இது ஸ்பெஷல் ஜனநாயகம் – ஆந்திரா டைப்…!!!

ஆந்திரா தான் இந்தியாவின் முதன்மை மாநிலமாக
ஆகப்போகிறது என்றும் – அதற்காகவே தான் ஒருநாளைக்கு
24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருப்பதாகவும்
சொல்லிக் கொண்டே இருக்கும் தந்தை – முதலமைச்சர்…

தனயன் எம்.எல்.சி. ப்ளஸ்
பிரபல தொழில் அதிபர் ப்ளஸ்
ஆளும் கட்சியின் செயலாளர் ப்ளஸ்
எதிர்கால அமைச்சர்…

வேதகோஷங்கள் முழங்க தனியாக பதவியேற்பு….!!!

கீழே பத்திரிகைச் செய்தியை கொஞ்சம் பாருங்களேன் –
( http://www.dinamalar.com/news_detail.asp?id=1741656 )
—————————————————–

ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் எம்.எல்.சி.,யாக
பதவியேற்பு –

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்,
நர லோகேஷ், பண்டிதர்கள் வேத கோஷம் முழங்க, சட்ட
மேல்சபை உறுப்பினராக நேற்று பதவியேற்றார்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு
நாயுடு முதல்வராக உள்ளார். இவரின் மகனும், பிரபல
தொழில் அதிபருமான நர லோகேஷ், 34, எம்.எல்.சி., எனப்படும்
சட்ட மேல்சபை உறுப்பினராக நேற்று பதவியேற்றார்.

மாநில அரசின் வர்த்தக ஆலோசனைக் குழு அலுவலக
அறையில், பண்டிதர்களின் வேத கோஷம் முழங்க,
லோகேஷின் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

தெலுங்கு தேசம் – பா.ஜ., மற்றும் ஜனநாயக முற்போக்கு
முன்னணி கட்சிகளைச் சேர்ந்த மேலும் சிலர்,
எம்.எல்.சி.,க்களாக பதவியேற்றனர்.

ஆனால், இவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி சட்டசபையில்
நடந்தது.

எம்.எல்.சி.,யாக பதவியேற்றுள்ள நர லோகேஷ், விரைவில்
மாநில அமைச்சராக நியமிக்கப்படலாம் என, தகவல்கள்
வெளியாகியுள்ளன.

——————————-

எப்படி ஆந்திர ஸ்பெஷல் ஜனநாயகம்… ?

இந்த செய்தியை படித்ததும், சில மாதங்களுக்கு முன்னர்
இதே குடும்பத்தைப்பற்றிய ஒரு வித்தியாசமான செய்தி
இதே விமரிசனம் தளத்தில் எழுதியது நினைவிற்கு வந்தது…
நண்பர்கள் ஏற்கெனவே படித்திருக்கக்கூடும்…

இருந்தாலும் இப்போது இத்துடன் சேர்த்து மீண்டும் படித்தால் இன்னமும் கொஞ்சம் கூடுதலாக ரசிக்கும் என்று நினைத்து கீழே
பதிந்திருக்கிறேன் …… 🙂 🙂 🙂

———————————————————-

ச.பா.(ஷ்) நாயுடு…கடன்-கார தாத்தாவிற்கு கோடீஸ்வர
பேரன்…!!! Posted on ஒக்ரோபர் 23, 2016 by vimarisanam –
kavirimainthan
—————————–

சபாஷ் நாயுடு குடும்பம்

சபாஷ் நாயுடு
குடும்பம்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
இங்கத்திய பொருளாதாரம் முதலாளித்துவமா…?
அல்லது பொதுவுடைமையா…?

அல்லது ……?

கீழ்க்கண்ட செய்தியை படித்து விட்டு யோசிக்கலாம்…!!!

ஆந்திர பிரதேச முதல்வர் cum தெலுகு தேச கட்சியின்
நிறுவனத் தலைவர் திருவாளர் சந்திரபாபு நாயுடு….
தெ.தே.கட்சியின் செயலாளர் அவரது மகன் லோகேஷ்…!

