யார், யாரை blackmail செய்கிறார்கள்…? திரு.சு.சா.சொல்வது நிஜமா…?

மோடிஜியின் ஆட்சியில் – ஊழல் செய்தவர்களும்,
கருப்புபணக்காரர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று
சு.சுவாமி திரும்ப திரும்ப கூறுவது நிஜமா…?

நிஜமில்லை என்றால், கட்சியிலும், ஆட்சியிலும் –
சர்வ வல்லமை பொருந்திய
ஸ்ரீமான் மோடிஜி ஏன் சும்மா இருக்கிறார்…?

பிரதமருக்கே கடிதம் எழுதுகிறார்…
செய்தியாளர்களை கூப்பிட்டு அதே குற்றச்சாட்டுகளை
மீண்டும் மீண்டும் கூறுகிறார் –
ஆனால், மோடிஜியிடமிருந்து எந்தவித re-action -உம் இல்லை…!
அப்படியென்றால் என்ன அர்த்தம்…?

கடைசியாக, சென்ற வாரம், அதாவது மார்ச் 7-ந்தேதியன்று,
டாக்டர் சு.சுவாமி, பிரதமருக்கு ஒரு 7 பக்க கடிதம் எழுதி
இருக்கிறார். அதில் வெளிநாடுகளில், கணக்கில் வராத,
ஊழல், கருப்பு பணத்தை கொண்டு வாங்கியதாக கூறி
பல சொத்து விவரங்களைப்பற்றிய விவரங்களை
வெளியிட்டிருக்கிறார்…

Income Tax and Enforcement Directorate (ED) டிசம்பர் 2015-ல்
நடத்திய joint raid பற்றிய விவரங்களை எல்லாம் தந்திருக்கிறார்.
லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் மீறப்பட்டிருப்பதைப்பற்றி
விவரமாக கூறி இருக்கிறார்.

இத்தனை குற்ற நிகழ்வுகள் நடந்தும், அதற்கான ஆதாரங்கள்
அனைத்தும் கிடைத்தும், அரசு ஏஜென்சிக்கள் மேற்கொண்டு
சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவித சட்டபூர்வமான
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், அவர்களுக்கு
பாதுகாப்பு கொடுக்கின்றன என்று மோடிஜி தலைமையிலான
அரசைப்பற்றியே குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.

இப்போதாவது மோடிஜி, இவற்றின் மீது விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்கிறார் –
அதுவும் மீடியாக்கள் மூலமாக…!!!

நடப்பது பாஜக அரசு. மோடிஜி தான் கட்சியிலும் ஆட்சியிலும்
சர்வ வல்லமை படைத்தவர். அப்படியென்றால், குற்றவாளிகள்
மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு
என்ன காரணம்…?

ஒன்று மத்திய அரசு இந்த குற்றச்சாட்டுகளின் மீது விரைந்து
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…. அல்லது
திரு.சு.சுவாமி பொதுவெளியில் கூறும் புகார்களுக்கு விளக்கம்
அளிக்க வேண்டும்…

இது இரண்டும் இல்லையென்றால், கட்சி கட்டுப்பாட்டை மீறி,
பொதுவெளியில் ஆட்சியைப்பற்றி விமரிசனம் செய்வதற்காக,
திருவாளர் சு.சுவாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…

இது எதுவுமே நடக்கவில்லை என்றால் –
அதற்கு காரணம் –
யாரோ, யாரையோ – blackmail செய்கிறார்கள்…
அப்படி blackmail செய்யப்படுபவர், செய்வதறியாமல் திகைத்து
மௌனமாக இருக்கிறார் என்று தானே அர்த்தம்….?

அப்படி யார், யாரை blackmail செய்கிறார்கள்….?

டாக்டர் சு.சுவாமி, பிரதமருக்கு எழுதியுள்ள மார்ச் 7-ந்தேதியிட்ட
கடிதத்தை பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார்….
அது கீழே –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to யார், யாரை blackmail செய்கிறார்கள்…? திரு.சு.சா.சொல்வது நிஜமா…?

 1. R KARTHIK சொல்கிறார்:

  Also possible that they dont want / couldn’t to take action but they want to convey (misdeeds of the opponent) to the public. There by keep public sentiments against them!!! Psychology!!!!

 2. தமிழன் சொல்கிறார்:

  சு.சுவாமிமேல் எவ்வளவுக்கெவ்வளவு குற்றம் சுமத்தலாமோ (அதாவது NEGATIVE CHARACTER என்று), அவ்வளவுக்கவ்வளவு, மனுஷன் மற்றவர்களுடைய குற்றங்களை சரியாகக் கண்டுபிடிப்பதில் வல்லவராக இருக்கிறார். அவர் வெத்து வேட்டு கடிதம் எழுதவில்லை. விஷயத்தோடு எழுதியிருக்கிறார்.

