பாஜக ஆட்சியை திருடுகிறதா…?


“பாஜக ஆட்சியைத் திருடுகிறது – கோவாவிலும்,
மணிப்பூரிலும் முதலில் வந்த காங்கிரஸ் கட்சியை
கீழே தள்ளி விட்டு, மோசடியாக பாஜக ஆட்சி அமைக்கிறது ”
– என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது….


..

கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் –
முதல் இடத்தைப் பிடித்திருக்கும் காங்கிரஸ் 17 இடங்களிலும்,
இரண்டாவதாக வந்திருக்கும் பாஜக 13 இடங்களிலும்
வென்றிருக்கின்றன.

இங்கு ஏற்கெனவே நடந்து வந்த பாஜக ஆட்சியை,
40 க்கு 13 கொடுத்ததன் மூலம் மக்கள்
மிகத்தெளிவாகவே நிராகரித்திருக்கிறார்கள்.
ஆனாலும், கவர்னர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால்,
முதலில் வந்த காங்கிரசுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமலே
பாஜகவுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆட்சி பொறுப்பிற்கு வருவதைக் காட்டி,
“தேவையானதை…. கொடுப்பதாகச் சொல்லி
சிறிய, சில்லரை கட்சிகளை பாஜக வளைத்து விட்டது ”
என்று காங்கிரஸ் சொல்கிறது….

துக்கடா மாநிலத்தின் கூட்டு, கதம்ப ஆட்சியின் முதல்வராக
பதவியேற்பதற்காக, மதிப்புமிக்க மத்திய ராணுவ அமைச்சர்
பதவியை ராஜினாமா செய்து விட்டு கோவாவுக்கு போ என்று
பாஜகதலைமை சொல்லி அனுப்புகிறது திரு. மனோகர் பரிக்கரை…..

..

கிட்டத்தட்ட இதே நிலை மணிப்பூரில்…
மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், 27-ல் வென்று முதலிடத்தை
பெற்றிருக்கிறது காங்கிரஸ். 21-ல் வென்று இரண்டாவது
இடத்தை பெற்றிருக்கிறது பாஜக.

இங்கேயும், காங்கிரசை தள்ளி விட்டு,
சிறிய கட்சிகளை கையில் போட்டுக் கொண்டு கவர்னர்
துணையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக.
ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வை கல்கத்தாவுக்கு
கடத்திக் கொண்டு போய் வைத்திருப்பதாக வேறு புகார்….

உத்திர பிரதேசத்திலும், உத்தராகண்டிலும், மாபெரும்
வெற்றியை பெற்ற பாஜக, தன்னம்பிக்கையுடனும்,
நேர்மையாகவும் – கோவாவிலும், மணிப்பூரிலும்
முதல் இடத்தை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு –
முதலில் ஆட்சியமைக்க வாய்ப்பை கொடுத்து விட்டு,

காங்கிரசால் இயலவில்லை என்பதை நிரூபித்து விட்டு,
பிறகு தான் ஆட்சி அமைத்திருக்கலாம்….

மிகப்பெரிய வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும்
பாஜகவுக்கு இப்படி ஒரு இழுக்கு தேவையா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to பாஜக ஆட்சியை திருடுகிறதா…?

 1. தமிழன் சொல்கிறார்:

  முதலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புக் கொடுத்துவிட்டு, அவர்களால் முடியவில்லை என்பதை Establish செய்திருக்கலாம். ஆனால், அரசியலில் நேர்மை என்பது இந்திராகாந்தி பதவிக்கு வந்தபோதிலிருந்தே காணாமல்போன ஒன்றல்லவா?

  ஆனானப்பட்ட நேர்மையாளர் மொரார்ஜி அவர்களும் கைவிட்ட கொள்கையல்லவா (காங்கிரஸ் பணியமர்த்திய கவர்னர்களை வெளியேற்றியதன்மூலம்).

  மணிப்பூருக்கு நீங்கள் சொன்னது சரி. கோவாவில் 32% வாக்குகள் பாஜக பெற்றுள்ளது. காங்கிரஸ் 28% அல்லது அதற்கும் கீழ்.

  காங்கிரசுக்கு இப்படிக் குற்றம் சாட்ட கொஞ்சமாவது அருகதை உண்டா? வெளிப்படையாக ‘கொள்ளையடிக்க’ திமுக போன்ற கட்சிகளைக் கூட்டுச் சேர்த்து தேசத்தின் மாண்பைக் கேலிக்குரியதாக்கினவர்கள் அவர்கள்தானே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   காங்கிரசை விடுங்கள்…
   குறைந்த பட்சம் எனக்காவது அருகதை உண்டு
   என்று ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா…!!!

