மக்களுக்கு – பாஜக மந்திரிகளை விட அதிகமாகவே யோசிக்கத் தெரியும்….

நெடுவாசல் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது,
இங்கே வந்து கூடவே உட்கார்ந்துகொண்டு பாஜக
அமைச்சர் என்ன சொன்னார்….?

” மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும்
செயல்படுத்த மாட்டோம் ”
“போராட்டத்தை நிறுத்தி விட்டு, என்னுடன் டெல்லி
வாருங்கள். மத்திய அமைச்சருடன் பேசி ஆவன செய்வோம்.”

அழைத்துப் போனார்.. டெல்லி மந்திரியுடன் பேசினார்கள்….
வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன…

இன்று மீண்டும் என்ன நடக்கிறது..?

வாக்குறுதி கொடுத்த மந்திரி முன்னிலையிலேயே
மத்திய அரசு காண்டிராக்டர்களுடன், ஒப்பந்தம் போடுகிறது.
இதில் எத்தனை பேர் பாஜக தொழிலதிபர்களோ…?
அவர்களுக்கே வெளிச்சம்..

நம்ம ஊர் காண்டிராக்ட் வாங்கி இருப்பவர் என்பதால்
நம் மக்கள் தீவிரமாக அவரைப்பற்றி தீவிரமாக விசாரித்து
அய்யா மூத்த பாஜக பிரமுகர் என்று தெரிந்து
கொண்டிருக்கிறார்கள்…..

மூத்த பாஜக என்றால் மேகாலயா மாதிரி எங்கேயாவது
ஒரு கவர்னர் பதவி கொடுத்து விட்டுப் போக வேண்டியது
தானே…? அவர் பாட்டுக்கு அங்கே போய் ஆட்டம் போட்டுக்
கொண்டிருப்பார் அல்லவா…? …..நாதனை போல…?
அவருக்கு எதற்கு நெடுவாசல்… ?

அமைச்சர் ப்ளேட்டை திருப்பி போடுகிறார்…
ஒரு இடத்தில் சொல்கிறார் …
” இன்று எதிர்ப்பவர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும்…”
இன்னொரு இடத்தில் சொல்கிறார்…
“கையெழுத்து தானே போட்டிருக்கிறார்கள்.. இது முடிவாகி
விட்டதாக அர்த்தம் இல்லை..”

” மாநில அரசும் ஒப்புக்கொண்டால் தான் வரும்…!”

இங்கே வலிமையான தலைமை இல்லை என்பதால்
தானே அவர்களுக்கு இந்த துணிச்சலே வருகிறது.
ஊசலாடிக் கொண்டிருக்கும் மாநில அரசை
வளைப்பது இவர்களுக்கு ஒரு பிரச்சினையா என்ன…?

பொதுவாகவே கட்சியில், ஆட்சியில், அதிகாரத்தில்,
மத்தியில் இருப்பவர்கள் – தமிழக மக்களை
முட்டாள்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காவேரி நடுவர் மன்ற விவகாரத்திலேயே அதை பார்த்தோம்…

இப்போது ஒப்பந்தம் கையெழுத்து போட்டுவிட்டதால் –
இதை எதிர்த்து உள்ளூர் மக்கள் என்ன செய்ய முடியும்…?

மீண்டும் உண்ணாவிரதம் உட்காருவார்கள்.
பத்து நாள், பதினைந்து நாள் போனால் டென்ஷன்
உருவாகக்கூடும்…

சட்டம், ஒழுங்கு மாநில பிரச்சினை தானே..
மாநில அரசு கூப்பிட்டு பேசிக்கொள்ளும்….
சமாளித்துக் கொள்ளும்…
ஒருவேளை தேவைப்பட்டால்,
அப்போதைக்கு மீண்டும் எதாவது வழ-வழவென்று
வாக்குறுதி கொடுத்தால் போச்சு…

இப்படியே கொஞ்சம் ஆறப்போட்டால், ஆறின கஞ்சி
பழங்கஞ்சியாகி விடும். அதற்குள் வேறு எதாவது
சப்ஜெக்ட் கிடைக்காமலா போய் விடும்….

– தமிழர்கள், நம்பிக்கெடுபவர்களே தவிர,
இளிச்சவாயர்கள் அல்ல… முட்டாள்களும் அல்ல….

