உ.பி.தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கான முக்கிய காரணம்…..?

உத்திர பிரதேச தேர்தலில் ஈடுபட்ட முக்கியமான
கட்சிகள் எதுவுமே மக்களின் பிரச்சினைகளை
நம்பி தேர்தல் தேர்தல் பணியில் இறங்கவில்லை…

அனைத்து கட்சிகளுமே ஜாதி, மத அடிப்படையிலேயே
முடிவுகளை எடுத்தன…. அதன் அடிப்படையிலேயே
போட்டியிட்டன – அந்த அடிப்படையில் தான்
வெற்றி கிட்டும் என்று நம்பின….

அடிப்படை உண்மை வென்றது ….
அதாவது, ஜாதிகளை விட – மதம் பெரியது,
அதிக பலம் உடையது …..
மனிதனை எளிதில் உணர்வுபூர்வமாக இணைக்கக்கூடியது…

ஜாதியை நம்பி போட்டியிட்ட
கட்சிகள் தோற்றன.
மதத்தை நம்பி போட்டியிட்ட
கட்சி வென்றது….!!!

( இதைத்தவிர இன்னும்
பல காரணங்களை பட்டியல் போடலாம்…..
ஆனால், அடிப்படை காரணம் இதுவே…!)

கோவாவிலும், பஞ்சாபிலும், மணிப்பூரிலும்
உள்ள மக்கள் – வேறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறார்கள்.

– இது என் கருத்து….
இதைத்தான் ஏற்க வேண்டும் என்று நான் யாரையும்
வற்புறுத்தவில்லை….!!!

நண்பர்கள் அவரவர் கருத்தை பின்னூட்டங்களில்
தாராளமாக ( வழக்கம் போல்… நாகரிகமான முறையில்)
தெரிவிக்கலாம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

35 Responses to உ.பி.தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கான முக்கிய காரணம்…..?

 1. gopalasamy சொல்கிறார்:

  உங்களின் கருத்துக்கள் எப்பொழுதும் நடுநிலையோடுதான் உள்ளன . மதத்தை காட்டி மற்ற இடங்களிலும் மோடி வெற்றி பெறுவாரா ?

 2. LVISS சொல்கிறார்:

  Mayavathi depended on dalits and minority votes. But it appears that a large number of them voted for BJP which did not field a single Muslim candidate.

 3. LVISS சொல்கிறார்:

  It will be difficult for us in the south to understand how BJPJ won decisively. So we keep attributing reasons that suits us.

 4. gopalasamy சொல்கிறார்:

  இன்றைய சூழலில் அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள் சாமானியருக்குத் தெரியாத விஷயங்களைச் சொல்லியாகவேண்டும் என துடிப்பு கொண்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கமுடியாத கோணங்களில் எல்லாம் யோசித்து சாமானியரை ஆச்சரியப்படுத்துகிறார்கள். ஆழ்ந்த தனிப்பட்ட காழ்ப்புகளும், சுயநல நிலைபாடுகளும், மத இன மொழி வட்டார வெறிகளும் இல்லாத அறிவுஜீவிகள்…… Jeyamokan

  • இளங்கோ சொல்கிறார்:

   அய்யா கோப்பாலசாமி என்ன சொல்ல வருகிறீர்களோ அதை
   ஒழுங்கா எல்லாருக்கும் புரியறமாதிரி சொல்லுங்களேன்.

   • gopalasamy சொல்கிறார்:

    Jeyamkan’s thoughts. not mine .

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     திரு.கோபாலசாமி,

     ஜெயமோகன் அவர்களின் எண்ணங்களை நீங்கள் இங்கே
     எடுத்து போட வேண்டிய அவசியம், பின்னணி என்ன
     என்பதையும் கொஞ்சம் எடுத்தியம்பி விடுங்களேன்…

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.கோபாலசாமி,

   உங்களுக்கு என்னையோ, என் எழுத்தையோ எதாவது குறை சொல்ல வேண்டுமானால் அதை நேரடியாக, வெளிப்படையாக செய்ய வேண்டியது தானே…?

