ஜாக்கிரதை…. இப்படியும் ஒரு காலம் வரலாம்…!!!

ஜாக்கிரதை…. இப்படியும் ஒரு காலம் வரலாம்…!!!

பயமுறுத்தும் எதிர்காலம்….!

(வீடியோ உதவி – நண்பர் செந்தில்நாதனுக்கு நன்றி…)

மனிதன் இயற்கையை துன்புறுத்தியதன் விளைவு …
மழை நம்மை ஏமாற்றுகிறது…

இந்த கோடைக்காலம் நம்மை மிகவும் சோதிக்கப்போகிறது.
மக்கள், எச்சரிக்கையாக, மிகவும் சிக்கனமாக
தண்ணீரை பயன்படுத்த வேண்டும்….

தவறினால் எத்தகைய விளைவுகளை எதிர்காலத்தில்
நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த வீடியோ
லேசாக சுட்டிக் காட்டுகிறது.

இந்த குறும்படத்தை எடுத்தவர்களுக்கு நமது
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஜாக்கிரதை…. இப்படியும் ஒரு காலம் வரலாம்…!!!

 1. LVISS சொல்கிறார்:

  An interesting clip — A serious issue dealt with mild humour — It is a bit exaggerated but who knows —

 2. Bagawan சொல்கிறார்:

  This is a warning. We have to bring social revolution to reclaim the lost water bodies and creating environmental awareness to peoples. There many people and government they plant crores of trees for the last 4-5 years. If they survived Tamil Nadu would have been a better place. Last month the TN government plant 69lakh trees. The goverment shall ensure all of it survive and replace those not survived immedeately. I suggest each panchayat use the 100 days work under MGNREGA to plant the trees and protect them for 4-5 years. Each person can be made responsible for at least 50 trees. In Singapore there is a government organisation “National Parks Board” the link given below which shows how government and people come together to make Singapore city in Garden.
  https://www.nparks.gov.sg/

 3. தமிழன் சொல்கிறார்:

  தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனை ஆகப்போகிறது. மக்களுக்கு AWARENESS வேண்டும். மெரினாவைச் சுத்தம் செய்தது ஜெ.ஆட்சி. ஆனால், மக்கள் எல்லோரும் (அங்கு செல்லும் பெரும்பாலானவர்கள், அதிலும் இளைஞர்கள்) குப்பையைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். கடற்கரை எங்கும் சுகாதாரமற்ற உணவுப் பொட்டிக்கடைகள். அங்கேயே வாங்கி அங்கேயே உண்டு அங்கேயே குப்பையைப் போட்டுச் செல்கிறார்கள். தன்னுடைய இடம் அது என்று கூட மக்களுக்குத் தெரியவில்லை.

  கர்னாடகாவில், பெங்களூருவில் இழந்த ஏரிகளை மீட்டெடுக்கிறார்கள். ஆக்கிரமிப்பு இல்லாதவாறு தடுப்பு வேலிகளை அமைத்திருக்கிறார்கள். புதிதாகத் தொடங்கப்போகும் துணை நகரத்தில் கடல் நீரிலிருந்து குடி’நீர் வழங்குவதுபோல் அமைக்கப்போகிறார்கள். வீடுகளில் சூரிய அடுப்பு (பொதுவாக வென்னீர்க் குளியலுக்கு) வைத்திருந்தால் சலுகை 30 வருடங்களுக்கு முன்னாலேயே கர்னாடகாவில் வழங்கப்பட்டது.

  எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில், ஜெ. கடுமையாக அமல் படுத்த முயற்சித்த ‘மழை நீர் சேகரிப்பு’த் திட்டத்தைத் தவிர வேறு எதையும் 40 வருடங்களாகக் கேள்விப்பட்டதேயில்லை. எப்போவும்போல், எந்தக் குளறுபடியை ஆராய்ந்தாலும், அதைச் செய்தது கருணானிதியாகத்தான் இருப்பார் (குளங்களை லபக் செய்து அதில் வீடு கட்டுவதாகட்டும், ஆற்றின் கரைகளை ஆக்கிரமிப்புச் செய்பவர்களுக்கு பட்டா தந்து தன் ஆட்களை அங்கு அமர்த்துவதாகட்டும்… எதிலுமே அவர்தான் இருப்பார்). ஜெ. ஆட்சியின் ஒரு குறை, மணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்தாதது.

  வண்டலூரைத் தாண்டி, கே. பிரதர்ஸ் நிறைய இடங்களைச் சுருட்டியபிறகு, அங்கு துணை நகரம் அமைக்க முயன்றார் கருணானிதி. ராமதாசின் கடுமையான எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

  ஏற்கனவே பாலாறு காலி. வைகை எப்போதோ காலி. கோவையில் சிறுவாணிக்கு எப்போதுமே ஆபத்து. தாமிரவருணியும் காலியாகிக்கொண்டிருக்கிறது. நமக்கு இயற்கை வளம் நிறைய இருந்தாலும், கொள்ளையர்களும், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளையும் அதிகம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.