விவசாயிகளுக்கு என்ன அவசரம்…?

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து
கார்ட்டூனிஸ்ட் “கேஷவ்” அவர்களின் சிந்தனை –

கூடவே உண்மையை பிரதிபலிக்கும் இன்னும் இரண்டு –

இது நாம் ஏற்கெனவே இங்கே எழுதிய கருத்து தான்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to விவசாயிகளுக்கு என்ன அவசரம்…?

 1. தமிழன் சொல்கிறார்:

  எனக்கு ரொம்ப காலமாகவே ஒரு கேள்வி மனதில் எழும்.

  நம் நாடு, விவசாயிகளை, நிறைந்த கிராமப்புற எளிய கல்வியறிவில்லாத மக்களைக் கொண்ட நாடு. இதில், விவசாயத்தில் கவனம் செலுத்தினால்தானே மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிராமப் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்? மேற்கத்தைய நாடுகளில், 10 பேர் கொண்ட குடும்பம், 100 ஏக்கர் நிலத்தை, டிராக்டர் மற்றும் பலவித விஞ்ஞான முறைகளின்மூலம் (ஆளில்லா விமானத்தை வைத்து மருந்து தெளிப்பது, களை எடுப்பது, சொட்டு நீர் பாசனம் போன்று ஆட்கள் உழைப்பு தேவைப்படாமல் விவசாயம் செய்வது) விவசாய உற்பத்தி செய்கிறார்கள். இது எப்படி நமது நாட்டுக்குச் சரிப்பட்டுவரும்? நமது நாட்டில், குறு நில விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், அது அந்த அந்த இடங்களில் உள்ள பலருக்கு உடலுழைப்பையும் வருமானத்தையும் பெற்றுத் தருமே. அப்படி இருக்கும்போது, நூறு நாள் வேலைத்திட்டமெல்லாம் எதற்கு? (அதனால்தான் வேலை செய்யாமல் பணத்தை அமுக்குகின்றனர் பெரும்பாலும். அந்தப் பணமும் டாஸ்மாக்குக்குப் போகிறது). அரசின் கடமை, தண்ணீர் மேலாண்மையும், மின்சாரம் வழங்குவதும், தேவைப்பட்ட இடங்களில் குளிர் கிடங்குகளை ஏற்படுத்துவதும், சாலைப்போக்குவரத்தும்தானே. இதனைச் செய்துகொடுத்தால், வேலைக்கு வேலையும் ஆச்சு, விவசாயமும் முன்னேறும், மக்களுக்கும் உணவு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்குமல்லவா? நமக்கு எதற்கு பிடி கத்தரி, பஞ்சு போன்றவை?

  எனக்கு, பெப்சி/கோலா முக்கியமா அல்லது இள’நீர் முக்கியமா என்று கேட்டால், இள’நீர்தான். இது நம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும், நீர் ஆதாரங்கள் பாழாகாமல் இருக்கவும், HEALTH அழியாமல் இருக்கவும் உதவும். இதை ஏன் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?

  • DeathBirthRaceR சொல்கிறார்:

   யானை கட்டி விவசாயம் செய்த முதலினம் நம்மினம் ….. மேலும் இயற்கை அன்னை சிலிர்க்கும் பாரம்பரியம் இறைகுணத்தால் போற்றி துதித்து தனிபெரும்பான்மையாக இறைவனுக்கு சூரியன் என்னும் அத்தனை உயிர்துளிகளும் இயற்கை விட்டமின் ஐயா நம்மாழ்வர் போல் பலர் இன்றும் என்றுமே போற்றும் பாரம்பரிய இயற்கை விவசாயம் நமதே…..
   தமிழன் நண்பர் கூறுவது நான் இயற்கை விவசாயத்தோடு ஆமோதிக்கிறேன் இருந்தும் நம் தேசம் இயற்கை சூழ வாழ்ந்து எல்லா நீராதாரம் செழிக்க மன்னர்கள் செய்ததை செயற்கை தனம் அறுவடைக்கும் இயற்கை தனம் நாற்று விதைநெல் பாரம்பரியத்துக்கும் (பஞ்சகவ்யம் உயிருரம்) முக்கியத்துவம் தந்தால் சுகாதார துறை செலவு குறையும் விவசாயம் இன்னும் நிறையும் தேவை ஆழ்ந்த அரசியலறிவு மாற்றமே…..
   ஏனெனில் அனைத்துக்கும் அச்சாணி அரசியல் மாற்றமென்பது எல்லோரும் உணர்ந்ததே…..

