“ஸ்வச்ச பாரத்”தும் – ” “மிச்ச “” பாரதமும்….

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கப்பம் கட்டி வருகிறோம்.
இந்தியாவை சுத்தப்படுத்த – மத்திய அரசுக்கு…!

பலர் மறந்திருப்பார்கள் – பலர் கவனித்திருக்க
மாட்டார்கள்… நாம் கொடுக்கும் ஒவ்வொரு service tax
bill -உடனும், அரை பெர்செண்ட் ஸ்வச்ச பாரத்துக்கும்,
அரை பெர்சண்ட் பிரதமரின் கரீப் கல்யாணத்திற்கும்
சேர்த்து வரி வசூலிக்கப்படுவதை…!

இந்த வரிப்பணம் அத்தனையும் எப்படி, எங்கே, யாருக்காக
செலவழிக்கப்படுகிறது…?
நமக்குத் தெரிந்தது – 20,000 கோடி ரூபாய், பிரதமரின்
வாரணாசி தொகுதியில் ஓடும் கங்கையை சுத்தப்படுத்த….
இதற்காகவே ஒரு மத்தியமந்திரி சம்பளம் கொடுத்து
அமர்த்தப்பட்டு, அவரும் அங்கேயே “டேரா” போட்டு உட்கார்ந்திருக்கிறார் –
இந்த பணத்தை செலவழிக்கவென்றே…!

இந்தியாவில் பிரதமரின் தொகுதி மட்டும் தான்
“ஸ்வச்ச” செய்யப்பட வேண்டிய தொகுதியா…?

வரியாக வசூலிக்கப்படும் பணம் எல்லா மாநிலங்களிலும்
ஓடும் ஆறுகளை சுத்தப்படுத்த செலவழிக்கப்படுவது
தானே நியாயம்….?

தமிழகத்தில் ஓடும் முக்கிய ஆறுகளை சுத்தப்படுத்த
வேண்டாமா…? அதற்கு நிதி ஏதும் ஒதுக்கப்படாதது ஏன்..?

திருச்சியில், காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில்
ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் “தண்ணீர் இயக்கம்” பற்றிய
செய்திக் கட்டுரை ஒன்றை பார்த்தேன்..(கீழே தந்திருக்கிறேன்..)
எங்கள் ஊர் என்பதால் தனி ஆரவம்……

இந்த இயக்கத்தினர், ஆர்வத்துடன் குப்பைகளை அள்ளலாம்
தூய்மையாக வைத்திருக்க பிரச்சாரம் செய்யலாம்…
ஆனால், காவிரி நாசமாவதன் முக்கிய காரணம் என்ன…?

மேல சிந்தாமணியிலும், ஓயாமரியிலும் “கடல்” போல்,
வந்து காவிரியில் கலக்கும் “கழிவு சாக்கடைகள்” தான்….

இந்த கடும் கோடையில் கூட நீங்கள் போனால் பார்க்கலாம் –
காவிரியின் தென் கரையில் (சாக்கடை) நீர்
ஓடிக்கொண்டிருப்பதை….. இந்த சாக்கடை நீர் காவிரியாற்றில்
கலப்பதை தடுக்காத வரையில், காவிரி எப்படி சுத்தமாகும்…?

இந்த இயக்கத்தினரால் அந்த விஷயத்தில் என்ன செய்ய
முடியும்…? திருச்சி மாநகராட்சியும், தமிழக அரசும் தான்
இதற்கு விடை காண முடியும்… மத்திய அரசு வசூலிக்கும்
“ஸ்வச்ச வரி”யிலிருந்து தமிழகத்திற்கும் ஒரு பங்கை பெற்று,
அதை தமிழக ஆறுகளை சுத்தப்படுத்துவதற்காக
செலவழிக்க வேண்டும்…. இந்த இயக்கத்தினரும்,
மற்ற ஊர்களில் நீர் வளத்தை பாதுகாக்க செயல்படும்

இயக்கத்தினரும் ஒன்றிணைந்து ,
“ஸ்வச்ச” வரியிலிருந்து இந்தியாவின் அனைத்து
ஆறுகளையும் சுத்தப்படுத்த நிதி ஒதுக்க உரிய முறையில்
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “ஸ்வச்ச பாரத்”தும் – ” “மிச்ச “” பாரதமும்….

