முன்னாள் DGP திரு.விஜயகுமாரின் – “ஆபரேஷன் குக்கூன்” …..

தமிழகத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றி
தெரியாதவர் யார்…? முப்பதாண்டுக் காலம்
கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும்
சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தனக்கடத்தல் வீரப்பன்,

கடைசியாக, அவனது மூன்று கூட்டாளிகளுடன்,
அக்டோபர் 19, 2004 இரவு 11 மணி அளவில்
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே
தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அதிரடிப்படைக்கு தலைமை தாங்கி இயக்கிய
முன்னாள் தமிழக டிஜிபி திரு.விஜய்குமார், வீரப்பன்
இறந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது
வீரப்பனை துரத்திப் பிடித்தது எப்படி என்பதைப்பற்றி
விவரமாக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

“VEERAPPAN – Chasing the Brigand” என்கிற பெயரில்
வெளியாகி இருக்கும் அந்த புத்தகத்தை நான் இன்னும்
படிக்கவில்லை…..ஆனால், வீரப்பனும் அவனது
கூட்டளிகளும் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த சம்பவத்தின்
இறுதி கட்டத்தைப்பற்றிய சுருக்கம் ஒன்றை
காண நேர்ந்தது..

நமது வாசக நண்பர்களின் பார்வைக்காக அதை கீழே
பதிப்பித்திருக்கிறேன்.

———————


பின் குறிப்பு –

வீரப்பன், சந்தன மரங்களை கடத்தி விற்றும்,
யானைகளை கொன்று தந்தங்களை விற்றும் பல கோடி
ரூபாய்களை சம்பாதித்தான் என்று சொல்லப்பட்டது.

ஆனால், அவன் வாழ்நாளில் அவனோ, அவனது
குடும்பத்தாரோ, இந்த செல்வங்களின் பயனை
எந்த விதத்திலும் அனுபவித்ததாகத் தெரியவில்லை.

வாழ்நாள் பூராவும் வீரப்பன் அமைதியின்றி, நிம்மதியின்றி
காடு, மலைகளூடே ஓடிக்கொண்டே தான் இருந்தான்.
கொடிய காட்டு விலங்குகளுக்கு இடையில் தான்
அவன் வாழ்க்கை கடந்தது. விரும்பியது எதையும்
சாப்பிட முடியவில்லை. ஒழுங்காக தூங்கக்கூட
முடியவில்லை…. பெண்டாட்டி, பிள்ளைகளுடன்,
உற்றார், உறவினருடன் – பேசிப்பழகி, சந்தோஷமாக
வாழ்க்கை நடத்த முடியவில்லை…..

ஆனால், வீரப்பன் இருந்தபோதும்,
இறந்த பின்னரும்,
அவனால்,
அவனை வைத்து,

சிலர் பல கோடி ரூபாய்
பணம் ” பண்ணி” னார்கள்.
ராஜபோக வாழ்க்கை நடத்தினார்கள்….
இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்…

விதி….!!!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to முன்னாள் DGP திரு.விஜயகுமாரின் – “ஆபரேஷன் குக்கூன்” …..

 1. selvarajan சொல்கிறார்:

  // வீரப்பன் ஜாதகம் பார்த்து வேட்டையாடிய விஜயகுமார் ஐபிஎஸ்…. சில சுவாரஸ்ய தகவல் // Published: Tuesday, February 21, 2017, 9:31 [IST]
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakumar-launch-book-veerappan-chasing-the-brigand-274733.html இந்த செய்தியில் இன்னும் பல ” சுவாரஸ்யங்கள் ” இருக்கின்றன … ஜாதகமும் கைகொடுத்துள்ளது ஒரு வியப்பு … அதைவிட அழுத தன் சொந்த குழந்தையை கொன்றவன் வீரப்பன் என்பது — அவனுடைய குணம் எத்தகையது என்பதை காட்டுவதாக உள்ளது …. ” ஆபரேசன் பட்டாம்பூச்சி கூடு ” வீரப்பனின் வீழ்ச்சி மட்டுமல்ல — பலரின் நிரந்தர – தொடர் வருமானத்திற்கும் வைத்த ஆப்பு … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   // பலரின் நிரந்தர – தொடர் வருமானத்திற்கும் வைத்த ஆப்பு … !!!//

   செத்தும் கொடுத்த சீதக்காதி வீரப்பன்…
   அவன் இறந்த பின்னரும் கூட அவன் கதையை படமெடுத்து
   பணம் சம்பாதித்தனரே…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்.

