திருமதி தமிழிசை – இதைச் செய்வாரா … ?

காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி விட்டது என்று
திருமதி தமிழிசை பூரிக்கிறார்…

திருமதி தமிழிசைக்கு பூகோளம்
தெரியாமலிருக்க வாய்ப்பில்லை…

மோடிஜி மீதுள்ள அதீத பற்றால், காங்கிரஸை எல்லா
மாநிலங்களிலிருந்தும் ஒழிக்க முடியாவிட்டாலென்ன,

காங்கிரஸ் இருக்கும் மாநிலங்களையே ஒழித்து விட்டால்
தீர்ந்தது பிரச்சினை என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது…!!!

( காலுக்கேற்ற செருப்பு கிடைக்கவில்லை என்றாலென்ன…
செருப்புக்கு ஏற்ப, காலை மாற்றி விட்டால் போச்சு …!!)

பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள்
இந்தியாவில் இருப்பதாகவே காட்டிக்கொள்ளவில்லை
என்றால் தீர்ந்தது பிரச்சினை …!!!

தேர்தல் நடந்தது 5 மாநிலங்களில் –

பாஜக ஜெயித்திருப்பது 2 மாநிலங்களில் மட்டுமே…
(உத்திர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் )

இதைத்தவிர இன்னும் 3 மாநிலங்களிலும் தேர்தல்
நடந்திருக்கிறது… அவற்றில் –

பஞ்சாபில் காங்கிரஸ் ஜெயித்து ஆட்சியை கைப்பற்றி விட்டது.
(ஏற்கெனவே ஆட்சியில் இருந்த பாஜக,
அகாலி தளம் படுதோல்வி
அடைந்திருக்கிறது…)

கோவாவில் ( ஏற்கெனவே பாஜக ஆண்டு
கொண்டிருந்த மாநிலம்) –
காங்கிரஸ் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் – பாஜக தான் ஜெயிக்கும் என்று
தேர்தலுக்கு முன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
தற்போது காங்கிரஸ் ஜெயிப்பது
போல் தோன்றுகிறது…!!!

———–

அவ்வளவு ஏன்…
திருமதி தமிழிசைக்கு தன் தலைவர் மீது
அந்த அளவு நம்பிக்கை இருந்தால் -ஒன்று செய்யலாம்…!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவரே நின்று – ஜெயித்து,
அந்த வெற்றியை மோடிஜிக்கு காணிக்கையாக
சமர்ப்பிக்கலாமே…!

மோடிஜியின் கொடியை தமிழகத்தில் நாட்டிய
மாதிரியும் இருக்கும்…

சட்டமன்றத்தில் பாஜக நுழைந்த மாதிரியும் இருக்கும்….

தமிழக மக்கள் –
இத்தகைய ஒரு காட்சியை பெரிதும்
விரும்புவார்கள்….( ரிசல்ட் எப்படி இருந்தாலும்….!!! )

செய்வாரா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to திருமதி தமிழிசை – இதைச் செய்வாரா … ?

 1. NS RAMAN சொல்கிறார்:

  Mrs Tamil Isai’s statement is not acceptable and in the national interest. India without Congress is not good for Indian democracy. We need national parties like congress at least believing in one India, national stream and union setup. Congress down fall only will help in developing regional parties with narrow mind which we are clearly witnessing in Tamil Nadu. Congress has to do develop from root level and develop state level instead of believing in leaders like Rahul who is good for nothing.

  Each state is important but comparing the victory in UP and Uttarkand with losses in Punjab, Goa (yet to wait for full results) is a joke of the year. Please be honest in accepting BJP’s performance in UP & Uttarkand which is beyond expectation.

 2. Ilango சொல்கிறார்:

  // BJP’s performance in UP & Uttarkand which is beyond expectation.//

  This statement is not correct.
  This was expected and both Mr.Modi and Mr.Amit sha
  have repeatedly said it that bjp will hit U.P.like a sunami.

 3. NS RAMAN சொல்கிறார்:

  All the parties contested in the election used to give such statements before results.
  In democracy no ban dreams!!!!! . But today’s UP result of 3/4 majority is no one predicted.
  In politics voters are king and some time they give such suprises.
  All I expect some stability in RS to BJP through this victory and the same time worried that this victory should not make them arrogant due to weakness in Congress.

 4. NS RAMAN சொல்கிறார்:

  All the parties contested in the election used to give such statements before results.
  In democracy no ban for dreaming!!!!! . But today’s UP result of 3/4 majority – no one predicted.
  In politics voters are king and some time they give such surprises.
  All I expect some stability in RS to BJP through this victory and the same time worried that this victory should not make them arrogant due to weakness in Congress.

  • LVISS சொல்கிறார்:

   In UP law and order is. bad . All sections should feel safe like in other BJP ruled states.That shd be the first priority forBJP. They shd not think it is a vote for Ram Mandir and ruin peace in U P. Minorities also might have voted for them. At least under BJP they shd feel safe to go about their work.

 5. LVISS சொல்கிறார்:

  In UP the people did not vote on caste and religious consideration.This is a welcome change in the mindset of the people.In UP and UKhand BJP will be forming the government.In Goa it depends on who the others will help form the govt. In Manipur BJP had no base before. Whatever they got is bonus and they shd be happy. In Punjab worse tally was forecast. They managed to limit the damage and importantly stopped AAP surge which was
  forecast to get about 50 plus seats.
  Modi is seen in different way in N India than we in T Nadu.Karnataka could be their next target and not T Nadu

 6. LVISS சொல்கிறார்:

  Yes BJP should field a candidate in R K Nagar and see how many votes they get.