   எதற்கு ஜெயமோகன் என்று யார் யாரையோ இழுக்கிறீர்கள்…?

   இதை எழுதுபவர் ஒன்றும் தெரியாத மூடன் என்பது உங்கள் அபிப்பிராயமாக இருந்தால்,
   அப்பேற்பட்ட “மூடர் பிரதேசத்திற்கு” உங்களைப்போன்ற
   அறிவுஜீவிகள் எல்லாம் வந்து comment போடலாமா..?

   – வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • gopalasamy சொல்கிறார்:

    I wish you should read that articles ( in two parts). That is all. I have no hesitation to accept the fact that I am a fool. Right from school days I remain like that only. If I am an intellectual, then automatically “intellectual arrogance ” will come. It may make me to call others donkeys. My god! I don’t want that STATUS. If you don’t want my comments you can write that also,

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     திரு.கோபாலசாமி,

     YES. உங்கள் – பக்குவமற்ற, அரைகுறை பின்னூட்டங்களை
     நான் நிச்சயமாக இங்கே வரவேற்கவில்லை.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 5. ஆரோக்கியசாமி சொல்கிறார்:

  கன்யாகுமரியில் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில்
  ஒரு 21 வயது இளைஞன் இலங்கை படை வெறியினரால்
  சுடப்பட்டு செத்துக் கிடக்கிறான்.
  அவனது பெற்றோர்களும் உறவினர்களும் 6 நாட்களாகியும்
  பிணத்தை அடக்கம் செய்யாமல் அழுது கொண்டிருக்கிறார்கள்.
  அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ, வருத்தம் தெரிவிக்கவோ பிரதமருக்கு
  நேரம் கிடைக்கவில்லை. சந்தோஷக்களிப்பில் ஆழ்ந்திருக்கிறார்.
  கே.எம்.அய்யா, இவர் இந்தியா முழுவதுக்கும் சேர்த்து தானே பிரதமர் ?

  • gopalasamy சொல்கிறார்:

   Today more than 10 jawans were killed. Is there any reaction from anywhere ?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திரு.கோபாலசாமி,

    பத்து ஜவான்கள் கொல்லப்பட்டதற்கு
    பிரதமர் அல்லவா பதில் சொல்ல வேண்டும்…
    திரு ஆரோக்கியசாமி என்ன செய்வார்… ???
    உங்கள் கேள்வியை ஏதோ தப்பான இடத்திற்கு
    அனுப்பி விட்டீர்கள் போலிருக்கிறதே…!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஆரோக்கியசாமி,

   உங்கள் வருத்தம் எனக்கும் இருக்கிறது.
   என்ன செய்ய…?
   இது நமது துக்கம் –
   நமக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டியது தான்.

   -காவிரிமைந்தன்

 6. gopalasamy சொல்கிறார்:

  Sri KMji , I asked why the photo donkeys . Are you endorsing Akilesh Yadhav’s view ?

  • NS RAMAN சொல்கிறார்:

   புதிய குறள்
   காங்கிரஸ் ஆளும் மாநில மக்கள் எல்லாம் மக்கள் மற்றவை
   (பிஜேபி ஆளும்) மாநில மக்கள் எல்லாம் மாக்கள்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப ராமன்,

    நம்மால் எல்லாம் குறள் எழுதி விட முடியாது…
    அது பெரிய மனிதர்கள் செய்யக்கூடிய பணி…

    உங்கள் கருத்தை நான் ஏற்கிறேனா என்று கேட்டால் –
    சிறிது மாற்றலாம்….
    “மக்கள் யாவரும் மாக்களே ”

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.கோபாலசாமி,

   திரு.அகிலேஷ் யாதவ் என்ன சொன்னார் என்று
   நீங்கள் சொன்னால் தானே எனக்கு தெரியும்…?

