மாப்ளை பாஜக தான் …… ஆனா, போட்டுருக்கற சட்டை அவருதில்ல…!!!

திருவாளர் நொங்க்தொம்பம் பிரேன் சிங் அதாவது,
என்.பிரேன் சிங் ( Nongthombam Biren Singh ) – பற்றி
கேள்விப்பட்டிருப்பீர்கள்… புதிதாக பதவியேற்றிருக்கும்
மணிப்பூர் முதலமைச்சர்….

ஆனால், அவரது அரசியல் பின்னணி பற்றி அநேகம்
பேருக்கு தெரிந்திருக்காது…

16 வருடங்கள் பட்டினி கிடந்து விடாமல் போராடி கடைசியில்
போன மாதம் தேர்தலில் நின்று வெறும் 90 ஓட்டுகள்
வாங்கினாரே அந்த அப்பாவி இரோம் ஷர்மிளா-வின் மணிப்பூர்
மாநிலத்தில்-

ஹெய்ங்காங்க் (Heingang) சட்டமன்ற தொகுதியை,
கட்சிகள் மாறினாலும், 2002-லிருந்து தொடர்ந்து தக்கவைத்துக்
கொண்டிருக்கும் பிழைக்கத் தெரிந்த ஒரு புத்திசாலி…

கால்பந்து ஆட்டக்காரராக இருந்த இவர், பத்திரிகைக்காரராக
மாறி, அரசியல்வாதியாகவும் மாறியது 2002-ல்.
Democratic Revolutionary People’s Party -யில் சேர்ந்து MLA
ஆனதன் மூலம் அரசியல் பயணத்தை துவக்கியவர்,
அன்றிலிருந்து இன்று வரை அதே தொகுதியை மட்டும்
விடாமல் பற்றிக் கொண்டு, கட்சிகளை பல முறை மாற்றி –
முன்னேறி வந்தவர்.

2004-ல் காங்கிரசில் சேர்ந்தார். அப்போதைய மணிப்பூர்
முதலமைச்சர் இபோபி சிங்குடன் நம்பிக்கையூட்டும் விதத்தில்
நெருங்கிப்பழகி, அமைச்சர் ஆனார்….

2012 -ல் இவரை அமைச்சராக்கவில்லை என்றதும்,
இபோபி சிங் இவருக்கு கசந்து போனார்….இருந்தாலும்,
மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சியில் உதவி தலைவர்
பதவி கிடைத்ததால்,
தொடர்ந்து அதே கட்சியில் இருந்தார்.

அரசியல் வாழ்வில் அடுத்த ப்ரமோஷனுக்காக காத்துக்
கொண்டிருந்தவரை, (மத்திய அமைச்சர்) திருவாளர் பிரகாஷ்
ஜவடேகர் -என்கிற இழுத்தல் எக்ஸ்பர்ட் – சந்தித்தார்…
( ஞாபகமில்லையா …2014 தேர்தலின்போது, விஜய்காந்தை
பாஜகவுடன் இணைக்க இங்கே வந்து ரகசியமாக சந்தித்து விட்டு
போனாரே – அதே இழுத்தல் எக்ஸ்பர்ட் தான்…! )

பிரகாசமான எதிர்காலம் இருக்கும்
என்று சொல்லி பாஜகவுக்கு இழுத்தார் பிரகாஷ் ஜவடேகர்…

இபோபி சிங் என்ன உங்களை அமைச்சராக்குவது,
பாஜகவுக்கு வாருங்கள், உங்கள் தகுதிக்கு உங்களை
முதல் அமைச்சராகவே ஆக்குகிறோம்
என்று ஆசை காட்டினார்.. திருவாளர் ஜவடேகர்.

மணிப்பூர் மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்த
சிங், தேர்தலுக்கு சரியாக 4 மாதங்களுக்கு முன்னதாக
அக்டோபர் 2016-ல் பாஜகவுக்கு தாவினார்…..!

– அதே ஹெய்ங்காங்க் தொகுதியில்
இப்போது பாஜக சார்பில் நின்று – MLA -வும் ஆனார்.

மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள்.
எந்த கட்சிக்கும் மெஜாரிடி கிடைக்கவில்லை.
காங்கிரஸ் 28 இடங்களில் வென்று முதலிடத்தை பெற்றது.
பாஜக 21 இடங்களில் வென்று 2வது இடத்திற்கு வந்தது.

அதனால் என்ன…?
கவர்னர் பாஜகவின் திருமதி நஜ்மா ஹெப்துல்லா தானே…!
பாஜகவுக்கு ஆட்சியமைக்க சான்ஸ் கிடைத்தது.

சிறு சிறு கட்சிகளான
National People’s Party (NPP) யும்
Naga People’s Front (NFP) தலா 4 இடங்களில் வென்றிருந்தன…
21 ப்ளஸ் 4 ப்ளஸ் 4 = 29 ஆகி விட்டது.

பாஜகவின் ஜென்ம விரோதியான மம்தா தீதியின்
திரினமூல் காங்கிரசில் ஜெயித்து வந்திருந்த
ஒரே எம்.எல்.ஏ.வை ஒரே அமுக்காக அமுக்கினார்கள்…

அப்போதும் 30 தான் ஆயிற்று…
மெஜாரிடிக்கு இன்னும் ஒன்று வேண்டுமே…!
எதிரே காங்கிரசிலிருந்து, இபோபி சிங்குக்கு பிடிக்காத
ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தார் …..
அவரும் வலைவீசி பிடிக்கப்பட்டார்….!

அவர் கட்சி மாறாமலே, இன்னமும் காங்கிரஸ்காரராக
இருந்துகொண்டே திரு.பிரேன் சிங்குக்கு ஆதரவு தெரிவிக்க
ஜாம் ஜாமென்று திருவாளர் நொங்க்தொம்பம் பிரேன் சிங்
மணிப்பூரின் முதல் பாஜக முதலமைச்சர் ஆனார்…!!!

இந்த கூட்டு கதம்ப அரசில், எவருக்காவது பாஜகவின்
கொள்கைகள், லட்சியங்கள், சரித்திரம்,
தலைவர்கள் பற்றி எதாவது தெரியுமா….?

அதற்கு அவசியம் என்ன…?
எங்கே சேர்ந்தால் காசு, பணம், பதவி, பிசினஸ்
கிடைக்கும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியுமே…!

உத்திர பிரதேசத்தில், பழம்பெரும் காங்கிரஸ் தலைவி
ரீட்டா பஹுகுணாவே ஜம்ப் அடிக்கவில்லையா..?

அங்கே மட்டுமா….?
நாடு முழுவதுமே இப்போது அது தானே நடந்து
கொண்டிருக்கிறது. தமிழ் செய்தி தொலைக்காட்சிகளிலேயே
அதைப் பார்க்கலாமே. அட்ரஸ் இல்லாத மூஞ்சிகள் எல்லாம்
பாஜக சார்பாக விவாதங்களில் கலந்துகொண்டு
வீராவேசமாகப் பேசுவதை…!!!

மாப்ளை பாஜக தான் … !!!
ஆனா, … 🙂 🙂 🙂

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to மாப்ளை பாஜக தான் …… ஆனா, போட்டுருக்கற சட்டை அவருதில்ல…!!!

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  ஐயா உங்களுக்கு யாரு சொன்னது வயசாயிடுச்சு என்று?
  செம்மயா தலைப்பு வச்சிருக்கீங்க!
  சபாஷ்!!

 2. தமிழன் சொல்கிறார்:

  மணிப்பூரில் பாஜக செய்தது convincing ஆக இல்லை. இதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும். எடியூரப்பாவால் பாஜகவுக்கு கர்நாடகாவில் நேர்ந்தது இன்னும் விரைவிலேயே பிரேன் சிங் அவர்களால் பாஜகவுக்கு ஏற்படும். கோவாவிலவது மெஜாரிட்டி வாக்குகள் இருந்தன. மணிப்பூர் அப்படி இல்லை. This may be due to BJP’s long term strategy.

