மாறன் சகோதரர்கள் வழக்கு – திரு.குருமூர்த்தி அவர்களுக்கு இதில் திருப்தி தானா…?

நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிலிருந்து
ஒரு பகுதியை கீழே தந்திருக்கிறேன்…

Former Union minister Dayanidhi Maran and his elder brother Kalanidhi Maran, who heads a media conglomerate that includes Sun Network, appeared before a CBI court in Chennai on Monday in connection with an illegal telephone exchange case.
The XIV special judge for CBI cases, Bhaskaran, before whom the
Marans appeared, adjourned the matter to April 22 for further hearing,

– after it was submitted by the CBI that the documents to be served on the two were not yet ready.

————

According to the CBI, Dayanidhi Maran, during the check period of
June 2004 to December 2006, when he was Union minister for
communication and information technology, misused his office and
…………
……he had caused a loss of Rs 1.78 crore to the exchequer

( http://timesofindia.indiatimes.com/city/chennai/illegal-telephone-exchange-case-marans-appear-in-cbi-court-in-
chennai/articleshow/57986042.cms)

————————————————————–

அதாவது,

1) திரு.தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன்
ஆகியோர் ஏப்ரல் 3ந்தேதி கோர்ட் முன்னர் ஆஜர் ஆயினர்…

ஆனால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள்
இன்னும் தயார் ஆகாததால், வழக்கை ஒத்திவைக்கும்படி
சிபிஐ தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று,
நீதிபதி வழக்கை ஏப்ரல் 22-ந்தேதி வரை ஒத்தி வைத்தார்.

2) திரு.தயாநிதி மாறனுக்கு அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்ட
டெலிபோன் தொடர்பை தவறாக பயன்படுத்திய வகையில்,
அரசுக்கு 1.78 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி இருக்கிறார்….

————————————————-

குற்றம் நடந்ததாக கூறப்படும் காலம் – ஜூன் 2004
முதல் டிசம்பர் 2006 வரை. அதாவது இன்றிலிருந்து
சுமார் 11 வருடங்களுக்கும் முன்பாக …..

ஏகப்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, திரு.குருமூர்த்தி
அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கின்
விளைவாகவே, சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து
வேண்டாவெறுப்பாக தொடர்ந்தது.

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, இனியாவது
இந்த வழக்கு சரியான திசையில் செல்லும் என்கிற நம்பிக்கை
பிறந்தது….

இவ்வளவு நாட்களாக சகோதரர்கள் தரப்பில் இயன்றவரை
இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக நீதிமன்றம் விசாரணைக்கு
எடுத்துக் கொண்ட பிறகு – இத்தனை தாமதங்களுக்கு பிறகும்

இப்போது சிபிஐ தன் தரப்பிலிருந்து, இன்னும் ஆவணங்கள்
தயாராகவில்லை என்று சாக்கு கூறி வழக்கை ஒத்திவைக்க
கோருகிறது….

மற்றுமோர் முக்கியமான விஷயம் –
குருமூர்த்தி அவர்கள் தனது முந்தைய குற்றச்சாட்டுகளில்,

// 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய
தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்,
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் 341 அதிநவீன
இணைப்புகள் கொண்ட பி.எஸ்.என்.எல். தொலைபேசி
இணைப்பகத்தை சட்ட விரோதமாக நிறுவினார். இது கணக்கில்
வராமல் ரகசியமாகச் செயல்பட்டு வந்தது.

இந்த ஒவ்வோர் இணைப்பையும் வாடிக்கையாளர்களுக்கு
முறையாக வாடகைக்கு விட்டால் ஆண்டுக்கு தலா ரூ.10
லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது, 2004 -05 முதல்
2007-08 வரையிலான காலத்தில்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.136 கோடி வருவாய்
கிடைத்திருக்கும்.

இதேபோல தயாநிதி மாறன், போட் கிளப் பகுதியில் உள்ள
தனது நவீன பங்களாவில் கூடுதலாக 323 அதிநவீன
இணைப்புகளை சட்ட விரோதமாகப் பெற்றிருந்தார். 2007-ஆம்
ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இவை செயல்பட்டு
வந்தன.