   ஒரு வேடிக்கை ….
   மோடிஜி உத்திர பிரதேசத்தில் இந்த தடவை
   உச்சபட்ச சாதனை என்று சொல்லும்போது,

   2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜக
   வாங்கிய ஓட்டு சதவீதத்தை இப்போது
   குறைவாகவே வாங்கி இருக்கிறது
   என்பதை எல்லாருமே
   சௌகரியமாக –

   மறைத்து அல்லது மறந்து விடுகிறார்கள்
   பார்த்தீர்களா…? 🙂 🙂 🙂

   மே, 2014 – 42.7 %
   மார்ச், 2017 – 39.7 %

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    கா.மை. சார்.. நீங்கள் விமர்சனம் செய்வதில் என்ன தவறு இருக்கமுடியும். எனக்குத்தான், மாற்றுக்கருத்தை வெளியிட கொஞ்சம் சங்கடமாக இருந்தது. நீங்கள் மாற்றுக்கருத்தை அனுமதிப்பதால் எழுதினேன்.

    ஆனால், காங்கிரஸ், அவர்கள் ஏதோ ஒழுங்காக நடந்துகொண்டதுபோல் பாஜகவைக் குறை சொல்வதைத் தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மத்தியில் கொள்ளையடிக்கலாம் என்பதற்காக, மாநில காங்கிரசின் நலனையே விட்டுக்கொடுத்து மைனாரிட்டி திமுக ஆட்சி அமைய உதவியவர்களல்லவா அவர்கள்.

    பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் இடையே உள்ள % வித்தியாசத்தை யாரும் மறைத்த மாதிரித் தெரியலையே. 2014ல் 62% மக்கள் வாக்களித்தார்கள். இப்போது 60% மக்கள் வாக்களித்தார்கள்.

    பாஜக 3%, சாமஜ்வாதி 0.2%, மாயாவதி +2%, காங்கிரஸ் 1.3% வாக்குகளை இழந்துள்ளது (மாயாவதி தவிர). இது ஒரு பெரிய வித்தியாசம் இல்லை.

    பாராளுமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு இருந்த மனநிலையில் (அவ்வளவு வெறுப்பு காங்கிரஸ், திமுக போன்ற கூட்டணி ஆட்சியில்), வாய்ப்புக் கொடுத்தால் ஒவ்வொருவரும் 10 எதிர்ப்பு வாக்குகளாவது பதிவு செய்திருப்பார்கள்.

    ‘உச்சபட்ச சாதனை’ என்பதெல்லாம் வெறும் வெற்றி வார்த்தைகள்தான். இதற்கான காரணி, மோடி அவர்கள், பாஜக மாத்திரம் இல்லை. எனக்குத் தோன்றுகிறது, ‘உயர் சாதியினர்’ பாஜக பக்கம் நின்றதுதான். இந்துத்துவாவை பெரும்பான்மை மக்கள் இந்தத் தேர்தலில் ஏற்றுக்கொண்டதுதான் (மைனாரிட்டி என்ற பெயரில் மற்றவர்கள் தங்களை அழுத்துகிறார்கள் என்று எண்ணியதால். 20% உள்ள இஸ்லாமியர்களுக்கு தலா 100 இடங்களில் போட்டியிட சாமஜ்வாதி, மாயாவதி கட்சிகள் இடம் கொடுத்தனர். இதெல்லாமும் ஒரு காரணியாக இருந்திருக்கக்கூடும்) ஜெயித்தவர்கள் சொல்லுவதுதான் அம்பலம் ஏறும் என்பதால் அவர்கள் கூறும் காரணத்தைப் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. (இங்கு திமுக, காங்கிரசின் வாக்குகளையும் சேர்த்துக்கொண்டு, தனியாக ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட அதிமுகவை விட 1% வாக்குதான் குறைவு என்று சொல்லிக்கொள்ளும். அதிமுக, தமிழக மக்கள் அனைவரும் அதிமுக மட்டும்தான் வேண்டும் என்று வாக்களித்தார்கள் என்று சொன்னார்கள். அதுபோல)

