செய்யும் அடாவடி வசூல் கொள்ளைகளை கண்டிக்க திராணியற்று ” மறு பரிசீலனை செய்யுங்கள் ” என்று கெஞ்சுகிறார்கள் …..

  உத்திரவு போட்டு வங்கிகளை தங்களின் வசமாக்கியவர்கள் — // இந்த புதிய “தண்டனை சிஸ்டம்”.. பற்றி கேட்க வெட்கப்படுகிறார்களோ …. ?
  வங்கிகளுடன் சமரசப் பேச்சுக்குத் தயார்: விஜய் மல்லையா … இந்த ” யோக்கியரை [ வாங்கி ஏய்ப்பாளர் ] கூப்பிட்டு சமரசம் பேசி எங்களின் சேமிப்புகளை வாரி – வாரி வழங்குங்கள் … வாரி – வாரி வழங்குங்கள் … வாரி – வாரி வழங்குங்கள் …!!!

 7. புதியவன் சொல்கிறார்:

  இதில் ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். டி-மானிடைசேஷனுக்குப் பிறகு, ஏராலமான ஜன்-தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன, அதில் திடீர் திடீரென்று நிறைய டெபாசிட்கள் வந்தன என்ற செய்தியைப் படித்தோமே. இந்த ஜன்-தன் கணக்குகளெல்லாம், ஏழைகளுடையதா அல்லது ஏழையின் பேரில் பணக்காரர்களுடையதா?

  மாயாவதி அவர்கள், 20,000 ரூக்குக் கீழ்தான் 100% வரவும் தன் கட்சிக்கு இருந்தது என்று எல்லாக் கள்ளப் பணத்தையும் வெள்ளையாக்கினார்களே.

  இப்படி 80% ஏமாற்றுக்காரர்களினால்தான், 20%ம் பேர் (எளியவர்கள்) பாதிக்கப்படுகிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.