திரு.ஷிவ் நாடார்… பெருமைப்படுவோம்…!!!

பணத்தில் மட்டுமல்ல… குணத்திலும் இந்த தமிழருக்கு
மதிப்பான இடம்!

கடந்த ஆண்டில் அதிக நிதி நன்கொடையாக அளித்தவர்கள்
பட்டியலில் ஹெச்.சி.எல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார்
இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். பணத்தில்
மட்டுமல்ல, குணத்திலும் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பதை
இந்தியாவுக்கு எடுத்துக் காட்டியுள்ளார் ஷிவ் நாடார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார், கடந்த 1976-ம் ஆண்டு
ஹெச்.சி.எல் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்த
நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 32
நாடுகளில் ஹெச்.சி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டம்
பெற்றபிறகு, டெல்லியில் உள்ள டி.சி.எம் (DCM) நிறுவனத்தில்
பணிக்கு சேர்ந்த ஷிவ் நாடார், ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ்
நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன், ஐ.பி.எம். நிறுவனத்தில்
பணிபுரிந்தார்.

தொடந்து, 1982 -ம் ஆண்டு, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் முதல்
கம்ப்யூட்டர் விற்பனைக்கு வந்தது. ஹெச்.சி.எல். நிறுவனத்
தயாரிப்புகளுக்கு உலகம் முழுக்க மிகுந்த வரவேற்பு
கிடைத்தது. இந்தியாவின் 5-வது பெரும் பணக்காரர் இவர்.

தொழிலில் மட்டுமல்லாமல் சமுதாயப் பணிகளை
மேற்கொள்வதிலும் ஷிவ் நாடார் ஆர்வம் காட்டினார். கடந்த
2008-ம் ஆண்டு ஷிவ் நாடார் அறக்கட்டளையை நிறுவினார்.

அந்த அறக்கட்டளை வழியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய
ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்க உதவிகள்
செய்து வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு ஷிவ்நாடாரின்
மகள் ரோஷினி அறங்காவலராக உள்ளார்.

இந்த ரோஷினிதான் 6.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள
ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. ஷிவ்
நாடார் அறக்கட்டளை சிறந்த சேவையாற்றி வருவதாக
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் நகரில் உள்ள பாப்சன் கல்லூரி
அண்மையில் ‘Changemaker award ‘ விருது வழங்கி
கௌரவித்தது. கல்லூரி முதல்வர் கெர்ரி ஹீலே,
ரோஷினியிடம் விருதை வழங்கினார். ‘எங்களது பணிகளை
பாப்சன் போன்ற தலை சிறந்த நிறுவனங்கள் அங்கீகரிக்கும்
போது நாங்கள் இன்னும் ஊக்கம் பெறுகிறோம்’ என்று
விருதுபெற்ற போது தெரிவித்தார் ரோஷினி.

இது ஒரு புறமிருக்க, கடந்த 2016-ம் ஆண்டு நன்கொடை
வழங்கிய தொழிலதிபர்கள் பட்டியிலிலும் ஷிவ்நாடார்தான்
முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் நாட்டு
நலப்பணிக்களுக்காக தனது அறக்கட்டளை மூலம் 630 கோடி
ரூபாய் வரை அவர் செலவிட்டுள்ளார். ஏழை மக்களுக்காக
சுகாதாரத் துறையில் ஷிவ் நாடார் அறக்கட்டளை அதிகமாக
முதலீடு செய்துள்ளது.

இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்
அதிகாரி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ரூ.313 கோடி நன்கொடை
அளித்து, இரண்டாவது இடம் பிடிக்கிறார். நாட்டின் முதல்
பணக்காரரான முகேஷ் அம்பானி ரூ.303 கோடி தானம்
செய்துள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர்
குமாரமங்கலம் பிர்லா, 21 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டு விப்ரோ தலைவர் ஆஷிம் பிரேம்ஜி ,
இன்போசிஸ் நிறுவனர்கள் நந்தன் நீல்கேணி,
என்.ஆர்.நாராயணமூர்த்தி ஆகியோர் பின்தங்கி விட்டனர்.

( http://www.vikatan.com/news/tamilnadu/85077-with-rs-630-crore-
shiv-nadar-becomes-top-donor.html )
————————-

இது கூடுதல் செய்தி –

மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொழில்
வளர்ச்சிக்கு உதவ, ஹெச். சி.எல். நிறுவனம் 5 ஆண்டுகளில்
6 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அந்த
நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உறுதியளித்துள்ளார்.

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர்
பணிபுரிகின்றனர். இதில் 35 ஆயிரம் பேர் தமிழர்கள். அறிவுசார்
மாநிலமான தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்களை
தேர்வு செய்து வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க முடிவு
செய்துள்ளோம். தமிழத்தில் மென்பொருள் மேம்பாட்டு மையம்
அமைக்கவும் ஹெச்.சி.எல். முடிவு செய்துள்ளது” என்றார்
திரு.ஷிவ் நாடார்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.ஷிவ் நாடார்… பெருமைப்படுவோம்…!!!

 1. சிவா சொல்கிறார்:

  ‘மாசாசூசெட்ஸ்’ நகரம் அல்ல ஒரு அமெரிக்க மாநிலம். இந்த கல்லூரி பாஸ்டன் நகருக்கு அருகில் வெல்லஸ்லி எனும் இடத்தில் இருக்கிறது. அந்த இடம் பாப்சன் பார்க் எனப்படும்.

  முந்தய வருடங்களில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜிக்கும் நாடாருக்கும்தான் கொடுப்பதில் போட்டியிருக்கும். பிரேம்ஜி முதலாமிடத்திலும் நாடார் இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். ஆனால் 2015-ல் தனது சொத்தில் ஏறத்தாழ பாதியை 54,000 கோடியை மொத்தமாக கொடுத்துவிட்டார் பிரேம்ஜி. அதனால் போன வருட வின்னர் நம்ம நாடார்தான்.

  இன்னொரு விடயம் ஷிவ் நாடார் தமிழன் என்பதிற்காக பெருமைப்படலாம். ஆனால் ரோசினி நாடார் அம்மையார் வடநாட்டு மருமகளாய் மாறி ரோசினி மல்ஹோத்ரா ஆகிவிட்டார். அவரை நினைத்து பெருமைபடலாமா கூடாதா? 🙂

 2. புதியவன் சொல்கிறார்:

  87களில், PERSONAL COMPUTER தயாரிப்பில் நுழைந்து புரட்சி செய்தவர் ஷிவ் நாடார் அவர்கள். அவருடைய நற் குணங்களை நினைவுகூர்ந்தது பாராட்டுக்குரியது. அசீம் ப்ரேம்ஜி, நாராயணமூர்த்தி மற்றும் பலர், உயரங்களைத் தொட்டபோதும், வந்த பாதையை மறக்காதவர்கள். மல்லையா, லலித் மோடி இவர்களும் உயரத்தைத் தொட்டவர்கள்தாம் (!)..

  எல்லோரும் இந்திய மக்கள்தானே. (மல்ஹோத்ரா….)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s