அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறாரா புதுச்சேரி து.நி.ஆ…….!!!

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும்,
முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்,
நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போய் –
இப்போது அதில் சபாநாயகரும் உள்வாங்கப்பட்டு,
ஒரு பெரிய அரசியல் சட்ட சிக்கல் ஏற்படும் அளவிற்கு
வளர்ந்துள்ளது.

திருமதி கிரண்பேடி டெல்லியில் முதலமைச்சராக
கோலோச்ச விரும்பி பாஜகவில் சேர்ந்தார்….
ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு எம்.எல்.ஏ. கூட
ஆக முடியாமல் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்..

தனது சொந்த ஊரில் தேர்தலில் ஜெயித்து ஒரு எம்.எல்.ஏ.
கூட ஆக முடியாத ஒரு நபர், பாஜக மேலிடத்தின்
கருணையால், கவர்னர் பதவியில் அமர்த்தப்பட்டு
புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டார். பாஜக மத்தியில் ஆட்சி
செய்வதால், இதைச்செய்ய அந்த கட்சிக்கு உரிமை
இருக்கிறது… அதை கேள்வி கேட்பதற்கில்லை.

ஆனால் அதற்காக டெல்லியில் தேர்தலில் ஜெயித்து
செய்ய முடியாததை எல்லாம்
அவர் புதுச்சேரியில் நியமன பதவியில் வந்து உட்கார்ந்து
கொண்டு செய்ய முயல்வது அபத்தம்….

திருமதி கிரண்பேடி புதுச்சேரியை – டெல்லி என்று நினைத்து
செயல்பட விரும்புகிறார். டெல்லி, புதுச்சேரி இரண்டுமே
யூனியன் பிரதேசங்கள் ( Union Territories ) தான் என்றாலும்,
அரசியல் சட்டமே, இரண்டிற்கும் சில வித்தியாசமான
சட்ட நிலையை உருவாக்கி உள்ளது.

The LG of Delhi has “Executive Functions” that allow him to
exercise his powers in matters connected to public order,
police and land “in consultation with the Chief Minister,
if it is so provided under any order issued by the President
under Article 239 of the Constitution”.

Simply put, the LG of Delhi enjoys greater powers than
the LG of Puducherry.

While the LG of Delhi is also guided by the Government of
National Capital Territory of Delhi Act, 1991,
and the Transaction of Business of the Government of
National Capital Territory of Delhi Rules, 1993,

the LG of Puducherry is guided mostly by the
Government of Union Territories Act, 1963.

Articles 239 and 239AA of the Constitution, as well as the
Government of National Capital Territory of Delhi Act, 1991,
clearly underline that Delhi is a UT, where the Centre,
whose eyes and ears are the LG, has a much more
prominent role than in Puducherry.

டெல்லியில் – சட்டம், ஒழுங்கு மற்றும் காவல்துறை
கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது… கவர்னர்
மத்திய அரசால் ( உள் துறை அமைச்சகத்தால் ) வழி
நடத்தப்படுகிறார்.

புதுச்சேரியில் நிலைமை அப்படி அல்ல. இங்கே மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும்
அரசியல் சட்டம் வழங்கியுள்ள – மாநில அரசு பட்டியலில்
உள்ள அனைத்து விஷயங்களிலும் மற்றும் பொது பட்டியலில்
உள்ள விஷயங்களில் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு.
மற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசத்திற்கும் உள்ள
வித்தியாசம், மாநில அரசின் முடிவுகளுக்கு மத்திய அரசின்
ஒப்புதல்களை பெற்றாக வேண்டும்.

The manner in which the LG functions vis-à-vis the elected
government (Council of Ministers) is spelt out in the Rules of Business of the Government of Pondicherry, 1963, issued on June 22, 1963.

Under Rule 47, which deals with persons serving in the
UT government, the Administrator exercises powers regulating the
conditions of service of such persons –

– in consultation with the Chief Minister.

( அதாவது, கவர்னர் தானாகவே, முதலமைச்சருக்கு
தெரிவிக்காமலே அரசு ஊழியர்களைப்பற்றிய முடிவுகளை
எடுக்க முடியாது…)

In case the LG has a difference of opinion with the Chief Minister, he can refer the matter to the central government for the decision of the President.

