பாஜகவில் மார்க் தர்ஷக் பதவியேற்கவிருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்….!!!!

காங்கிரசில் ஏகப்பட்ட பழங்கள் தின்று
எக்கச்சக்கமாக கொட்டைகள் போட்டவர்….

கர்நாடகா முதலமைச்சராக -1999-2004
மஹாராஷ்டிரா கவர்னராக – 2004-2008
வெளியுறவுத்துறை அமைச்சராக – 2009-12

1932-ல் பிறந்து தற்போது 84 வயதே ஆகும் இளைஞர்…
திரு.எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களை காங்கிரசில் யாரும்
இப்போது கண்டு கொள்வதில்லையாம்…
பதவிகளும் எதுவும் கொடுக்கவில்லையாம்…
(இருந்தால் தானே – கொடுப்பதற்கு…
வைத்துக் கொண்டு வஞ்சகமா செய்கிறார் ….
சோனியாஜி … 🙂 🙂 )

84 வயதில் சும்மா இருப்பது “போர்” அடிக்கிறது என்பதாலும்,
பாஜக அவரை வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதாலும்,
இந்த வாரம் பாஜகவில் சேரவிருக்கிறார் என்று
திரு.எட்டியூரப்பா அறிவித்திருக்கிறார்.

மோடிஜி, ஏன் பாஜக தலைவர்கள் எல்லாருமே –
ரொம்ப மரியாதை தெரிந்த மனிதர்கள்….
யாருக்கு எத்தகைய இடம், கவுரவம் கொடுக்க வேண்டும்
என்பதை நன்கு உணர்ந்தவர்கள்….

எனவே, திருவாளர் “க்ருஷ்”- க்கும் பாஜகவில்
அவரது வயதுக்கு தகுந்த மரியாதை கொடுத்து
“மார்க் தர்ஷக்” பதவி கொடுக்கப்பட்டு, கீழ்க்கண்ட
மற்ற மார்க் தர்ஷக்குகளுடன் அமர்த்தப்படுவார் என்று
நம்புவோமாக….!!!


கொசுறு – பாஜக ஏன் அவரை வரவேற்கிறது….?
கர்நாடகாவில் மற்ற ஜாதி தலைவர்களை எல்லாம் ஏற்கெனவே
வளைத்து போட்டு விட்ட பாஜகவிற்கு, “ஒக்காலிக்கரா” சமூகத்தை
வளைக்க இதுவரை சரியான ஆள் கிடைக்கவில்லையாம்.
எனவே மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அந்த சமுதாய
முக்கிய “தலை”யான – க்ருஷ் -க்கு “வலை”….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பாஜகவில் மார்க் தர்ஷக் பதவியேற்கவிருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்….!!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  இப்போது தமிழகத்தில் தலைவர்களை ஜாதியை வைத்து அடையாளம் காண்பதுபோல், கர்னாடகாவில் ஜாதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு இப்போது, அதிமுகவில், தேவர், கவுண்டர் என்று பிரச்சனை தலைதூக்குவதைப்போல. அன்புமணி வன்னியர், திருமாவளவன் தலித் என்று முத்திரை குத்தப்படுவதைப்போல.

  ஜாதிப் பிரமுகர் என்ற அளவில்தான் கிருஷ்ணா அவர்களுக்கு பாஜக அழைப்புவிடுக்கிறது (அல்லது அவர் சேருகிறார்). தனிப்பட்ட கிருஷ்ணாவின் அரசியல்காலம் எல்லாம் காங்கிரசிலேயே கழிந்துவிட்டது. காங்கிரஸ் அவருக்கு நிறைய செய்திருக்கிறது. அவர், கட்சிக்கு உள்குத்து செய்யக்கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு கவர்னர் பதவி, மத்திய அமைச்சர் பதவி என்று கொடுத்தது. இவருக்காவது ஓட்டு பலம் இருக்கிறது. நம்ம ஊரில் ஜெயந்தி நடராஜன், ப.சிதம்பரம், வாசன் போன்றவர்களுக்கெல்லாம் காங்கிரஸ் நிறையச் செய்தும் அவர்கள் கட்சிக்கு எப்போதுமே விசுவாசமாக இல்லை. தனிப்பட்ட இந்த மூன்று நபர்களும் கட்சியை விட்டுத் தனியாக நின்றால் ‘நோட்டாவைக்கூடத் தோற்கடிக்கமுடியாது.

