அந்த பாண்டிச்சேரி நாட்கள்….!!!

பாண்டிச்சேரியோடு என் சகவாசம் நீண்டநாளுக்கானது…
இனிமையான அனுபவங்கள்….
பாண்டிச்சேரி பீச், மணக்குள விநாயகர் ஆலயம்
அரவிந்தர் ஆசிரமம், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு
என்று நேர் நேராக தெருக்கள்….
பட்டாணிக்கடை மூலை,
பிஸியான டூப்ளே ஸ்ட்ரீட் India coffee house,
கிழக்கு நோக்கி எந்த தெருவில் நடந்தாலும், நேராக
பீச்சில் கொண்டு போய் விடும் நேரான தெருக்கள்….
எக்கச்சக்கமான சினிமா தியேட்டர்கள்…

ஆனால், கடைசியாக நான் பாண்டிச்சேரி சென்றே
பல வருடங்களாகி விட்டது.

1960-களில் என் அம்மா,அப்பா, தம்பி,தங்கை எல்லாரும்
பாண்டிச்சேரியில் இருந்தார்கள். நான் பணி நிமித்தமாக
எங்கெங்கோ இருந்தேன். ஆனால், அவ்வப்போது, அவர்களைப்
பார்க்க பாண்டிச்சேரி போய் வருவேன்… இடையில் சில மாதங்கள்
தொடர்ந்தும் இருந்தேன்…

அப்போதெல்லாம் அது மிகச்சிறிய ஊர்…
ஊரின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு
நடந்தே போய் விடலாம். மிஞ்சி மிஞ்சிப்போனால்
3 கி.மீ.இருக்கும்… அவ்வளவு தான்…
இப்போது ஊர் எக்கச்சக்கமாக பரந்து விரிந்து விட்டது….

பாண்டிச்சேரியின் பின்னணி வித்தியாசமானது…
சற்று விசித்திரமானது….

இந்தியாவின் மற்ற பகுதிகள் பிரிட்டனின் காலனியாக
இருந்தபோது, பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் காலனியாகவும்,
கோவா போர்ச்சுக்கீஸ் காலனியாகவும் இருந்தன..

1947 ஆக்ஸ்டில், இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை
பெற்றபோது இந்த இரண்டு காலனிகளும் விடுதலை
பெறவில்லை…

போர்ச்சுக்கீஸ், கோவாவை விட்டு அகல மறுத்து விட்டது.
இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தது.
போர்ச்சுக்கல் ஒத்துழைக்கவில்லை. இறுதியில்
பேச்சு வார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில்,
இந்திய ராணுவம், டிசம்பர் 1961-ல் வலுக்கட்டாயமாக
கோவாவிற்குள் நுழைய, மூன்றே நாட்களில் போர்ச்சுக்க்கல்
சரணடைய வேண்டியதாகி விட்டது.

பாண்டிச்சேரியில் நிலைமை வேறு மாதிரி. ப்ரெஞ்ச் அரசு நேரடியாக சுதந்திரத்தை மறுக்கவில்லை… ஆனால் அதை பாண்டிச்சேரி மக்களின் விருப்பத்திற்கு விட்டு விடுவதாகச்
சொல்லி தப்பித்துக் கொண்டது.

பாண்டிச்சேரியில் ப்ரெஞ்சு அரசுக்கு ஆதரவாக, French India
Socialist Party, என்கிற ஒரு பெரும்பான்மை கட்சி,
இயங்கி வந்தது. அவர்கள் தாங்கள் பிரான்சுடன் தொடர்ந்து
இணைந்திருப்பதையே விரும்புவதாக அறிவித்தனர்.
இந்த கட்சிக்கு எட்வர்ட் குபேர் தலைமை தாங்கினார்….