    இப்போதும் கோவா, மணிப்பூர் ஆட்சியைக் கைப்பற்ற முனைவதற்குக் காரணம், அதை வைத்து, கட்சியை மேலும் grass-root levelல் வளர்க்க சந்தர்ப்பம் இருக்கிறது என்பதால். சிபிஐ யைக் காண்பித்து மாயாவதி, முலயாம் போன்றவர்களின் வாக்குகளை எல்லா மசோதாக்களுக்கும் காங்கிரஸ் அப்போ பெற்றதுபோல், பாஜகவும் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்கொள்கிறது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     தமிழன்,

     // எனக்குத்தான், மாற்றுக்கருத்தை வெளியிட கொஞ்சம்
     சங்கடமாக இருந்தது. நீங்கள் மாற்றுக்கருத்தை அனுமதிப்பதால் எழுதினேன்.//

     எந்த விஷயமாக இருந்தாலும், எந்தவித சங்கடமும் இல்லாமல்
     உங்கள் கருத்தை எழுதுங்கள். மற்ற நண்பர்களின் கருத்தையும்
     தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.
     மாறுபட்ட கருத்துக்களின் பின்னணியையும் நாம்
     புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…?
     எந்த ஒரு விஷயத்திலும் தெளிவு பிறக்க விவாதங்கள் உதவும்.

     இது ஒரு விவாதமேடை மாதிரி தான்.
     மாற்றுக் கருத்தை எழுதுவதால் நான் நிச்சயமாக தவறாக
     எடுத்துக் கொள்ள மாட்டேன். சில சந்தர்ப்பங்களில்
     அந்த சமயத்திற்கு கொஞ்சம் சூடு பிறக்கலாம். அது தற்காலிகம் – விவாதத்தில் இயற்கை…!!!

     ( ஒரு விஷயம் – பாஜக வித்தியாசமான கட்சி என்று
     சொல்லிக் கொண்டார்கள்.
     மோடிஜி ஒரு statesman என்றும்
     நினைத்தோம்…. அதெல்லாம் இல்லை…
     இதுவும் காங்கிரஸ் மாதிரி தான் – சில விஷயங்களில்
     அதை விடவும் மோசம் – என்பது தெரிய வருகிறது –
     அந்த கருத்தை, நீங்களும் உறுதி செய்து விட்டீர்கள்
     என்று நினைக்கிறேன்……!!! 🙂 🙂 )

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

  • இளங்கோ சொல்கிறார்:

   From Firstpost –

   //the democratic tenet of representing the wishes of the people is lost.

   Not just lost, it is an insult. These are not the people or parties that won the public vote. For example, we have Mohan Parrikar rushing off in unceremonious haste to wear the CM’s crown in Goa and dumping his duties as defence minister as if it was of no consequence…this is the man who had promised to refurbish and reinvent and reinforce the services and upgrade the military procurements across the board.

   That grand saga went soggy pretty damn fast.

   And he has scarpered off to Goa to lead a team that did not win. It might be devilishly clever to have shepherded the minnows into your net but it is a pyrrhic victory and not worth abdicating your responsibilities as the defence minister.

   The day these cardboard props want to drop you they can–so the BJP will always be a minority–frankly, they did not need to do this.//

 2. R KARTHIK சொல்கிறார்:

  Not convinced that BJP has to bring in Mr. Manohar Parikkar to retain Goa. Why not they accept and give away Goa?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கார்த்திக்,

   காங்கிரஸ் கட்சியை விட தான் எந்தவிதத்திலும்
   சிறந்த கட்சி இல்லை என்பதை பாஜக நிரூபிக்கிறது.
   (இப்போதைக்கு ஊழல் விவகாரங்கள் அதிகமாக
   வெளிவரவில்லை என்பதைத்தவிர…)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  Highly improper and unethical.Even though in these states the MLAs of smaller parties are said to prefer BJP CM still Congress party shd be given the first chance to prove majority.If it fails the Governor can ask the BJP to prove majority. Nothing but greed for power. They alligned with PDP in Kashmir for the same reason and got a bad name.
  Also people have to go through two elections. .If Parrikar was so important for Goa why bring him to Delhi.in the first place

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.எல்விஸ்,

   நீங்கள் எடுத்தது நேர்மையான நிலை..
   பாராட்டுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

  மணிப்பூர் தேர்தலில் சமூகப்போராளி இரோம் ஷர்மிளா மிகக்குறைந்த அளவு ஓட்டு வாங்கி தோற்றது மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு, குறிப்பாக பெண் போராளிகளுக்கு ஏற்பட்ட மிகப் பெரும் பாதகமாகவே நான் கருதுகிறேன். அகிம்சை வழியில் ஏறெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஏற்படும் கதி இதுதான் என்றால் யார் உரிமைகளுக்காக அறவழியில் போராட முன்வருவார்கள்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வதுரை,

   இரோம் ஷர்மிளா யதார்த்த நிலை புரியாமல்
   நீண்ட நாட்களை வீணடித்து விட்டார் என்பது என் கருத்து.