2006-07 மற்றும் 2007-08 ஆகிய ஆண்டுகளுக்கு இந்த கூடுதல்
இணைப்புகளுக்கான வாடகையைக் கணக்கிட்டால் ரூ.65 கோடி
வரும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 764 இணைப்புகளுக்கு
வாடகையாக மட்டும் ரூ.200 கோடி செலுத்த
வேண்டியிருக்கும்.//

என்று கூறி இருந்தார்….
எப்படி பார்த்தாலும், வாடகை கட்டணம் மட்டுமே குறைந்த
பட்சம் 200 கோடி ரூபாய் இருக்கும் என்று திரு.குருமூர்த்தி
அவர்களால் கூறப்பட்ட நிலையில் –

இன்று வழக்கில் சம்பந்தப்பட்ட நஷ்ட தொகை
வெறும் 1.78 கோடி ரூபாய் மட்டுமே என்று கூறப்பட்டிருக்கிறது.

——————————————–

திரு.குருமூர்த்தி அவர்கள் முன்பொரு முறை
தனது தினமணி நாளிதழ் கட்டுரையில்
( http://www.dinamani.com/editorial_articles/2015/08/15/ )
எழுதியிருந்த சில பகுதிகளை இப்போது நினைவிற்கு
கொண்டு வர விரும்புகிறேன்…

//தயாநிதி மாறன் சட்ட விரோதமாகத் தொலைபேசி
இணைப்பகத்தை நிறுவியதுடன், தனது வீட்டிலிருந்து தொலை
தூரத்தில் உள்ள சன் தொலைக்காட்சி குழும அலுவலகத்துக்கு
சட்ட விரோதமாக இணைப்பு கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சன் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலரின்
வீடுகளுக்கும் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் இணைப்பு
கொடுத்துள்ளார். தனது சகோதரரின் தொழிலை விரிவுபடுத்தும்
நோக்கிலேயே மாறன் இவ்வாறு செய்துள்ளார்.//

//முறைகேடாகப் பெற்ற 764 இணைப்புகளின் பயன்பாட்டை
அளவிட முடியாமல், கண்காணிக்க முடியாத வகையில் இது
அலுவலகப் பயன்பாட்டுக்கு என முத்திரை குத்தப்பட்டது //

// 2007-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொலைத் தொடர்புத் துறை
அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. எழுதிய கடிதத்தில் ஓர் இணைப்பில்
ஒரு மாதத்தில் 48 லட்சம் யூனிட் அழைப்புகள்
பேசப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அப்போது ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு 764 இணைப்புகளுக்கு 40
மாதக் கட்டணம் கணக்கிட்டால் அது பல நூறு கோடியாக
ரூபாயாக உருவெடுக்கும். //

//இத்தனை நாள்களாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசு, தனது தோழமைக் கட்சி என்பதால் அரசியல்
பாதுகாப்பு நடவடிக்கையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
வழக்கைக் கிடப்பில் போட்டுவைத்திருந்தது – ( சிபிஐ )
மாறனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும்
அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்
இருந்ததால் தனது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்தது

– என்ற உண்மையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. ஏன்
தெளிவுபடுத்தவில்லை? //

// மாறன் தாராள மனதுடன் ரூ.1.2 கோடியைச் செலுத்தி
வழக்கை முடித்துக் கொள்ள தயார் என்று சொல்லும் அளவுக்கு
இது ஒன்றும் சாதாரண வழக்கு அல்ல. தேசப் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் தொடர்பான வழக்கு என்ற கோணத்தில் இதை
ஏன் விசாரிக்கக் கூடாது என்று அட்டார்னி ஜெனரல்
நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் //

// அமைச்சர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகத்
தெரியவந்தால், அவர் தவறு செய்ததாக நிரூபணமானால்
தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும்.//

—————————————————-

– 11 வருட இழுத்தடிப்புக்கு பின்னரும், இன்னமும்
ஆவணங்கள் தயாராகவில்லை என்றும்

– நஷ்டம் வெறும் 1.78 கோடி மட்டும் தான் என்றும்
சிபிஐ தரப்பில் இப்போது கூறப்படுகிறது…..

————————————————————–

இன்று காலை வெளிவந்துள்ள ஹிந்து செய்தி கூறுகிறது –

// Bills were not raised during the period from
2004 to 2007 causing a financial loss of Rs.1.78 Crores
to the exchequer….. //

அவ்வளவு தானா….?
வழக்கே அவ்வளவு தானா…?
அரசுக்கு பில் எழுப்பாததால் எழுந்த நஷ்டத்தோடு
வழக்கு முடிந்து விடுகிறதா…? வேறு எந்த குற்றமும்
இதில் இல்லையா…? அப்படியானால் 1.78 கோடியை
கட்டி விட்டால், கதை முடிந்ததா…?

