10 கோடி x 5000 x 5/100 = ?

இப்படி ஒரு தலைப்பா என்கிறீர்களா…?

இந்த இடுகையில் நான் அரசியல் பேசவே இல்லை…
சும்மா, உங்களையும் சேர்த்துக்கொண்டு வெறுமனே
ஒரு கணக்கு போட்டு பார்க்க முயற்சி செய்கிறேன்.
எனவே, அதற்கான தலைப்பு தான் இது…!

கணக்கு போடுவதில் நமக்கு எதற்கு அரசியல்….!!!
இது general knowledge அதாவது பொது அறிவு…
அவ்வளவே….( நான் ஒரு வேளை எங்கேயாவது
தப்பாக கணக்கு போட்டிருந்தால், நீங்கள்
பின்னூட்டத்தில் தெளிவு படுத்தலாம்….!!! )

இந்தியா முழுவதுமாகச் சேர்ந்து SBI-ல் ( ஸ்டேட் பாங்க்
ஆப் இந்தியா ) சுமார் 31 கோடி கணக்குகள் உள்ளனவாம்.
(31 crore Savings Bank Accounts)

இதில் பெரிய நகரங்களில் மட்டும் என்று பார்த்தால்
தோராயமாக 10 (பத்து) கோடி கணக்குகள் தேரும்
என்கிறார்கள் …

அண்மையில் SBI நிர்வாகம் எடுத்துள்ள முடிவின்படி,
பெரிய நகரங்களில் உள்ள கணக்குகளில் ஒவ்வொரு
மாதமும் சராசரியாக குறைந்த பட்சம் 5000 ரூபாய்
குறைந்த பட்ச இருப்புத்தொகையாக வைக்கப்பட
வேண்டும்……

SBI யில் S. B. A/c வைத்திருப்பவர்களுக்கு அவர்களது
கணக்கில் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச
தொகைக்கு 4 % ( வருடத்திற்கு நாலு சதவீதம்) வட்டி
கணக்கிடப்பட்டு கொடுக்கப்படுகிறது.

( குறைந்த பட்ச தொகை வைக்கா விட்டால் விதிக்கப்படும்
அபராதம் குறித்தெல்லாம் நான் இந்த இடுகையில்
விவாதிக்கப் போவதில்லை. எனவே, தொடர்பில்லாத
அந்த விவரங்களை இங்கு தரவில்லை….)

ஆக, இந்த பெரிய நகரங்களில் இருக்கும் இந்த
பத்து கோடி கணக்கில் சேரப்போகும் குறைந்தபட்ச
இருப்புத் தொகை –

பத்து கோடி x 5000 = 50,000,00,00,000
அதாவது, மாதத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்….

இந்த பணத்திற்கு SBI வங்கி, தன்னிடம் சேமிப்பு
கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கும்
வட்டி விகிதம் 4 % (வருடத்திற்கு)

ஆனால், வங்கி தங்களிடம் வெவ்வேறு
காரணங்களுக்காக ( housing, vehicle, personal ….etc. etc.)
கடன் பெறும் நபர்களிடம் வசூலிக்கும் குறைந்த பட்ச
வட்டி விகிதம் 9 சதவீதத்தில் ( வருடத்திற்கு ) துவங்கி
மேலே 15 சதவீதம் வரை ஏறிக்கொண்டே போகிறது…!!!

ஆக 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ( 9% – 4% )
நூற்றுக்கு ஐந்து ரூபாய் என்கிற என்கிற அளவில்
வங்கி லாபம் பெறுகிறது….

அதாவது 50,000 x 5/100 = 2500 கோடி ரூபாய்…

நம்மை குறைந்த பட்ச இருப்புத்தொகை 5000 ரூபாய்
வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் மூலம்
வங்கி பெறும் லாபம் –

– இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்….

( சிறிய நகரங்கள், கிராமங்கள் … எல்லாம் தனிக்கணக்கு…
நாம் அதற்குள்ளாக எல்லாம் போய் அவஸ்தைப்பட
வேண்டாம். சாம்பிளுக்கு இது ஒன்று போதுமே…!!! )

என்ன… கணக்கு சரி தானா…?
உங்களுக்கு வேறு எதாவது தோன்றுகிறதா…?