அதற்கு காரணங்களும் இருந்தன. பாண்டிச்சேரி மக்களுக்கு
ஃப்ரான்ஸ், பிரெஞ்ச் குடியுரிமை அளித்திருந்தது. அவர்கள்
சகஜமாக ஃப்ரான்ஸ் போய் வர முடிந்தது. பாண்டிச்சேரி
மக்கள் நிறைய பேர் ஃப்ரென்ச் ஆர்மியில் சேர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. 35 வயது
ஆனாலேயே ராணுவத்திலிருந்து முழு பென்ஷனுடன்
ஓய்வு பெற்று விடலாம்…. பென்ஷனாக நல்ல தொகை…
இந்த சலுகைகளை எல்லாம் விட்டு விட அவர்களுக்கு
மனம் வரவில்லை. இந்திய சுதந்திர போராட்டத்தின்
விளைவுகள் அவர்களை ஈர்க்கவில்லை.

ஆனால், இன்னொரு பிரிவான பாண்டிச்சேரி தொழிலாளர்
வர்க்கம், அங்கிருந்த மூன்று பருத்தி ஆலைகளையே
நம்பி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தது….
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே அவர்கள்
வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலையில் இருந்தது.
அவர்களின் நலனை காக்க கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக
போராடி வந்தது. தனியார் முதலாளிகளிடம் இருந்த
இந்த மில்களில் கடுமையான வேலை நேரங்கள்.
மிகக்குறைந்த சம்பளம்… கட்டுப்பாடுகள்…

கம்யூனிஸ்ட் கட்சியினர் பாண்டிச்சேரி ஃப்ரான்சிலிருந்து
விடுபட்டு சுதந்திர இந்தியாவுடன் சேருவதையே விரும்பினர்.
1930-களிலேயே அவர்கள் ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து
குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்கிற
முகமூடியின் கீழ் ப்ரெஞ்ச் அரசு சுதந்திர கோரிக்கையை
மறுத்து வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டத்தை துவங்கியது.
இந்த இயக்கத்தை தோழர் வி.சுப்பையா தலைமை தாங்கி
நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.
சுப்பையாவின் தலைக்கு விலை பேசப்பட்டது….
சுப்பையா தலைமறைவாகி, இயக்கத்தை தொடர்ந்து
நடத்தினார்…..

அந்த சமயத்தில் சுப்ரமணிய பாரதி, ஆங்கில அரசின்
கைது வாரண்டிலிருந்து தப்ப, பாண்டிச்சேரியில் தஞ்சம்
புகுந்திருந்தார்…..

ஏற்கெனவே இந்தியா பத்திரிகையை பாண்டிச்சேரியிலிருந்து
வெளியிடத்துவங்கி இருந்தார் பாரதி.

பாண்டிச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளை
ஆதரித்து தொழிலாளர்களின் நலனை முன்வைத்து “சுதந்திரம்”
என்கிற பெயரில் பாரதி ஒரு பத்திரிகையை நடத்தினார். அந்த
பத்திரிகையும் ஃப்ரெஞ்ச் அரசால் தடை செய்யப்பட்டது. மில்
தொழிலாளர்கள் ரகசியமாக அதை வாங்கிப் படித்தனர்….

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாண்டிச்சேரியிலும்
கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கம் தெரியத் துவங்கியது.
சுதந்திர கோரிக்கை தீவிரம் அடைந்த நிலையில்,
இந்திய அரசும் அதற்கு ஆதரவு கொடுத்தது.
ஃப்ரென்சு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
நிலைமை மாறுவதை உணர்ந்து கொண்ட ஃப்ரென்ச் ஆதரவு
கட்சியினர் தங்கள் நிலையையும் மாற்றிக்கொண்டனர்.
எட்வர்ட் குபேர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்…

பாண்டிச்சேரி இறுதியாக 1954, நவம்பர் 1 – முதல் சுதந்திரம்
பெற்று, இந்தியாவுடன் இணைந்தது. 1954-லேயே
நடைமுறையில் அமலுக்கு வந்து விட்டாலும், எட்டு
ஆண்டுகள் கழித்து, மே, 1962-ல் தான் ஃப்ரெஞ்ச்
பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
அதிகாரபூர்வமாக அக்டோபர், 1962-ல் இந்தியாவுடன் இணைப்பு
அறிவிக்கப்பட்டது.