இரண்டு நாட்கள் முன்பு, அவர்களது குடும்ப சொத்து
விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன –

விவரம் –

திருவாளர் / திருமதி –

சந்திரபாபு நாயுடு –
சொத்து மதிப்பு – 3.73 கோடி ரூபாய்
கடன் – பரோடா வங்கியில் கடன் 3.06 கோடி ரூபாய்…
ஆக நிகர சொத்து -வெறும் 67 லட்சம் ரூபாய் தான்…!!!

மனைவி திருமதி புவனேஸ்வரியின்
சொத்து மதிப்பு 33.66 கோடி ரூபாய்.
அதில், தங்க நகைகளின் மதிப்பு, 1.27 கோடி ரூபாய்.
“நோ” கடன்……!!!

மகன் லோகேஷ் நாயுடுவின்
சொத்து மதிப்பு – 15.5 கோடி ரூபாய்…
“நோ” கடன்..!!!

இவரது மனைவி பிராம்ணி
சொத்து மதிப்பு – 5.38 கோடி ரூபாய்…
“நோ” கடன்…!!!

பிராம்ணி, லோகேஷ் ஆகியோரின் மகன் –
அதாவது ச.பா.(ஷ்). நாயுடுவின் பேரன் –

18 மாத வயதேயான,
இன்னும் பேசவே வராத – தேவன்ஷ் நாயுடுவின்
சொத்து மதிப்பு – 10 கோடி ரூபாய்…..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவர் பெயரில் “நோ” கடன் (நல்ல வேளை) ….!!!

இந்த “அற்புத குடும்பத்தின்” மேற்படி
சொத்து விவரங்களை 2 நாட்கள் முன்னால்
அறிவித்த திரு.லோகேஷ் நாயுடு
கூறியதாவது –

” இந்தியாவிலேயே ( முதல்முறையாக…) –
கடந்த ஆறு ஆண்டுகளாக, எங்கள் குடும்பத்தின்
சொத்து மதிப்பை, நாங்களாவே முன்வந்து
தெரிவிக்கிறோம். நாட்டில் வேறு எந்த குடும்பமும்,
இப்படி தெரிவிக்கவில்லை. அரசியல்வாதிகள்,
எல்லாரும் எங்களை போல் ( ? ), ஆண்டுதோறும்
தங்களின் சொத்து மதிப்பை தெரிவித்தால்,
ஊழல் என்ற பேச்சுக்கு இடமிருக்காது….”

சபாஷ் நாயுடு…. 🙂 🙂 🙂

இவர்களைப் பார்த்து பெருமைப்படுவதா….?
அல்லது பொறாமைப்படுவதா…?

—————————————–

பின் குறிப்பு – தங்கள் நேர்மையை தம்பட்டமடித்துக்
கொள்ளும் இந்த “நாணயமான” அரசியல்வாதி,
தங்கள் 18 மாத வயதேயான
குழந்தை எப்படி 10 கோடி ரூபாய் சம்பாதித்தது என்பதையும்
கொஞ்சம் விளக்கிச் சொன்னால் தேவலை…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இது ஸ்பெஷல் ஜனநாயகம் – ஆந்திரா டைப்…!!!

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  //மாநில அரசின் வர்த்தக ஆலோசனைக் குழு அலுவலக
  அறையில், பண்டிதர்களின் வேத கோஷம் முழங்க,
  லோகேஷின் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது//
  ராம் மோகன் ராவும் தமிழகத்தின் இதே வர்த்தக ஆலோசனை குழுவின் “அடிஷனல் சீஃப் செக்ரெட்டரி” என்கின்ற பொறுப்பில் (கிட்டத்தட்ட) பதவி ஏற்றது கோயின்ஸிடன்ஸ்-தான்.
  யாரும் தப்பாக எண்ணவேண்டாம்.

 2. புதியவன் சொல்கிறார்:

  சந்திரபாபு நாயுடுவைப் பற்றி பெருமைப்பட ஒன்றும் இல்லை. இது ஆந்திர கருணானிதி குடும்பம். ஒரு வித்தியாசம், ஒருத்தர், ‘கடவுள் மறுப்புக் கொள்கையைச்’சொல்லிக் கொள்ளையடிப்பவர். இன்னொருவர் ‘கடவுள்’ பெயரைச் சொல்லிக் கொள்ளையடிப்பவர். சட்டப்படி நிரூபிக்க முடியவில்லை என்பதால் உத்தமர்களாயிடுவார்களா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.