சரி – இப்போது பிரச்சினை என்னவென்றால் –
சத்தம் போடாமல், ஒரு simple move-ல் SBI -க்கு
ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துக்
கொடுக்கக்கூடிய இந்த ஸூப்பர் ஐடியா எந்த மூளையில்
உதித்தது என்று தெரிந்தால் தேவலை…

தெரிந்து என்ன செய்யப்போகிறாய் என்று கேட்கிறீர்களா…?
வேறே என்ன செய்ய முடியும்….?
தனியே ஒரு இடுகை போட்டு, பெயரைச் சொல்லி
அர்ச்சனை செய்யலாம் – கூடவே பின்னூட்டங்களில்
வந்து சிலர் பாராட்டவும் இடம் கொடுக்கலாம்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to 10 கோடி x 5000 x 5/100 = ?

 1. புதியவன் சொல்கிறார்:

  நம்ம பேங்குதானே. பணம் அங்க வேலை பார்ப்பவர்களுக்கோ அல்லது மால்யா கடன் மூலம் இந்தியாவுக்குள்ளதானே காசு இருக்கும். எந்த வெளிநாட்டு வங்கிலயும் கணக்கு வச்சிருந்தீங்கனா அது எவ்வளவு horrible experience என்பது வச்சிருக்கறவங்களுக்குத்தான் தெரியும். என் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அனுபவம் மோசமானது. நம்ம வங்கில கூட்டம் ஜாஸ்தி, Service கொஞ்சம் குறைவு என்றாலும் கொஞ்சம் மனிதாபிமானம் உண்டுன்னு நினைக்கறேன். (ஐ.ஓ.பி, கேனராவுக்கும் இது பொருந்தும்)

 2. இளங்கோ சொல்கிறார்:

  கொல்றீங்க சார்.

 3. LVISS சொல்கிறார்:

  Mr K M You must also calculate for many other banks which insist on higher minimum balance and find out how much they earn by your method — Since the balance in Savings Bank accounts do not remain constant with the bank the interest rate is low –A higher rate of interest is given for term deposits because these stay with the bank for a contracted period –Generally when people talk about bank interest rates they have in mind only savings accounts and not term deposit accounts –They always say the bank is only giving 4% for our savings –The calculation is done for 365 days and not one year because they calculate interest on daily products —
  Most of us must be familiar with this — A certain percentage of deposits held by the banks have to be kept as cash reserve CRR with RBI (I think it is 4% now ) and a certain percentage of deposits should invested in approved securities SLR (This must be around 20%) The balance amount ie 76% should be lent to various sectors (agriculture sector must be getting the maximum )as per norms -Banks cannot lend all the money to one sector –Govt sponsored loans also should be given at lower rates -Exact details can be had from RBI website —

 4. Srini சொல்கிறார்:

  Dear KM sir,

  Super super.. kolringa sir…
  I was also doing something… There are many different opinions on how much water we should be drinking every day. The health authorities commonly recommend eight 8-ounce glasses, which equals about 2 liters, or half a gallon. This is called the 8×8 rule and is very easy to remember. on an average if a person lives for 60 years… appro 21000 gallons of water one will drink. if one reduces drinking one glass from the 8 glass every day… approx. 5000 litres of water can be saved… if the same is a bottled water… 5000 * rs 20 can be saved… nothing related to the sbi calculation…
  உங்களுக்கு வேறு எதாவது தோன்றுகிறதா…? endru keettinga.. I just got this thought immediately when I read this post. nothing more.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   இது தான் என் துரதிருஷ்டம்….
   நான் அரசியலே எழுதா விட்டாலும்,
   மக்கள் என்னை விடறாங்களா பாத்தீங்களா…?

   (நான் உங்களைச் சொல்லவில்லை… 🙂 🙂 🙂 )

   இதுக்கு பேசாம அரசியலே எழுதிட்டு போயிடலாம் – இல்லையா…?

   ..
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. இளங்கோ சொல்கிறார்:

  AGAIN VAKKAALAT for ———–
  Why the Hell these people insist it only now ?

