கோவா அமைச்சரவையும் – சோ’வின் மு.பி. துக்ளக்கின் 450 உ.பி.களும்…!!!


கோவா மாநிலத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவி
ஏற்றுக் கொண்டது.

மொத்த எம்.எல்.ஏக்கள் – 40
ஆளும் கூட்டணியின் எண்ணிக்கை – 21 எம்.எல்.ஏக்கள்.
அமைச்சர்களின் எண்ணிக்கை – 10

அதாவது 2 பேருக்கு ஒருத்தர் மந்திரி..!!!

3 MLA கொண்ட Goa Forward Party- யின் 3 பேரும் அமைச்சர்கள்.
3 MLA கொண்ட MGP கட்சியில் – 2 பேர் அமைச்சர்கள்…
(மூன்றாவது ஆசாமி சபாநாயகர் ஆகக்கூடும்….!!! )
கூட்டணியில் உள்ள 2 சுயேச்சைகளும் – 2 அமைச்சர்கள்…
பாவம் 13 MLA கொண்ட பாஜகவுக்கு – 3 அமைச்சர்கள் தான்…!!!
( சிரியுங்கள் – வேறு என்ன செய்ய முடியும்…? )

” இடுக்கண் வருங்கால் நகுக ”
என்று வள்ளுவர் மட்டுமா சொன்னார்….?


“சோ”வும் சொன்னாரே – அதுவும் சிரிக்க சிரிக்க …!!!

” சோ ” அவர்களின் முகம்மது பின் துக்ளக்
நாடகத்தை யாரால் மறக்க முடியும்….?

முக்கியமாக இந்த காட்சியை….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கோவா அமைச்சரவையும் – சோ’வின் மு.பி. துக்ளக்கின் 450 உ.பி.களும்…!!!

  1. தமிழன் சொல்கிறார்:

    என்ன இருந்தாலும் கருணாநிதிபோல் வராது. பள்ளியில் படிக்கவில்லை என்றாலும், கருணாநிதியின் தேர்ந்த அரசியல் சாணக்கியத்தனத்தை நினைவுகூற வைத்துவிட்டீர்கள். 90 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, நீ அரிசி கொண்டுவா, நான் உமி வைத்திருக்கிறேன், ரெண்டுபேரும் ஊதி ஊதி, நான் மட்டும் சாப்பிட்டுக்கறேன் என்று திமுகவினரை மட்டும் அமைச்சரவையில் சேர்த்தவரல்லவா?

    காஷ்மீரிலும் முதலமைச்சர் பதவியை முஃப்டி கட்சிக்குத் தாரை வார்த்தது பாஜக. இன்றில்லாவிட்டாலும் இந்த ஸ்ட்ராடஜி பாஜகவுக்கு உதவும் என்றே நினைக்கிறேன்.

  2. NS RAMAN சொல்கிறார்:

    BJP made a political compromise at the cost of Goa public money.

    In the first round BJP won Goa with Supreme Court support but for sure this will back fire BJP in Goa and other states

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.