இதில் பரிதாபம் என்னவென்றால் – சுதந்திரத்திற்காக
முழு மூச்சுடன் ஆயுதம் ஏந்தி போராடிய கம்யூனிஸ்ட்
தலைவர் சுப்பையா – கடைசி வரை ஆட்சிக்கு வரவே இல்லை. எதிர்க்கட்சி தலைவராகவே இருந்தார்….

அந்த காலகட்டங்களில், பாண்டிச்சேரியில் இரண்டே கட்சிகள்
தான். காங்கிரஸ் -கம்யூனிஸ்ட்….

காங்கிரசில் சேர்ந்த குபேர் சில காலம் பாண்டிச்சேரி
முதலமைச்சராக இருந்தார். குபேர் அவர்களைப் பற்றி
சில வரிகளாவது இங்கே சொல்லியே ஆக வேண்டும்…
( நான் நிறைய தடவை அவரை மிகஅருகிலிருந்து
பார்த்திருக்கிறேன்….. ரசித்திருக்கிறேன்…!!!)

மிகவும் பாப்புலரான ஆசாமி குபேர்.
பொது மக்கள் அவரை மிகவும் விரும்பினர்.

ஆசாமி செக்கச்செவேலென்று பரங்கிப்பழம்
மாதிரி இருப்பார். ( இவரது தந்தை பிரென்சுக்காரர்…
தாய் இந்தியர்…) எப்போதும் சிரித்த முகம்.
எல்லாரிடமும் சகஜமாகப் பழகுவார்.

சில சமயங்களில், பாண்டிச்சேரியின் முக்கிய கடைவீதியாகிய
டூப்ளே ஸ்ட்ரீட்டுக்கு வருவார். அங்கே இருக்கும் ஏழை,
எளியவர்கள், ரிக்ஷாகாரர்கள் எல்லாரும் அவரை சூழ்ந்து
கொண்டு விடுவார்கள்…. அவர் எல்லாரிடமும் சகஜமாக
பேசிக்கொண்டே பாக்கெட்டில் கையை விட்டு (வெள்ளை
அரை ஜிப்பா அணிந்திருப்பார்…) கிடைக்கிற நோட்டுகளை
கத்தையாக எடுப்பார். அங்கே இருப்பவர்கள் எல்லாருக்கும்
எண்ணாமலே கொடுத்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில்
ஜிப்பாவின் இரண்டாவது பாக்கெட்டிலும் கரன்சி இருக்கும்.
அதையும் எடுத்து கொடுத்துக் கொண்டே இருப்பார்.
முழுவதும் தீரும் வரை கொடுத்துக் கொண்டே இருப்பார்….

வள்ளல் என்றால், நான் நேரில் பார்த்த நிஜ கொடை வள்ளல்
அவர் தான்…. அதெல்லாம் குபேர் காலத்துடன் தீர்ந்தது…

இன்னமும் நிறைய எழுதலாம். ஆனால் இடுகை ஏற்கெனவே
நீண்டு விட்டது. இருந்தாலும் இரண்டு விஷயங்களை மட்டும்
சொல்லிவிட்டு முடித்து விடுகிறேன்….

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த நேரம் அது.
ஒவ்வொரு சனிக்கிழமை மாலையானதும், மெட்ராசி’லிருந்து “குடிமக்கள்” வந்து பாண்டிச்சேரியில் குவிந்து விடுவார்கள்.
பாண்டிச்சேரியில் மேலண்ட புல்வார் ஒரு முக்கியமான தெரு.
வெளியூரிலிந்து வருபவர்களுக்காக –
அந்த தெருவில் நிறைய கைகாட்டி’கள் இருக்கும்…
அதில் என்ன எழுதப்பட்டிருக்கும் தெரியுமா…?

“கள்ளுக்கடைக்கு போகும் வழி — ”
கடைக்கு அருகே நெருங்கியதும் “இதோ கள்ளுக்கடை”…!!!

இன்னொரு விசேஷம் – மேலண்ட புல்வாரில் ஒரு ஒண்ணரை
கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக 8 சினிமா தியேட்டர்கள்…!
அப்போதெல்லாம் ஏ.சி. கிடையாது. தியேட்டர்களில் மூன்று
வகுப்புகள். சேர், முதுகில் சாயும் வசதிகொண்ட பென்ச்,
சாய முடியாத வெறும் பென்ச்….