 7. Srini சொல்கிறார்:

  of the total 600+ assembly constituencies, 67% have chosen BJP MLAs. This will surely help BJP in Rajyasabha numbers. for sure in the coming years, BJP will find a way to demonstrate in Tamil Nadu. sometimes we don’t have the “dil” to accept the success of people whom we don’t like. its a great effort by modi and team to defeat sp, bsp, inc, demonitisation effects, a state that has a big % of minority community which is not going to vote for them, with all these, they got a majority.
  I am seeing the same kind of heartburn from TN politicians when amma won the election.

  BJP shouldnot field a candidate a RK nagar. Let OPS and Sasi faction fight it out and prove who is the real admk. Let stalin prove that admk doesnt have majority in assembly. why BJP?? BJP lost in last TN assembly election. No need for BJp to prove their status again and again.

 8. selvarajan சொல்கிறார்:

  ” ஊரு ரெண்டுபட்டால் ….. கொண்டாட்டம் ” – என்பதைப் போல உ .பி. யில் தந்தை – தனயன் சண்டை … அதேப்போல இங்கே தமிழ்நாட்டிலும் அ. தி. மு. க பிரிந்து கிடைப்பதால் வேறு ஒரு பிரதான கட்சி நாக்கை சப்புகொட்டிக் கொண்டு காத்திருக்கிருக்கிறது …. ! இருந்தாலும் ” ஒரு நப்பாசையில் ” — டெபாசிட் வாங்கும் அளவுக்கு வாக்குகளை பா.ஜ . க . பெற்றால் — இங்கேயுள்ள அக்கட்சியினர் அதற்கே விழா எடுத்து கொண்டாடினாலும் தகும் தானே …. என்று வினவும் நபர்களும் இருக்கிறார்கள் … !!!

 9. palaniappan சொல்கிறார்:

  ungalukku romba aasai sir

 10. சிவா சொல்கிறார்:

  அறிக்கை விட்டது ஒரு குத்தமாயா? தமிழ்நாட்டு பிஜேபியை வைச்சுகிட்டு அந்தம்மா அறிக்கைதான் விடமுடியும். அதுக்குப் போய் ஆர்கே நகர்ல ஆப்பு ஒன்னு இருக்குது வந்து உட்கார்ந்துகோன்னு சொல்லுறது நல்லவா இருக்கு?

  • NS RAMAN சொல்கிறார்:

   Tamil Isai is a LKG in politics and also from decent family background without any criminal and corruption background. She can’t be fit candidate for such prestigious constituency. Please leave it to Sasi, DMK.

 11. gopalasamy சொல்கிறார்:

  இந்தியா முழுதும் அறிந்த ஒரே மக்கள் தலைவர் ராகுல் மட்டுமே . காங்கிரசை யாராலும் அளிக்க முடியாது . தெற்கே புதுச்சேரி , கர்நாடகா . வடக்கே பஞ்சாப், ஹிமாச்சல் , மேற்கே கோவா , கிழக்கே மணிப்பூர் என பட்டொளி வீசி ஆட்சி நடந்து கொண்டு உள்ளது .

 12. NATCHANDER சொல்கிறார்:

  Bitter fight between akilesh and his father in u p very bad governance by akilesh the c.m mayawathys past records have all made the people of u.p to vote for bjp all know that
  let us accept the verdict friends…

 13. NATCHANDER சொல்கிறார்:

  YES tamil nadu people atlast have begun to think about voting for bjp this time not a joke man
  tamil nadu people are disgusted with aiadmks divisions dmks unruly behaviour in the assembly very recently makkal nala koottanis kootthu
  veeramani and his like minded parties would be definetely witnmessing bjps bright role in tamil nadu very soon much against their wish… remember i have not voted for bjp so far all these days…

 14. தமிழன் சொல்கிறார்:

  இந்தியாவுக்கும், ஒவ்வொரு மானிலத்துக்கும் நன்மை கிடைக்கவேண்டுமென்றால், இரண்டு தேசியக் கட்சிகளும் நல்ல வலுவுடன் இருக்கவேண்டியது அவசியம். பாஜக எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிகமாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலுவுடன் திகழவேண்டும். இதுதான் தேசத்துக்கு நல்லது. மானிலக் கட்சிகள் என்றாலே, பல-கொள்ளைகளைச் செய்யும் கூட்டம், தேசபக்தி இல்லாதது என்று ஆகி பலப் பல வருடங்களாகிவிட்டன.

  ஆனால், இதை, 2000 வாக்குகள்கூடப் பெற முடியாத தமிழிசை சொல்வதுதான் எரிச்சலாக இருக்கிறது. தமிழர் நலன் சார்ந்த எந்தப் பிரச்சனைக்கும், காங்கிரசோ அல்லது பாஜகவோ குரல் கொடுத்ததில்லை. அது காவிரி, மீத்தேன், ஸ்டெர்லைட், மீனவர், பாலாறு, முல்லைப் பெரியார் போன்ற எந்தப் பிரச்சனையானாலும் சரி. இதற்கும் காரணம், தேசியக் கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இல்லாததுதான் என்று நினைக்கிறேன். மத்திய அரசை நடத்துவதைப் பொருத்த அளவில், திமுக வின், கொள்ளைக் குடுமிகள் காங்கிரசில் மாட்டிக்கொண்டுள்ளதால் தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை எடுக்க மாட்டார்கள். இப்போதுள்ள அதிமுகவுக்கும் அதே கதிதான். இதன் காரணமாக, மத்திய அரசுக்கு, தமிழர் நலன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருந்ததில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   தமிழன்,

   நன்கு அலசுகிறீர்கள்.
   நீங்கள் சொல்லும் சில கருத்துகள் எனக்கும் ஏற்புடையவையே.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.