   -காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr . K M This is what Akilesh Yadav said in a meeting ” I request the superstar please don’t do ad for Gujarat gadhas.” The reference was to a Wild Ass Sanctuary ad by Amitabh Bachan.Amitabh is the brand ambassador of Gujarat. Interestingly Mrs Bachan is a member of S P .

 7. NATCHANDER சொல்கிறார்:

  in u p bitter fight between father and cm son unholy alliance of congress and akileshs party
  very poor governance by akilesh mayawathys pasdt records paved the way for bjps victory all know that… let us accept the verdict friends…

 8. selvarajan சொல்கிறார்:

  இனி என்ன … ஆட்டம் -ஆட்டம் கொண்டாட்டம் தான் ,,,, ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது … உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை எப்பாடு பட்டாவது — பிடிக்கவேண்டும் என்ற முனைப்புடன் ” சகலவிதமான வியூகங்களையும் ” செயல்படுத்திய பாஜக இப்போது சாதித்தே விட்டது ……

  நல்ல காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என கூப்பாடு போடும் பாஜக….

  ” தேர்தல் அறிக்கையில் கூறியபடி ” இனி அயோத்தியில் ராமர் கோவில், உபியில் மாட்டிறைச்சிக்கு தடை என அனைத்துவித ஆட்டங்களையும் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேற்றாமல் இருப்பார்களா …? உ .பி யை போலவே மற்ற மாநிலங்களிலும் ” அதே பார்முலாவை ” செயல்படுத்த முயலும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது …

  என்ன இந்த வெற்றி சிறுபான்மையினர் — சாதாரண மக்களுக்கு உள்ளுக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மைதானே …. ?

 9. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  ஐயா,
  மக்களை மாக்கள் என்று கூறலாம் என்று சொல்லி மிருகங்களை கேவலப்படுத்த வேண்டாம்.
  மனிதர்கள் நன்றி கெட்ட ஜென்மங்களாகவே இருந்து வருகின்றன!
  என்னால் பிஜேபி ஐந்து மாநிலங்களிலும் அமோக வெற்றி (OPS, எடப்பாடி-களின் கருத்தும் அதுவே) பெற்றதைகூட ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால் இரோம் ஷர்மிலா பெற்ற 90 ஓட்டுக்களை (நோடா-வைவிட குறைவு) மனம் ஏற்க மறுக்கிறது. இனியும் இந்த நாடு இன்றில்லாவிட்டாலும் என்றாவது மாறும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா ஐயா?
  இந்த நாடும் நாட்டு மக்களும் (என்னையும் சேரத்துதான் சொல்கிறேன்) நாசமாக போகட்டும்!

 10. புதியவன் சொல்கிறார்:

  “மைனாரிட்டி ஓட்டுக்கள்” என்ற ஆயுதம் இரண்டுபுறமும் மிகவும் கூர்மையானது. அதை காங்கிரஸ் காலம் காலமாகப் பயன்படுத்திக்கொண்டுவந்தது. மற்ற அரசியல் கட்சிகளும், தங்கள் ஆதாயத்துக்காக (கூட்டணி இல்லாமலேயே, மைனாரிட்டி ஓட்டுக்கள் கூட்டணியைப் போல மொத்தமாக, குறைந்தபட்சம் பெரும்பாலான வாக்குகள்) மைனாரிட்டி சமூகம், அவர்களை காரணங்கள் சரியாக இல்லாதபோதும் கண்மூடிக்கொண்டு ஆதரிப்பது என்று செய்ய ஆரம்பித்தன. இதற்கு லாலு, சாமஜ்வாதி, மாயாவதி, கம்யூனிஸ்டுகள், மம்தா, தமிழகத்தில் திமுக போன்றோரும் காரணம்.

