எங்கேயோ, எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறதா…?

இந்த தகவல் இன்றைய இளைஞர்களுக்காக –

All India Radio – அகில இந்திய வானொலி நிலையம் –
பல ஆண்டுகளுக்கு முன் தினமும் காலை 6 மணிக்கு தான்
தனது ஒலிபரப்பை துவங்குவது வழக்கம்.

ஒலிபரப்பை துவங்கும்போது, தினமும் இந்த இசையோடு
தான் (signature tune) துவங்கும்….

சிறு வயதில், வருடக்கணக்காக, காலையில், 5.50-க்கே
ரேடியோவை ஆன் செய்து விட்டு, இந்த சப்தம்
வருவதற்காக தவம் கிடந்தது நினைவிற்கு வருகிறது.

இதனுடன் இணைந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் –
இதை கம்போஸ் செய்தவர் ஒரு யூதர்….!
ஆம் 1936-ல் AIR -ல் டைரக்டராக பணி புரிந்து வந்த
Walter Kaufmann என்பவர் முதன் முதலில் இசையமைத்தது
தான் இந்த ட்யூன். கர்நாடக /ஹிந்துஸ்தானி “சிவரஞ்சனி”
ராகத்தை அடிப்படையாக கொண்டது என்பது இன்னுமொரு
விசேஷம்…. சுதந்திரத்திற்கு பிறகு, இதன் பின்பகுதியாக
“வந்தேமாதரம்” இணைக்கப்பட்டது….

என்னவொரு இனிமை ….
என்ன இருந்தாலும் OLD is GOLD தானே…?

இதன் கூடவே தொலைக்காட்சியின் (தூர்தர்ஷனின்….)
ஸ்பெஷலாக, இன்றைய சூழ்நிலையில்,
நாம் மீண்டும் நினைவுபடுத்திக்
கொள்ள வேண்டிய ஒரு பாடல் /காட்சி –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to எங்கேயோ, எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறதா…?

 1. tamilpani சொல்கிறார்:

  மிக்க நன்றி நண்பரே.

 2. தமிழன் சொல்கிறார்:

  ஒரு டியூன்/பாடலைக் கேட்டவுடன் அந்தக் காலத்துக்கே மனது உடனே செல்வது எப்படி என்று எப்போதும் எண்ணியிருக்கிறேன். எதேச்சையாக, ‘இளமை எனும் பூங்காற்று’, ‘ஒரே நாள் உனை நான்’, ‘செந்தூரப்பூவே’ போன்ற பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் நான் 9ம் வகுப்பு படித்த சூழ்’நிலைக்குச் சென்றுவிடுவேன்.

  அந்த உணர்வை ரேடியோ டியூன் கொடுத்தது. எத்தனைமுறை சிறுவயதிலிருந்தே கேட்டிருக்கிறேன். தொலைக்காட்சியின் இந்தப் பாடலைக் கேட்டதில்லை (ஆனால் செய்திகள் வாசிப்பதற்கு முன்னால் உள்ள டியூன் மனதில் நிற்கிறது). வித்தியாசமான பதிவு.

  BY THE BY, KAUFMANN – இவர் ஜெர்மானியரா? யூதராக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியாவிலேயே நிறைய யூதர்கள் தங்கிவிட்டு இதனையே தங்களது நாடாக வாழ்ந்துவருகின்றனர்.

  • Sundar Raman சொல்கிறார்:

   ஆஹா ..இளமை எனும் பூங்காற்று ….. என்ன நான் PUC ..நீங்கள் 9 ஆம் வகுப்பு ..நீங்களும் துபாய் தான் என நினைக்கிறேன் … அப்படியானால் அடுத்த மாதம் சீதா கலயாணத்தில் சந்திக்கலாம்

   கா மை சார் …நல்ல பதிவு . நானும் ஒரு இசை ரசிகன் ( வெறியன்) … கணக்கு வழக்கு இல்லாமல் கேட்பேன் . டி.எம் . கிருஷ்ணாவின் கரகரப் பிரியா …. சக்கனி ராஜா சில ஆயரம் முறை கேட்டிருப்பேன்.