  சென்ற வருடம் மே மாதத்தில் நான் படித்த கீழ்க்கண்ட செய்தி இதற்குத் தொடர்புடையது.

  http://tamil.oneindia.com/news/india/why-did-karnataka-bjp-release-office-bearers-list-with-caste-against-their-name-254677.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   இதற்கு முன், நான் இந்த செய்தியை பார்த்திருக்கவில்லை.
   இவ்வளவு பச்சையாக ஜாதிவாரியாக பெயரை
   ரிலீஸ் செய்திருப்பது, ஒரு விதத்தில் எனக்கே
   அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
   உங்கள் தகவலுக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. LVISS சொல்கிறார்:

  He may be appointed as Governor of a state.

 3. selvarajan சொல்கிறார்:

  பா.ஜ . க என்றாலே ஒரு ” தனித்தன்மை ” வாய்ந்த கட்சி என்று அதில் உள்ளவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு செயலை செய்தவண்ணம் இருக்கிறார்கள் …..
  ” காங்கிரஸ் இல்லாத இந்தியா ” என்று தமிழிசையும் — ” நாடு நலம் பெற தமிழகத்தை தியாகம் செய்யலாம்.. என்று இல . கணேசனும் — // எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையப்போகிறார்.. எடியூரப்பா பேட்டியால் கர்நாடக அரசியலில் பரபரப்பு // By: Veera Kumar Published: Saturday, February 4, 2017, 13:32 [IST]
  Read more at: http://tamil.oneindia.com/news/india/sm-krishna-will-join-bjp-asays-bjp-s-state-president-bs-yeddyurappa-273284.html என்று எடியூரப்பா கடந்த மாதம் நான்காம் தேதி கூறியதும் —

  இன்று // கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார்.. சு.சாமி பகீர் குற்றச்சாட்டு //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/subramanian-swamy-accusation-on-karunanidhi-276815.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk என்று திரு சு. சுவாமி கூறுவதும் — நம்மை புல்லரிக்க வைக்கிறது …
  அதுமட்டுமல்ல // ஜாதி வாக்குகளை சாமர்த்தியமாக கவர்ந்த பாஜக.. உ.பி. வெற்றிக்கு கட்ஜு சொல்லும் காரணம் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/up-assembly-election-result-2017-how-does-one-explain-the-bjp-victory-in-up-276572.html … ஜாதி – மதம் கடந்த சமுதாயம் ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இந்த தடவை உ.பி.யில் நடந்தது ஜாதிக்கும், மதத்திற்கும்
   இடையே நடந்த பலப்பரீட்சை….
   ஜாதி பெரிதா அல்லது மதம் பெரிதா என்றால்
   மதம் தான் பெரிது… மற்ற எல்லா வாதங்களையும்
   மத அபிமானம் (அல்லது வெறி) தூக்கி சாப்பிட்டு விடும்.

   மற்ற கட்சிகள் ஜாதியை நம்பின.
   பாஜக மதத்தை நம்பி வேலை செய்தது…. வென்றது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமித்து — ” மவுரியா ஜாதியை ” சேர்ந்தவர்களை கவர்ந்தது … உ.பியில் 19 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட, ” பிராமணர்கள், தாக்கூர் போன்ற உயர் ஜாதியினர் ” பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது உறுதியானதும்,… யாதவர் அல்லாத, ஜாட் இனத்தவர் அல்லாத 170 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்கியது …..பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தரபிரதேசத்தில் கணிசமான ” பட்டேல் குர்மி ” இன மக்கள் உள்ளனர். அப்னா தள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சி….. சுஹேல்தவ் கட்சிக்கு, 18 சதவீத மக்கள் தொகையை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ” ராஜ்பர் ஜாதி ” மக்கள் ஆதரவு இருந்தது……தாக்கூர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரசாரம் செய்தனர்…..

    முஸ்லீம் வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தாததினால் ” மதமே ” பிரதானமாக தோற்றத்தை உருவாக்கினாலும் — உள்ளே ஜாதிகளின் பங்கும் அதிகம் என்று தெரிகிறது … !!!

 4. LVISS சொல்கிறார்:

  People are still wondering why SP and BSP did not get minority votes –Without a fair share of minority votes BJP would not have got so many seats —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.