சட்டம் படித்த து.நி.ஆ.வுக்கு இதெல்லாம்
தெரியாத விஷயமல்ல…

இங்கே தலைவிரித்து ஆடுவது ஈகோ…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது,
து.நி.ஆளுனரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
என்பதை அவர் ஏற்க மறுக்கிறார்…

விளைவு – ஊர் அசிங்கப்படுகிறது.

து.நி.ஆ. இப்படி செயல்படுவதற்கு கீழ்க்கண்டவற்றுள்
ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் –

1) து.நி.ஆ.நரின் தனிப்பட்ட ஈகோ…

2) இப்படி செயல்படுவதன் மூலம், கட்சிதலைமை
மகிழ்ச்சி அடையும் என்று அவர் நினைப்பதால்…

3) கட்சித்தலைமையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
முதலமைச்சரை அவமானப்படுத்த, ஏளனப்படுத்த –
இவ்வாறு செய்யுமாறு அறிவுரை கூறி இருக்கலாம்….

இந்த மூன்றில் எது காரணமாக இருந்தாலும்
அது தவறான அணுகுமுறை என்பதை காலம் தாழ்ந்து
இப்போதாவது, சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

நான் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவன் அல்ல…
புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள்
மத்திய அமைச்சராக இருந்தபோது பலமுறை இந்த
தளத்திலேயே விமரிசிக்கப்பட்டிருக்கிறார்…

எனவே, நான் கூறுவதை காங்கிரஸ் கட்சிக்கு
பரிந்துகொண்டு பேசுவதாக எண்ண வேண்டாம்…

முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மக்களிடமிருந்து
அதிகாரத்தை பெற்று செயல்படும் ஒரு அரசுக்கு எதிராக,
டெல்லியிலிருந்து திணிக்கப்படும் ஒரு அரசு அதிகாரியான
து.நி.ஆ. சட்ட விதிகளில் உள்ள குழப்பங்களை
பயன்படுத்திக்கொண்டு ஒரு எதிர்க்கட்சிக்காரர் போல்
செயல்படுவது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.
டெல்லி ஆதரிக்கிறது என்பதைத்தவிர,
சட்டபூர்வமான எந்தவித அங்கீகாரமும் இதற்கு கிடையாது.

யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவது,
து.நி.ஆளுநருக்கும், அவருக்கு தகுந்த ஆலோசனைகளை
வழங்குவது பாஜகவுக்கும் நல்லது.

அதிகாரம் கையில் இருக்கிறது என்பதால்
தலைக்கனம் பிடித்து இஷ்டம்போல் ஆடினால்,

அது –
” ——— பவிஷு வந்தால், அர்த்த ராத்திரியில்
குடை பிடிப்பார்..” என்கிற பழமொழியையே
நினைவுபடுத்துவதாக அமையும்.

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறாரா புதுச்சேரி து.நி.ஆ…….!!!

 1. kalakarthik சொல்கிறார்:

  ஒரு குடை .இரண்டு குடை அல்ல.100 குடை..கலிகாலம் .
  karthik amma

 2. புதியவன் சொல்கிறார்:

  கவர்னர், துணைநிலை ஆளுநர்கள் போன்றோர் சட்டத்தை மீறி (Outside constitutional power) எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்கும் கவர்னரை எதிர்த்து கருத்து கூறுவதில்லை. முதலமைச்சரும் சட்ட மன்ற உறுப்பினர்களும் (பாராளுமன்ற உறுப்பினர்களும்) ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். அவர்கள், அதிகாரிகளைவிடவும், கவர்னர்களைவிடவும், ஜனாதிபதியைவிடவும் (பிரதம்மந்திரிஐ ஒப்பு நோக்கும்போது) Authority உள்ளவர்கள். கிரண் பேடி அவர்கள், நா சாவின் பதவியை மதிக்கவேண்டும். இதில் கட்சி ஆரசியலை நுழைப்பது கண்டனத்திற்குரியது. இந்திரா அவர்கள் தன் பதவியை Misuse செய்ததற்குக் குறைவானதல்ல.

 3. புதியவன் சொல்கிறார்:

  மீறி- மீறுவதை

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  புதுவை அனைத்துக்கட்சிகளும் அ தி மு க … கம்யூனிஸ்ட் உள்ளிட்டவர்களும் இவரை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என்று குரல் எழுப்பி அறக்கைகள் விட்டவாறு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை ….. மூன்றுமே காரணங்கள்தான் … !!!

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  yes,u r correct

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.