எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும்….. ( என் விருப்பம் – 8 )


விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடல்களை கேட்டுக்கொண்டே
தான், என் இளமைக்காலம் கழிந்தது… சிறு வயதில்
என் இசையார்வம் வளர இந்த பாடல்கள் மிக முக்கியமான
அடித்தளமாக அமைந்தன என்று பலமுறை சொல்லி
இருக்கிறார் இளையராஜா.

ராஜா சகோதரர்கள்… சிறு வயதில்
நிகழ்த்திய மேடைக்கச்சேரிகளில்
மெல்லிசைமன்னர்களின் மெட்டுக்களுக்கு,
கம்யூனிச இயக்கத்திற்கு பொருத்தமாக
புதிய வார்த்தைகளை போட்டு பாடி இருக்கிறார்கள்….

திரையுலகிற்கு வந்த பிறகு, எம்.எஸ்.வி.யுடன்
அவருக்கு அறிமுகம் ஏற்பட்டு, அது அன்பாக, நட்பாக
பரிணமித்து ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த பிரியமும்,
பாசமும் கொண்டிருந்தனர்….

ராஜா, எம்.எஸ்.வி. அவர்களிடம் தாங்கள் இரண்டு பேரும்
சேர்ந்து ஒரு படத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்கிற
தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்….

ஏவிஎம் நிறுவனம் அந்த விருப்பத்தை நிறைவேற்றியது
30 ஆண்டுகளுக்கு முன்னர் – 1986-ல் வெளிவந்த
“மெல்லத்திறந்தது கனவு” திரைப்படத்தின் மூலம்.

எம்.எஸ்.வி. மெட்டமைக்க, ராஜா ஆர்கெஸ்டிரேஷனை
கவனிக்க, மறக்க முடியாத இசைக்கோர்வையாக
அமைந்தன அந்த படத்தின் பாடல்கள்…. ஒவ்வொரு
பாடலும் மிக மிக இனிமையாக இருக்கும்….
மெட்டும் சரி, வாத்தியங்களின் கோப்பும் சரி
அற்புதமான ஒரு combination …!!!

மெ.தி.கதவு படத்தின் அத்தனை பாடல்களும் “ஹிட்”
என்றாலும், இந்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த
பாடல் “வா வெண்ணிலா- உன்னைத்தானே “…

படத்தில் இரண்டு தடவை வரும் இந்த பாடல் …
அதில் அமலா குழுவினர் நடனமாடிக்கொண்டே பாடுவதும்,
மோகன் அவரது முகத்தைக்காண தவித்துக்கொண்டே
தொடர்வதும், இறுதிவரையில் தன் முகத்தைக் காண
விடாமலே அவர் ஆடி மறைவதையும் அற்புதமாக காட்சிப்
படுத்தியிருப்பார்கள் படத்தில்…..காட்சிப்படுத்தல்
(picturization ) இந்த பாடலுக்கு சுவையை கூட்டி இருந்தது…!

பாருங்களேன் – கேளுங்களேன்
உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்…..!!!

போனஸ் – ஊரு சனம் தூங்கிடுச்சு –

மேலே, எம்.எஸ்.வி. தனது பேட்டியில்
“வா வெண்ணிலா” பாடலுக்கு inspiration ஆக
இருந்ததாக கூறும்
“வான் மீதிலே இன்பத்தேன் மாரி” பாடல் –
1953-ல் வெளிவந்த “சண்டிராணி” படத்தில்
பானுமதியும், கண்டசாலாவும் சேர்ந்து பாடியது…
இந்த பாடலுக்கு, தனது குரு சி.ஆர்.சுப்புராமனுடன்,
எம்.எஸ்.வியும் சேர்ந்து இசையமைத்திருந்தார்….!!!

அதையும் கேட்போமே…!!!


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும்….. ( என் விருப்பம் – 8 )

 1. வணக்கம் ஐயா நலமா ?
  நல்ல விடயம் பதிவை ரசித்தேன்
  .
  “மெல்லத்திறந்தது கனவு” வருடத்தை 1986 என்று திருத்தம் செய்யவும் நன்றி – கில்லர்ஜி

  • paamaranselvarajan சொல்கிறார்:

   ” கனவு ” அல்லது “கதவு “..?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    “கதவு” தான்…

    ஆனால் நீங்கள் சொன்ன பிறகு படத்திற்கு
    ” மெல்ல கலைந்தது கனவு ” என்கிற
    தலைப்பு கூட பொருத்தமாக இருந்திருக்கும்
    என்று தோன்றுகிறது.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கில்லர்ஜி.
   இறைவன் அருளால் நலமாகவே இருக்கிறேன்.

