National Geographic ஒளிபரப்பிய திருமலை-திருப்பதி பற்றிய ஒரு முழுமையான வீடியோ –

முந்தாநாளிரவு (27/03/2017 ) National Geographic
தொலைக்காட்சி சேனலில் திருமலை-திருப்பதி பற்றிய
முழுமையான செய்தித்தொகுப்பு (documentary)
ஒன்றினை (44 நிமிடம்) ஒளிபரப்பினார்கள்….

திருப்பதியில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்
அனைத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்…
மலையில் படிகளில் நடையாக ஏறுவதில் துவங்கி,
கோவில், பிரகாரங்கள், சுவாமி தரிசனம், வேத பாடசாலை,
தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுவையான
லட்டுவும், சாப்பாடும் தயாராகும் விதம், அலங்காரம்,
வாலண்டியர்கள், உண்டியல், பிரம்மோத்சவம்,
பாதுகாப்பு ஏற்பாடுகள் –
என்று மிக அழகாக ஒன்றுவிடாமல்
படமாக்கி இருக்கிறார்கள்.

அன்று தொலைக்காட்சியில்
பார்க்கத் தவறிய நண்பர்களுக்காக,
கீழே link கொடுத்திருக்கிறேன்…

( நம்பிக்கை இல்லாதவர்கள் கூட,
அங்கே என்னவெல்லாம் நடக்கிறது
எவ்வளவு கூட்டம் வருகிறது,
எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை எல்லாம்
தெரிந்து கொள்ள இதைப் பார்க்கலாம் ….. )

Inside Tirumala Tirupati Full Video by Nat Geo.


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to National Geographic ஒளிபரப்பிய திருமலை-திருப்பதி பற்றிய ஒரு முழுமையான வீடியோ –

 1. தமிழன் சொல்கிறார்:

  என்னால் அன்று இதைக் காண இயலவில்லை. (தின நடைக்குப் போய்விட்டதால்). பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. மிகுந்த மகிழ்ச்சி.

  இந்தக் காணொலி எடுத்து கொஞ்ச நாளாயிருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது, மஹாத்வாரிலும், ஒவ்வொரு த்வாரிலும் நுழையவிடுவதோ அல்லது வெளியேறுவதோ நடக்கிறது. இரண்டும் ஒரே சமயத்தில் (முன்பு இருந்ததுபோல்) நடப்பதில்லை (அதாவது நடுவில் உள்ள கயிறுக்கு இடதுபக்கம் கோவிலுக்குள் மக்கள் நுழைவர், வலது பக்கம் கோவிலிலிருந்து மக்கள் வெளியேறுவர்). தரிசனம் முடிந்து கோவில் வளாகத்திலேயே கொடுக்கும் பிரசாதத்தைப் பற்றி காணொலியில் சொல்லவில்லை. ‘நமூனா ஆலயம்’ பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதற்கு முன் பார்த்த காணொளி, நேரடியாக ஆலயத்திலேயே எடுக்கப்பட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

  கடந்த 40-45 வருடங்களில் நிறைய மாறுதல்களைப் பார்க்கிறேன். எனக்கு 9 வயதாகும்போது, கர்ப்பக்ரஹத்தின் வாசலில் இருந்து தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது. (அப்போவும் கூட்டம் இருக்கும் ஆனால் 1 மணி நேரத்துக்குள் பெருமாள் தரிசனம் ஆகிவிடும்). அங்கேயே, துளசி தீர்த்தம் ஒரு UNIQUE பாத்திரந்திலிருந்து வழங்குவார்கள். 86களில், எத்தனை லட்டு வேண்டுமோ அத்தனையையும் வாங்கிக்கொள்ளும் வசதி இருந்தது. இப்போது ஆன்லைனில் நிறைய வசதிகளைச் செய்துள்ளனர். உணவுக்கான இடங்களும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

  இட விஸ்தீரணத்தினால், ஒவ்வொரு இடங்களுக்கும் நடப்பதுதான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. (மலையை நடந்து கடப்பது நல்ல அனுபவம். ஆனால் மேல் திருப்பதியில் ஒவ்வொரு இடங்களுக்கும் நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது)

  முடிந்த அளவு FRAUD எதுவும் நடக்காமல் தேவஸ்தானம் கண்காணிப்புகள் வைத்திருந்தாலும், அதையும் மீறி நிறைய முறைமீறல்கள் நடக்கின்றன. TECHNOLOGYஐ உபயோகப்படுத்தி நிறைய CONTROLS வைத்துள்ளார்கள். பழைய டிக்கெட் உபயோகப்படுத்த முடியாது, தரிசனம் இல்லாமல் லட்டு வாங்க முடியாது, மலைப்பாதை வழியாக நடந்துவருபவர்களுக்கு, காலி கோபுரம் தாண்டியவுடன் அடையாள அட்டை, இன்னும் இரண்டு இடங்களில் செக்கிங் என்று முடிந்தவரை தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். கர்ப்பக்ரஹத்துக்கு முன்னால் வரை கண்காணிப்பு கேமராக்கள் வைத்துள்ளார்கள் (ஊழியர்கள், சில பக்தர்களை நிறைய நேரம் அங்கு விதியை மீறி அனுமதிக்கக்கூடாது என்பதற்காக). நிறைய பக்தர்கள், ‘ஜரிகண்டி என்று சொல்லி பக்தர்களை இழுத்துவிடும் வாலன்டியர்களிடம் கோபம் கொள்வார்கள்.. ஆனால் அவர்கள் அவர்களது கடமையைச் செய்கிறார்கள்) IT IS A MASSIVE OPERATION. வாலன்டியர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் பாராட்டுக்கள்.

