அரசியல் தலைகள் வாளாயிருக்க – அதிகார “வால்” துடிப்பது ஏன்…?


இந்தியா முழுவதும், நெடுஞ்சாலைகளில் உள்ள
மதுபானக் கடைகளை ஏப்ரல் 1-ந்தேதி முதல் மூட வேண்டும்
என்பது சுப்ரீம் கோர்ட் அண்மையில் போட்டுள்ள உத்தரவு….

இறைவனாகப் பார்த்து அனுப்பியுள்ள வரம் என்று
நாட்டின் பெரும்பாலான மக்களும், குறிப்பாக பெண்களும்
ஆனந்தப்படும் ஒரு நிகழ்வு….

பொறுக்குமா ….?
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த உத்திரவை
எதிர்த்து கருத்து சொன்னால், தங்கள் இமேஜ் பாதிக்கப்படுமோ
என்று வாய்மூடி,

ஆனால், மறைமுகமாக – இந்த உத்திரவை நீர்த்துப்போக,
செயலற்றுப்போக – என்ன செய்யலாம் என்று தீவிரமாக
யோசித்து வரும் வேளையில் –

அரசு அதிகாரி ஒருவர், மத்திய அரசுப்பணியில் இருப்பவர்,
இந்திய அரசிடமிருந்து மாதச் சம்பளம் பெறுபவர் –
இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து கூறுகிறார் என்றால்,
தகுந்த காரணம், பின்புலம் இல்லாமலா இவ்வாறு
செயல்படுவார்…?

திருவாளர் அமிதாப் காந்த், நிதி ஆயோக்-ன் Chief Executive
Officer அதாவது, தலைமை நிர்வாக அதிகாரி
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்திரவை குறைகூறி இன்று
அறிக்கை விடுகிறார்…

” Tourism creates jobs. Why kill it? Supreme Court’s
highway liquor ban verdict may hit 1 million jobs “.

சுப்ரீம் கோர்ட் தனது உத்திரவை பிறப்பிக்கும்போதே
மாநில அரசுகளை நோக்கி கேட்டது –
” உங்களுக்கு வருமானம் முக்கியமா அல்லது
மக்களின் உயிர் முக்கியமா…? ” என்று.

” இந்திய அளவில், குடித்து விட்டு, வண்டியோட்டுபவர்களால்,
ஒவ்வொரு நான்கு விநாடிக்கும், ஒரு உயிர் பலியாகிறது ”
என்று சர்வே ரிப்போர்ட் சொல்கிறது.

இந்த உத்திரவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட –
டெல்லிக்கு அருகேயுள்ள குர்கானில், அமைந்துள்ள
லீலா, ஒபேராய், தாஜ் போன்ற 5 நட்சத்திர ஓட்டல்கள்களின்
நிர்வாகங்கள் உடனடியாக ஒன்று கூடி யோசித்து,

“என்ன செய்தாவது”, ” எவ்வளவு செலவு செய்தாவது ” –
இந்த உத்திரவை முடக்க வேண்டும் என்று
தீர்மானித்திருக்கின்றன.

மத்திய அரசு அதிகாரியான, திருவாளர் அமிதாப் காந்த்,
சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவுக்கு
எதிராக இப்படி கருத்து சொல்லி இருப்பது –

இந்த ஓட்டல் “தலை”களின் “தீர்மானம்” காரணமாகவா..?
அல்லது பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் “தலை”களின்
தூண்டுதல் காரணமாகவா…?

——————————
பின் குறிப்பு –

இந்த உத்திரவை அர்த்தமில்லாததாக்க, செயலற்றதாக்க –
சில மாநிலங்கள் குறுக்கு வழியில் செல்ல ஆலோசிப்பதாக
தகவல்கள் வருகின்றன….
அதாவது நெடுஞ்சாலைகளை, de-classify செய்வதன்
மூலம் குறுக்கு வழியில் மதுவிற்பனையை தொடர முயற்சி…

அவர்கள் இப்படி குறுக்கு வழியில் சென்றால்,
மீண்டும் இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச்
செல்லப்படும்போது, இன்னும் மோசமான விளைவுகளை
மாநிலங்கள் சந்திக்க நேரிடலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அரசியல் தலைகள் வாளாயிருக்க – அதிகார “வால்” துடிப்பது ஏன்…?

 1. தமிழன் சொல்கிறார்:

  திருவாளர் அமிதாப் காந்தியிடம் யாராவது சொல்ல இயலுமா? DRUG DISTRIBUTION நிறைய வேலைவாய்ப்புகளையும், நிறைய TOURISTSகளையும் கொண்டுவரும். அல்லது, தாய்லாந்து தொழிலும் நிறைய வேலைவாய்ப்பும் அரசுக்கு பணவரவையும் கொண்டுவரும் என்று?.

  அமிதாப் காந்தி போன்றவர்கள் PAID SERVANTS OF CORPORATE COMPANIES.

  இந்தியாவில் எந்த உத்தரவும், சட்டமும் ஏழைகளுக்குத்தான். குடித்துவிட்டு வண்டியோட்டி ஆட்களைக் கொல்லும் அருண் விஜய், ஐஸ்வர்யா போன்றவர்களை சட்டம் எதுவும் செய்யாது.

 2. NS RAMAN சொல்கிறார்:

  For this judgment credit should go to PMK Leaders.

  We can understand Taj and Leela opposing this judgment as they are losing their business.

  But it is Shameful that people welfare???? Governments running liquor shops as a leading business with targets under able leadership of great leaders.

  most of the state owned shops try to shift inside the city area. So for an effective implementation of judgment drunken driven should be made non bailable offense with hefty fine together with frequent checks at highways

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.