தேர்தல் ரத்தாகவில்லை என்றால்… ரிசல்ட் என்னவாக இருந்திருக்கும்….? ஜூ.வி.சர்வே …

தேர்தல் ரத்து – என்று அறிவிப்பு வரும் முன்னர்,
கடைசியாக ஆர்.கே.நகரில் ஜூனியர் விகடன்
எடுத்த சர்வேயின் முடிவுகள் கீழே –
(பணப்பட்டுவாடா முழுவதுமாக முடிவடைந்திருந்தால்,
முடிவுகள் கொஞ்சம் மாறி இருக்கலாம் என்றும்
ரிப்போர்ட் கூறுகிறது….)

இந்த ரிப்போர்ட்டை பார்த்தால், தேர்தல் ரத்துக்காக
OPS அணியைத்தவிர மற்ற அனைத்து தரப்பினரும்
மகிழ்ச்சியே அடைய வேண்டும் அல்லவா …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தேர்தல் ரத்தாகவில்லை என்றால்… ரிசல்ட் என்னவாக இருந்திருக்கும்….? ஜூ.வி.சர்வே …

 1. BVS சொல்கிறார்:

  திமுக ஆதரவு பத்திரிகை என்று கருதப்படும்
  ஜூனியர் விகடனே இப்படி ஒரு சர்வே ரிசல்ட்
  தந்திருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

 2. புதியவன் சொல்கிறார்:

  நான் ஜூவியின் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. கடந்த பல வருடங்களாகவே, உள் நோக்கம் கொண்ட கட்டுரைகளும், கருத்துத் திணிப்புகளும் கொண்டதாகவே ஜூவி இருந்துவந்திருக்கிறது. இதன் காரணம், மாறன் சகோதரர்கள் பங்கு வைத்திருப்பதுதான். மாறன் சம்பந்தமான செய்திகளை ஜூவியினால் பாரபட்சமில்லாமல் வெளியிட முடிவதில்லை.

  இந்தக் கருத்துக்கணிப்பு (1) ஓரளவு உண்மையாக இருக்கலாம் (2) மாறன் சொன்ன கேன்டிடேட் போடப்படாததால் ஸ்டாலினுக்குச் சொல்லப்பட்ட மெசேஜாக இருக்கலாம்.

  ஜூவி ஓரளவு திமுக சார்பு பத்திரிகை என்றே அடையாளம் காணப்படுகிறது. விகடன் குழுமத்தில் வரும் எல்லா அரசியல் கட்டுரைகளும், கார்ட்டூனும் உள் நோக்கமுடையவையே. இதற்குக் காரணம் மாறனின் ஆதிக்கம்தான்.

  திமுக பத்திரிகைகளான முரசொலி, நக்கீரன் போன்றவை வழங்கும் கருத்துக்கணிப்புகளும் ‘திணிப்புகளே’.

  இவர்கள் எல்லோராலும் மறைக்க முடியாதது, எடுத்த கருத்துக்கணிப்பில், அதிமுகவின் 3 அணியும் சேர்ந்து 60 சதவிகித வாக்குகளும், திமுக+காங்கிரஸ் கூட்டணி 30க்கும் குறைவான வாக்குகளும் பெறுவதைத்தான்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நீங்கள் சொல்வது சரியே.
   ஆனால், தேர்தல் வெற்றிகளை பொதுவாக
   தீர்மானிப்பது நல்ல கூட்டணிகளே…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.