 2. R KARTHIK சொல்கிறார்:

  கோவிந்தா கோவிந்தா

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இன்று திருமலை திருப்பதி என்று அனைவராலும் போற்றப்படுகிற இடமும் — அங்கே குடிகொண்டுள்ள வெங்கடாஜலபதியும் மிகவும் போற்றும் தெய்வமாகவும் – பலகோடி மக்கள் தரிசிக்க தவம் இருக்கும் கடவுளாகவும் — எத்தகைய சிரமங்களை { அடைத்து வைப்பது — இழுத்து தள்ளவது — ஒரு சில வினாடிகளே கடவுளை காண அனுமதிப்பது போன்ற } நிர்வாகம் கொடுத்தாலும் தரிசித்தே தீரும் பக்தர்கள் அலைமோதும் கோயிலாகவும் — அதிக வருமானம் ஈட்டும் தெய்வமாகவும் விளங்குகிற திருத்தலத்தைப்பற்றி விலாவரியாக தெரிந்துகொள்ள
  ……

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  நீங்கள் எந்த நோக்கத்துடன் இந்த link-ஐ இங்கே
  கொடுக்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை…

  இதை எல்லாம் நீங்கள் முழுவதுமாக படித்து விட்டு,
  ஏற்றுக்கொண்டு தான் link கொடுத்திருக்கிறீர்களா ..?

  மன்னிக்கவும். இந்த ஆபாசத்தை பிறர் படிக்க நானும் துணைபோக
  விரும்பவில்லை என்பதால், link-ஐ நீக்கி விட்டேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • selvarajan சொல்கிறார்:

   அய்யா … ! ஒரு தேர்ந்த ” வேத விற்பனர் ” ஆராய்ந்த ஆய்வு என்பதால் கொடுத்தேனே தவிர எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது … ” சர்ச்சைக்கு வழி வகுக்கும் ” என்பதால் நீக்கினேன் என்று கூறியிருக்கலாம் — // இந்த ஆபாசத்தை பிறர் படிக்க நானும் துணைபோக
   விரும்பவில்லை என்பதால், link-ஐ நீக்கி விட்டேன்.// என்று
   கூறியிருப்பது — நான் வேண்டுமென்றே ஆபாசத்தை திணிக்க முயன்றாதாக மற்றவர்கள் நினைக்க நேரும் … எது எப்படியோ லிங்கை நீக்கியதற்கு … நன்றி …!!!

  • புதியவன் சொல்கிறார்:

   மிக்க நன்றி கா.மை சார். எனக்கு இடுகையில் பெரிய கரும்புள்ளியாகத் தெரிந்ததற்கு பெரிய பின்னூட்டம் இட முயன்று பின் வெளியிடவில்லை. கற்ற பண்டிதர் மனைவி வழியில் தூரத்து சொந்தம். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி மற்றும் unfortunate incidences காரணமாக வயதான காலத்தில் அவர் இம்மாதிரி பத்திரிகையில் எழுதினார். சர்ச்சைக்குரிய சகிக்கமுடியாத, வாழ்க்கை முழுவதும் follow பண்ணிய நெறிகளுக்கு எதிராக எழுதியவைகள் அவர் வாழ்வில் கரும்புள்ளிதான். மிகவும் படித்தவர், பெருமை கொண்டவர் என்பதையெல்லாம் அவர் கெடுத்துக்கொண்டார். இவரளவுக்கு இல்லாவிட்டாலும் புட்டபர்த்தி சாயிபாபாவின் பக்தராகவும் அங்கு பலகாலம் முக்கியப் பொறுப்பில் இருந்தவரும் தன் குடும்பத்தில் விதியினால் நேர்ந்த சோகம் காரணமாம கடைசிகாலத்தில் தான் கொண்டிருந்த நெறிகளுக்கு மாறாக சாயிபாபா பக்தியிலிருந்து விலகினார். அவர்கள் இப்படிச் செய்வதன்மூலம் எதிர்பாளர்களிடமிருந்து குறுகியகாலப் புகழ் பெறலாம் என்ற நினைப்பே ஆபாசமானதுதான். அவரைப்போன்றவர்களை உதாரணம் காட்டுபவர்கள், அவரைவிட அறிவிலும் படிப்பிலும் மேம்பட்டவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா?

   நீக்கியதற்கு மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.