 2. LVISS சொல்கிறார்:

  A thrilling account of last days of veerappan –
  Where is Mr Vijayakumar now —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   திரு.விஜய்குமார் ரிடையராகி, பிறகு,
   இப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தில்,
   (சட்டிஸ்கர் மாநிலத்தில், தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்த)
   ஆலோசகராக இருக்கிறார் என்று நினைவு.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. தமிழன் சொல்கிறார்:

  “சிலர் பல கோடி ரூபாய் பணம் ” பண்ணி” னார்கள். ராஜபோக வாழ்க்கை நடத்தினார்கள்….” – யார் என்று வெளிப்படையாக நீங்கள் எழுதவில்லை. ஒருவேளை தலைப்பிற்குள் அந்தச் செய்தி பொருந்தாது என்று கருதிவிட்டீர்களா?

  கத்தி எடுத்தவன், அடியாள், கூலிப்படை போன்ற எவராயினும், அதன் அடுத்த படியான அரசியலில் இறங்காமல், மற்றவர்களுக்காக மட்டும் உழைத்துக்கொண்டிருந்தால், கடைசி வரை அவர்களால் நிம்மதியாக வாழமுடியாது. இதற்கு யாரும் விதிவிலக்கில்லை. முதலில் வீரப்பன் பிறருக்காக சந்தன மரங்களை வெட்ட ஆரம்பித்தான். அதில் வரும் காசில் பலர் (சுற்றிவர கிராமங்களில் இருந்தவர்கள்) பயன் பெற்றனர் (வேலை வாய்ப்பு, பணம்). அவன், தனக்குக் கெடுதல் செய்த கிராமத் தலைவர்களைத் தீர்த்தான். இதனால் பலர் அவனிடம் பயம் கொண்டனர். இந்தச் செல்வாக்கைத் தனக்கு உபயோகப்படுத்திக்கொள்வதற்காக,, கர்னாடக அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ தேர்தலில் வீரப்பனின் உதவியை நாடினர். அதனால் பலனும் பெற்றனர். வீரப்பன் இந்த முறையில் தன் எதிரிகளை வளர்த்துக்கொண்டான். கடைசியில் அவன் வாழ்வே காடாகிப்போனது. அவன் குடும்பத்திற்கு அவனால் நேரடியாக ஒரு பயனும் கிடைக்கவில்லை.

  தமிழ் நாட்டில், அவனின் ஜாதியை வைத்து தனக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று முனைந்தவர் இராமதாஸ். வீரப்பனை காட்டில் சந்திக்கிறேன் என்று நக்கீரன் கோபால் சென்று (அதாவது அறிவுரை சொல்றாராம். இவரின் பத்திரிகைக்கே நேர்மையாக நடக்கச் சொல்லி எத்தனையோ அறிவுரை சொல்லலாம்) அதனை வீடியோ எடுத்து, சன் தொலைக்காட்சியில் போட்டு, 5 கோடி ரூபாய் தனக்கு மட்டுமே வரவு பார்த்துவிட்டார். சன் தொலைக்காட்சியும் விளம்பரங்கள் மூலம் பெரிய பணம் பண்ணினர். இன்னொருமுறை (பணம் பண்ண வழி தெரிந்ததனால்) திமுக தலைவரின் ஆசியோடு மீண்டும் அவனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றபோது, இவரைப் பற்றிப் புரிந்துகொண்ட வீரப்பன் முந்தைய மரியாதையைக் காட்டவில்லை. பிற்படுத்தப்பட்டவன் என்று அரசியல் ரீதியாக அனுகூலம் பெறவேண்டி கருணானிதியும் அவனிடம் மென்மையாக நடந்துகொண்டார். வீரப்பன் வெட்டிய சந்தனக் கட்டைகளும் யானைத் தந்தங்களும் கர்னாடக வியாபாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே உதவின.

  ஒரு சமயத்தில் வீரப்பன், அளவுக்கு மீறி அரசாங்கத்தை எதிர்த்துவிட்டான். நம் ராணுவமும் ஒற்றை ஆளைப் பிடிப்பது கடினம் என்ற நிலைமை (இது பொதுவாக நடப்பதுதான். பின் லேடன் எத்தனை ஆண்டுகள் தப்பித்திருக்கிறான் டெக்னாலஜியில் சிறந்த அமெரிக்காவிடமிருந்து என்பதை ஒப்பு நோக்கலாம்). போலீசார்கள், அவர்களுடைய முறைகளை கிராமமக்களிடம் பயன்படுத்தி அதனால் அவர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டதுதான் மிச்சம்.