புதுப்படம் எது ரிலீசானாலும், பாண்டிச்சேரியில் அன்றே
பார்த்து விட முடியும்…காரணம் 600 பென்ச் டிக்கெட்
கொடுப்பார்கள். நெருக்கியடித்து உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு
வெளியே வரும்போது ஒவ்வொருவரும் வியர்வையில்
குளித்திருப்பார்கள்…!!!

மறக்க முடியாத ஒரு அனுபவமாக, திரு.ஜெயகாந்தன் அவர்களை
நான் சந்தித்து, அவருடன் சில மணி நேரங்கள் இருக்க முடிந்ததும்
பாண்டிச்சேரியில் தான்.

மீண்டும் எப்போதாவது வாய்ப்பு வரும்போது, பாண்டிச்சேரி
அனுபவங்களை தொடரலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to அந்த பாண்டிச்சேரி நாட்கள்….!!!

 1. mekaviraj சொல்கிறார்:

  very interesting sir!
  Looking forward to your further posts.

 2. mekaviraj சொல்கிறார்:

  அப்டீன்னா சுதந்திர போராட்டம்னு பெருசா ஒன்னும் நடக்கல மாதிரி இருக்கு 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப mekaviraj,

   பெரிசாக இல்லையே தவிர, 30-களிலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சி
   மட்டும் ஃப்ரான்சிலிருந்து விடுபட போராடிக் கொண்டே இருந்தது.
   அதன் முன் வரிசையில் இருந்த தலைவர்கள் பல அடக்குமுறைகளை
   சந்திக்க வேண்டியிருந்தது.
   ஆனால், காங்கிரஸ் கட்சி அங்கு – களத்திலேயே இல்லை….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Prasad சொல்கிறார்:

  Very interesting.
  Please go on writing like this about
  all your past life, experiences.

 4. selvarajan சொல்கிறார்:

  அன்று — இன்று ” புதுச்சேரி ” இன்று அழைக்கப்படும் பாண்டிச்சேரி — மக்கள் தங்கள் பாணியில் ” புச்சேரி ” என்றும் ” பாண்டி ” என்றும் கூறுவதை இன்றும் கேட்கலாம் — பல சரித்திர தொடர்புகளை கொண்டது புதுவை குபேர் அவர்களின் பெயர் சொல்லும்படியாக பல அடையாளங்கள் இருந்தாலும் “குபேர் அங்காடி மற்றும் மணிக்கூண்டு ” இன்றும் உள்ளது — புதுவையின் ” நகரமைப்பு ” மிகவும் சிறந்த ஒன்று — அனைத்து சாலைகளும் நேர்கோட்டில் செல்லுபவை — எந்த சாலையில் சென்றாலும் முடியுமிடம் புதுவை கடற்கரையில் தான் என்பது வியக்கத்தக்க ஒன்று … சாலைப்பற்றி தற்போதும் மக்களிடையே ஒரு சொலவடை உண்டு அது ” பாண்டியில் வீதி ஒழுங்கே தவிர – நீதி ஒழுங்கில்லை ” என்பது ….

  பெருஞ்சித்தனார்– பாரதியார் — பாரதிதாசன் — தேவநேயப் பாவாணர் — ஜீவா — கி. ராஜநாராயணன் போன்றவர்கள் வாழ்ந்த ஊர் … புதுவையின் பெரும்பாலான வர்த்தகமே — அருகில் உள்ள கடலூர் – விழுப்புரம் – திண்டிவனம் போன்ற நம் தமிழக நகரங்களை நம்பித்தான் என்பது ஒரு வியப்பான விஷயம் … பெட்ரோல் — டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலையும் — மற்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் — ஏன் அனைத்து ” இரண்டு மற்றும் நான்கு சக்கர ” வாகனங்களின் விலையும் — காப்பீடு தொகையும் கூட அங்கே தமிழகத்தை விட குறைவு என்பதால் தான் — தினமும் அதிகமான வாகனங்கள் விறபனையாகின்றன …

  இன்று சென்னையில் உள்ள அனைத்து துணி மற்றும் நகைக்கடைகளில் படையெடுப்பும் நம்முடைய வியாபாரத்தை நம்பியே …. அதிகமான ” நட்சத்திர ஓட்டல்களும் — ரெசார்ட்டுகளும் ” புதுவையின் எல்லைக்குள் எக்கச்சக்கம் — விடுமுறை — வாரக் கடைசியை ” அனைத்துடனும் சேர்த்து ” அனுபவிக்க ஏற்ற இடமாக இன்று வளர்ந்து நிற்கிறது ….

