உள்ளத்தை உருக்கும் மொஹம்மது ரஃபி பாடல்…. ( என் விருப்பம் – 7 )

நான் முதல் தடவை இந்த பாடலை கேட்டபோது எனக்கு
வயது-10. அப்போதே, எனக்கு திரைப்பட பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்…. ஆனால் கேட்கத்தான் வசதிகள் இல்லாமல்
இருந்தது.

மஹாராஷ்டிராவில், கர்க்கி என்கிற ஊரில்,
ஒரு இரானி ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு கேட்ட,
உள்ளே வைக்கப்பட்டிருந்த வானொலியிலிருந்து
மிதந்து வந்த பாடல்….64 ஆண்டுகள் கடந்த பின்னரும்
உருக்குகிறது….!

அப்போதெல்லாம், இப்போது போல், நினைத்தபோதெல்லாம்
பாட்டு கேட்க முடியாது, வசதிகள், டெக்னாலஜி கிடையாது.
ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு, மாலை/இரவு
நேரங்களில், ரேடியோ சிலோனில் மட்டும் திரைப்பட
பாடல்கள் வைப்பார்கள். சாதாரண வீடுகளில் ரேடியோ
கிடையாது. பணக்காரர்களுக்கு மட்டுமே இருந்த வசதி அது.
சில ஓட்டல்களிலும் இருக்கும்… தேடிப்போய் கேட்டுக் கொள்ள
வேண்டியது தான். என் சிறு வயது நண்பன் ஒருவன் நன்றாகப் பாடுவான். நாங்கள் அடிக்கடி அவனை சூழ்ந்து உட்கார்ந்து கொண்டு எங்களுக்கு பிடித்த பாடல்களை பாடச்சொல்லி கேட்பது வழக்கம்.

பாய்ஜூ பாவரா (baiju bawara ), 1952-ஆம் ஆண்டு வெளிவந்து
100 வாரங்களுக்கு மேல் ஓடிய ஒரு ஹிந்தி திரைப்படம்.
ஒரு மிகப்பெரிய மியூசிகல் ஹிட்…!

பாரத்பூஷன், மீனாகுமாரி நடித்தது.
பேரரசர் அக்பரின் காலத்தில் நடந்ததாகச்
சொல்லப்படும் ஒரு கதையை அடிப்படையாக கொண்டது.

“ஓ துனியா கே ரக்வாலே” –

இந்த உலகை ரட்சிக்கும் பகவானே –
என்று ஆண்டவனை வேண்டி பாடப்பட்ட பாடல்.
மனதைப் பிழியும்…குரல், இசை, ராகம்…!

சாஸ்த்ரீய ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் –
அமைந்த இந்த பாடலை –

எழுதியவர் ஷகீல் பதாயுனி,
இசையமைத்தவர் இந்தி திரையுலகில் அந்த காலத்தில் மிகப்பிரசித்தி பெற்ற நௌஷாத் அவர்கள்,
பாடியவரோ மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான
மொஹம்மத் ரஃபி அவர்கள்…
– ஆக மூன்று பேரும் இஸ்லாமியர்கள்…. ஆனால்,
பாடல் இந்துக் கடவுளான சிவனைக் குறித்தது….!

இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?

பல ஆண்டுகள் இந்த பாடலை கேட்பதற்கென்றே எங்கெங்கோ
அலைந்து கொண்டிருந்தேன். நான் வளர்ந்து வேலைக்குபோய்
சம்பாதிக்கத் துவங்கிய பிறகு, டெக்னாலஜி வந்தபிறகு,
முதல் முதலாக டேப் ரிக்கார்டர் வாங்கிய பிறகும்,
இந்த பாடலை பதிவு செய்து வாங்க அலைந்து கொண்டிருந்தேன்….

நேற்றிரவு, என் விருப்பத்தில் போட நினைத்தபோது,
வெகு சுலபமாக, யூ-ட்யூபிலிருந்து எடுத்து பதிய முடிந்தது…
டெக்னாலஜி …..எவ்வளவு வளர்ந்து விட்டது ….!!!