  அவர் மட்டும் நேர்மையாக, ஓரளவு ‘நியாயவானாக இருந்தால், சி.பி.ஐ டைரக்டராக அவரை ஆக்கவேண்டும் (அது அரசியல் POSTஆக இல்லாதபோதும்). அவர் அந்தப் பதவிக்கு நியாயம் கற்பிப்பார். அது மக்களுக்கு உபயோகமாக இருக்கும். டி.என்.சேஷன் அவர்களும் சி.பி.ஐ டைரக்டராக இருக்க மிகவும் தகுதி படைத்தவர்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   திரு.சேஷன் அவர்கள் “கெட்ட” காரியம்
   எதுவும் செய்ததில்லை – செய்வதும் இல்லை …. 🙂 🙂

   எனவே, சு.சா.வுடன் அவரை ஒப்பிடுவது
   அவருக்கு செய்யப்படும் அநீதி அல்லவோ …!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  40க்கு 13 வாஙகுன
  60க்கு 21 வாங்குன
  மாநிலங்களில் ஈஸியா ஆட்சி அமைச்சவங்களால்
  400+க்கு 300+ வாங்குன மாநிலத்தில் ஏன் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை?
  கொஞ்சம் எழுதுங்களேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   நண்பர் தமிழன் சொல்லி இருப்பது போன்ற காரணங்களும்
   உண்டு என்றாலும் –

   எனக்குத் தெரிந்து, முக்கிய காரணம் –

   மோடிஜி, ராஜ்னாத்ஜியை டெல்லியிலிருந்து
   கழட்டி விட நினைக்கிறார். உ.பி. முதல்வராக
   சுலபமாக நகர்த்தி விடலாம் என்று நினைத்திருந்தார்.

   ஆனால், ராஜ்னாத்ஜி டெல்லியை விட்டு நகர
   மறுக்கிறார்….

   ராஜ்னாத்ஜி இவ்வளவு பிடிவாதமாக இருப்பார் என்று
   எதிர்பாக்காததால், alternative arrangement தயாராக இல்லை.

   எனவே, தாமதமாக, இப்போது தான் கூட்டல், கழித்தல்,
   பெருக்கல், வகுத்தல்
   கணக்கெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்…

   விரைவில் அறிவித்து விடுவார்கள்.

   கோவாவிலும், மணிப்பூரிலும் பண்ணிய பாவத்திற்கு
   கைமேல் பலன்….

   மோடிஜிக்கும் ஒரு சறுக்கல் ….
   சந்தோஷப்பட வேண்டியது தானே …. 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Will any one leave a cenrtal minister post second to the PM and go as CM of a state -Rajnath Singh manages the govt in the absense of the PM — There should be some sense in what we can assume — Unlike Congress there is no high command culture in BJP– Today Amit Shah appointed Mr maurya ,state party President to pick ANY ONE yes ANY ONE as the CM and his choice will be accepted –Unfortunately he fell sick and admiited to ICU — This is where it stands now and it may take some more time —
    Rajnath Singh has denied he is in the race — Media spreads some story like this and we latch on to this —
    Mr Sidharth Nath Singh , the grandson of Lal Bahadur Sastri stands a good chance to become the CM – He was reluctant to contest but the PM urged him to contest —
    In Goa the smaller parties did not want to support Congress – One congress MLA abstained from voting and later resigned from congress —In Manipur the congress did not stake claim to form the govt and was blinking -There too the BJP was able to convince the other parties –Where do you find sin in this ?–

    • Rajaram சொல்கிறார்:

     // There should be some sense in what we can assume //

     If there is any sense in your thinking.
     you will not foolishly believe this statement –

     // Amit Shah appointed Mr maurya ,state party President
     to pick ANY ONE yes ANY ONE as the CM
     and his choice will be accepted //

     • LVISS சொல்கிறார்:

      Please wait and see -If Rajnath is chosen you can describe my comment in whichever way you want–Until then exercise restraint —

     • Rajaram சொல்கிறார்:

      Mr.Elvis,

      This is the plight of your Party
      and you are blindly arguing that
      u.p. party chief is given free hand
      in choosing the new c.m.
      (wonder how “blind bakth” you are )

      Choice of U.P. CM under wraps –

      Uttar Pradesh has been giving the jitters to contenders and their supporters. State unit chief Keshav Prasad Maurya, a front runner in the race was, on Thursday, admitted to Ram Manohar Lohia hospital with low blood pressure and attendant complaints.

