ராமாயணமும், மஹாபாரதமும் உடான்ஸா…? துக்ளக் ஆசிரியர் “சோ”…..!!!

நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்…
எதேச்சையாக இன்று கிடைத்தது…

ராமாயணமும், மஹாபாரதமும் உடான்ஸா…?
துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் விளக்கத்தை
கேட்போமா…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ராமாயணமும், மஹாபாரதமும் உடான்ஸா…? துக்ளக் ஆசிரியர் “சோ”…..!!!

 1. LVISS சொல்கிறார்:

  A genius beyond comparison – This serial was one of the most watched at that time —

 2. தமிழன் சொல்கிறார்:

  சோ சொல்லுவதுபோல், வெறும் கதையில் கதா’நாயகன் புகழப்படுவான், அவனுடைய நல்ல குணங்கள் மட்டுமே வெளிப்படுத்தப்படும். வில்லன் கெட்டகுணம் உடையவனாக இருப்பான், ஆனால் வீரத்தில் கதாநாயகனுக்குச் சரி சமமாக இருப்பான். ஆனால், ராமாயண மஹாபாரதத்தில் (ஒரிஜினல் ஸ்கிரிப்ட் படி) எல்லோரது நல்ல குணங்களும் நல்லது அல்லாத குணங்களும் காட்டப்படுகின்றன. அங்கு ஜாதியினால் இகழப்படுவது என்பதும் கிடையாது (பாரதத்தில், விதுரர், வேலைக்காரிக்குப் பிறந்தவள் என்றுதான் இகழப்படுகிறார்.. அதாவது அரச ரத்தம் இல்லை என்று) வெறும் நாவல் என்று படித்தாலும், வாழ்ந்த மாந்தர்களின் வரலாறு என்பதும் தெரியும்.

  பாரதத்தில் சேர, பாண்டிய மன்னர்களின் பங்களிப்பும் (உணவு தயாரிப்பு என்று நினைக்கிறேன்) பாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  நம்மிடம் இப்போது இருக்கும் கோவில்களும், சில, 2000 வருடத்துக்கும் மேல் பழமையானது. ராமாயணமே கிட்டத்தட்ட 6000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். (ஆண்டாளின் காலத்தையும், வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்ற அவரது பாடலில் வரும் வரிகளை வைத்துக்கொண்டும், அவருடைய அப்பா, பாண்டிய மன்னனிடம் பரிசில் பெற்றதை வைத்துக்கொண்டும் நிர்ணயித்திருக்கின்றனர்). இப்போது யோசித்துப் பாருங்கள்.. தஞ்சைப் பகுதியை ஆண்ட மன்னன் ஒருவன், வீரர்களைக் கூட்டிக்கொண்டு, கடலில் மலேசியாவுக்குச் சென்று அங்கு போரிட்டு வெற்றி பெற்றான் என்பது இப்போது நம்பும்படியாகவா இருக்கிறது? (உண்மையா யோசித்துப் பார்த்தால் அது எப்பேர்ப்பட்ட வீரச் செயல். கடாரம் கொண்டான் என்பது ராஜேந்திரசோழனின் பட்டப்பெயர்). ஒரு சோழ மன்னன், கங்கையைத் தாண்டியும் படையெடுத்து வெற்றி பெற்றான் (அங்கிருந்து கங்கை நீரை, தோற்ற மன்னர்கள் தலையில் சுமந்துவரச் செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவிலுக்கு அருகில் அமைத்த குளத்தில் விடச் செய்தான். குளம் இப்போதும் இருக்கிறது. 1000 வருடத்துக்கு முன் நிகழ்ந்தது), சேர மன்னன் வடநாடு வரை சென்று படையெடுத்து வெற்றி பெற்று கண்ணகி கோவில் அமைக்க கல் கொணர்ந்தான். இதுவும் 1500-2000 வருடங்களில் நிகழ்ந்தது. இப்போது யோசிக்க.. அது எப்படி என்ற பகுத்தறிவு (??) நமக்குத் தோன்றவில்லை? நம் முன்னோர்களின் மீது நமக்குப் பெருமித உணர்வு வேண்டும்.

  இராமாயணம் (கொஞ்சம் VARIATIONSஉடன்) இந்தோனேஷியாவில் வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் (கம்போடியா, மலேஷியா, இந்தோனேஷியா) 2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு உண்டு. இந்தோனேஷிய அரச வம்சங்களில் (கி.பி 1200ல்) நிறைய சமஸ்கிருதப் பெயர்கள் உண்டு. (திரிபுவனேஸ்வரி, காயத்ரி போன்று). பாலித் தீவுகளில் ராமாயணம் தெரியாதவர்களே கிடையாது. தாய்லாந்தில், அரச பதவிஏற்பின்போது திருப்பாவை சொல்லப்படுகிறது (சிதைந்த மொழியில்)

  அந்த சீரியலை நான் முடிந்தபோதெல்லாம் பார்த்தேன். சோ அவர்கள், விளக்குவதற்காக அவ்வப்போது போட்ட கிளிப்புகளும் ஒரு நல்ல உத்திதான். ரசிக்கும்படி இருந்தது.

  இன்னும் கா.மை.சார் பார்வை ஆர்.கே நகரில் படவில்லை போல் தெரிகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   // இன்னும் கா.மை.சார் பார்வை ஆர்.கே நகரில் படவில்லை போல் தெரிகிறது.//

   வந்துகொண்டே இருக்கிறேன்… ஆனால் வேறு கோணத்தில்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM, in this serial, the person who acts as the producer and raising the questions to Cho is my cousin by name D. Narayanaswamy alias Nani (one of the founders of Viveka Fine Arts).

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   O GREAT…!

   சந்திரமௌலி சார்,

   விவேகா பைன் ஆர்ட்ஸ் – துவக்கத்திலிருந்தே என்றால் –
   அவருக்கு சோ அவர்களுடன் எக்கச்சக்கமான அனுபவங்கள்
   இருக்குமே…. நீங்கள் இது குறித்து அவருடன் எதாவது பேசுவது உண்டா…?
   வித்தியாசமான தகவல்கள் எதாவது இருந்தால் சொல்லுங்களேன்..!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. D. Chandramouli சொல்கிறார்:

  Since I live abroad for over three decades, I rarely see Nani. Some time in the future when I finally return to India, I wish that I should be able to sit with him and hear out on his friendship with Cho.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.