ஆயிரம் உண்டிங்கு …..

ஆயிரம் உண்டிங்கு …..!!!

உலகம் பெரிது.
நமக்கோ – நம் நாடு அதைவிடப் பெரியது.
இதில் வாழும் 125 கோடி மக்களும் எம் மக்களே….
அத்தனை பேரும் எம் சகோதரரே…

“செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தை ஒன்றுடையாள் ”
-என்று பாரதி பாடியிருந்தாலும் –

நடைமுறையில் – நமது இந்தியத் திருநாட்டில் பேசப்படும்
மொத்த மொழிகள்… 1652. குறிப்பிடத்தக்க அளவில்
பேசப்படும் மொழிகள் -150. அரசியல் சட்டம்
ஆட்சிமொழியாக ஏற்றுள்ள மொழிகள் -22.

இந்தியாவில் பொதுவாக கடைபிடிக்கப்படும்
மதங்கள் – மொத்தம் -9
( Hinduism, Islam, Christianity, Sikhism, Buddhism and Jainism.
Zoroastrianism, Judaism and the Baha’i Faith )
இதில் ஹிந்து மதத்தைத்தவிர மற்ற அனைத்துக்கும்
மைனாரிடி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டை –
‘Sovereign Socialist Secular Democratic Republic’- என்று
உருவகப்படுத்தியுள்ளது….

இது நம் நாடு…
நம் அனைவருக்கும் சொந்தமான நாடு.

எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கும்
சொந்தமானது அல்ல….

மொத்தமாக செல்வத்தை குவித்துள்ள
ஒரு கூட்டத்திற்கு மட்டுமோ –

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட
மொழி பேசுவோருக்கு மட்டுமோ –

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட
மதத்தை சேர்ந்தவருக்கு மட்டுமோ –

இந்த தேசம் சொந்தமானது என்று நினைத்து
யாரேனும் செயல்பட்டால் –

அது தான் இந்த தேசத்திற்கும்,
இந்த நாட்டு மக்களுக்கும்,
இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும்
செய்யப்படும் பெரும் துரோகம்.

இந்த தேசத்தை, இதன் ஒற்றுமையை,
இதன் பன்முகத்தன்மையை
நாம் என்றும் பாதுகாப்போம்…

இங்கே ஆயிரம் மொழிகள் இருக்கலாம்…
ஆயிரம் ஜாதிகள், மதங்கள் இருக்கலாம்…
நமக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம்…

இருந்தாலும் –
“சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ” –
என்று பாரதி சொன்னதைப் போல் நம்மை
மொழியாலோ, ஜாதியாலோ, மதத்தாலோ –
பிரிக்க – எவரையும் நாம் அனுமதியோம்…

பின் குறிப்பு – இந்த தளத்தில் இடப்பட்டிருக்கும் படங்கள்
அனைத்திலும் காணப்படும் காட்சிகள், கோலங்கள் –
வயல்வெளிகளில் இயற்கையாகவே தோன்றியவை என்று சொல்லப்படுகிறது…. அதிசயமாக இல்லை…?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ஆயிரம் உண்டிங்கு …..

 1. புதியவன் சொல்கிறார்:

  ‘நீங்கள் எழுதியுள்ளது நியாயமானது. “இந்திய விடுதலை” என்ற ஒரே நோக்கு ஜாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைத்தது. அதற்குப்பின் இந்த எண்ணம் பெருமளவு சிதைந்துபோயிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

  இதன் முக்கியக் காரணமாக நான் எண்ணுவது, பாரதி சொன்னதைத்தான்.

  “ஆயிரம் உண்டிங்கு ஜாதி….. எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி”

  என்றைக்கு அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை விட்டுக்கொடுக்க நினைப்பவர்கள் பெருகிவிட்டார்களோ, அப்போதே ஒற்றுமைக்குக் கேடு விளைய ஆரம்பித்துவிட்டது. அதையே எதிர்பார்த்து, பெருமளவு அந்நிய சக்திகள், நம் நாட்டுக்கு உதவி என்ற சாக்கில் பிரிவினையைப் பெருமளவு வளர்த்துவிட்டது.