  அதனால்தான், மைனாரிட்டி சமூகமக்கள் வாக்குகளுக்காக, ‘இந்து என்றால் திருடன்’ என்றெல்லாம் எள்ளி நகையாட கருணானிதிக்கு முடிந்தது. இந்தப் பாதையில் சென்றால், பாஜக தமிழகத்தில் பெரும் அளவு வளர்வதைத் தவிர்க்க முடியாது என்பதை மிகவும் தாமதமாகப் புரிந்துகொண்டு, ஸ்டாலின் இந்துக்களுக்காகப் பரிந்துபேச ஆரம்பித்துள்ளார். (அவர், ஷீரடி சாயிபாபா புகைப்படத்தைத் தன் மேசையில் வைத்துள்ளார்.. அந்தப் புகைப்படமே அவரது official புகைப்படமாக வந்துள்ளது) கோவையில் நடந்த பயங்கரவாதத்தை, அத்வானி அவர்களைக் கொலைசெய்யத் திட்டமிட்டதை, கருணானிதி கண்டிக்கவே இல்லை. அதற்குக் காரணம், மைனாரிட்டி வாக்குகள் தன்னைவிட்டுப் போகக்கூடாது என்பதுதான்.

  இப்படி, நியாயமில்லாமல், ஓட்டுக்காக ‘மைனாரிட்டி’ என்ற வாளை உபயோகப்படுத்தியவர்கள், இப்போது பாஜக, ‘இந்து மெஜாரிட்டி’ என்ற வாளை எடுத்தவுடன் குறை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

  ‘இந்துத்வா’ என்று Polarize செய்வது எவ்வளவுக்கு எவ்வளவு ஆபத்தோ, அந்த ஆபத்தை ஆரம்பித்தது ‘மைனாரிட்டி மதம்’ சார்ந்த கட்சிகள், சமூகம். எப்போது சர்ச்சுகளில் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று மத ரீதியாக முடிவெடுத்தார்களோ, அப்போதே, ‘இந்துத்துவா’வைத் தூக்கிப்பிடிக்கும் கட்சிக்கு ஒரு இடம் தானாகவே உருவாகிவிட்டது.

  அதைத்தான் பாஜக இப்போது அறுவடை செய்கிறது. இதனால் நாட்டுக்குக் கெடுதல் என்றாலும், இதற்கு முன் மைனாரிட்டிகளின் அத்தகைய Polarizationஆல் நாட்டுக்கு உண்டான கெடுதலைப்போன்றது இது.

  என் தனிப்பட்ட எண்ணம், பாஜகவின் திட்டம் தவறானது என்று தோன்றவில்லை. இந்தியாவுக்கு அது நல்லதுதான். தமிழகத்திலும், மெதுவாக பாஜக தன்னுடைய வாக்கு சதவிகிதத்தை வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு ஓரிரு, ‘மைனாரிட்டி’ சார்ந்த பிரச்சனைகளே போதும் (கோவையில் நடந்தது போன்றவை)

 11. நிமித்திகன் சொல்கிறார்:

  வணக்கம்.