  ஜெ. அவர்களின் தைரியமான முடிவாலும் ஆதரவாலும் (அரசாங்கம் ரீதியான ஆதரவு) கடைசியில் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை, வீரப்பனை சுட்டுக்கொன்றது. அதிலும் ஆதாயம் பார்க்க ராமதாஸ் முனைந்தார் (வீரப்பன் வன்னியர் என்று சொன்னதன் மூலம்) அந்த வெற்றியை ESTABLISH செய்யும் விதமாக ஜெ. அதிரடிப்படையைச் சேர்ந்த எல்லா போலீசாருக்கும் பணி உயர்வு அளித்தார் (அதை JUSTIFY பண்ண இயலாது. ஆனால் தேசத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தார்கள் என்ற எண்ணத்தின் மூலமாக அவர் இதைச் செய்தார். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் நிறைய புல்லுக்கும் பாய்ந்தது என்ற போதிலும் போலீசார், விடுமுறையில்லாமல் கடினமான பணி மேற்கொள்கிறவர்கள் என்ற முறையில் அவர்கள் பலன் பெற்றதைப் பெரிய குறையாக நான் எண்ணவில்லை)

  வீரப்பனின் வாழ்வு சொல்வது ஒன்றே ஒன்றுதான். கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாகவேண்டும். பிறருக்கு அடியாளாக இருந்து தவறு செய்கிறவன் எப்போதும் தன் மரணத்தைக் கொடூரமான முறையில் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். அவனுக்கு நிம்மதியான குடும்ப வாழ்க்கை எப்போதும் கிட்டாது (UNLESS அவன் அரசியல்வாதியாக PROMOTION பெற்றாலொழிய)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   மிக அருமையாக அலசி இருக்கிறீர்கள்….

   நான் இந்த இடுகையை எழுதக்காரணமே,
   இந்த விஷயங்கள் எல்லாம் வெளிவர வேண்டும் என்று தான்.
   பின்னூட்டங்களில் எல்லா பெயர்களும் வெளிவரட்டும் என்று தான்
   நான் இடுகையில் பொதுவாகவே எழுதினேன்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • தமிழன் சொல்கிறார்:

   கா.மை. சார், இருவர் விட்டுப்போய்விட்டனர்.

   1. நக்கீரன் கோபால், தான் வீரப்பனைப் பார்த்து அதைப் பற்றிய தொடர் எழுத ஆரம்பித்ததனால் நக்கீரன் சர்க்குலேஷன் அதிகமாவதைப் பார்த்து, ஜூ.வியும் தானும் ஒரு தொடர்-“கதை”யை வீரப்பனைப் பற்றி எழுதியது. (தானே அறிந்துகொண்டதுபோல)

   2. ராமதாஸ், வீரப்பனின் குடும்பத்தை பா.ம.க (அல்லது வன்னியர் சங்கம். ஞாபகம் இல்லை) பார்த்துக்கொள்ளும். அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு அமைய உதவும் என்று வெறும் வார்த்தைஜாலம் காண்பித்ததோடு நிறுத்திக்கொண்டார்.

   3. வீரப்பனின் வாழ்க்கையைப் படமாக்கிய பலரும், அவரின் குடும்பத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.

   4. ஒரு சமயத்தில் அரசு (கருணானிதி அரசு என்றுதான் ஞாபகம்), அவனை சரணடையச் சொல்லி, எல்லா வழக்குகளையும் நீர்த்துப்போகச் செய்யலாம் என்று சொன்னபோதும், ‘கெஞ்சினால் மிஞ்சுவது’ என்ற தாத்பர்யத்தின்படி, வீரப்பன் மறுத்தது மட்டுமல்லாமல், பிற அரசியல் தலைவர்களையும் ஏகடீயம் பேச ஆரம்பித்தான். இதுவும் அவனது முடிவுக்கு முக்கியக் காரணம்.

 4. selvarajan சொல்கிறார்:

  // இப்படி ஒரு தேர்தல் ஆணையம் தேவையா? //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/election-commission-s-wrong-decision-admk-symbol-issue-277824.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk சூடு – சொரணையுள்ளவர்கள் கேட்கவேண்டிய கேள்வி … !!!

 5. Ganpat சொல்கிறார்:

  வீரப்பன் செய்த பல குற்றங்களில் நமக்கு சாதகமான ஒரே குற்றம்..அவன் ஏதாவது ஒரு கட்சியில் சேராதது..அப்படி சேர்ந்திருந்தால் அவன்தான் இன்று நமக்கு வனத்துறை அமைச்சர்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கண்பத்.

   நீண்ட நாட்களாயிற்று – சந்தித்து…..!!!

   நலமா….?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    வணக்கம் அய்யா!..இறைவன் கிருபையில் தினசரி செய்திகளை மிக குறைவாக படித்து , நலமாக உள்ளேன்.உங்கள் பதிவுகளில் இன்னும் துடிப்பு அதிகமானது காண மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கண்பத்,

  // தினசரி செய்திகளை மிக குறைவாக படித்து , நலமாக உள்ளேன்//

  🙂 🙂 🙂

  // உங்கள் பதிவுகளில் இன்னும் துடிப்பு அதிகமானது காண மிக்க மகிழ்ச்சி.//

  எஞ்சிய கொஞ்ச காலம் கொஞ்சம் தானே…
  வேகமாக வேலை செய்தால் தானே …..
  நினைப்பதில் கடுகளவாவது செயலில் வரும்…!!!

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.