 3. selvarajan சொல்கிறார்:

  // 40 முறை நிராகரிப்பு… பெயர் காரணமாக வேலை கிடைக்காமல் திண்டாடியவர்! // http://www.vikatan.com/news/india/84124-this-man-was-rejected-by-companies-because-of-his-name.html என்ன கொடுமை இந்த நாட்டில் — இன்னும் என்னென்ன நடக்குமோ … இது போன்ற பெயர்களை வைக்காதீர்கள் என்று ஒரு சட்டம் போட்டாலும் ஆச்சர்யமில்லை — இல்லையென்றால் இந்தந்த பெயர்களை தான் வைக்கலாம் என்று ஒரு வரைமுறை வகுத்து விடுவார்கள் .. அப்படித்தானே …? எங்கேயோ, எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிற ” கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ” என்பது வெட்டி பேச்சாகி விடுமோ ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   அரசியல்வாதிகளின் பெயரை பிள்ளைகளுக்கு சூட்டுவதில்
   உள்ள பெரிய பிரச்சினையே இது தான்.
   பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது புரிவதில்லை.
   ஆர்வக்கோளாறு – தங்களுக்கு பிடித்த பெயரை வைத்து
   விடுகிறார்கள். (மு.க.ஸ்டாலின் இல்லையா…?)

   அந்த அரசியல்வாதி செல்வாக்கு இழக்கின்றபோது
   அல்லது மக்கள் விரோதியாகிற போது –
   இந்த பிள்ளைகள் திண்டாட வேண்டி இருக்கிறது.

   பாவம், இவர் தந்தை சதாம் ஹுசேன் பெயரை
   பிள்ளைக்கு சூட்டும்போது அவர் பெரிய ஹீரோவாக இருந்தார்….

   பின்னால்….?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. LVISS சொல்கிறார்:

  Mr K M thank you Afrer some gap a subject close to my heart –I have some basic knowledge of ragas and western scales — Let me put my bit on this Sivaranjini raga and bore you — I would like to be corrected if I am wrong —
  Sivaranjani is a pentatonic minor scale ( only 5 notes of the scale are used ie notes 123 56 ) based on Kharaharapriya (Dorian Mode in western music) –In Hindi the following songs are based on this raga Jane kahan from Mera naam joker and Kahin deep jale form Bees Saal Baad -In Tamil En Rasavin manasile and Adi Athadi are based on this —
  Another interesting thing is that if you use the same 12356 notes of Sankaraparanam ( natural major scale in western) you get the pentatonic major raga Mohanam —
  Sivaranjani and Mohanam differ in the third note used Ie Ga–In western these can be denoted like this
  CDEGA (Mohanam) CDEbGA(Sivaranjani) -So theoretically, if you flatten the third note of Mohanam (a pentatonic major scale ) you get Sivaranjani (a pentatonic minor scale)
  CDEGA is Sa RiGaPaDa ( Ma ie F and Ni ie B are left out )—
  Again, I would like to be corrected on this by more knowledgible persons–

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Sorry Mr.Elvis….

   எனக்கு நல்ல சங்கீதத்தை ரசிக்க மட்டுமே தெரியும்.
   சங்கீத ஞானம் சுத்தமாக கிடையாது.
   ஏதோ, சில ராகங்களை மட்டும் கண்டுபிடிக்க முடியும்..
   அவ்வளவே….

   நீங்கள் சங்கீதத்தில் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பது
   ஆச்சரியமான விஷயம் தான். முறையாக கற்றுக் கொண்டீர்களா ..?
   எப்படி உங்களுக்கு இதில் interest, involvement வந்தது…?

   சாதாரணமாக நான் யாரையும் கேட்பது இல்லை –
   அது நாகரிகம் இல்லை என்பதால்……Anyway உங்களிடம்
   கேட்கத்தோன்றுகிறது – உங்கள் professional back ground என்ன..?
   சொல்லலாம் என்றால் சொல்லுங்களேன்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M I am also not well versed in theoretical music — Unless some one tells me I will not be able to say on which ragam a song is based -But I can write a little about ragas and scales once I know the ragam or scale in which the song is based —
    I started playing mouth organ from 5th standard — This lasted upto my school final -After graduation and getting a job I learned to play guitar and was a rhythm guitarist for one of those umpteen western instrumental groups in Madras for about 7 years -(a western instrumental group normally will have three guitarists- rhythm , lead and bass and a drum-This was enough to produce good music) –This was interrupted after marriage and promotion in my career — For a long time I had no connection with playing music on stage –After retirement I wanted to learn some theory of music –My music master is a professional playing for Tamil music directors -He teaches many instruments to his students ( He must be assistant music director by now) Talking to him and observing him I learnt to play key board and picked some basics on scales –That also got cut off as he moved away from my place– But my brief association with him taught me so much about music — Going through some music books I learnt something about scales and ragas and how they are connected -Nowadays, when I get bored I play a few songs on the key board for half an hour just to keep in touch–
    Finally, one person I am “extremely jealous” of in music is my grandson who is learning piano from a master as he can play from a music chart —
    I have this crooked habit of connecting tamil song or hindi songs to some western numbers -For example there was an old song by CK Balasaraswathi ‘Jathi malar venduma” -This song has a canny resemblance to a song “No more ” by Elvis Presley –
    There is a song ”In the Summer time ” (there is a tamil song which resembles this song )which is based on the notes of sivaranjini /pentatonic minor–
    If you can listen to this you can perceive the resemblance to a tamil song

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப எல்விஸ்,

     உங்கள் இசை ஆர்வம் எனக்கு புரிகிறது…
     பெரும்பாலும், western classical ஐ அடிப்படையாக வைத்து
     தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

     மெலோடி – எங்கே இருந்தாலும், அனைவரையும் \
     கவரக்கூடிய ஒன்று….