  இதை எழுதுவதற்கு சற்று சங்கடமாக இருந்தாலும், பாஜக வெற்றி பெற்றதற்கு இதுவும் காரணமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. (முன்)னொரு காலத்தில், அரசில், ஆட்சியில், அதிகாரத்தில் என எல்லா நிலைகளிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சார்ந்தவர்களே (A என வைத்துக் கொள்வோம்) அதிக அளவில் இருந்தனர். அப்போது பொதுவான ஒரு கருத்து, இவர்கள்(A) பிற பிரிவினைச் சேர்ந்தவர்களை முன்னேற விடமாட்டார்கள். பிற பிரிவினரை மட்டம் தட்டியே வைத்திருப்பார்கள் என்பதுதான். அது பெருமளவு உண்மையாகவும் இருந்தது. அந்த சூழலில்தான் பிற பிரிவினர்கள்(O என வைத்துக் கொள்வோம்), அவர்களை எதிர்த்தும்,ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை(x என வைத்துக் கொள்வோம்) ஆயுதமாகக் கையிலெடுத்தும் அரசியல் செய்தனர். அதனால் ஆட்சியைப் பிடிக்கவும் செய்தனர். காலங்கள் மாறின. இன்று A பிரிவினர் அரசில், ஆட்சியில், அதிகாரத்தில் அதிக அளவு இல்லை எனும் நிலை உண்டாயிற்று. அது அவர்களே அவர்களுக்கு வைத்துக் கொண்ட ஆப்பு. ஆனால் இதன் விளைவு என்பது X பிரிவினர் பொதுவாக தங்களின் ஆரம்பக்கால நிலையிலிருந்து முன்னேற்றம் கண்டனர், “இன்று அடக்கு அல்லது அடங்கமறு” எனும் தாரக மந்திரத்துடன் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். O பிரிவினருக்கு அரசியல் செய்ய பழைய காரணம் எப்போதாவது மட்டுமே பயன்படுவதால், புதியகாரணங்களாக மதத்தினைக் கையில் எடுத்தனர். மதவாதம் எனும் புதிய சொல்லைக் கண்டுபிடித்தனர். அண்ணனும் தம்பியுமாக, மாமனும் மைத்துனனுமாக வாழ்ந்து வந்த மக்களிடையே, நீ மைனாரிட்டி, நீ மெஜாரிட்டி எனும் பிரிவினையைத் தூண்டினர். நேற்றுவரை தம்பியாக பார்த்த பக்கத்து வீட்டுக்காரரை, இன்று மைனாரிட்டியாக பார்க்க வைக்கின்றனர். நேற்றுவரை மாமனாகப் பார்த்த எதிர் வீட்டுக்காரரை இன்று மெஜாரிட்டியாக பார்க்க வைக்கின்றனர். உள்ளுக்குள்- அவருக்கு கிடைக்கும் சலுகைகளைப் பார்த்து இவருக்கும், இவருக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பார்த்து அவருக்கும் பகை உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றனர். இதனை சாதி அரசியலுக்கும் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவானது, சிறுபான்மையினரைத் தூக்கிவைத்து ஆடும் அரசியல்வாதிகள், பெரும்பான்மையாய் உள்ள நம் இனத்தில் இருந்துகொண்டே நம் மதத்தினை எதிர்க்கின்றனரே என பெரும்பான்மையினரை நினைக்க வைக்கின்றனர். இன்னொருபக்கம், சிறுபான்மையினரின் நலம் எனக் கூறும் அரசியல்வாதிகள் அவர்களின் ஆட்சியில் இதுவரையில் நமக்கு அப்படி என்ன பெரிய நண்மையை செய்துவிட்டார்கள், நம்மை சிறுபான்மையினர் என பிரித்துப்பார்த்து அரசியல் செய்ததைத் தவிர எனும் எண்ணம் சிறுபான்மையினருக்கும் வந்துவிட்டது. இதன் வெளிப்பாடுதான், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளிலும் பாஜக-விற்கு வெற்றி கிடைத்ததன் காரணம். பாஜக வெற்றி பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும். இதுவும் ஒரு தவிர்க்கமுடியாத காரணம் என்பது என் கருத்து. இந்தியனை, இந்தியனாகவே இருக்கவைக்க எந்த அரசியல் கட்சிகளும் தயாராகவே இல்லை, ஆங்கிலேயரின் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ எனும் ஆயுதம் இப்போது “சாதி-மதம்” என இவர்களின் கையில். இந்த ஆயுதம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பரவலாக இருக்கிறது. இருபுறமும் கூர்மையான அந்த ஆயுதம் அவ்வப்போது பயன்படுத்துபவரையும் பதம் பார்த்துவிடுகிறது.

  அன்புடன்
  நிமித்திகன்

  • புதியவன் சொல்கிறார்:

   நிமித்திகன் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடுனிலையான கருத்தாகவும் எனக்குத் தோன்றியது. என் இளமைக்காலத்தில் (இளையோர் பட்டம் பெறும் வரையில்) எனக்கு இப்போதிருக்கும் சிந்தனைகள் வந்ததே இல்லை.