   வருடத்தை மாற்றி விட்டேன்…!
   வயது …. கவனக்குறைவு…!!!
   எடுத்துச் சொன்னதற்கு நன்றி….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. LVISS சொல்கிறார்:

  Of the two songs you have mentioned “ooru Sanam” has a more complicated structure – In western scale ,natural minor,it corresponds to Natta bairavi

 3. தமிழன் சொல்கிறார்:

  எம் எஸ் வி அவர்கள் மிகுந்த நற் பண்புகளும், அடக்கமும் கொண்டவர். பொறாமையற்ற தன் குணத்தால் பலரை நண்பர்களாகப் பெற்றவர். அவருடைய கிளிப், அவருடைய நல்ல குணத்தைக் காண்பிக்கிறது.

  இதைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பீர்கள் என்று ஞாபகம். சோவின், ‘முகம்மது பின் துக்ளக்’கில், முதல் பாடலான, ‘அல்லா அல்லா’ ‘என்ற பாடலை எம்.எஸ்.வி பாட இஷ்டப்படவில்லை. சோவுக்கு அவர்தான் பாடவேண்டும் என்று ஆசை. எம்.எஸ்.விக்கு இன்னொருவர் பாடவேண்டும் என்று எண்ணம். கடைசியில் சோ சொன்னபடி, ரெண்டு சீட்டில் ஒன்றை எடுத்து அதில் யார் பெயர் வந்திருக்கிறதோ அவரே பாடணும் என்று ஒத்துக்கொண்டு, எடுத்த சீட்டில் தன் பெயர் வந்ததால் எம்.எஸ்.வி அவர்களே அந்தப் பாடலைப் பாடினார். (கடைசியில், இரண்டு சீட்டிலும் சோ, தன் பெயரைத்தான் எழுதியிருந்தார் என்பதைப் பிறகு தெரிந்துகொண்டார். ஆரம்பக்காட்சியில், கலாட்டா பண்ணவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவர்களும் இந்தப் பாடலைக் கேட்டு, சோ, எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தும்விதமாக இப்படத்தை எடுக்கவில்லை என்று புரிந்துகொண்டனர்).

  எம்.எஸ்.வி அவர்களின் சிறந்த குணங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தன் குருவை, (குரு பத்தினியையும்) கடைசி வரை தன்னுடன் வைத்திருந்தவர் என்றும், அவர்தான் கொள்ளியிட்டவர் என்பதும், அவருடைய அளவுகடந்த குருபக்தி போன்றவையும், இசையமைப்பதைத் தவிர வேறு எதுவும் அவர் மனதில் இருந்ததில்லை என்பதும், இன்னும் பலவும்.

  பொதுவாக ஈகோ நிரம்பப்பெற்ற இளையராஜாவே, எம்.எஸ்.வி அவர்களை நினைவுகூறும் விதமாக அவர் மறைவுக்குப் பின் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

  நியூஸ் பேப்பரைக் கொடுத்தாலும் அதனையும் அழகாக மெட்டமசைத்துப் பாடும் திறமை கொண்டவர் என்று பலரால் புகழப்பட்டவர் எம்.எஸ்.வி. அவருக்கு ‘மத்திய அரசு பட்டத்திற்கு-பத்ம விருதுக்கு, பரிந்துரைக்கவா’ என்று கேட்ட ‘ஜெ’யிடம், அவ்வாறு கேட்டதே போதும், வேண்டாம் என்று மறுத்தவர் எம்.எஸ்.வி.

  நினைவுகூற வைத்ததற்கு நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   நல்ல பின்னூட்டம். நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். நான் இதைத்தான் அடிக்கடி value addition என்று சொல்லிக் கொண்டிருப்பேன். இத்தகைய பின்னூட்டங்கள் இடுகைக்கு இன்னும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன…

   எம்.எஸ்.வி.அவர்கள் நினைவாக இளையராஜா நடத்திய
   நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன்… மொத்த வசூலையும்
   அப்படியே எம்.எஸ்.வி. குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டார்.
   இவ்வளவு தொகை … என்று சொல்லாமல் கொடுத்தது
   மிக கௌரவமாக இருந்தது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Mr Thamizhan, when the movie you mentioned it was election time –I saw the movie hardly with five or six persons because people were afraid to come to the theatre –
   MSV had what I call the “asareeree ” voice —

