பிரசிடெண்ட் டுடெர்தே – ஹீரோவா… கொலைகாரரா….? ஒரு வெகு சுவாரஸ்யமான வீடியோ ரிப்போர்ட்…..

பிலிப்பைன்ஸின் வித்தியாசமான ஜனாதிபதி
டுடெர்தே…. சொன்னதை செய்திருக்கிறார் …
100 நாட்களில்….

டுடெர்தே-யை பற்றி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தல்
சமயத்தில், விமரிசனம் தளத்தில் விவாதித்தோம் –
நினைவிருக்கிறதா…?

அவர் கொண்டாடப்பட வேண்டிய ஹீரோவா அல்லது
இரக்கமே இல்லாத கொலைகாரரா..?

சினிமா ஹீரோக்களையே கொண்டாடும் இங்கு –
இவரைப்போன்ற ஒருவர் வந்தால்….?
தாக்குப் பிடிப்போமா..? கொண்டாடுவோமா…?

சரித்திரம் தான் இதற்கு விடை சொல்ல வேண்டும்….!!!

அல்ஜஜிரா தொலைக்காட்சிக்கு
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுடெர்தே
அளித்துள்ள ஒரு படு சுவாரஸ்யமான
வீடியோ பேட்டி –

எனக்கென்னவோ, பேட்டியில் அவர் மிகவும் realistic-ஆக தான்
பேசி இருப்பதாகத் தோன்றுகிறது….
குறிப்பாக பேட்டியை முடிக்கும்போது சொல்லி இருப்பவை….

பேட்டியை முதலில் பார்த்து விடுங்களேன்…
பிறகு பேசுவோம்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பிரசிடெண்ட் டுடெர்தே – ஹீரோவா… கொலைகாரரா….? ஒரு வெகு சுவாரஸ்யமான வீடியோ ரிப்போர்ட்…..

 1. தமிழன் சொல்கிறார்:

  அவர் செய்வது சரியான அணுகுமுறை. அவர் மேயராக இருந்தபோதே ‘சொன்னதைச் செய்தவர்’. இத்தகைய குற்றச் செயல்களில் (DRUG SELLERS USERS) ஈடுபடுபவர்களை, ராணுவக் கோர்ட்டின் மூலமாக விரைந்து, அதாவது 1-2 வாரங்களுக்குள் தண்டிக்கவேண்டும். நம் நாட்டில் இருப்பதுபோல், ‘கைப் புண்ணைக் கண்டறிய’, 20-30 வருடங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏகப்பட்ட அப்பீல், கீழ்கோர்ட், இடை கோர்ட், மேல் கோர்ட் என்று பலப்பல நீதிமன்றங்கள், பணம் உள்ளவர்களுக்கு சாதகமாக இருக்கும்படியான நீதிமுறை நம்முடையது. அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை.

  டுடெர்தேயின் அணுகுமுறையில் இருக்கும் குறைபாடு, நம் நாட்டில் நடக்கும் என்கவுன்டர் போன்றது. அதாவது, 20 பேரைக் கொல்லும்போது, 20 பேரில் யாரேனும் அப்பாவிகள் இருந்தாலோ அல்லது, சிக்கினவர்கள், நெட்வொர்க்கைக் காட்டிக்கொடுக்கக்கூடியவர்கள் என்று போலீஸ் சந்தேகப்பட்டு கொன்றிருந்தாலோ, அதற்கு நிவாரணம் கிடைக்காது. அதாவது, போலீஸ் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் சுட்டுவிடலாம். இதனை மட்டும் களைந்துவிட்டால், டுடெர்தே செய்வது முற்றிலும் சரியானது.

  அவர் சொன்ன, WHY ARE THE FOREIGNERS COMPLAINING. I DID NOT PROMISE THEM ANYTHING. I PROMISED MY FILIPINO PEOPLE என்ற வரிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை.

  பிலிப்பைன்ஸ் சிறிய நாடு. நம் நாட்டில் இத்தகைய அணுகுமுறை, நம்மவர்களால் (நம் தலைவர்களால்) செய்யமுடியாது. ஏனென்றால், அதிகார வர்க்கம், மக்கள், படித்தவர்கள் முதற்கொண்டு எங்கெங்கிலும் புரையோடிப்போயிருக்கும் ஊழல், பொறுப்பின்மை, ‘எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன’ என்று எண்ணும் சுயநலம், இந்தியர்கள் என்ற ஒற்றுமையுணர்வைவிட, மதம் ஜாதி இவற்றால் பிளவுபட்டிருப்பது, BEING INFLUENCED BY EXTERNAL COUNTRIES (புரியும் என்று நினைக்கிறேன். அது கம்யூனிஸ்டுகளானாலும் சரி, கிறித்துவ இஸ்லாமிய மக்களானாலும் சரி-பெரும்பாலும்). இது நேர்மறை கருத்து இல்லை என்றாலும், இதுதானே உண்மை நிலவரம் (பெரும்பாலும்)