 3. LVISS சொல்கிறார்:

  BJP has some people who can talk to leaders of other parties and convince them — Javdekar is just one of them – In Manipur the governor waited till the Parrikar govt took over in Goa and then decided to call the BJP coalition in Manipur — The Governor was also a congress member earlier and a minister in Modi govt. –She was also the Dy Chairman of Rajya Sabha —
  The CM is not a real BJP man but he is given a BJP badge for the time being –Many legal experts did not find fault with the Governor who has to make sure that the govt he/she installs should be stable –Both in Goa and Manipur this condition was apparently fulfilled — While in Goa Congress did try to protest ,in Manipur they gave up the fight and allowed the govt to be formed – If this has not happened there will be a minority govt which will be a worse option –Manipur could have given a clear verdict for its people —
  Javdekar(Fuse Goyal to you ) became known to readers tof this blog in connection with UDAY scheme of his ministry — He was able to convince the then CM about the scheme and got the govt to join the scheme –This Manipur assignment must have been an easier task for him –
  http://www.business-standard.com/article/economy-policy/tamil-nadu-joins-uday-could-accrue-rs-22-000-crore-benefit-in-first-3-yrs-117010900242_1.html

  • இளங்கோ சொல்கிறார்:

   கே.எம்.சார் ஜவடேகரைப் பற்றி சொன்னது, பார்லிமென்ட் தேர்தலின்போது,
   மெட்ராஸ் யுனிவர்சிடி நிகழ்ச்சி என்று சொல்லி வந்து விட்டு,
   ஓஎம்ஆரில் வைத்து, திருட்டுத்தனமாக, விஜய்காந்தை சந்தித்தது குறித்து
   தான். ஃப்யூஸ் விஷயம் வேற.
   “இழுத்தல் எக்ஸ்பர்ட்” என்று சார் சொன்னதை நீங்க கவுரவமா
   // BJP has some people who can talk to leaders of other parties and convince them — Javdekar is just one of them // – அப்டீன்னு சொல்றீங்க.
   பாஜக காரங்க என்ன பண்ணினாலும் நீங்க விட்டுக் கொடுக்க மாட்டீங்களே.

   • இளங்கோ சொல்கிறார்:

    எல்விஸ் சார், ஏன் உ.பி.. சி.எம்மை தேர்ந்தெடுக்க இவ்வளவு
    திண்டாடறாங்க. மோடி சார் சொன்னா கேட்டுக்கறதில்லையா ?
    ஜெயிக்கறதுக்கு மட்டும் அவர் வேணுமா ?

    • LVISS சொல்கிறார்:

     Mr Ilango I think that they have chosen wrong the person and in the process betrayed the trust of the people –This man Yogi Adithyanath’s name was never mentioned at any time –If they had done so I am very doubtful if they would have got so many seats –BJP did not do the proper thing in choosing the Yogi as the next CM of UP—
     Adityanath has to win an election as he is a Lok Sabha MP –Could they not find one suitable person from among so many MLAs they had —

     • தமிழன் சொல்கிறார்:

      ESTABLISHED முதலைமைச்சர் வேட்பாளராக இல்லையென்றால் (ஜெ. போன்று), கட்சிக்குள் உள்குத்து தவிர்க்கமுடியாது. அதுவும் தவிர, சாதீயக் கட்டமைப்பில் இது பெரிய பிரச்சனையை உண்டாக்கும். யோகி ஆதித்யனாத்தினால் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியும் (யோகி என்பதால் அவருடைய சாதீயப் பின்புலம் பிரதானமாக வராது. இந்துத்வா என்பதுதான் வரும்) என்பதனால் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

      பாஜக உ.பியில் செயல்படுவதிலிருந்துதான் அதன் எதிர்கால வளர்ச்சி கணிக்கப்படும். COMMON CIVIL CODE, முத்தலாக், அயோத்தியாவில் கோவில் போன்றவையினாலல்ல (அவை நியாயமானதாக இருந்தபோதிலும்). சாதாரண மக்களுக்கு அவர்கள் வாழ்க்கைக்கு எந்த விதத்தில் அரசு உதவுகிறது என்பதை வைத்துத்தான். இதனை விட்டுவிட்டு, வெறும் இந்துத்துவா மட்டும் பேசிக்கொண்டிருந்தால் பிரயோசனமில்லை. முதலில் உணவு, உடை, இருப்பிடம், அதற்குப் பின்புதான் மற்ற எல்லாமும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.