திரைப்படத்தில் வரும் பாடல் காட்சியே கிடைத்தது.
இருந்தாலும், ரஃபி அவர்கள், உணர்வுபூர்வமாக
நேரில் பாடுவதை நண்பர்கள் பார்த்து
ரசிக்க வேண்டுமென்று நினைத்தேன்…

படம் வெளிவந்து 25-30 ஆண்டுகளுக்கு பிறகு, பம்பாயில்,
இசையமைப்பாளர் நௌஷாத் அவர்களும், ரஃபியும் சேர்ந்து
நிகழ்த்திய ஒரு live orchestra பதிவை கீழே தந்திருக்கிறேன்…

ஆனால், இந்த காலத்து இளைஞர்களுக்கு இது
எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.

பாருங்களேன்…..பிடிக்கிறதா – சொல்லுங்கள்…!!!

கூடவே அதே படத்தில் இன்னுமொரு அற்புதமான பாடல் –
இதே காம்பினேஷனில் –

” ஹரி ஓம் -மன் தட்பத் ஹரி தர்ஷன் கோ ஆஜ்…..”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to உள்ளத்தை உருக்கும் மொஹம்மது ரஃபி பாடல்…. ( என் விருப்பம் – 7 )

 1. Prasad சொல்கிறார்:

  Mr.K.M.

  Your taste stuns me.
  Such an interest in music from a so Serious person ?
  I love both the songs.
  To a good extent meaning is understandable.
  Music is a wonderful way to reach the Almighty.
  I pray Lord Shiva for your good health and wish
  you write many many more blogs like this.

 2. LVISS சொல்கிறார்:

  Rafi is more or less like our TMS . comfortable with any type of song – But I like Rafi and Asha Bhonsle singing for O P Nayyar -” Bahuth Shukriya ” “aap yuhi agar “from Ek musafir ek hasina and most of the songs in 12 ‘0 clock ,kashmir ki kali are a class apart — Curiously Nayyar rarely used Latha Mangeshkar or Kishore Kumar much — Rafi’s voice fitted any actor’s voice and he could bend it like Beckam–
  Anrum inrum enrum Rafi TMS and p Suseela are my favourites —

 3. Tamilian சொல்கிறார்:

  நான் முதலில் இந்த பாடரகளையாக கேட்டது 1964ம ஆண்டு. அன்றிலிருந்து இன்றளவும் ரபியின அடிமை என்று சொல்லாம். S&J ன இசையில் , பரமனின (இருவரின் ) இசையில் , மனமோகனின எதைக்கூற எதைவிட? ஹரி ஓம் எனது தனி பேவரிட.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   நீங்கள் முதன் முதலில் இந்த பாட்டை கேட்டபோது
   உங்களுக்கு என்ன வயது இருக்கும்…?
   (இது எத்தனை வயதுக்காரர்களை எல்லாம் ஈர்க்கிறது என்று
   தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்…அவ்வளவே.. )
   என்னை 10 வயதிலேயே ஈர்த்தது…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Tamilian சொல்கிறார்:

    முதலில் பைஜூ பாவ்ரா கேட்ட போது ௧௫ வயது. அதில் ஒரு வேடிக்கை. என் தாத்தா ( ஒரு சங்கீத கலாநிதி ) . நான் இதை கேட்கும் போது காதில் கேட்டு ‘

    இந்த ராகம் மால் கௌன்ஸ் ‘ எனப்படுவது நமது ஹிந்தோளம் என்று கூறி பாடியவரின் பெயரை கேட்டார். அவர் அப்துல் கரீம் கானின் ஹிந்துஸ்தானிக்கு , உஸ்தாத் விலாயத் கானின் sitharukku தீவிர ரசிகர். பிறகு வந்த நாட்களில் என்னை அந்த பாடலை பாட சொல்லி கேட்பார். I remember it now.

 4. nagendrabharathi சொல்கிறார்:

  அருமை

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  பாஷை புரியவில்லை…..ஆனால் மயக்கும் கம்பீரமான குரலில் இனிமையான பாடல்.நன்றி!!!

 6. subburathnamtectonsubburathnam pitchai சொல்கிறார்:

  I bow to the varied taste of yours sir, though I regularly read your blog but I withhold myself from commenting out of frustration about politics. When it comes to old songs, I cant stop my self from rejoicing, Yes. whether tamil or hindi the combination of singer, lyrics and music was soul stirring. Every body were legend by uniqueness. To speak about Rafi, if you listen to – Babul ki Duayein lete jaa tears will role down if you have daughter. for dlight mood, chudivi ke chand ho and chaahoonga mei tuje chand savere
  I will stay tuned to your EN VIRUPPAM and keep looking for more.

  Subburathnam pitchai

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திரு.சுப்புரத்தினம் பிச்சை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.