  படங்கள் நல்லா இருக்கு. ஆனால் நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தேசபக்தி, தேசபக்தி என்று சொல்லிக்கொண்டே
  தேசத்திற்கு விரோதமான வேலைகளைச்
  செய்கிறார்கள் பாஜக /ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

  நாட்டில் ஒரு பிரிவு மக்களுக்கு எதிராக
  மற்றொரு பிரிவு மக்களை தூண்டி விட்டுக் கொண்டே
  இருந்தால் நாட்டில் அமைதி, முன்னேற்றம் ஆகியவை
  எப்படி வரும் ?

  தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டுமானல்,
  இந்த தந்திரம் உதவக்கூடும். ஆனால்
  அதற்காக, நாட்டில் அமைதியின்மை என்கிற
  மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
  இது நாட்டிற்கு நல்லதல்ல.
  ஆனால் வெற்றி போதையில் மிதந்து
  கொண்டிருப்பவர்களுக்கு இது ஏற்புடையதாக
  இருக்காது.

  -காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   In how many BJP ruled states have you heard of communal riots like you saw in UP –In all likelyhood UP mayl also become a more peaceful state under Adityanath who is said to run several schools and manages a 350 bed hospital that is open for all irrespective of caste and religion —

   • LVISS சொல்கிறார்:

    Mr KM why you have not written about anything about the video I have attached to my comments –This video demolishes the image that was sought to be created about Adityanath and BJP —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப எல்விஸ்,

     உங்கள் வயதுக்கும், தெளிவுக்கும் –
     இதை அறியாமை என்று கூற முடியாது.
     ஆனால், கட்சி பாசம் உங்கள்
     கண்களையும் அறிவையும் கட்டுகிறது என்று கூறலாம்.

     4 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் எத்தனை பேர்
     இருக்கிறார்கள்… அதில் எத்தனை அரை டிக்கெட் என்று
     கொஞ்சம் எண்ணிப்பாருங்களேன். easy தான்….

     இவர்கள் தான் 22 கோடி உத்திர பிரதேச வாசிகளின்
     representatives என்று நீங்கள் நம்பியதோடு அல்லாமல்
     மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்களே…

     பாவம் இதை சொல்லி உங்களை வருத்தப்படச்செய்ய
     வேண்டாம் என்று நினைத்தால், விடாமல் என் பதிலை
     கேட்கிறீர்கள். இப்போது திருப்தியா… 🙂 🙂

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   அன்புள்ள கா.மை. சார்,

   உங்கள் கூற்றில் உண்மை உள்ளது. AWARENESS வேறு, தூண்டிவிடுவது வேறு. காங்கிரசும், திமுகவும், பின்பு சாமஜ்வாதியும் பகுஜன் கட்சிகளும், மைனாரிட்டி, மைனாரிட்டி என்று சொல்லி எப்படி மைனாரிட்டிகளுக்குச் சலுகையும் அவர்கள் செய்கின்ற எந்தத் தவறுகளையும் தேச விரோதச் செயல்களையும் பயங்கரவாதத்தையும் கண்டுகொள்ளாமல் ஓட்டுக்காக எப்படி மக்களைப் பிளவுபடுத்தினார்களோ அதே ஆயுதத்தை பாஜக கையில் ஏந்தியிருக்கிறது. அத்வானி கோவைப் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது, அமைதி மாநிலம் என்ற பிம்பத்தின் உண்மை சுவரூபம் தெரிந்ததா இல்லையா? அதனை, அந்த பயங்கரவாதத்தை கருணானிதி கண்டித்தாரா? எந்த கட்சியும் கண்டித்ததா? (மதச்சார்பு, சிறுபான்மை இனத்துக்கான கட்சிகள் என்று எதுவும்)

   வெறும் ஓட்டு என்பதற்காக, ‘இந்து என்றால் திருடன்’ என்று இந்துக்களின் தேசத்தில் கருணானிதியால் பேசமுடியுமென்றால், பாஜக செய்வதை எப்படி மக்கள் எதிர்ப்பார்கள்? அவர்கள், இந்துக்களைக் காக்க அல்ல, அவர்களுக்காகப் பேச வந்தவர்கள்.