 2. selvarajan சொல்கிறார்:

  // விவசாயிகளுக்கு என்ன அவசரம் … ? // டிஜிட்டல் இந்தியாவில் தெரியாத்தனமா ஒரு விவசாயியின் மகள் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார் .. அது : —
  // “அரிசியை டவுன்லோடு பண்ணியா சாப்பிடுவீங்க?” – ஒரு விவசாயி மகளின் கேள்வி // http://www.vikatan.com/news/tamilnadu/85038-will-you-download-and-eat-rice-farmer-mahadevans-daughter-asks.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=10040 …. இந்த பெண் எந்த நேரத்தில் இப்படி கேட்கிறது … முக்கியமா வாங்குற சம்பளம் பத்தாம அல்லல் படுகிற ” ரிசர்வ் வங்கி கவர்னர் ” அவர்களுக்கு தம்மத்தோண்டு சம்பளத்தை மிகுந்த சிரமத்திற்கிடையேயும் ஏற்றி இருக்கும் போது — அது பற்றிய செய்தி :– // ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் ரூ.2.5 லட்சமாக உயர்வு // http://www.dailythanthi.com/News/India/2017/04/03115755/RBI-Governor-Urjit-Patel-and-his-deputies-get-huge.vpf ……. ” விவசாயிகள் கடனை தள்ளுபடி செய் ” .. என்று கூறுவது ” என்ன அவசரம் அவர்களுக்கு ” — இப்பத்தானே சம்பளம் ஏறியிருக்கிறது — அந்த குஷியில் அவர் ஏதாவது செய்து — போராட்டத்தை இன்னும் தீவிரமாக்காமலா போகப்போகிறார் …

 3. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கு,
  வணக்கங்கள் பல!

  நான் ஏற்கனவே நம்முடைய பகுதியிலே நீர் மேலாண்மை பற்றி எழுதியிருந்தேன்.தாங்களும் அதற்கு பதில் அளித்து இருந்தீர்கள்.
  இந்த விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் இது 1970 லிருந்து தொடங்கி விட்ட பிரச்சினை..

  ஒரு முறை காந்தி கிராம பல்கலை நிகழ்ச்சியின்போது நமது குடியரசின் முந்நாளைய தலைவர் ஆர் வெங்கட்ராமன் கூறியதை நினைவு கூர்தல் சாலப் பொருந்தும்.

  பெருந்தலைவர் காமராஜரின் காலத்திலேயே தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பது தொடர்பாக கருத்துரு தயாரிக்கும் பணியைத் துவக்க முயன்றும் முடியாது போயிற்று…
  அதற்குப் பின்னர் இன்று வரை எந்த மாநில ஆட்சியாளரும் இதை நினைத்துப் பார்ப்பதில்லை..
  முதலில் நம் தமிழக நதிகளை ஒன்றிணைக்க என்ன முயற்சி எடுத்துள்ளோம் ?
  வறட்சி என்பது நாம் ஒவ்வொரு முறையும் எதிர் நோக்கி உள்ளோம்..எதிர் நோக்கவும் உள்ளோம்..
  அதற்கான தீர்வுக்காக என்றாவது போராடியதுண்டா?
  இந்தப் போராட்டம் மாநில அரசின் மீதான மெத்தனபோக்கை
  எதிர்த்து அல்லவா இருந்திருக்க வேண்டும்..
  தமிழகத்தில் ஓடும் நதிகள் எத்தனை?
  முதலில் தாலுக்கா அளவிலான குறு நதிகளை இணைக்கட்டும்;
  பின்னர் மாவட்டத்தில் உள்ள நதிகளை இணைத்து பின்னர் பக்கத்துக்கு மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்..
  அதன் பின்னர் அண்டை மாநில நதிகளை இணைக்க வேண்டும்..
  எந்த ஒரு முதல்வராவது , நாங்கள் வறட்சியை சமாளிக்க இத்தனை நதிகளை இணைத்துள்ளோம்..மீதமுள்ளதை இணைக்க இவ்வளவு கோடி தேவைப் படுகிறது …அதை தராவிட்டால் எங்கள் மாநில விவசாயிகளை நாங்கள் எதிர் கொள்ள முடியாது என்று ஆணித்தரமாக பேசியது உண்டா?
  சிறு துரும்பையும் நீர் மேலாண்மை செய்வதில் கிள்ளாது இருந்துவிட்டு இன்று வருந்தி என்ன பயன்..