 4. LVISS சொல்கிறார்:

  Mr K M I left my comment half done —
  Why the song I mentionedI say is a bit complicated –Though it is said to be based on a minor scale ( natta bairavi) it uses chords of harmonic minor scale ( keeravani) —Midway , the song jumps to major scale ( sankarabharanam) -Then it uses chords of major scale , then a common chord for major and harmonic minor and drifts back to the first line –This song is so beautifully conceived —
  Other songs which can be closely associated with this song are Churalia, Dum maro dum,, Yadon ki bharat –I dont know whether Aval paranthu ponaley can be added to this list —

  Generally in western pop this shifting of scale is rare –In our filmy music a song acquires its special beauty because of this change of scale or raga —

 5. தமிழன் சொல்கிறார்:

  இதில் இன்னொன்றும் சொல்லத் தோன்றியது.
  1. விஸ்வனாதன் அவர்கள் ஒரு ரெக்கார்டிங்கின்போது, கண்ணதாசனிடம், ‘ஏண்ணே.. காமராஜர்னு ஒருத்தரை சந்திக்கப் போகிறேன் என்று சொன்னீர்களே.. அது யாருண்ணே காமராஜர்’ என்று கேட்டாராம். இசையைத் தவிர ஒன்றுமே அறியாதவர் விசு அவர்கள். (கண்ணதாசனுடன் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தபோது தன்னுடைய கேள்விகளால் கண்ணதாசனை ரொம்பவும் எரிச்சல்படுத்தினாராம். லெனின் யாருண்ணே.. மசோலினியம்னா என்னண்ணே என்று.. ஆனால், அவர்களின் ஒரு இசையை, விசு அவர்கள் தன்னுடைய பாணியில் வாசித்தபோது அவர்களெல்லாம் அசந்துவிட்டார்களாம். விசு அவர்கள் அத்தனை திறமைசாலி)

  2. சோ அவர்கள் இல்லத் திருமணத்துக்கு, சிவாஜி அவர்களை பத்திரிகை கொடுத்து கண்டிப்பாகக் கலந்துகொள்ளச் சொன்னாராம். காரை விட்டு இறங்கிய சிவாஜியிடம் தன் தந்தையை, இவர்தான் ஸ்ரீனிவாசன், என் தந்தை, இவர்தான் சிவாஜி’ என்று அறிமுகப்படுத்தியபோது, சோவின் தந்தை, ஆமாம், நீங்ககூட என் மகனோடு நடித்திருக்கிறீர்களே என்று சிவாஜியைப் பார்த்துச் சொன்னாராம்.

  3. சிவாஜி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைச் சந்தித்தபோது, அவர், நீங்க யாருன்னு சிவாஜியைப் பார்த்துக் கேட்டாராம். நான் படத்திலெல்லாம் நடிப்பவன் என்றெல்லாம் சிவாஜி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, நான் படமெல்லாம் பார்த்ததில்லை என்று கவிமணி சொன்னாராம்.

  ஒரு துறையில் கில்லாடியாக இருப்பவர்கள் மற்றத் துறைகளையோ அல்லது மற்ற விஷயங்களிலோ கற்றுத்துறைபோயிருக்கவேண்டும் என்று அர்த்தமல்ல.

  1971ல் முகமது பின் துக்ளக் வெளிவரக்கூடாது என்று கடும் முயற்சி எடுத்தவர்கள், காங்கிரஸ், திமுகவைச் சேர்ந்தவர்கள். அதிலும் இது இந்திராவைத் தாக்கும்விதமாக இருக்கிறது என்று காங்கிரஸ் காரர்களுக்கு ஆத்திரம். எப்போதும் எதிர்ப்பு இருந்தால்தானே சுலப விளம்பரம். நிறைய CUTகளைச் சந்தித்தது, சென்சார் கடுமையாகப் பண்ணப்பட்டு படம் வெளிவந்து வெற்றி பெற்றது (படத்தை பணால் ஆக்கவேண்டும் என்பதற்காக, இஸ்லாமியர்களைக் குறைகூறுகிறது என்று புரளி கிளப்பி, படத்தை கலாட்டா செய்வதற்காகவே அவர்கள் வந்து, பாட்டைக் கேட்டுவிட்டு கலாட்டாவைக் கைவிட்டார்கள்.) இந்தப் பாடலை எழுதியது வாலி என்று ஞாபகம். சோவுக்கு இந்தப் பாடல் மிகுந்த மன நிறைவைத் தந்ததாக எழுதியிருந்தார்.