      Another senior leader’s aides irritated at queries about the fate of their boss for the Chief Ministerial-ship stakes said, “Gaon basa nahin, lootere pehle aagaye (the robbers have arrived even before the village has been settled),” a comment on the fact that the name of the new Chief Minister is being held close to the chest, within a close circle .
      http://www.thehindu.com/elections/uttar-pradesh-2017/choice-of-up-cm-under-wraps/article17489017.ece

 4. LVISS சொல்கிறார்:

  Every letter by Swamy to the PM is described as black mail — We are assuming that nothing is moving in this direction because there is no running commentary —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப எல்விஸ்,

   உங்கள் வாதப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது
   என்று வைத்துக் கொண்டால், சு.சா.வை
   வாயை மூடிக்கொள்ளச் சொல்ல வேண்டியது தானே…?

   சு.சா.வை கண்டு ஏன் சகல வல்லமை பொருந்தியவர்
   நடு நடுங்க வேண்டும்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. தமிழன் சொல்கிறார்:

  சைதை அஜீஸ் பின்னூட்டம் பார்த்தவுடன் ஒன்று தோன்றியது.

  1. மற்ற இரண்டு மாநிலங்களிலும் மெஜாரிட்டி இடங்கள் இல்லை. கோவாவில் உச்ச நீதிமன்றம் உடனே வாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என்று சொல்லியிருந்தது. இங்கு முந்திக்கொள்வதுதான் நல்லது (காரணம் வேறாக இருந்தபோதிலும் இங்கு எடப்பாடி அரசு முந்திக்கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதும் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் பிரச்சனை எழாமல் முடித்துவிடவேண்டும் என்பதுதான்)

  2. உத்தரகண்டம் மற்றும் உ.பியில் பெரும்பாலான உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவசரம் தேவையில்லை. யாரைத் தலைவராக்கினால், பாராளுமன்றத் தேர்தலுக்கும் உபயோகமாயிருக்கும் என்ற long term strategy தான் காரணமாயிருக்கும். அதே சமயம், தாங்கள் COMMIT செய்ததை ஓரளவு செய்பவராகவும் இருக்கவேண்டும். QUALITY OF MLAக்களை சமாளிப்பவராகவும் இருக்கவேண்டும். (இப்போதெல்லாம் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள்தானே எம்.எல்.ஏ, எம்.பி போன்ற இடங்களுக்கு நிற்கிறார்கள்) அப்போதுதான், இப்போது வாக்களித்தவர்கள் தொடர்ந்து பாஜக பக்கமே இருப்பார்கள். அடுத்து அமைச்சரவையிலும் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி அமைச்சர்களை நியமிக்கவேண்டும். இதெல்லாம் கொஞ்சம் ஆலோசித்து முடிவு எடுக்கக்கூடிய விஷயங்கள். அதுதான் காரணம் என்று தோன்றுகிறது.

  • LVISS சொல்கிறார்:

   Mr Thamizhan I am with you on this –But how many people apply logic to their thoughts —
   One thing , I dont think that this win in UP will help in anyway in the 2019 elections –So many things can happen in between —

   • Rajaram சொல்கிறார்:

    Mr.Elvis,

    This is the plight of your Party
    and you are blindly argueing that
    u.p. party chief is given free hand
    in choosing the new c.m.
    (wonder how “blind bakth” you are )

    Choice of U.P. CM under wraps –

    Uttar Pradesh has been giving the jitters to contenders and their supporters. State unit chief Keshav Prasad Maurya, a front runner in the race was, on Thursday, admitted to Ram Manohar Lohia hospital with low blood pressure and attendant complaints.

    Another senior leader’s aides irritated at queries about the fate of their boss for the Chief Ministerial-ship stakes said, “Gaon basa nahin, lootere pehle aagaye (the robbers have arrived even before the village has been settled),” a comment on the fact that the name of the new Chief Minister is being held close to the chest, within a close circle .
    http://www.thehindu.com/elections/uttar-pradesh-2017/choice-of-up-cm-under-wraps/article17489017.ece

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  இங்கு நடவடிக்கைகள் தேவைப்படும் போது மட்டுமே எடுக்கப்படும்.
  வியாபம் என்னாச்சு ? அப்படி ஒன்று நடப்பதை மறந்து விட்டார்கள். தற்போது JMU மரண நிகழ்வுகளும் எதையோ கூறிக்கிறது. எது நடந்தால் என்ன? கூட்டல் கணக்குதான் தப்பு, நாங்கள் ஆட்சி அமைப்போம். 5 மாநில தேர்தலில் 2 வெற்றி பெற்றாலும் நாங்கள் 5ம் வெற்றி பெற்று விட்டோம் என்கிறார்கள். வெட்கமே இல்லாத சமூகம் ஆகி போனது. இங்கு நாற்காலியே முக்கியம்.

 7. LVISS சொல்கிறார்:

  Sorry – The link doesnt open According to it CBI has filed 7 cases against 1200 accused in vyapam case

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.