  எல்லாத் துறைகளையும் போலவே விவசாயமும் தரம் கெட்டு விட்டது..
  நான் கண் கூடாகப் பார்த்தவற்றை மட்டுமே தருகின்றேன்..
  விவசாய கடனை கட்டவேண்டும் என்ற எண்ணமே வழக்கு ஒழிந்து விட்டது..ஏனென்றால், எந்த அரசு வந்தாலும் தள்ளுபடி செய்வார்கள் என்பதால் கட்டுபவன் ஏமாளி…
  தனக்குண்டான இலவச இணைப்பு மின்சாரத்தை வணிகத்திற்கு பயன் படுத்தி வருமானம் பார்த்தல்.
  வறட்சி நிலங்களுக்கு அரசு நிதி இழப்பீடு கொடுத்தால்
  (சான்றாக தென்னை விவசாயிக்கு, வாழை விவசாயிக்கு )
  வருவாய் அதிகாரியிடம் அதிக பட்ச இழப்பீட்டிற்காக பேரம் நடத்துவது..(அப்படி செய்யாத நேர்மையான அதிகாரிக்கு எதிராக இன்றும் வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது..)
  இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

  யாரை எதிர்த்து என்ன சாதித்தோம்..
  கேரளாவை எதிர்த்தோ ..கர்நாடகாவை எதிர்த்தோ …ஆந்திராவை எதிர்த்தோ அல்லது சோனியாவை எதிர்த்தோ இல்லை மோடியை எதிர்த்தோ நடப்பதால் என்ன பயன்?

  மாற்றம் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும்..
  அது நடை பெறாதவரை இவரை எதிர்த்து போராடினாலும் அது கண்டிப்பாக விழலுக்கு இறைத்த நீர்தான்..

  அன்புடன்,
  இலக்குமி மோகன்

  • இளங்கோ சொல்கிறார்:

   அய்யா இலக்குமி மோகன்,

   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்
   இழுத்தடிப்பது யார் ?
   சுப்ரீம் கோர்ட் உத்திரவு போட்டும், மதிக்காத
   கர்நாடகா அரசை,
   அடுத்து வரப்போகும் கர்நாடக சட்டமன்ற தேர்தலை
   கணக்கில் கொண்டு கண்டிக்காத மத்திய அரசு யார் கையில் ?
   தமிழ்நாட்டிற்குள் ஓடும் ஆறுகளை இணைக்க தமிழக அரசு
   திட்டம் தீட்டி, துவக்கி ஒரு பகுதி செயல்படுத்தியும்
   எதிர்பார்த்த நிதியுதவி மத்திய அரசிடமிருந்து வராததால்
   அப்படியே பாதியில் நிற்பது உங்களுக்கு தெரியுமா – தெரியாதா ?

   தமிழகத்தில் நீர் மேலாண்மையை இன்னும் சிறப்பாக செய்யலாம்
   செய்யவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதற்காக
   அத்தனை கேடுகளுக்கும் காரணம் நம் மக்கள் தான் என்று
   தலையில் கல்லைத்தூக்கிப்போட, பாஜகவினரால் மட்டும் தான் முடியும்.
   நீங்களும் அப்படித்தானா ?

   • Lakshmi Mohan சொல்கிறார்:

    அன்பிற்குரிய நண்பருக்கு,
    நான் கூறியது பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க என்ன செய்ய முடியும் என்பதே..அதனால்தான் 70 களில் தொடங்கி இன்று வரை நாம் வறட்சி என்பதை பல முறை கண்டு விட்டோம் …

    கருத்திற்கு எதிர் கருத்து கூற எல்லோருக்கும் உரிமை உண்டு..அதை விடுத்தது கட்சி சாயம் பூசுவேன் என்றால் பூசிக் கொள்ளுங்கள் …

