மணல் வரும்படி – மாதம் 45 கோடி – திமுக, விசிக வுக்கும் நிதி உண்டு – ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்….

மணல் ரெட்டியின் வீட்டிலும், தொழில் செய்யும்
இடங்களிலும், தலைமைச்செயலர் வீட்டிலும்,
அலுவலகத்திலும் ரெய்டுகள் நடந்து 3 மாதங்கள்
முடிந்து விட்டன…

3 மாதங்கள் முடிந்தும் சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்படாததால்,
ரெட்டி ஜாமீனில் வெளியே விடப்பட்டு விட்டார்…!

தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றனவே,
எந்த கட்சியாவது இந்த வழக்கு என்ன ஆனது என்று
கேட்டிருக்கின்றனவா…?

வழக்கில் தாமதம் ஏன்…என்று
எந்த கட்சியாவது கேட்டதா…?

விசாரணை ஏன் விரைவாக நடக்கவில்லை…?
எத்தகைய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று
முக்கிய எதிர்க்கட்சி கேட்டதா …?

எப்படி கேட்கும்….? யார் கேட்பார்கள்…?
எல்லாருக்குமே நிதி பட்டுவாடா நடக்கும்போது..?

ஆளும் கட்சியைத்தவிர,
திமுக வுக்கும், விசிக வுக்கும் கூட நிதி கொடுக்கிறோம்…
அனைத்து கட்சிகளுக்கும் கொடுப்பது உண்டு… என்று
மணல் ரெட்டி வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்…

மணல் ரெட்டி கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின்
நகல் தங்களிடம் இருக்கிறது என்று கூறும்
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ஒரு
செய்திக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை கீழே
தந்திருக்கிறேன்…

படித்துப் பாருங்கள் – நம் நாட்டின் தலையெழுத்து
எப்படி இருக்கிறது என்று புரியும்…

மாநிலத்தில் அதிமுக ஆண்டால் என்ன…?
திமுக வந்தாலென்ன…?

மத்தியில் பாஜக ஆண்டாலென்ன ..?
காங்கிரஸ் ஆண்டாலென்ன…?

யார் ஆட்சியில் இருந்தாலும் –
யார் ஆட்சிக்கு வந்தாலும் –
உண்மையில் இங்கு எப்போதும் நிரந்தரமாக நடப்பது –
(கூட்டு) கொள்ளையர்கள் ஆட்சி தானே..?

—————————

பின் குறிப்பு –

ஜூ.வி.யில் இந்த செய்தி சனிக்கிழமை காலையே
வெளிவந்து விட்டது…. இதுவரை, திமுகவோ,
விசிகவோ – இந்த செய்திக்கு மறுப்போ, எதிர்ப்போ
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மணல் வரும்படி – மாதம் 45 கோடி – திமுக, விசிக வுக்கும் நிதி உண்டு – ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்….

 1. Sridhar சொல்கிறார்:

  How can the Government calling itself clean keep silent in a matter which it has full jurisdiction.

  Protecting (allowing them to go free by inaction ) the Black Money holder is also equal to generation of Black Money.

  Can some business earn Rs.50000/- per day. If so why not the Government Nationalise it in a single day without giving any opportunity in the NATIONAL INTEREST(which is a sweet word) taking all legal protections against any appeals.

  🙂 🙂 🙂 i know nothing is going to happen ( இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீதர்,

   நம் அரசியல்வாதிகளிடையே “நேர்மையானவர்” போல்
   தோன்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள்… ஆனால்,
   உண்மையாகவே நேர்மையானவர்களை காணோம்…
   ஒவ்வொருவருக்கு – ஒவ்வொரு வீக்னெஸ்…

   தூரத்துப் பச்சை என்பது போல்,
   வெளியிலிருந்து பார்த்தபோது –
   இவர் வந்தால் எல்லாம் மாறி விடும்
   என்று தோன்றியதெல்லாம் –
   வெறும் ” கானல் நீர் ” என்று அருகில்
   பதவிக்கு வந்த பிறகு) தெரிகிறது.

   இறைவன் கருணை மிக்கவன்…
   மனிதர் மாதிரி அல்ல…
   இன்னமும் கூட எனக்கு நம்பிக்கை இருக்கிறது…
   ( இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?) –
   காத்திருப்போம்….!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Sundar Raman சொல்கிறார்:

  கோர்ட்டு , வக்கீல் , பத்திரிக்கை , டிவி ….இவர்கள் எல்லோரும் இப்போவாவது , கொஞ்சம் கேள்வி எழுப்பலாம் , நிச்சயமாக ED / IT / CBI ..இந்த துறை சார்ந்தர்வர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் …( ஜேட்லீ இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தால் …கதை கந்தல் தான் ). – .