 1. selvarajan சொல்கிறார்:

  எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனையால் மூன்றாவது உலகப் போர் மூண்டாலும் ஆச்சர்யமில்லை என்று ஐ.நாவின் துணை அமைப்பான ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு – Intergovernmental Panel on Climate Change) தெரிவித்துள்ளது பற்றி இங்கே ஆளுமையில் உள்ள யாருக்கும் அக்கறையில்லை …

  நீராதாரங்களை மாசுபடுத்தும் திட்டங்களும் — நிலத்தடி நீரை உறிஞ்சும் திட்டங்களும் இவர்களது தொடர் வேலையாக இருக்கும்போது — என்ன செய்வது … ? ” தண்ணீர் இயக்கம் ” போன்ற அமைப்புகள் ஆங்காங்கே தொடங்கி நீர் ஆதாரங்கள் கெடாமல் நம்மை – நாமே காத்துக்கொள்வதுதான் – தற்போதைய நிலைமை …

  கங்கையை சுத்தப்படுத்த செலவழிக்கும் அரசு மற்ற ஆறுகளைப்பற்றி கவலைகொள்ளாதது தான் சோகத்தின் உச்சம் … மனித செயல்பாடுகளினால் ஏற்படுகிற ” பருவ நிலை மாற்றம் மற்றும் கட்டுமீறிய நுகர்வுக் கலாசாரமும், சுற்றுச்சூழல் சீரழிவும்தான் ” முக்கிய காரணங்கள்…. இயற்கையை அழித்து – தன்னையும் அழித்துக் கொள்ள துடிக்கின்ற மனித இனம் — நாளை உணவுப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு — பட்டினி அதிகரித்து ” பட்டினிப்போர் ” உருவானாலும் ஆச்சர்யம் இல்லை ….

  அரசியல்வாதிகள் — ஆளும் வர்க்கத்தினர் தாங்கள் கல்லாக்கட்ட இயற்கையை சீரழித்து — சொத்து சேர்த்தும் பின்னாளில் ” சோத்துக்கு ஆளாய் பறக்கப்போவது ” — மட்டும் உண்மை … தண்ணீர் இயக்க நண்பர்களுக்கு நம் தலை தாழ்ந்த வணக்கங்கள் … !!! ஸ்வச்ச பாரத் துக்கு நிரந்தர வருவாய் – ஆனால் மிச்ச பாரதத்துக்கு …. ? ” நீரின்றி அமையாது உலகு ” — என்பதற்கு மாற்று ஏதாவது வைத்து இருப்பார்களோ- பஞ்ச பூத திருடர்கள் … ?

 2. Sundar Raman சொல்கிறார்:

  ஆக்க பூர்வமாக எதையும் செய்யாமல் ( அதாவது களத்தில் இறங்காமல் ) , யோசனை மட்டும் சொல்வதற்கு மன்னிக்கவும் . வளைகுடா நாடுகளில் நாம் வீட்டில் உபயோகித்து வீணாகும் தண்ணீரை ( குளியல் மற்றும் டாய்லெட் ) , குழாய் மூலம் எடுத்து , அதை இயன்ற வரை சுத்தகரித்து , மீண்டும் சொட்டு நீர் குழாய்கள் மூலம் சாலை ஓரங்களில் நட்ட வேப்ப மரங்கள் , புல் தரை , பூக்கள் எல்லாவற்றுக்கும் உபயோகிக்கிறார்கள் . திருச்சி கைலாசபுரத்தில் கூட இது போன்று 70களில் செய்தது உண்டு . சாலையின் இரு புறம் , மேலும் காடுகள் ( இருந்தால் ) – இந்த தண்ணீரை எடுத்து நிறைய மரம் வளர்க்கலாம். இந்த தண்ணீரை டிரான்ஸ்போர்ட் செய்வது தான் பெரிய சவால் , பெரிய என்ஜினீயர்கள் , மற்றும் பிளாஸ்டிக் குழாய் பற்றி நிறைய விவரம் அறிந்த அறிஞர்கள் , செல்வந்தர்கள் எல்லாரும் சேர்ந்து இதை சோதனை முறையில் செய்து பார்க்கலாம்.

 3. புதியவன் சொல்கிறார்:

  ஏய்… எல்லாப் பயலுவளும் சுய’நலவாதிகள் இல்லை. நல்லவர்களும் தமிழ் நாட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும்படியான, நேர்மறையான செய்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.

  ‘ஸ்வச்ச’ வரியிலிருந்து எதுவும் ‘மிச்ச’மாகாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   எதிர்காலத்தில், அரசியலுடன், கூடவே பிற நேர்மறையான
   செய்திகளையும் நிறைய பகிர்ந்து கொள்ளலாமென்று
   உத்தேசம் ( ஏற்கெனவே துவங்கி விட்டேன்….! )
   (அரசியல் என்றாலே – எதிர்மறை என்றாகி விட்டது பாருங்கள்…!!! )

   இந்த தளத்தை ஒரு Readers Digest மாதிரி,
   நான் தேடித்தேடி படிக்கும்
   சுவாரஸ்யமான / பயனுள்ள பல விஷயங்களைப்பற்றியும்
   யோசித்து – எழுதி,
   நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விவாதிக்கலாமென்று
   இருக்கிறேன். சரி தானே…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s