—————————————————————-

முன்பு ஐக்கிய முன்னணி (காங்கிரஸ் கூட்டணி) அரசு
அதிகாரத்தில் இருந்ததால், அதன் தோழமைக்கட்சிக்காரர்
என்கிற முறையில், சிபிஐ நடவடிக்கை எடுக்காமல்
காலம் தாழ்த்தியது என்று திரு.குருமூர்த்தி அவர்களே
குற்றம் சாட்டி இருந்தார்……

தற்போது நடப்பது பா.ஜ.க.வின் ஆட்சி.
இப்போது வழக்கு சென்று கொண்டிருக்கும் பாதை
சரியாக இருக்கிறது என்று திரு.குருமூர்த்தி அவர்கள்
கருதுகிறாரா…?

எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானவையா…?
திரு.குருமூர்த்தி அவர்களுக்கு இதில் திருப்தி தானா…?

– என்று மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்…
தயவு செய்து அவர் விளக்கம் தருவாரா…?

திருப்தி இல்லையென்றால் – இப்போதும் முன்போலவே அதை
பகிரங்கமாக சொல்வாரா…?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மாறன் சகோதரர்கள் வழக்கு – திரு.குருமூர்த்தி அவர்களுக்கு இதில் திருப்தி தானா…?

 1. Sundar Raman சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் , ஒரு வழியா நீங்களும் இதை பற்றி எழுதி விட்டீர்கள் , யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் , மாறன் சகோதரர்கள் ஒரு பெரிய பிராடு , அதற்காக சிபிஐ இதுவரை ஒன்றும் செய்யாமல் இருப்பது , அல்லது ஒரு சாதாரண வழக்கை போடுவது … இது ரொம்ப ஓவர். நிச்சயம் குருமூர்த்தி ஞாயமான நிலைப்பாட்டையே எடுப்பார் என நம்புவோம்.

  இதில் ஜெட்லீக்கு என்ன தொடர்பு , ஏன் மோடி மௌனம் …இந்த கேள்விகளுக்கு பதில் சத்தியமாக தெரிய வில்லை . என்ன தான் ஊழல் புகார்கள் இல்லை என்றாலும் , ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நீதிபதிகள் ( மாநிலம் மற்றும் உச்ச ) அரசுக்கு எதிராக , குற்றவாளிகளுக்கு துணையாக சில சமயம் நிலைப்பாடு எடுத்தாலும் , அரசே குற்றத்தை குறைத்து எடுத்துரைப்பது , அல்லது சிறிய நஷ்டத்தை காண்பிப்பது ……இது மன்னிக்க முடியாத குற்றேமே . மக்கள் மறக்க மாட்டார்கள் .

  • Sundar Raman சொல்கிறார்:

   இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் …. முன்பே எழுதியது போல், நீதிபதிகள் ( உச்ச மற்றும் மாநில ) அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அடிக்கடி எடுக்கிறார்கள் …கட்டாய தேசிய கீதம் , இதை அரசு வெளிப்படையாக எதிர்க்க முடியாது ,

   இப்போது இந்த நெடுஞசாலையில் உள்ள மது விற்பனை , இதையும் அரசு எதிர்க்க முடியாது ( இருந்தாலும் ஆதரவாக சில குரல்கள் கேக்குது )… இதில் எத்தனை NPA வரப்போகிறதோ ? எவ்வளவு வேலை போகப்போகிறதோ ? …இனி பத்திரிக்கைகள் & டிவி இதை பற்றி தான் விவாதிக்க போகிறது ….எத்தனை பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்கள் என யாரும் சொல்லப்போவதில்லை …ஆனால் இந்த வேலை இழப்பில் யாராவது தற்கொலை முயற்சி செய்தாலே அதற்க்கு மோடி (மட்டுமே) பதில் சொல்லவேண்டும் .