   இந்த மாதிரி போராட்டங்களால் எல்லாம்,
   அவர் முன்வைத்த லட்சியங்கள் நிறைவேற வாய்ப்பு இல்லை.

   இன்னுமொன்று – தனிமரம் தோப்பாக முடியாது.
   அவர் மற்றவர்களுடன் இணைந்து போராடியிருக்க வேண்டும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! ” ஜனநாயகம் வாழ்க ” என்று முழங்கியவர்களே .. இரண்டு மாநிலங்களில் குதிரை பேரம் — பதவி பேரம் என்று இறங்கி குறைந்த இடங்களை பெற்றவர்கள் ஆட்சி அமைக்க ஆளுநர்கள் 24 மணி நேரத்தில் செயலில் இறங்கியது ஜனநாய கேலிக்கூத்து தானே …கேட்டால் எங்களின் சாமர்த்தியம் என்று காதில் பூ சுத்துவார்கள் …
  கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதில் ஆளுநரும் – மத்திய அரசும் நடந்த விதம் — வேறு ரக கேலிக்கூத்து ….. மத்திய அமைச்சராக இருந்த பாரிக்கர் கோவா முதல்வராக மாறுகிறார் — ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஒரு தொகுதியில் தேர்தல் அவருக்காக … அதற்கு ஒரு செலவு — மக்கள் பணம் வீணடிப்பு …. வாழ்க ஜனநாயகம் …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ஒரு million dollar question…

   பாதுகாப்பு அமைச்சர் பதவி காலி.
   திரு.அருண் ஜெட்லி, நிரந்தரமாக பாதுகாப்பு அமைச்சராகக் கூடும்
   என்று சொல்லப்படுகிறது.

   அப்படியானால் – நிதியமைச்சர் பதவி காலி…

   திருவாளர் சுப்ரமணியன் சுவாமியை மோடிஜி
   அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று நான்
   ஆசைப்படுகிறேன்….சு.சா.வும் நீண்ட நாட்களாக ஆசைப்படுகிறார்…!!!

   நடக்குமா..?
   என் / மற்றும் திருசு.சா.வின் – ஆசை நிறைவேறுமா…?

   (மற்ற நண்பர்களும் கருத்து சொல்லலாம்…!!! )

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Arum Jaitley
    will hold temporary charge as Defense Minister.
    What I am thinking is why do it in the middle of a parliamentary session
    The govt is moving with a set agenda for the next two years.
    I don’t see any one being given the finance ministry portfolio.

   • தமிழன் சொல்கிறார்:

    யாராவது வேலில போற ஓணானை எடுத்து மடியில் கட்டிக்கொள்வார்களா? சுப்பிரமணியன் சுவாமி, முன்னே சென்றால் கடிக்கும், பின்னே சென்றால் உதைக்கும், இரண்டு சைடுல நின்றால், எப்படி தன் பொசிஷனை மாற்றிக்கொள்ளும் என்று தெரியாது. அவர் ஆக்கபூர்வமானவர் அல்லர். அதனால் அவர் ‘கருத்து கந்தசாமியாக’ இருப்பதே பாஜவுக்கு நல்லது, அது தலைவலியாக இருந்தபோதிலும் (ஏனென்றால் சீனியரான அவரை வாயைப் பொத்திக்கொள்ளச் சொல்ல ஆர்.எஸ்.எஸ் தலைமைக்குத் தான் வலிமை இருக்கிறது. ஆனால் சு.சுவாமி ரொம்ப கன்ட்’ரோல் பண்ணப்படுவதை விரும்பமாட்டார். அதனால் அது பாஜகவுக்கே பெரிய தலைவலியாக அமைந்துவிடும்).

    இவர் நிதியமைச்சராக ஆனால், அது பிரதமருக்கும் மற்ற எல்லாருக்கும் பெரிய ஆபத்து. சொன்னதைச் செய்யும் குணம் கொண்டவரல்லர் சு.சுவாம் (means, obeying) இருப்பதோ சில வருடங்கள் என்று டாமினேட் செய்ய நிச்சயம் முயலுவார்.