  Just to maintain Jan-Dhan accounts
  which was announced after much fan-fare
  at the expenses of Bank Customers ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இளங்கோ – cool – cool….!

   திரு.எல்விஸ் அவர்களால் சும்மா இருக்கவே முடியாது…
   நான் யாரையும் குறை கூறவில்லையென்றாலும் கூட
   அவருக்கு உறுத்துகிறது…. வந்து விடுகிறார் பாருங்கள்…!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Venkat சொல்கிறார்:

    Business model for banks is based on NIM. Net interest margin, which is the difference between interest paid to deposit and interest collected from advances. For rs 5000 maintained the bank would earn rd. 250 per year. This is not profit. From this they have to pay all cost of maintaining your account. For example if you go to their ATM and withdraw money they have to pay rs.16 to their service provider. If you make one withdrawal a month banks pays rd. 192. Then they pay rs.5 per month to maintain your debit card, then comes salary to staff, office relates expenses etc.,

    While the interest paid to depositors is assured there is a risk in collecting interest from loan extended. In some cases they loose entire money. So they charge a risk premium.

    Overall the NIM from rd. 5000 won’t even cover the cost of maintaining the account…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     திரு.வெங்கட்,

     // Business model for banks is based on NIM. Net interest margin, which is the difference between interest paid to deposit and interest collected from advances. For rs 5000 maintained the bank would earn rd. 250 per year. This is not profit. From this they have to pay all cost of maintaining your account. For example if you go to their ATM and withdraw money they have to pay rs.16 to their service provider. If you make one withdrawal a month banks pays rd. 192. Then they pay rs.5 per month to maintain your debit card, then comes salary to staff, office relates expenses etc.,//

     இந்த மாதிரி கதையெல்லாம் நிறைய கேட்டாகி விட்டது….
     இந்த செலவுகள் எல்லாம் வங்கிக்கு இப்போது தான்
     புதிதாக வந்ததா…? இதெல்லாமே ஏற்கெனவே உள்ள
     சிஸ்டம் தானே…? மேலும் ATM மெயின்டெனன்சுக்கு
     என்று எல்லா வாடிக்கையாளர்களிடமும் ஏற்கெனவே
     தனியாக தொகை பிடித்துக் கொள்ளப்படுகிறது.
     எவனாவது வங்கிக்கணக்கே வைத்திருக்காதவனிடம் போய்
     இந்தக்கதையை எல்லாம் சொல்லிப் பாருங்கள் – ஒருவேளை
     நம்பினாலும் நம்புவான்…!

     5000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு என்கிற கண்டிஷன்
     மட்டும் தான் புதிது. ( 2012-வரை ஏற்கெனவே இருந்தது
     என்று சொல்லாதீர்கள்… எப்போது 5 ஆண்டுகள் இல்லையோ அப்போது 2017-ல் இது புதிது தான்..)…
     இந்த 5000 கண்டிஷன் வரும்வரை வங்கிகள் இந்த
     செலவுகளை எல்லாம் எப்படி சந்தித்துக் கொண்டிருந்தன…?
     SBI chairman தன் பர்சிலிருந்து எடுத்து போட்டுக் கொண்டிருந்தாரா..?

     மோடிஜி அரசு, கோடிக்கணக்கில் புதிய ஜீரோ பேலன்ஸ்
     ஜன்-தன் அக்கவுண்ட்களை அறிமுகப்படுத்தியதால் –
     அவற்றை மெயின்டெயின் பண்ண வேண்டிய கட்டாயம்
     வங்கிகளுக்கு ஏற்பட்டு விட்டதால், அந்த செலவை,
     ஈடுகட்டத்தான் இந்த புதிய கட்டாய 5000 ரூபாய்…

     நீங்கள் எவ்வளவு தான் குட்டிக்கரணம் அடித்து புதிது
     புதிதாக தியரி எல்லாம் கண்டுபிடித்து பேசினாலும் –

