திரு. பொன்.ரா. வுக்கு எக்கச்சக்கமாக மரியாதை செய்யும் கமலின் மாண்பு ….. !!!

இது ஜனவரி 25 –
சென்னையில் திரு.பொன்.ரா. அவர்களின் இல்லம்…
கமல் தேடிவந்து மரியாதை செலுத்துகிறார்…


இது ஏப்ரல் 4 – (நேற்றிரவு)
டெல்லியில் திரு.பொன்.ரா. அவர்களின் இல்லம்…
கமல் தேடிவந்து மரியாதை செலுத்துகிறார்…

இப்படி பொன்.ரா அவர்கள் செல்லும் ஊர்களுக்கு
எல்லாம் தேடிச்சென்று கமல் அவர்கள்
திரு.பொன்.ரா. அவர்களுக்கு மரியாதை செய்யும்
பாங்கை காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது….
மரியாதை (செய்யத் ) தெரிந்த மனிதர்…!!!

அடுத்து பொன்.ரா அவர்கள் எந்த ஊருக்கு போகிறார்
என்பதையும், கமலிடம் தெரிவித்திருப்பார் என்றே
நம்புகிறோம்….!!!

பின் குறிப்பு – சென்ற தடவை மரியாதை செய்த பிறகு,
திருவாளர் கமல், லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசியை
சந்திக்கும் குழுவில் இடம் பெற்றதையும்,

இப்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு குழுவுக்கு
அமெரிக்க விசா கிடைக்காமல் இரண்டு மாதங்களாக
காத்திருப்பதையும் – யாரும் இத்துடன் இணைத்துப் பார்க்க
வேண்டாம்… இது ….. முற்றிலும் ……. மரியாதை
நிமித்தமான சந்திப்பு …!!!

கமல் அவர்கள் அப்படியெல்லாம் அரசியல்வாதிகளின்
உதவியை நாடக்கூடியவர் அல்ல.. சுயமரியாதை மிக்கவர்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு. பொன்.ரா. வுக்கு எக்கச்சக்கமாக மரியாதை செய்யும் கமலின் மாண்பு ….. !!!

 1. புதியவன் சொல்கிறார்:

  “கமல் அவர்கள் அப்படியெல்லாம் அரசியல்வாதிகளின்
  உதவியை நாடக்கூடியவர் அல்ல.. சுயமரியாதை மிக்கவர்.” – இப்படியெல்லாம் உங்கள் கற்பனை விரிவதைக்கண்டு மிகவும் ஆச்சரியப்படுகிறேன்.

  ‘வெளியே பிரச்சாரமான தொனியில் யாரேனும் ஏதாகிலும் சொல்லிக்கொண்டே இருந்தால்’, ‘உள்ளே அவர்கள் அதற்கு முற்றிலும் மாறான கொள்கையைக் கொண்டிருப்பார்கள்’ என்பதை நான் பலரிடம் கண்டிருக்கிறேன். கமல்ஹசன் அதில் ஒருவர். கருணானிதி குடும்பத்தார் மற்றவர்கள்.

  சுயமரியாதையோடுதானே, கமல் அவர்கள் 2 மாதங்களுக்கு ஒரு முறை கருணானிதியின் பாராட்டுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, கேட்பவர்களே கூச்சப்படும் அளவில் புகழ்ந்துரைத்தது? அவர்தானே அடிக்கடி ஹிந்துத்வாவை ஆதரிக்கும் விதமாக, பா.ஜ.க கட்சியினரோடு அவ்வப்போது தொடர்பில் இருப்பது. கமல் இருப்பது வியாபாரத்தில். அதில் பலரை அட்ஜஸ்ட் செய்யவேண்டும். அதனால் இடத்திற்குத் தகுந்தபடி வேஷம் கட்டவேண்டும். இதில் சொந்தக் கொள்கை என்று எது வந்தது? ‘கடவுள் மறுப்பு’ என்ற பதாகையை தமிழகத்தில் ஏந்திக்கொண்டால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை விமரிசிக்கப்படாது என்பதுதானே அவரின் எதிர்பார்ப்பு.

  நீங்கள் கவனித்திருப்பீர்கள். குட்டியை அனுப்பி ஆழம் பார்த்த கதை, அதனால் தான் விமரிசனத்தில் சிக்கிவிடக்கூடாது (தொழில் பாதிக்குமே, தமிழகத்திலும் பாதிப்பிருக்குமே) என்பதனால்தான், ‘பிரிந்தது’போல் நமக்குப் படம் காண்பித்தது.

 2. Antony சொல்கிறார்:

  //கமல் அவர்கள் அப்படியெல்லாம் அரசியல்வாதிகளின்
  உதவியை நாடக்கூடியவர் அல்ல.. சுயமரியாதை மிக்கவர்.//

  Kamal always had gone behind the politicians whenever he was faced with problems. Even for Vishwaroopam issue he went and meet Jayalalitha. He had the courage to reveal the truth who were behind that issue only after the death of J.

 3. selvarajan சொல்கிறார்:

  எதற்கும் பொன் . ரா . அவர்கள் உடனே ஏதாவது செய்ய வேண்டும் — இல்லையென்றால் கமலஹாசன் இந்தியாவே வேண்டாம் என்று அறிக்கை விட்டு வேறு நாட்டு சென்று விடுவார் … ஒரு மாபெரும் கலைஞனை விட கூடாது …. !

  முன்பு விஸ்வரூபம் படம் வெளியிட முஸ்லீம் அமைப்புகள் பிரச்னை கிளம்பியதும் — தமிழக அரசு தடை விதித்ததும் — கமல் பல அறிக்கைகள் விட்டதும் — அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதற்கு ” தக்க விளக்கத்துடன் ” பதிலுரைத்ததும் — தங்களின் பார்வைக்காக : — // முஸ்லிம் அமைப்பினரோடு உடன்பாடு ஏற்படுத்துங்கள்: கமலுக்கு முதல்வர் யோசனை// http://www.dinamalar.com/news_detail.asp?id=637987 …. இந்த பொன்.ரா — கமல் அடிக்கடி சந்திப்பு ” பல காரணங்களுக்காக ” இருக்குமோ …. ?

 4. BVS சொல்கிறார்:

  // அடுத்து பொன்.ரா அவர்கள் எந்த ஊருக்கு போகிறார்
  என்பதையும், கமலிடம் தெரிவித்திருப்பார் என்றே
  நம்புகிறோம்….!!! //

  super kindal.

 5. M.செய்யது சொல்கிறார்:

  தமிழில் ஒரு பழமொழியுண்டு சோழியன் குடுமி சும்மா ஆடாது. ஏனோ யாபகம் வந்து தொலைக்கிரது அய்யா!!!

  M.செய்யது
  துபை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s