  ஆண்டு தோறும் நடைபெறும் ” கம்பன் விழாவிற்கென்றே ” கம்பன் கலையரங்கம் ஒன்று புதுப் பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது — சாலைகளின் பராமரிப்பு வருடம் தோறும் நடைபெறுவதோடு — ஒவ்வொரு மும்முனை — நான்குமுனை சந்திப்புகளில் தலைவர்களின் சிலைகளோடு கூடிய அழகிய நீறுற்று பூங்கா அமைப்பு ரவுண்டானாக்களையும் — சாலைகளின் நடுவே உள்ள பிரிப்பான்களில் வண்ண செடிகளையும் வைத்து பராமரிக்கிறார்கள் …

  வாரம் தோறும் நடைபெறும் ” சண்டே மார்க்கெட் ” என்கிற சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பதோடு விலையும் மலிவு என்பதால் அன்று அனைத்து பிரிவு மக்களின் கூட்டமும் அலைமோதும் … பல கல்லூரிகள் — பல்கலைக்கழகங்கள் நிறைந்து உள்ளதோடு — அரசின் மருத்துவமனை — ஜிப்மர் — மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் மருத்துவ சேவை போற்றத்தக்கது … விரிந்து பரந்து விட்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரி — நிறைய வியக்கத்தக்க விஷயங்களை கொண்டு வளர்ந்து நின்றாலும் — முக்கிய இரண்டு ” பருத்தி ஆலைகளும் ” ஆங்கிலோ பிரென்ச் டெஸ்ட்டைல்சும் — பாரதி மில்லசும் தற்போது மூடியிருப்பதால் — தொழிலாளர்கள் பாடு சிரமமாக உள்ளது — மத்தியில் அரசுகள் மாறினவே தவிர இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை …. ” மேக் இன் இந்தியா ” …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   பாண்டிச்சேரி இவ்வளவு வளர்ச்சியடைந்து விட்டதை அறிய
   மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது…
   ஒரு தடவை போய் வர வேண்டும் போல் இருக்கிறது…..!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. appannaswamy சொல்கிறார்:

  இந்தக்காலத்தில் மிகப் பிரபலமாகி, வியாபாரமாகி, பலரைப் பைத்தியமாக்கும் வாஸ்து விஷயத்தில், ‘குபேர மூலை’ என்று சொல்லிக்கொள்ளும் மூலை ஒருவேளை இந்தக் ‘குபேர்’-ன் விளைவாக இருக்குமோ?
  வாழ்த்துக்களுடன்- அப்பண்ணஸ்வாமி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக அப்பண்ணசுவாமி.

   நீண்ட காலமாகி விட்டது உங்களை இங்கே பார்த்து ….!

   பாண்டிச்சேரி “குபேர்” அள்ளிக் கொடுப்பதை கண்ணால்
   பார்த்திருக்கிறேன். ஆனால் – வாஸ்து குபேர் …?

   ஏதோ – அவர்களுக்கு ஒரு நம்பிக்கை…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. நிமித்திகன் சொல்கிறார்:

  நன்றி, எங்கள் ஊரைப் பற்றிய பதிவினைச் செய்த உங்களுக்கும், இப்பதிவிற்கு மறுமொழி செய்த நண்பர்களுக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நிமித்திகன்,

   நீங்கள் பாண்டிச்சேரிக்காரர் என்பதை அறிய மகிழ்ச்சி.
   நான் எழுதி இருப்பதெல்லாம் பழைய பாண்டிச்சேரி பற்றி.
   இன்றைய பாண்டியை இன்னும் காணக்கூடவில்லை ….
   ஆனால், உங்கள் முதல்வர் நா.சா.வை அடிக்கடி காண முடிகிறது –
   சென்னை விமான நிலையத்தில்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. LVISS சொல்கிறார்:

  I have also worked in Pondicherry for 2 years –My mempories of Pondicherry —
  Where I lived ,a place called Tagore nagar . ,in front of every house there is a chakkadai –
  There are only five streets which run parallel to each other –Even if there is a bus strike you can walk the distance to your office –There is a small transport vehicle like our share auto running in the street from one corner to another –The Manakula vinayagar temple is there – But there is another one called Original Manakula vinayagar temple – Many streets especially near the beach have French names like Rue suffren (Rue in French perhaps means road ) Policemen wear peculiar hats which is a relic of French rule – Even now many persons who served the French govt receive pension from France without fail every month – Many Indians born there have French sounding names For example Murugesan is spelt as Mourugesine( one of my colleagues) and Narayanan as Narayanane –You can see lot of Bengalese and foreigners staying in the ashram -We had four or five staff from Bengal in our office —
  One day I was in my office chatting with some friends -It was a Sunday -Suddenly fans began to swing wildly to left and right and the ground seems to be giving way under our feet –We didnt know what was hitting us –People from nearby buildings were rushing to the street and looking up at their buildings – -Later we came to know that in Gujarat there was a massive earthquake a few minutes before and we were only feeling its after effects —
  Pondicherry does not have a real beach -You cannot go and play in the waves –
  Unlike Portugeuese in Goa where our PM Nehru had to order our army to march into it , the French did not resist much and vacated the place –The Independence Day in Pondy is on 16th and not 15th August —-

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எல்விஸ்,

   // Pondicherry does not have a real beach –
   You cannot go and play in the waves –//

   நான் இருந்த காலத்தில் பீச் இருந்தது… மணல் இருந்தது…
   அலையில் விளையாட முடிந்தது…
   காந்திஜி சிலைக்கு நேர் பின் பக்கம் ஒரு இரும்புப்பாலம் இருந்தது…
   அது கடலுக்குள் 2 பர்லாங்கு தூரம் வரை சென்றது…
   நான் நண்பர்களுடன் அங்கே உட்கார்ந்து சுண்டல்
   சாப்பிட்டிருக்கிறேன்….அரட்டை அடித்திருக்கிறேன்…!

   உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  பாண்டிச்சேரி விடுதலைப் போராட்டத்தைப்பற்றி எனக்கெல்லாம்
  ஒன்றுமே தெரியாது. இதைப்பற்றி தெரிந்துகொள்ளவோ,
  யோசிக்கவோ சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லை என்பதாலோ என்னவோ.
  உங்கள் கட்டுரைகள் சுவையாக இருப்பதோடு பல விஷயங்களையும்
  எங்களை போன்றவர்களுக்கு சொல்கின்றன.
  Your Blog is NOT ONLY INTERESTING BUTALSO INFORMATIVE.
  வயதைப்பற்றி கவலைப்படாமல் சமூகத்திற்கு எதையாவது
  செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற உங்கள் லட்சியம்
  அற்புதம். வெளியே பத்திரிகை உலகிற்கு தெரியாத அழகான,
  சுவையான எழுத்து நடைஉங்களுடையது. உங்கள் எழுத்துக்கு
  ஒரு ரசிகர் லிஸ்ட் எடுத்தால், அதில் முதல் பெயவ்ர் என்னுடையதாக
  இருக்கும்.
  இறைவனிடம் உங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்வும்
  கொடுக்க வேண்டுவேன். நன்றி.

  என்றும் உங்கள் நலம் விரும்பும்
  இளங்கோ

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  உங்கள் அன்புக்கு
  என் உள்ளம் நிறைய நன்றிகள் இளங்கோ.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 10. புதியவன் சொல்கிறார்:

  காலையிலேயே ரசித்துப்படித்தேன். உங்கள் அனுபவத்தைத் தொடர்ந்து எழுதுங்கள்.