 2. புதியவன் சொல்கிறார்:

  சொந்தத் தொழில் வைத்திருப்பவர்களும், உறவினர்கள் தொழிலில் ஈடுபடுபவர்களாக இருப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை என்ற ஒரு சட்டம் கொண்டுவந்தால்தான், நாடு சரியாக இருக்கும். இங்க அரசியல்வாதிகள் அனைவரும் கொள்ளையர்கள்தான். இவர்கள் பண ஆசைக்காக, எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும் கூட்டுக்கொள்ளை செய்கிறார்கள். இதனால்தான் நமது நாட்டில் நீதி என்பது கிடைப்பதில்லை.

  ஜெட்லிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? மாறனுக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இப்படி ஒவ்வொரு அரசியல்வாதியும் ஏகப்பட்ட தொழிலில் இறங்குவதால், நிறைய CONNECTIONகள் ஏற்படுகின்றன. கடைசியில் நீதியைச் சாகடித்து தங்கள் சொத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். இதுபோலவே அதிகாரிகளும். எந்த அதிகாரியும், பணி ஓய்வு பெற்று 5 வருடங்களுக்கு அரசியலிலோ அல்லது கட்சியிலோ எந்தப் பதவியும் பொறுப்பும் பெறமுடியாது என்ற சட்டம் வந்தால், ஆளைப் பார்த்து நீதி வழங்கும் TREND அழிந்துவிடும். இல்லாவிட்டால், தமிழக தொலைபேசி இலாக்காவில் ஜி.எம். பதவிக்காக, நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகம் போன்று, அரசு சொத்தை மாறன் வீடுகளுக்காகக் கொடுப்பாரா அந்த அதிகாரி? இவர்களுக்கெல்லாம் உடனடியாகத் தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டாமா? இவருடைய குடும்பமெல்லாம் நாட்டின் கேன்சர் போன்றதல்லவா?

  இதனால்தான், அரசு சொத்தைக் கொள்ளையடித்த மாறன் சகோதரர்கள் மிக சுலபமாக சட்டத்தை வளைத்துத் தப்பிக்க இயலுகிறது.

 3. Ganpat சொல்கிறார்:

  காமைஜி..நீங்கள் என்னை விட வயதில்,அறிவில்,விடாமுயற்சியில்,உழைப்பில்,மற்றும் பல விஷயங்களில் மூத்தவர் என்று நான் அறிவேன். இந்த பதிவுக்கு(ம்) நான் உங்களை நமஸ்கரிக்கிறேன்.ஒரு பிரச்சினையை இவ்வளவு எளிமையாக,ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியவைக்கும் அளவிற்கு யாரும் விவரித்து நான் கேட்டதோ,படித்ததோ இல்லை..திரு.குருமூர்த்திக்கு என் வேண்டுகோள் ..நீங்கள் மாறன் விஷயத்தில் என்ன வேண்டுமானாலும் முடிவெடுங்கள்..ஆனால் திரு காவிரிமைந்தன் எழுதும் நேர்மையான பதிவுகளை துக்ளக் இதழில் தொடர்ந்து பதிவிடுங்கள்.நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கண்பத்,

   வயதில் மூத்தவன் என்கிற ஒன்றை மட்டும் ஏற்கிறேன்.
   மற்றவற்றை மறந்து விடுகிறேன்…
   என்னைப்பற்றிய உங்கள் நல்ல எண்ணங்களுக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Bagawan சொல்கிறார்:

  Why the court not questioning and/or taking action against the CBI team responsible for dereliction of duty in making the document ready.

 5. Rajamanickam Veera சொல்கிறார்:

  குருமூர்த்தி அவர்களை பொறுத்த வரை நேர்மை தவறி நடக்க மாட்டார் . நம் பிரதமரும் நிச்சயம் நேர்மை தவறி நடக்க மாட்டார். ஆனால் சிபிஐ யில் நிறைய கறுப்பு ஆடுகள் இருக்கிறது. அரசு அதிகாரிகள், லாபியிஸ்ட்கள், அமைச்சர்களில் சிலரின் செயல்பாடுகள் அவர்களின் நேர்மையை சந்தேகிக்கும் படி இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி வாய்மையே வெல்லும் என்று நிச்சயம் நம்புகிறேன். தெய்வம் நின்று கொல்லும் என்றும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்றும் இன்றும் நம்புகிறேன். இது போன்ற ஊழல் வழக்குகளில் நிதானம் காட்டுவது மிக மோசமான முன்னுதாரணம் என்று தான் சொல்ல வேண்டும். இதை தலைகுனிவோடு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 6. NSM Shahul Hameed சொல்கிறார்:

  எனது முகப்புத்தகப் பதிவில்…

  மாRUN சகோக்கள் !
  ஓடினர்! ஓடினர் ஓடிக்கொண்டே இருந்தனர்!
  இது நடந்தது மழைக்கோட்டு அணிந்து ஊழலாற்றில் முக்குளித்த மெளன மோகன காங்கிரஸ் காலத்தில்!
  இப்போதோ ரோம்போவின் பொற்காலம்!
  விரிந்த மார்பும் விரைவான செயல்பாடும் சொல்லி மாளவில்லை பாஜக தோழமைகளால்!
  மறுத்துவந்த மீடியாக்களும் மடங்கிவிட்டன!
  ஆனால், இந்த சாயா – மாயா காலத்தில் அந்த வினோதம் மட்டும் நடந்துகொண்டிருக்கிறது!
  ஓடிக்கொண்டிருந்த மாRUNகள் நின்று முறைத்தனர்! 😀
  சுப்ரமண்யம் சுவாமி துரத்திப்பார்த்துவிட்டு ஓடி ஒதுங்கிக்கொண்டார்!
  குருமூர்த்தி துரத்திவிட்டு ஒதுங்கிக்கொண்டாரா என்பது தெரியவில்லை!
  இன்றய இலட்சணத்தைப் படம் போட்டுக் காட்டும் இந்த காவிரி மைந்தனின் பதிவு நீங்கள் அவசியம் காணவேண்டியது!
  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சாருக்கு நமது கேள்வி:
  இன்னுமா உறக்கம்
  இந்த ஆட்சிபற்றி?
  இதன் தூய்மை பற்றி?
  நிர்வாகத் திறமை பற்றி?
  எங்கே உங்கள் எழுதுகோல்?
  – NSMSH
  இனி காவிரிமைந்தன் பதிவு:

  • Sundar Raman சொல்கிறார்:

   ஊழல் நடந்தது கூட்டாட்சியில் , இது என்னவோ சின்ன ஊழல் தான் . பெரிய ஊழல் , ஸ்பெக்ட்ரம் , நிலக்கரி , ஹெலிகாப்டர் , …அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கும்.

   என்ன தான் நினைத்தாலும், இந்த ஊழல் செய்தவர்களை கூண்டில் ஏற்றி , கேஸ் ரெடி செய்து , வாதாடி , தண்டனை வாங்கித்தருவது ….. சிபிஐ , அரசு வக்கீல்கள் , முக்கியமாக நேர்மையான நீதிபதிகள் .

   சிபிஐ உயர் அதிகாரி, அல்லது ரிசர்வ் வங்கி கவர்னரை இந்த அரசு உடனே மாற்றவில்லை . அந்த சிபிஐ சின்ஹா , ( நம்ப தெலுங்கு பட வில்லன் மாதிரி இருப்பார் ) , கொஞ்ச நாள் இருந்து ஒன்றும் செய்ய வில்லை அல்லது இந்த மாதிரி ஊழல் வழக்குகள் நீர்த்து போக என்ன வேண்டுமோ அதை செய்தார். அப்போ அந்த துறை அமைச்சர்கள் என்ன வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்களா என கேட்பது புரிகிறது . இதற்க்கு சரியான பதில் இல்லை யாரிடமும்.

   ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம், விரிந்த மார்பு என்று நீங்கள் கேலி செய்யும் மோடி உண்மையான தலைவர், ஊழல் அற்றவர் , ( அவர் தாயாரையோ அல்லது மற்ற குடும்ப
   உறுப்பினர்களை பாருங்கள் – மூன்று முறை முதல்வராய் இருந்த குடும்பம் என்றால் நம்புவது கடினம் ) .