   எது தேச பக்தி? பிற நாட்டினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்காக, மத மாற்றம், மதத்தைப் பரப்பும் திட்டங்கள் என்று திட்டமிட்டுச் செயல்படுவது தேசபக்தியா? என் இனம் என்று சொல்லிக்கொண்டு வெளி’நாட்டினருக்காகப் பரிந்து பேசுவது தேச பக்தியா? இன்றைக்கு பாஜக இந்துக்களுக்காக மட்டும் பேசவில்லை. அவர்கள் இந்திய நாட்டுக்காகப் பேசுகிறார்கள். பாஜகவின் தலைமையில் இந்துக்கள்தான் அச்சமில்லாமல் இருக்கிறார்கள்.

   எப்போதும் வலிமையானவன், பெரும்பான்மையானவன் தான், அடங்கிப்போகவேண்டும், அதுதான் சச்சரவைத் தடுக்கும் என்பது பொதுக்கருத்து. ஆனால், பாஜக போன்றதொரு கட்சி இல்லையென்றால், வலிமை, பெரும்பான்மை என்பதே அழிவுக்குள்ளாகிவிடும். LOOKS LIKE RADICAL VIEW. ஆனால், இது சரியான கணிப்பு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

   நீங்களும் இருந்து பார்க்கத்தான் போகிறீர்கள் (அதற்கு 15-20 வருடங்கள் ஆனாலும்), பாஜக தமிழ்நாட்டில் பெரிய கட்சியாக வளரும். அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. வளரும்போதே ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி நம்பிக்கையின்மையை அதிகரிக்கின்றனார். ஆனாலும் பாஜக விரைவில் வளரும். இப்போதிருக்கும் கட்சிகளின்மேல் மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. ஜெ. வேறு இல்லை. பாஜகவுக்குச் சரியான இடம் களத்தில் இருக்கிறது.

  • சந்திரசேகரன். வெ.க சொல்கிறார்:

   ஏதோ பிஜேபி தான் இன்று நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது போல் உள்ளது உங்களது பதிவு. நாட்டையும் மக்களையும் மத இன சாதி ரீதியாக வேறுபடுத்தி அரசியல் செய்வது என்பது இந்திரா காலத்திலேயே துவங்கிவிட்டது.அதன் நீட்சிதான் இன்று பிஜேபி செய்வது.சமூக நீதி பேசும் முற்போக்கு அரசியல் சக்திகளாக பொதுவெளியில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தேர்தல் களத்தில் மத இன சாதீய அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தும் திராவிட கட்சிகளை என்னவென்பது. ஆன்மீகவாதிகளை அரசியலிருந்து விலக்க வேண்டும் என்றால் பேராயர் எஸ்ரா சற்குணம் ஜும்மா மசூதி இமாம் போன்றவர்களுக்கும் அது பொருந்த வேண்டுமல்லவா. மேலும் கோவா மற்றும் மணிப்பூர் மாநில நிலவரத்தை பொறுத்தவரை பிஜேபி மட்டுமல்ல இன்று காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்திருந்தால் அவர்களும் இவ்வாறு தான் நடந்திருப்பார்கள். நமது அனைத்து நோய்களுக்கும் ஒரே மாத்திரை என்ற நிலையில் பிஜேபி இல்லை என்றாலும் வரும் நோய்கள் அனைத்திற்கும் பிஜேபி தான் காரணம் என்றும் கூறமுடியாது.

 3. M. செய்யது சொல்கிறார்:

  பதிவு மற்றும் படமும் அருமை. 100 சதவிகிதம் தங்களுடன் உடன்படுகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது இந்தியாவின் பலம் ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியை கொண்டு அரசியல் செய்யும் அவலம் தான் இங்கு உள்ளது. துவேசமாக பேசுவதையே வழக்கமாக கொண்டவரை ஒரு பெரிய மாநிலத்திற்கு முதலமைச்சராக்கி உள்ளார்கள். நம் நாடு எங்கோ செல்கிறது? அதன் பலனை வரும் காலங்களில் நாமும் நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டுமே என்ற கவலைதான் உள்ளது!!!!! கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.