   ஒவ்வொரு மதத்தினரும் தனித் தனிப் பழக்கங்களைக் கொண்டவர்கள் என்ற ஒன்று மட்டுமே இருந்தது. நண்பர்களாக இருப்பதிலோ அல்லது பழகுவதிலோ ஒரு வித்தியாசமும் நான் அறிந்ததில்லை.

   இதைப் படித்தவுடன், விதுரன், கண்ணன் தூதுவந்தபோது (கர்ணன் படத்தில்), துரியோதனனைப் பார்த்து, ‘வெறுப்பு உமிழும் பேச்சை நிறுத்து’ என்று சொல்வதுதான் ஞாபகம் வந்தது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப நிமித்திகன்,

   நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான்..

   இப்படி மக்களை ஜாதி, மத அடிப்படையில் பிரித்து,
   ஒருவர் மீது மற்றொருவர் அவநம்பிக்கை கொள்ள வைத்து,
   எப்போதுமே அவர்களை ஒருவித tension -க்கு
   உள்ளாக்குவதை பார்க்கும்போது அதற்கு காரணமானவர்கள்
   மீது கடுங்கோபம் உண்டாகிறது.

   அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்கள்…
   மக்கள் தான் அவர்களை அலட்சியப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
   ஜாதி, மத – தூண்டுதல்களுக்கு உட்பட மாட்டோம் என்று
   உறுதி கொள்ள வேண்டும்.

   உங்கள் கருத்துகளுக்கு நன்றி நிமித்திகன்.

   இத்தகைய ஆக்கபூர்வமான விவாதங்களை
   நான் வரவேற்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. தமிழன் சொல்கிறார்:

  இரோம் ஷர்மிளாவுக்கு வாக்களிக்காமல் மணிப்பூர் மக்கள் இருந்தது, அவர்களுக்கு யார் தனக்கு நன்மை செய்யக்கூடியவர், யார் எதிரிகள் என்பதை நினைக்க நேரமில்லை என்பதைக் காட்டுகிறது. இவர்களுக்காகவா 15 வருடம் இரோம் ஷர்மிளா போராடினார்?

  நல்லவர்களைத் தோற்கடித்த மக்கள் (காமராஜரைத் தோல்வியுறச் செய்தனர் விருதுபட்டியில்) தற்போதைய தன்னலமுள்ள தலைவர்களைத் தான் பெறத் தகுதியுள்ளவர்கள். இதேபோன்று (கொஞ்சம் அதீதம் என்றாலும்) மக்கள் பிரச்சனைக்காகக் குரல் கொடுக்கக்கூடிய பலரை மக்கள் கேவலாமகத் தோற்கடிப்பார்கள். இது டிராபிக் ராமசாமியாகட்டும், சமயத்தில் பாராளுமன்றத் தேர்தலில் நின்ற வைகோ ஆகட்டும். இன்றைக்கு எல்லோரும் புகழும் அப்துல் கலாமோ அல்லது யாருமோ, தேர்தலில் நின்றால், தமிழக மக்கள் அவர்களையும் படு கேவலமாகத் தோற்கடிப்பார்கள்.

  மக்கள் திருந்தாமல், நல்ல தலைவர்கள் வரமுடியாது. திருமங்கலம் type தொகுதிகள், திருடர்களையே தலைவராகப் பெறத் தகுதியுள்ளன.

 13. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! பொதுவாக ஆட்டுமந்தை — மாட்டுமந்தை எல்லாம் பார்த்த எங்களுக்கு — ” கழுதை மந்தை ” புகைப்படத்தத்தை காணும்படி செய்த தங்களின் கருணைக்கு – நன்றி … நன்றி … நன்றி ….!!! இன்னும் இதுபோல பல மந்தைகளின் படங்களையும் வெளியிடுவீர்கள் நாங்கள் – ரசிக்க … அப்படித்தானே …. ?

 14. palaniappan சொல்கிறார்:

  நிமித்திகன் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.