   கண்டிப்பாக செயல் படும் நேரம் வரும் … மோடி மோசமானவர் இல்லை . நம்பிக்கை வையுங்கள்

   • புதியவன் சொல்கிறார்:

    மோடி அவர்கள், 3 வருடங்களுக்குள் எல்லாவற்றையும் சரி செய்யவேண்டும் என்றால், ஒரே வழிதான் இருக்கிறது. 75% அதிகாரிகளையும், அரசாங்கப் பணியாளர்களையும், அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் நாட்டைவிட்டே துரத்திவிடுவது அல்லது கடலில் தூக்கிப்போடுவது. மற்றவர்களை மிலிட்டரி ஆட்சியின்மூலம் ஒழுங்காக நடந்துகொள்ள வைப்பது (தெருவில் 1, 2 போவது, துப்புவது, குப்பையைத் தெருவில் போடுவது, லஞ்சம் கொடுக்க முனைவது, வரிசையாக நிற்காமல் ஒழுங்கீனமாக இருப்பது, சாலை விதிகளை FOLLOW செய்தல், பஸ்ஸில் ஏற முந்தியடித்துக்கொண்டு கர்சீப் போட்டு இடம் பிடிப்பது போன்று பல) இது சாத்தியம் என்றால், நாட்டை உடனே சரிசெய்துவிடலாம்.

    நாட்டில் உள்ள மனிதர்கள் தாமாகத் திருந்தினாலொழிய, ஒரு தேவன் வருவான், அவன் உடனே நாட்டைத் திருத்திவிடுவான் என்று நம்புவது, நம்முடைய மதியீனத்தைக் குறிக்கிறது.

    மன்மோகன் அவர்கள் நேரடியாக ஊழல் செய்யவில்லை. ஆனால் அவர் எதற்கும் தான் பொறுப்பாக இல்லை. அதாவது, ‘யார் வேணுமானாலும் எதையும் செய்துகொள்ளுங்கள். கொள்ளை அடியுங்கள். நான் தலையிடமாட்டேன்’ என்று நேரடியாகச் சொல்லியதுபோல் நடந்துகொண்டார். அதாவது அவர் ஆபீஸ் பாய் போன்று வேலைபார்த்தார். மோடி அவர்கள் செயல்படுகிறார். ஒவ்வொரு செயலுக்கும் அவரைக் குறைகூறுவது கொஞ்சம்கூட ஏற்கத்தகாத கருத்து. COMMON CIVIL CODE, மத சம்பந்தமான அல்லது மைனாரிட்டி சம்பந்தமாக எந்த அரசியல் கட்சியும் இருக்கக்கூடாது, வெளிநாட்டு நிதி எந்த NGOக்கும் செல்வது மரண தண்டனைக்குரிய குற்றம், வழிபாட்டுத்தலங்களில் அரசியல் பேசினால் உடனே மரண தண்டனை போன்ற பல நூறு சட்டங்கள் கொண்டுவந்தால்தான் இந்தியா தூய்மையாகும். இதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்தான், மோடி அவர்கள் இன்னும் விரைவாகச் செயல்படவேண்டும் என்று சொல்லும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

    3000ரூபாய்களுக்கு வாக்கை விற்கும் மக்கள் இருக்கும் நாட்டில், நமக்குத் தேவை, பல நூறு மோடிகள் (ASSUMING, அவர் நல்லதை நினைத்து முடிந்தவரை அதைத் துணிவுடன் செயல்படுகிறார் என்று இந்த மூன்று வருடங்களில் நடந்ததை வைத்து எண்ணுகிறேன், சில பல OBVIOUS தவறுகள் தெரிந்தபோதிலும்)

 7. selvarajan சொல்கிறார்:

  காங்கேயம்: சிவன்மலை முருகர் கோயிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இரும்புச்சங்கிலி கடந்த ஜனவரி 10ஆம் தேதி வைக்கப்பட்டது . இதனால் சட்டத்தை மீறுபவர்கள், கைதாவர் என்ற தகவல், பக்தர்கள் மத்தியில் நிலவியது ….

  அதற்கேற்ப நீண்ட காலமாக இழுத்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வந்து ” சசி & கோ ” கர்னாடக சிறையில் உள்ளனர் … அடுத்து என்னதான் ஜெகஜ்ஜால சித்துக்களை செய்தாலும் — ஊரறிந்த ஊழலை செய்தவர்கள் ” சிவன் மலை முருகன் அருளினால் ” கண்டிப்பாக இரும்புச்சங்கிலியை அணிந்தே தீர வேண்டும் …. நடக்கிறதா பார்ப்போம் …. அப்பனுக்கே பாடம் சொன்ன ” குருமூர்த்தி ” ஆண்டவனின் அருள் — நம்ம குருமூர்த்திக்கு கிடைத்து ஏதாவது செய்யாமலா இருக்க போகிறார் … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.