    சு.சுவாமி பழைய ஜெனெரேஷன் (அத்வானி, முரளி மனோகர் ஜோஷி….. ). புது ஜெனெரேஷனான மோடி அவர்களோடு சு.சுவாமி வேலை செய்தல் இயலாது. சு.சுவாமியின் அரசியல் Time is over. இதுதான் என் கணிப்பு.

    ஆனாலும், அவருடைய குணத்தினால் (மோசமான), யாரும் அவரிடம் வம்பு வைத்துக்கொள்ளமாட்டார்கள். “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்பதைக் கடைபிடிப்பார்கள்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     மோடிஜி மற்றவர்களை படுத்துகிற பாட்டிற்கு,
     அவர் கொஞ்ச காலம் சு.சா.விடம் மாட்டிக்கொண்டு
     விழிக்க வேண்டும் என்பது தானே என் ஆசையே…!!!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • தமிழன் சொல்கிறார்:

      சிலர் நல்லவர்களாகத் தெரிவார்கள். ஆனால் அவர்களின் அம்மாவுக்குத் தெரியும், ‘இது அமுக்குப்போலப் பொல்லாது’ என்று. பொதுவாக நல்ல மனம் உடையவர்கள், வஞ்சகம் செய்ய எண்ணாதவர்கள், வெளிப்படையாகக் கோபப்படுவார்கள் (short tempered or expressing explicitly) ஆனால் வஞ்சக மனத்துடையவர்கள், தேவையில்லாமல் வாய் வார்த்தை விடமாட்டார்கள். ‘அவர் நல்லவரா கெட்டவரா’ என்று நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியாது.

      வெளியே பார்க்கும்போது மோடி நல்லவராகத்தான் தன்னைக் காட்டிக்கொள்கிறார். பேட்டி கொடுக்கும்போதும் ரொம்ப கண்ணியமானவராத்தான் தெரியுது. நேரடியாக ஊழலில் இறங்கியதுபோல், அப்படி நம்புவதுபோல் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. பாஜகவின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார் (இந்துத்வா).

      வேறு சரியான நபர், (மோடியை CHALLENGE பண்ணும்) கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம். இருப்பது அவரது கட்சியிலேயே ஆளுமை இல்லாத ராகுல்காந்தி அவர்கள். (இல்லாட்டா ஸ்டாலின் சந்தித்தபோது, அவரை தனக்கு அடுத்ததாக நிறுத்தத் தெரியாமல், தனக்கும் சோனியாவுக்கும் இடையில் நிறுத்தியிருப்பாரா?) ராகுல் reasonably நல்லவர் என்பதுதான் என்னுடைய கணிப்பு.

      ஆனால், அரசியலில் புத்தர்களுக்கும் காந்திகளுக்கும் இடமில்லையே.

 6. Sridhar சொல்கிறார்:

  sir, my take is by doing the so called “Morality” less activity in Goa and Manipur, BJP has diverted the attention of the National press from UP and Uttarakand where the Chief Minister is yet to be identified.
  Otherwise the press would have created a scene of infighting in the BJP for the Chiefminister post in both these states (who knows, it may be there actually, that is why it is taking so long to declare)

  Ultimately it is POLITICS which existed even during 2000BC 🙂

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தமிழன், ஸ்ரீதர்,

  Central Cabinet-ல் மோடிஜிக்கு அடுத்த இடத்தை
  பிடித்துக் கொண்டிருப்பவர் உள்துறை அமைச்சர் திரு.ராஜ்னாத் சிங்.
  என்றாவது மோடிஜிக்கு பிரச்சினை வந்தால்,
  உடனடியாக அந்த இடத்தை பிடித்துக் கொள்ள
  அவர் தன்னை தயாராக வைத்துக் கொண்டிருக்கிறார்.

  அவருக்கென்று ஒரு ஆள்கூட்டமும் – பாஜகவில் உண்டு.
  அவருக்கு ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதம் என்றுமே உண்டு.

  மோடிஜிக்கும் இது தெரியும். ரா.நா.சி. யை
  டெல்லியிலிருந்து அகற்றி விட்டால்
  மோடிஜிக்கு எதிர்காலத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது.

  திரு. ஜெட்லியால் என்றுமே பிரச்சினை இருக்காது.

  எனவே, அனேகமாக ரா.நா.சி.வை, உத்திர பிரதேச முதல்வராக
  முடிசூட்டி டெல்லியிலிருந்து அகற்றி விடுவார் மோடிஜி.
  அதற்கான பின்னணி தான் தயாராகிக் கொண்டிருக்கிறது…
  அதனால் தான் தாமதம்….

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.