  M. செய்யது
  Dubai

 4. vignaani சொல்கிறார்:

  சரியாக இருப்பது ஒன்று; சரியாக இருப்பது போல் காணப்படுதல் மற்றொன்று. பா.ஜ .க இரண்டாவதில் நிச்சயம் தவறி விட்டது, யோகியை முதல் மந்திரி ஆக்கியத்தில். (1) ம.பி.யில் உமா பாரதி இடத்தில சிவாஜி சவுஹானை அமர வைத்து நிர்வாகத்தை திறம் பட செய்தது போல கொஞ்ச நாட்களில் யோகியை மாற்றலாம்.
  (2) யோகி வானர சேனா போன்ற சேனைகளை அடக்கி வைப்பதில் வெற்றி பெறுவார்; சிறு பான்மையின பயங்கரவாதிகளும் ஓரளவு அச்சத்திலேயே இருப்பர். பெரிய ஆபத்துகளை தவிர்க்கலாம். குஜராத்தில் மோடி முதல் அமைச்சராக இருந்த போது மதக் கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை; இரு பக்கமும் வாலை ஆட்டவில்லை. யோகி தொடர்ந்தால், முதல் அமைச்சராக இருப்பதன் கனத்தை உணர்ந்து, படம் எடுத்தாலும்தீண்டாத நாகம் போன்று ஆட்சி புரியலாம். .

 5. selvarajan சொல்கிறார்:

  // ஒரு ‘ஐ போன்’ வாங்கும் விலையில், மின்சாரம் வழங்கக்கூடிய ‘காற்றாலை’-ஐ உங்கள் வீட்டிற்கு வாங்கலாம்..! //
  Read more at: http://tamil.goodreturns.in/news/2017/03/17/for-the-cost-an-iphone-you-can-now-buy-wind-turbine-your-home-007347.html என்ன ஒரு அருமையான திட்டம் – செயல் – மக்களின் அத்தியாவசியம் அறிந்த இவர்களுக்கு — நமது வாழ்த்துக்களும் – வணக்கமும் … மேலும் அறிய :– // Kerala brothers create low-cost wind turbine to make renewable energy affordable for all // https://yourstory.com/2016/06/low-cost-wind-turbine/

  கழிசடை அரசியல்வாதிகள் எதை எதையோ இலவசமாக கொடுப்பதை விடுத்து — பாதி மானிய விலையில் இந்த வசதியியை கொடுத்தால் ” வீட்டு மின்சார ” தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும் … செய்ய முனைந்தால் அவர்களின் கொள்ளையில் துண்டு விழுந்து விடும் என்பதால் கண்டு கொள்ள மாட்டார்கள் தானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நல்ல, பயனுள்ள தகவலை தந்திருக்கிறீர்கள்.
   மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  ஐயா இந்த படங்கள் அனைத்தும் தானாக உருவானவை அல்ல மேலும் இது பற்றி முன்பே சில தகவல்களை வாசிக்க நேர்ந்தது இவை அனைத்தும் ஏலியன்ஸ்களால் உருவாக்கபட்டது எனும் கருத்து பரவலாக காணப்படுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஜிஎஸ்ஆர்,

   நீங்கள் சொல்வது உண்மை தான்.
   படங்களுடன் வெளியான கட்டுரையும்
   இப்படித்தான் சொல்கிறது….
   ஆனால், உண்மையான காரணத்தை இதுவரை
   யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  இந்த படங்கள் அனைத்தும் சாதரணமாக பார்க்க முடிவது இல்லை, பல கிலோமீட்டர் உயரத்தில் இருண்டு மட்டுமே இந்த படத்தை முழுமையாக பார்க்கவே முடியும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.