எங்கேயோ உட்கார்ந்து கொண்டு,
தமிழர்கள் எல்லாருமே இளிச்சவாயர்கள்
என்று நினைத்து செயல்படுவோரை –

எங்கே அடித்தால் வலிக்கும் என்பது
அவர்களுக்கு நன்கு தெரியும்…
அடிக்க வேண்டிய நேரத்தில்,
அடிக்க வேண்டிய இடத்தில்,
அடிக்கிறபடி அடிப்பார்கள்…

அப்போது, குதிகால் பிடரியில் பட
ஓடிப்-போக வேண்டியிருக்கும்…

அல்லது – ஓடிவர வேண்டியிருக்கும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மக்களுக்கு – பாஜக மந்திரிகளை விட அதிகமாகவே யோசிக்கத் தெரியும்….

 1. Bala from New York சொல்கிறார்:

  I wrote to you earlier it is a lot of money to be made
  Approximately $ 100,000 USD per acre per month.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Bala,

  Yes. I do remember…
  However, I am sure- this will NOT BE ALLOWED to happen here.

  -with best wishes,
  Kavirimainthan

 3. selvarajan சொல்கிறார்:

  திரு பாலகுமாரன் பற்றிய இடுகையில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன் அது :– // என்ன போராட்டம் செய்து என்ன பண்ணுவது — தமிழகத்தை ஒரு வழியாக்காமல் ஓயமாட்டார்கள் … ! விவசாயிகளின் டெல்லி போராட்டத்தைப் பற்றியோ — வறட்சி நிவாரண தொகை கேட்டதில் அரை சதவீதம் கூட கொடுக்க மனமில்லாத மத்திய அரசு — தமிழ்நாட்டின் வளத்தை சுரண்டி ” லாபம் ” காணுவதில் மட்டும் விடாப்பிடியாக கண்ணும் – கருத்துமாக செயல் வேகம் காட்டுவதை வேடிக்கைப்பார்க்கும் — தமிழக ” கையாலாகாத அரசும் — மற்ற கட்சிகளும் — ஒரு பிரிவு மக்களும் ” இருப்பது வேதனையானது ….

  டெல்டா பகுதி என்று ஒன்று இருந்ததாக கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு ” மீத்தேன் — கெயில் — ஹைடிரோகார்பன் ” போன்ற பாலைவன திட்டங்களை புகுத்தி சுடுகாடாக்க மும்முரமாக முனைப்பு காட்டுவது ஏன் … ?

  மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என உறுதிமொழி அளித்த பாஜக — மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் — தமிழக பா.ஜ .க. வெட்டி பேச்சாளர்கள் எல்லோரும் பசப்பு வார்த்தைகள் பேசி முதுகில் குத்தியது தான் மிச்சமோ …. ? // என்று …

  தற்போது தங்களின் கூற்றுப்படி மக்கள் அதிகமாக ” யோசித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ” உடபடுத்தியுள்ள பா.ஜ .க . மத்திய அரசு — எந்தவித நினைப்பில் தமிழகத்தை இந்தப்பாடாய் – படுத்துகிறது … ? உ .பி. யில் ஒரு யோகி முதல்வராக அமர்த்தியதைப்போல இங்கே அமர்த்தும் வரையிலா …?

  நம் தமிழக . ? மத்திய இணை அமைச்சரின் டிவிட்டர் செய்தி ஒன்று : //Posted Date : 09:06 (28/03/2017) Last updated : 09:13 (28/03/2017)
  ‘போராடவேண்டியது தமிழகத்திலா… டெல்லியிலா?’ – பொன்னார் கேள்வி // http://www.vikatan.com/news/tamilnadu/84749-should-farmers-protest-in-delhi-or-in-tn-questions-ponradhakrishnan.html … நல்ல கேள்விகளை கேட்பதும் — சந்தர்ப்பவாத அறிக்கைகள் விடுவதும் — நாசூக்கான ஏமாற்று பேச்சுக்களை பேசுவதும் தான் இவரது வேலையாகி விட்டதோ … ? இவரே சென்றவாரம் போராட்டம் செய்யும் விவசாயிகளை மத்திய விவசாய அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறியதும் — பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்பதாக கூறிய போதும் — போராடும் இடம் டெல்லி என்று இவருக்கு தெரியாதா …. ? என்னமோ நடக்குது — மர்மமா இருக்குது — ஒண்ணுமே புரியல …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.