  • இளங்கோ சொல்கிறார்:

   சுந்தர்ராமன்.
   ஏன் சார் ஜேட்லி பாஜக இல்லையா ?
   இல்லை உத்தம பிரதமர், ஜேட்லீ கூட பேசவே மாட்டாரா ?
   என்ன ஆச்சு; ஏன் ஆக்ஷன் எடுக்கல்லைன்னு கேட்க முடியாதா?

   • Sundar Raman சொல்கிறார்:

    என் அறிவுக்கு எட்டலைன்னு சொல்றேன் … இப்ப கூட ரிலையன்ஸ் மீது 500 கோடி + 12% வட்டி 10 வருடங்களுக்கு ..அப்படின்னு ஒரு நியூஸ் ஓடுது . இந்த ரெட்டி எல்லாம் , மாநில அரசு கவனிக்க வேண்டியது … IT , மத்திய அரசின் கீழ் தான் வருகிறது . இந்த ஷக்திதாஸ் …. கழகத்துக்கு வேண்டியவராம் , சிதம்பரத்தின் நண்பர் வேறு என்று கேள்வி . சுப்பிரமணிய சுவாமி தான் அவரை விலக்கணும்னு போராடறார். ..குருமூர்த்தியும் என்னவெல்லாமோ எழுதுறார் ..ஒன்னும் நடக்க மாட்டேன்கிது . ஆக மொத்தம் மோடி நல்லவர் , ஊழல் செய்யாதவர் என்று பெயர் இருந்தால் மட்டும் போதாது …ஊழல் செய்தவரை தண்டிக்க தில் வேண்டும் …அதை இது வரை காமிக்கல .

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     சுந்தர ராமன்,

     // மோடி நல்லவர் , ஊழல் செய்யாதவர் என்று
     பெயர் இருந்தால் மட்டும் போதாது …
     ஊழல் செய்தவரை தண்டிக்க தில் வேண்டும் …
     அதை இது வரை காமிக்கல .//

     நன்றி…. இன்று நிச்சயம்
     மழை வருமென்று நினைக்கிறேன்… 🙂 🙂

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  எந்த வழியிலாவது பணத்தை ஈட்ட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் செயல் படுபவர்கள் நிறைந்த இந்த நாட்டில் — எவன் இயற்கையை சுரண்டி வீணடித்து எப்படி சம்பாதித்தாலும் ” தங்களின் பங்கு ” குறையக் கூடாது என்று எண்ணுகின்ற ஆளும் மற்றைய கட்சிகளின் போக்கு விலாவரியாக பல காலங்களாக தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது …

  அனைவருக்கும் தெரிந்தே நடக்கும் இந்த பங்குபோடும் விஷயம் பற்றி கவலைக் கொள்ள யாருக்கும் நேரமில்லை … நவீன முளைகளின் குறுக்குப் புத்தியால் பூமி, கடல், ஆகாயம், காற்று, நெருப்பு யாவும் தன் இயல்புத் தன்மையிலிருந்து ” மாறுபட்டு — மாசுபட்டு ” வருகிறது. அந்த பஞ்சபூதங்களும் அவ்வப்போது தங்களது சீற்றங்களைப் புயலாகவும், பூகம்பமாகவும், சுனாமியாகவும், அதிவெப்பமாகவும் வடிவமெடுத்து வெகுண்டெழுந்து எத்தனை முறைகள் எச்சரித்தாலும் மனிதகுலம் அதுகுறித்து இன்னும் விழிப்பு கொள்ளவும் இல்லை — அதற்கான நடவடிக்கையும் இல்லை ….

  அனைத்து கட்சிகளின் ” சொத்து மதிப்புகளை ” உற்று நோக்கினாலே எப்படி சேர்ந்தது இவ்வளவு என்று மலைக்க வைக்கிறது — வருமானம் கட்சிகளுக்கு எந்த வகையில் வருகிறது என்பதை பற்றி கவலைப் பட எவனுமே விரும்புவதில்லை — கொள்ளையடிக்கும் கூட்டாளிகளின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழும் கேடு கேட்ட அரசியல் நிறைந்த நாட்டில் — எவன் கொடுத்த ” வாக்கு மூலத்திற்கும் ” எந்த நடவடிக்கையும் இருக்காது என்பது தானே – உண்மை நிலவரம் …

  யோக்கியர்களைப் போல ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி தப்பிக்க நினைக்கும் — அனைத்து கட்சியினரும் ” கூட்டு களவாணிகள் ” தானோ … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.