 6. தமிழன் சொல்கிறார்:

  எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்களை, எம்ஜியார், என்ன விசு, அம்முவை பாட வையேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாராம். விசு அவர்கள், ஜெயலலிதாவின் குரலை உபயோகப்படுத்திக்கொள்ளும்படியான SITUATION வரவில்லை என்று (அதாவது இந்தப் பாடலுக்கு இந்தக் குரலைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுவது) தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஜெ. கே.வி. மகாதேவன் இசையமைப்பில் முதல் முறையாக அடிமைப்பெண் படத்தில் ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலைப் பாடினார். 73ல், எம்.எஸ்.வி. இசையில், சூரியகாந்தி படத்தில் 2 பாடல்களைப் பாடினார் (ஓ மேரே தில்ரூபா… அப்புறம், நான் என்றால் அது அவளும் நானும்). எம்.எஸ்.விசுவனாதன் அவர்கள், இசையிலேயே கவனம் உடையவர் என்பதற்கும் இது ஒரு சான்று. கண்ணதாசன் தனக்கு மிகுந்த வேண்டப்பட்டவர் என்றபோதும், வாலியின் திறமையைக் கண்டு அவருக்கு பல பாடல் வாய்ப்புகளைத் தந்தவர் (அதாவது சாதி, மதம் போன்ற குறுகிய எண்ணம் இல்லாதவர்). வாலி இதைத்தான், தன்னுடைய சுய சரிதையில், ‘விஸ்வனாதனை 64ல் பார்க்கும் வரை சாப்பிட உணவு இல்லாமல் இருந்தேன். அதற்கப்புறம் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாதிருந்தேன்’ என்று எழுதியுள்ளார். (வேருக்கு நீர் வார்த்த கொண்டல் என்று இவரை வாலி குறிப்பிட்டுள்ளார்)

 7. Nalini சொல்கிறார்:

  What ever tamilan saying about MSV are true. Bit, It doesn’t mean that He has to put down Rajja like this. Rajja helped MSV when he was in big trouble financially. Media always portrait Rajja is bad person and that’s what stayed in common people too.

 8. Nalini சொல்கிறார்:

  திரு. தமிழன் அவர்களே, ராஜாவிடம் பலப்பல நல்லகுணகளும், ஒழுக்கமும் கடவுள் பக்தியும் மிகுந்தவர். MSV க்கி பல நேரங்களில் பொருள் பண உதவி செய்தவர். மீடியா எப்பொழுதும் காரை பொல்லதவராகவே சித்தரித்து சித்தரித்து அதுவே மக்களின் மனதில் தங்கி விட்டது. ஸ்பிபியின் பணம், பாஸ்போர்ட் எல்லாம் கானம் போய்விட்டதாம் நல்லவர் மனதை நோகடிதத்தின் பயனாக இருக்குமோ?

  • தமிழன் சொல்கிறார்:

   @’நளினி – இளையராஜாவைத் தாழ்த்தி நான் எதுவும் எழுதவில்லையே (EGO உள்ளவர் என்பதைத் தவிர). ராஜாவிடம் இருக்கின்ற அளப்பரிய நல்ல குணங்களையும், ஆன்மீகப் பாதையில் அவர் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறார் என்பதையும் நான் அறிவேன். அவருடைய ‘இசை ஞானம்’ அவருக்கு ‘கடவுளின் கொடை’. எம்.எஸ்.வி. அவர்கள், வாத்தியக் கருவிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து அருமையான TUNEஐ RICHஆன பாடலாக வெளிக்கொணரும் திறமை பெற்றவர். இளையராஜா அவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு முழு இசையையும் காகிதத்தில் எழுதும் திறமை பெற்றவர் (இதைக் கற்பனை செய்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். பல்வேறு பட்ட வாத்தியக்கருவிகள், எது எப்போ வரணும் எந்த மாதிரி இசை தரணும் என்று உட்கார்ந்த இடத்திலேயே எழுதி, அதை அவர்கள் வந்தவுடன் ஒவ்வொரு குழுவிடமும் கொடுத்து ஒரு தடவை PRACTICE செய்து பாடலை மெருகேற்றுபவர். இது சுலபமல்ல. EXAGGERATION என்று தோன்றினாலும், காது கேட்கும் திறமைக்குறைபாடு உடைய பீத்தோவன் அளித்த இசைக்கோர்வைக்கு நிகரானது இது) ராஜா பொல்லாதவர் இல்லை. மீடியாவும் ராஜாவைப் பொல்லாதவராகச் சித்தரிக்கவில்லை. ‘சரவண பவன் உணவகம், மதிய உணவுக்கு 150 ரூ வாங்குவதால் அவர்கள் மோசமானவர்களாக ஆகிவிடமுடியுமா?’ – ராஜா அவருக்கு சட்டம் தந்ததைப் பயன்படுத்திக்கொள்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மிக நல்லவர். அருமையான குணவான். அவர்தான், இந்த விஷயத்தைப் பற்றி யாரும் பேசவேண்டாம், நான் இளையராஜா இசையமைத்த பாடல்கள் பாடவில்லை என்று உடனே சொல்லிவிட்டார் (ஏனென்றால், அவர் சுற்றுப்பயண நிகழ்ச்சியின் பாதியில் இருக்கிறார். அடுத்த நிகழ்ச்சியில் இளையராஜா பாடலை ஏன் பாடமுடியாது என்பதை அவர் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தியாகவேண்டும்).