    அன்புடன்,
    லட்சுமி மோகன்

 4. Sundar Raman சொல்கிறார்:

  ஆழ்ந்து யோசிக்க வேண்டும் … எப்படி அத்தனை விவசாயிகளும் ஒரே சமயத்தில் தோற்று விட்டார்களா , இல்லை இது தஞ்சை விவசாயி மட்டும் தானா. சொட்டு நீர் பாசனம் தேவை இல்லை என தமிழன் சொல்கிறார் , பருவ மழை தவறும் காலங்களில் , ஆறு , குளம் , ஏரிகளில் தண்ணீர் இல்லாத பொழுது – சொட்டு நீர் திட்டம் பற்றி யோசிக்கத்தான் வேண்டும். எந்த ஒரு தொழில் போல , இதிலும் நிறைய உழைப்பு தேவை , அறிவு தேவை , உப கரணங்கள் தேவை, இயற்கையின் ஆசி தேவை…. முக்கியமாக வேலை செய்ய ஆட்கள் தேவை . பசுமை விகடன் மற்றும் சில செய்திகளை பார்க்கும் பொழுது, இதிலும் சில ஆட்கள் ஜெயித்து காண்பிக்கிறார்கள் என்று தெரிகிறது .

  உரம் , பூச்சிமருந்து …இந்த இரண்டும் நிலத்தை மலடாக்கி , இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு நிலைக்கு வந்தாச்சு , பசு என்று சொன்னாலே பிஜேபி ன்னு பாயறாங்க , கிட்ட தட்ட எல்லா விவசாயிகளும் பஞ்ச கவ்யா ஒரு அருமையான இயற்கையின் பரிசு என்று சிலாகிக்கிறார்கள் . மனுஷனுக்கே தண்ணீர் இல்லை , எப்படி கால்நடையை காப்பாற்றுவது .

  மண் வளம் , கால்நடைகளின் எண்ணிக்கை , ஓரளவுக்கு தண்ணீர் …. இது இல்லாமல் வெற்றி பெறுவது கடினம்

  • தமிழன் சொல்கிறார்:

   என் கருத்தில் பிழை வந்துவிட்டதைப் பார்த்தேன். சொட்டு நீர்ப் பாசனம் தேவை. நான் சொல்ல வந்தது, AUTOMATION செய்கின்ற மேலை நாடுகளைப்போல் இல்லாமல், நம் நாட்டில் உடலுழைப்பால் விளைகின்ற விவசாயம் தேவை (ரொம்ப உடலுழைப்பு இல்லை. அதாவது, குடும்பமே, சின்ன பசங்க முதற்கொண்டு, படிக்காம, விவசாய வேலை செய்யக்கூடாது. பெரியவர்கள், கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்கள் என்று மனித உழைப்பால் விவசாயத்தைப் பெருக்கவேண்டும்) நீர் மேலாண்மை அவசியத் தேவை.

   ‘மனுஷனுக்கே தண்ணீர் இல்லை’ என்பது கொஞ்சம்கூட உண்மையில்லை. வீட்டிலுள்ள பணத்தையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, எனக்குப் பணமே இல்லை என்று புலம்புவது போன்றது இது. இஸ்ரேல் போன்ற நாடுகளில், பல கல்ஃப் நாடுகளில் தண்ணீர் வளம் இல்லவே இல்லை. நான் இருக்கும் நாட்டில் நல்ல நீரே கிடையாது (ஆறு, குளம் இல்லவே இல்லை, கடல் சூழ்ந்த பகுதி). 23 வருடங்களாக, தண்ணீர் இல்லை என்பதையே நான் கேள்விப்பட்டதில்லை. நமக்கு நிச்சயமாக ஏராளமான தண்ணீர் வளம் இருக்கிறது. ஆனால், அதை நாம் சரியாகப் பயன்படுத்துவதில்லை, நீரைக் கெடுக்கிறோம், எதையும் சேர்க்காமல் (அதாவது நிலத்தடி நீராகத் தங்காமல்) அப்படியே கடலில் வெளிவிட்டுவிடுகிறோம். அப்புறம் வயத்தில் அடித்துக்கொண்டு புலம்புகிறோம்.

   கர்’நாடகா, காவிரி நீர், கேரளா முல்லைப்பெரியார், ஆந்திரா கிருஷ்ணா நீர் – இதெல்லாம் சரிதான். போராடலாம். ஆனால் நமக்கு இருக்கின்ற நீர்வளத்தை நம்மால் ஏன் காக்க முடியவில்லை? அரசாங்கத்தைக் குறை சொல்லவேண்டாம். அவர்களை நாம்தான் தேர்ந்தெடுக்கின்றோம். எல்லாப் பதவிகளுக்கும் நாம் தான் ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றோம். நம் வளத்தை நாம்தான் காக்கவேண்டும். அந்த நெறி மக்களுக்கு முதலில் வரவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.