     – ஜன்-தன் கணக்குகளை மெயின்டெயின்
     பண்ண ஆகும் செலவை ஈடுகட்டத்தான் வங்கிகளின்
     மற்ற கஸ்டமர்களின் தலையில் இந்த சுமை ஏற்றப்படுகிறது
     என்பதே………பச்சை உண்மை.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M I dont think you pointed finger at anybody -So my comment is also general in nature—
    What the SBI chairman said regarding maintaining accounts,not only Jan Dhan , applies to all the public sector and private banks –Jan Dhan accounts are zero balance accounts –They are exempt from keeping minimum balance(Rs 1000 for rural SB accounts) or pay penalty — But they are eligible for interest – This means that if a Jan dhan account holder receives a subsidy or any other amount but withdraws it only after say 10 days he will be eligible for interest for 10 days -I am willing to be corrected on this —
    Actually the deposits are a liability of the bank to the depositors -So the more the minimum balance required and more the deposits the more the bank owes to the depositor —
    What Mr Venkat says is also worth pondering over –

 6. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! கண்ணில் பட்ட ஒரு செய்தி : — // புத்திசாலித்தனமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை..! // [ நீங்கள் என்றால் உங்களை அல்ல .. பொதுவாக கூறுகிறார்கள் ]
  Read more at: http://tamil.goodreturns.in/personal-finance/2017/03/10-everyday-habits-that-can-make-you-smarter-007379.html … அவர்கள் பட்டியலிடும் பத்து சிறந்த தனிப்பட்ட எளியச் செயல்கள் ; 1 . நாளிதழ்களைத் தினந்தோறும் படித்திடுங்கள் — 2 . உங்களுக்குப் பிடித்தமான சுவாரஸ்யமான மக்களைப் பின்பற்றுங்கள் — 3 .புத்திசாலிகளுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள் — 4 . அறிவு சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுங்கள் — 5 . உங்களுடைய பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடுங்கள் — 6 . நீங்கள் கற்றுக் கொண்டதை தினந்தோறும் பழகிடுங்கள்– 7 . நீங்கள் செய்த சாதனைகளைப் பட்டியலிடுங்கள்– 8 . உங்கள் ஆறுதல் மண்டலத்தைத் தாண்டி வெளியே வாருங்கள்– 9 . சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் — 10 . எப்பொழுதும் ஆர்வத்துடன் இருங்கள் … என்றும்

  // உங்களுடைய ஆற்றல் மற்றும் அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தக்கூடிய ஒரு எளிய வழி எல்லாவற்றையும் கேள்வி கேட்பது தான்.// என்கிற வரிகளை படித்ததும் ” ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை — நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை ” என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது ….
  செல்லா நோட்டு என்பதில் ஆரம்பித்து – வங்கிகளின் கெடுபிடிகள் வரை வளர வைத்த மனிதர்களுக்கு மேலோங்கியிருந்த ஒரு எண்ணம் ” நான் ” என்பதாக இருக்குமோ … ? நாட்டை சீர்படுத்துவதில் என்னைப்போல ஒருவர் கிடையாது என்கிற ” அகங்காரம் – மமகாரம் ” சேர்ந்த கலவையாக இருக்கும் மனிதர்களின் ” மூளையில் உதித்திருந்தால் ” உங்களின் இந்த வரிகளுக்கு விடை கிடைத்ததாகி விடுமோ …. ? // ஒரு simple move-ல் SBI -க்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துக்
  கொடுக்கக்கூடிய இந்த ஸூப்பர் ஐடியா எந்த மூளையில்
  உதித்தது என்று தெரிந்தால் தேவலை…//

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நல்ல சப்ஜெக்ட்… நல்ல லிங்க்…
   தேர்ந்தெடுத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி…

   இதெல்லாம் நம்மை போன்ற mindset உள்ள
   சாதாரணர்களுக்கு தான் பொருந்தும்…….

   MY BOSS (LEADER…?) IS ALWAYS RIGHT….
   Those who question him are FOOLs –

   -என்கிற attitude இருப்பவர்களுக்கு எங்கேயாவது
   ஆலோசனை குறிப்புகள் இருந்தால் லிங்க் கொடுங்களேன்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • R KARTHIK சொல்கிறார்:

   Except first point others are good. Newspapers and news media are useless in my perspective. Rather I would read some quality blogs and know things. It is my opinion.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.