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • LVISS சொல்கிறார்:

      Mr K M my familiarity is more with westrn pop(popular) music than classical music .Western classical music is as complex as our carnatic music — Western classical wont get into my head —
      You havent commented about the clip I attached to my comment –The tamil movie clip link is below Listen to both and you will find similarity

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப எல்விஸ்,

      அந்த க்ளிப் நன்றாக “ஒரிஜினாலிடி”யோடு இருந்தது.
      உள்ளத்தை அள்ளித்தா வுக்கான பின்புலம் எது என்பதும்
      தெரிய வந்தது. நீண்ட நாட்களுக்கு முன் இந்த படம் பார்த்திருக்கிறேன்.
      ஆனால், இந்த பாடல் என் நினைவில் இல்லை.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 5. NS RAMAN சொல்கிறார்:

  Nice post

  Time to remember
  Chennai radio station Tamil news readers Mr selvaraj, padbanabhan Mrs jaya Balaji Delhi Aksahvani news reader saroj Narayan swami.

  Memorable voices and stylish and perfect Tamil prononunciation. Any old recordings please share with readers

 6. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! 21-ம் தேதி ” உலக காடுகள் தினம் ” கொண்டாடப்படுகிறது …. கொண்டாட்டத்தோடு நிறுத்தி — சம்பிரதாயத்துக்கு மரக்கன்று நடும் விழாவில் கையில் மண் படாமல் புகைப்படத்துக்குச் சிரிக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே மதிப்பு உண்டு. .. என்பது அனைவரும் அறிந்த நிலையில் ….

  தனிப்பட்ட ஒரு மனிதன் தன முயற்சியால் — கடின உழைப்பால் ஒரு காட்டையே – அதுவும் 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு தீவில் உருவாக்கிய செயலுக்கு அனைவரும் தலை வணங்கி பாராட்ட வேண்டுமல்லவா … ! அந்த தனி மனிதனின் மனதின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் கூறும் எளிமையான வழி ” அரசாள்பவர்களின் ” காதுகளில் விழுந்தால் எவ்வளவோ நன்மை அந்த செய்தி : // இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளில் பசுமையாக மாற்ற ஒரு திட்டத்தையும் ஜாதவ் முன் வைக்கிறார். ‘ஒவ்வொரு மாணவனும் இரண்டு மரக்கன்றுகளையாவது நட்டு, முறையாகப் பராமரித்து வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் வருட இறுதியில் தேர்ச்சி எனக் கட்டாயமாக அறிவிக்க வேண்டும். இது கடுமையானதாகத் தோன்றலாம். ஆனால், வருங்கால சந்ததியினர் சுவாசிக்க ஆக்சிஜன் வேண்டும் அல்லவா!’ // என்ன ஒரு தன்னலமற்ற விருப்பம் … !!

  இது பற்றியும் – அந்த ” மா மனிதரை ” பற்றியும் தெரிந்துகொள்ள :– //
  1 மனிதர்…36 ஆண்டுகள்…1360 ஏக்கர் காடு…சபாஷ் ஜாதவ் பேயங்..! // http://www.vikatan.com/news/coverstory/84222-this-man-has-created-forest-of-1360-acres-in-36-years.html சொடுக்குங்கள் …. !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நல்லதொரு கட்டுரையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. Peace சொல்கிறார்:

  பழைய நினைவுகள். இந்த இசையைத் தொடர்ந்தது பாமாலை அல்லது பக்திப் பாடல்கள் என்று. நினைவு . திரைப்படங்களில் இடம் பெறாத பாடல்கள். எழுந்திரு என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை. தேனினி மயிலும் என்ற கிருஸ்துவப் பாடல் நினைவுக்கு வருகிறது. யார் பாடியிருப்பார் என்று இணையத்தில் தேடினால் பி சுசீலா என்று வருகிறது. அவர் பாடியதிலேயே ஒரு மிகவும் இனிமையான பாடல்.

  இந்த இசை, வாசல் பெருக்கும் சத்தம், சாணி தெளிக்கும் சத்தம், பறவைகளின் சத்தம், மறக்க முடியாத பழைய நினைவுகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.