  நான் பத்து வருடங்களுக்கு முன்னால்தான் முதல் முதலாக அங்கு சென்றேன். அதன் காரணம் டி.வி.டி,க்கள் 20-30 வாங்க (ஆமாம்..திருட்டு டி.வி.டிதான்) குணசேகரன் கடை நன்னாரி எஸன்ஸ் பாட்டில் வாங்க. அப்புறம் எப்போதும்போல் அரவிந்தர் சமாதி, மணக்குள விநாயகர் கோவில், திரும்பும்போது அடையார் ஆனந்த பவனில் டிஃபன்.

  நீங்கள் எழுதியுள்ள புதுச்சேரியை நான் கண்டதில்லை. வளர்ச்சி, நிறைய நல்லனவற்றை அழித்துவிட்டது. ஒரு வீட்டில் பல குடும்பங்கள் கூட்டுக்குடித்தனமாக இருந்ததுபோக, ஒவ்வொருவருக்கும் வீடு என்று ஆனபின்பு, எல்லா இடங்களும் காங்கிரீட் காடுகளாகிவிட்டன.

  நம்ம நா.சா அவர்கள் சமீபத்தில் தேர்தலில் நின்றபோது, மக்களோடு மக்களாக (ஃப்ரெண்ட்லியாகப் பேசி) வளைய வந்ததை நினைத்து எனக்குப் பொறாமையாக இருந்தது. நம்ம ஊர்லதான் கவுன்சிலருக்கே இந்திய ஜனாதிபதி என்ற நினைப்பு இருக்குமே.

  பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் நிறையபேர் ஃப்ரான்சில் வசிக்கிறார்கள். அவர்கள் நிறைய கடைகள் வைத்திருக்கிறார்கள் (சொன்னா நம்பமாட்டீங்க.. இஸ்லாமியர் ஒருவர், சைவக் கடை அங்கு வைத்திருந்தார். நான் சாப்பிடப் போய், அந்த உணவு பிடிக்கவில்லை என்று சொன்னதும், (அவங்க பண்ணற ரசம்லாம் நாங்கள் வழக்கமாகச் சாப்பிடுவதுபோல் இருக்காது) காசு வாங்க ரொம்பவும் கூச்சப்பட்டார். பக்கோடா ஒரு பாக்கெட் எடுத்துக்குங்க என்று கையில் திணித்துவிட்டார். ரொம்ப நெகிழ்வாக உணர்ந்தேன். நிறைய பாண்டிச்சேரிக்காரர்கள் (பொதுவாக இஸ்லாமியர்கள்), ஃப்ரெஞ்ச் பாஸ்போர்ட் வைத்துள்ள பெண்களை மணந்து, அதன் மூலமாக ஃப்ரான்ஸ் செல்வதும் சகஜம். அங்குள்ளவர்களின் உணவுமுறையும் ஃப்ரெஞ்ச் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். புதுச்சேரில உள்ளவர்களுக்கு எப்போதுமே, தாங்கள் தமிழ்’நாட்டிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் என்ற உணர்வு இருக்கும். (தமிழர்களாக இருந்தபோதும்)

 11. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா!!! நீங்கள் கூறியது பழைய பாண்டிச்சேரி.புதுச்சேரின் புகழ்மிக்க பெருமைகள் இன்றும் அப்படியே உள்ளது.ஆனால் பழைய பாண்டியின் 40 அடி சாலைகள் வாகன பெருக்கத்தின் காரணமாக மிகவும் சுருங்கி நேரு வீதி மற்றும் முக்கிய சாலைகளை கடந்து வருவதும் ஒரு சாதனை தான்.பிசியான நேரங்களில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் கிடைத்தால் அதிஷ்டமே.முக்கிய சாலைகள் அகலமாக இருந்தாலும் புதிது புதிதாக தோன்றியுள்ள நகர்களினால் பெரும்பாலும் 20அடி சாலைகள் தான்.நாகரீகத்தின் தாக்கத்தினால் தூமையான நீரோடைகள் இன்று சாக்கடைகள்.ஆனாலும் புதுச்சேரி எனக்கு மிகவும் பிடிக்கும்.

 12. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  I too started my career in Pondicherry-1972-great memories

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.