   உங்கள் தகவலுக்காக – இந்தப் பிரச்சனையே, கார்த்திக் ராஜா மற்றும் எஸ்.பி.பி.சரண் ஆகியவர்களால் முளைத்தது. இது வதந்தி ஆகக் கூட இருக்கலாம். நான் படித்தவரையில், கார்த்திக் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சியில் 7 லட்சம் எஸ்.பி.பிக்குக் கொடுப்பார்கள். அதை 20 லட்சமாகத் தரும்படி கேட்டிருக்கிறார். இது விளைவித்த கசப்புதான், எஸ்.பி.பி.சரண் நடத்துகின்ற ‘எஸ்.பி.பி. 50’ நிகழ்ச்சியில் வெளிப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

   எஸ்.பி.பி, கங்கை அமரன், இளையராஜா போன்றோர் மிக மிக நெருங்கியவர்கள். (அந்தக் காலத்திலேயே, வாடா, போடா நட்பு மற்றுமல்ல, சேர்ந்தே மது அருந்தும் வரையிலான நட்பு). ஆனால் இளையராஜாவின் குணம், ஒருவர் சிறிது வாக்குத் தவறினாலோ அல்லது தன்னைக் காயப்படுத்திவிட்டார்கள் என்று தோன்றினாலோ அல்லது தன்னை மதிக்கவில்லை என்று தோன்றினாலோ, கொஞ்சம் கோபப்படும் குணம் கொண்டவர். சமயத்தில் எடுத்தெறிந்து பேசிவிடும் இயல்புடையவர். அதனால்தான், தன்னுடைய திருமணத்துக்கு எஸ்.பி.பிக்குப் பத்திரிகை கொடுத்து கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லி, எஸ்.பி.பி. வராததை (அந்தக் காலத்தில்) தனக்கு ஏற்பட்ட INSULT ஆக நினைத்தவர்.

   ஒருவரைப் பாராட்டினால், இன்னொருவரை இகழ்வதாக அர்த்தம் கிடையாது.

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த விஷயத்தில், SPB கொஞ்சம் அவசரப்பட்டு
  immatured ஆக நடந்து கொண்டு விட்டார் என்பது
  என் கருத்து. இளையராஜா விடமிருந்து வக்கீல்
  நோட்டீஸ் வந்திருக்கிறது…அதனால் இனி என்னால்
  ராஜா பாடல்களை பாட முடியாது என்று
  அவசரப்பட்டு அவர் தனது facebook பக்கத்தில்
  எழுதி விளம்பரப்படுத்தியது ஒரு அவசரகுடுக்கைத்தனம்…

  டூரில் இருக்கும்போது ராஜா பாடல்களை பாடவில்லை
  என்றால் பிரச்சினைகள் வரும் என்றால், அதை
  அவர் நாசூக்காக தெரிவித்திருக்கலாம். அமெரிக்காவில்
  சில காப்பிரைட் பிரச்சினைகள் இருப்பதால் ராஜா
  பாடல்களை பாடுவதற்கில்லை என்று சொல்லி
  அத்தோடு விட்டிருக்கலாம்…..

  ofcourse எல்லாவற்றிற்கும் மூல காரணம் அவரது
  வாரிசு SPB சரண் தான் என்று தெரிகிறது….

  இந்த விஷயத்தில், ராஜா பதிலுக்கு re-action எதையும்
  காண்பிக்காமல், மௌனமாக இருந்து விட்டதை
  பாராட்டத் தோன்றுகிறது.

  ஒரு விதத்தில் பார்த்தால் –
  உலகில் ஈகோ இல்லாத மனிதர் யார் …?
  ஒரு வயது குழந்தைக்கு கூட
  ஈகோ இருப்பது தெரிகிறதே….!!!

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 10. Nalini சொல்கிறார்:

  Well said. Mr. Kavirimainthan,

  we all learn all along our life. May God bless Both Raaja and SPB.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.