  இடுகைக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தைத் தொடாமலிருக்க மாட்டேனே. நான் இந்த நாட்டிற்கு சிலமுறை பயணம் செய்திருக்கிறேன். இவர்களோடு கொஞ்சம் பழகியிருக்கிறேன். பெரும்பாலும், ஹைஜீனிக் (சுத்தம்) மக்கள். உடல், உடை சுத்தம் முதற்கொண்டு, வீட்டுச் சுத்தம் முதற்கொண்டு, நம்மைவிட மிக மிக உயரத்தில் இருப்பவர்கள். ஸ்பானிஷ், அமெரிக்க கலாச்சாரத் தாக்கத்தால், அனேகமாக எல்லோரும் ஆங்கிலம் எழுத, பேசத் தெரிந்தவர்கள். RETAIL BUSINESS (Fashion, Restaurant etc.), மருத்துவத்தாதிகள் (NURSE) இந்த இரண்டு ப்ரொஃபஷனிலும் இவர்கள் மிகச் சிறந்தவர்கள். நம் நாடு, NRIகளை மதிப்பதைவிட, பிலிப்பைன்ஸ், வெளி நாட்டில் வேலை பார்க்கும் தங்கள் குடிமகன்’களை இன்னும் அதிகமாக மதிக்கிறது, அவர்கள் நலத்தைப் பேணுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   //விரைந்து, தண்டிக்கவேண்டும். நம் நாட்டில் இருப்பதுபோல், ‘கைப் புண்ணைக் கண்டறிய’, 20-30 வருடங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏகப்பட்ட அப்பீல், கீழ்கோர்ட், இடை கோர்ட், மேல் கோர்ட் என்று பலப்பல நீதிமன்றங்கள், பணம் உள்ளவர்களுக்கு சாதகமாக இருக்கும்படியான நீதிமுறை நம்முடையது. அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. //

   மிகச்சரி… நான் உங்களுடன் முழுவதுமாக ஒத்துப்போகிறேன்.
   நம்ம ஊர் judicial system குற்றவாளிகளை தண்டிப்பதை விட,
   தப்பித்துப்போகவே அதிகம் வாய்ப்பு கொடுக்கிறது.

   கணக்கு வழக்கில்லாமல் hearing தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. எனக்குத் தெரிந்து, இந்திராகாந்தி சம்பந்தப்பட்ட ஒரு கொலைவழக்கு – அந்நாள் ரெயில்வே அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் –
   லலித்நாராயண் மிஸ்ரா (இந்திரா காந்தியை மறைமுகமாக blackmail செய்ய முயன்ற ஆசாமி….) கொல்லப்பட்ட வழக்கு – கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது…..இதுபோல் இன்னும் எத்தனையோ…..

   ஒரு சினிமா ரிலீஸ் ஆவதில் பிரச்சினை என்னும்போது
   மட்டும் பாய்ந்து வந்து உடனே தீர்வு கொடுக்கப்படுகிறது.

   எந்தவித பயமும் இன்றி, கூலிப்பட்டாளங்கள் எட்டு கொலை,
   பத்து கொலை என்று கணக்கில் ஏற்றிக்கொண்டு சுற்றி சுற்றி வந்து தங்கள் தொழிலை தங்கு தடையின்றி தொடர்கின்றன.

   நீதிமன்ற விவகாரங்களில், சுலபமாக அரசியல்வாதிகளும்,
   அதிகார வர்க்கமும் தலையிடுகின்றனர்….

   ஓய்வுபெரும் நீதிபதிகளுக்கு (உச்சநீதிமன்ற தலைமை
   நீதிபதிகளுக்கு கூட கவர்னர் பொறுப்பு ) உயர்ந்த பதவிகளை
   கொடுக்கும்போது, அவர்களிடமிருந்து –
   நேர்மையான தீர்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எப்படி வரும்..?

   அரசாங்க நிர்வாகம், போலீஸ் நிர்வாகம், நீதித்துறை நிர்வாகம்
   இவை எதன் மீதும் நம்பகத்தன்மை இல்லாமல் போவதன்
   விளைவு தான் –

   குற்றம் செய்பவர்களுக்கு – எதைக்கண்டும், யாரைக்கண்டும்
   பயம் இல்லை… எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு
   வெளியே வந்துவிடலாம் என்கிற துணிச்சல் ஏற்படுகிறது….

   நமது இன்றைய சமூக அவலக்கேடுகளின் மூல காரணம்
   மனசாட்சியும் இல்லை – பயமும் இல்லை.
   ஒன்று பணம் அல்லது ஆட்சி-அதிகாரம் இவை இருந்தால்
   போதும்… அவர்களை எந்த சட்டமும், எந்த சிஸ்டமும்
   ஒன்றும் செய்ய முடியாது…

   மணல் கொள்ளை வழக்குகள்,
   கிரானைட் கொள்ளை வழக்குகள்,
   தாதுமணல் கொள்ளை வழக்குகள் –

   இவையெல்லாம் என்றைக்காவது முடிவிற்கு வரும் என்கிற
   நம்பிக்கை யாருக்காவது இருக்கிறதா…?

   எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே கதி தான்…

   டுதெர்டே போல் ” ஒரேயடியாக போட்டுத்தள்ள ” முடியாவிட்டாலும் – குறைந்தபட்சம் ஒரு 10 ஆண்டுகளுக்கு வெளியே வரமுடியாதபடி “உள்ளே – போட்டுத்தள்ள”
   வாவது “தில்” உள்ள எவராவது நம் கண்ணில் தென்பட்டால் –
   அவரை நாட்டுக்கு சர்வாதிகாரியாகவே நியமித்து விடலாம்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Ganpat சொல்கிறார்:

  //அவரை நாட்டுக்கு சர்வாதிகாரியாகவே நியமித்து விடலாம்….//

  காவிரிமைந்தன்,தமிழன் ,கண்பத் ஆகிய மூவரும் ஒத்துக்கொண்டாகி விட்டது..இன்னும் சில கோடி பேர்தான் பாக்கி. 🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   முதலில் அதற்கேத்த ஆள் கிடைக்க வேண்டுமே ..
   யாராவது உங்கள் பார்வையில் தென்படுகிறார்களா…? 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.