எஸ்கேபிசம் கேள்விப்பட்டிருப்பீர்கள்….. மோடியிசம்… பார்த்திருக்கிறீர்களா….. ?

நான் மாய்ந்து மாய்ந்து நாலு பக்கம் எழுதுவதை விட
விஷயத்தை – எவ்வளவு அழகாக, தெளிவாக, சுருக்கமாக
சுரேந்திரா-வின் இந்த கார்ட்டூன் விளக்குகிறது பாருங்கள்…!!!

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து
மாண்புமிகு பாரதப்பிரதமரின் அணுகுமுறை இது தான்….

இந்த அணுகுமுறையை பார்த்த பிறகு
இவர் நமக்கும் சேர்த்து தான் பிரதமர் என்கிற எண்ணம்
நமக்கு எப்படி வரும்….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to எஸ்கேபிசம் கேள்விப்பட்டிருப்பீர்கள்….. மோடியிசம்… பார்த்திருக்கிறீர்களா….. ?

 1. selvarajan சொல்கிறார்:

  மோடியிஸமா … அல்லது மூடியிஸமா … ? // கௌதமி, காஜோலை பார்க்க நேரம் இருக்கிறது, விவசாயிகளை சந்திக்க இல்லையா? மோடிக்கு இளைஞர்கள் கேள்வி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-has-spent-time-see-actress-film-festivals-279657.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk …… வியர்வை சிந்தி — ஊருக்கே உணவளிக்கும் கோமணாண்டிகளை — சந்திப்பதற்கும் — மேக்கப் கலையாமல் — வாசனையோடு வருபவர்களுக்கும் — செல்வ செழிப்பில் உலா வரும் ஏமாற்று நபர்களையும் சந்திப்பதில் நிறைய வித்தியாசம் இருக்கிறது – அல்லவா … ? பிரதமர் ” மோடியிஸம் ” என்றால் சும்மாவா … ?

 2. தமிழன் சொல்கிறார்:

  எனக்கும் மோடி அவர்களின் இத்தகைய செயல்கள், அவர் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பைக் குலைப்பதாகத்தான் இருக்கிறது. இந்த விஷயம், ஹைட்ரோ கார்பன் திட்டம், போன்ற சிலவற்றில் அவர் ‘விட்டேத்தியாக’ இருப்பதாக உணர்கிறேன். ‘சரியோ’ ‘தவறோ’, தன்னுடைய நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தவேண்டும். ‘ஊமைக் குசும்பன்’ என்று கிராமங்களில் சொல்வார்களே, அதுபோல், எல்லாப் பிரச்சனையிலும் அமைதியாக இருக்கக்கூடாது.

 3. Sundar Raman சொல்கிறார்:

  நீங்கள் என்ன தான் சொன்னாலும் – இந்த பக்கத்தையும் பார்க்கணும் .

  இந்த விவசாயிகளின் நிலைமை இதுவரை எப்படி இருந்தது , இந்த ரெண்டு வருஷத்துல தான் இப்படி ஆனதா ? மோடி எடுத்த எந்த முடிவினால் இப்படி ஆனது … எனக்கு தெரிந்து , பயிர் காபீட்டு திட்டம் கொண்டு வந்தது இந்த அரசு தான் , அது நல்ல திட்டம் தான் என்று எல்லாரும் சொல்கிறார்கள் , ( தமிழ் நாடு அரசு இந்த பிரீமியம் கூட கொடுக்காது நஷ்ட ஈடு – லோன் கேட்கிறது ). நதி நீர் பங்கீடு – முக்கியமாக காவிரி பிரச்னை , கர்நாடக அரசு என்ன முடிவு எடுத்தது , அதற்க்கு உச்ச நீதி மன்றம் என்ன செய்தது ..எல்லாருக்குமே தெரியும் , இதில் மோடி அரசு என்ன செய்ய முடியம் . மோடி முதல் அமைச்சராக இருந்த பொழுது குஜராத்தில் நர்மதா அணை மூலம், கட்ச் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வாய்க்கால் வெட்டி , அதில் மேலே சோலார் பலகை வைத்து , தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அதை தடுத்து , கிட்ட தட்ட பல லட்சம் ஹெக்ட்டர்களில் பாசனம் முதல் முறையாக செய்ய படுகிறது . மத்திய பிரதேசத்தில் , குஜராத்தில் விவசாயத்தின் உற்பத்தி கூடுதல் ஆகும் . UP நிச்சயம் அந்த நிலைமைக்கு வரும் .

  தமிழ் நாட்டில் முக்கியமான காரணமான , மணல் கொள்ளை ( அதில் ஈடுபட்டவரே அங்கு போராட்டம் செய்கிறார் ) , ஏரி , குளம் போன்றவைகளை தூர் வாராமல் இருப்பது , புதிய நீர் நிலைகளை ஏற்படுத்தாமல் இருப்பது …இப்படி எல்லா முக்கிய காரணங்களும் இங்கே , ஆனால் போராடுவது அங்கே . இது எந்த ஊர் நியாயம் ? .

  அதாவது இப்போ உ.பி இல் , யோகி வந்த பின்பு , ரோமியோ படை மூலம் , வம்பு செய்யும் வாலிபரை /ஆண்களை பிடித்து – ஓரளவுக்கு இப்போ பெண்கள் தொந்தரவு இல்லாமல் வெளியில் சென்று வருகிறார்கள் . ஏதோ ஓன்று , இரண்டு இடங்களில் , ( 20 கோடி மக்கள் ) அத்து மீறல்களுக்கு யோகி தான் காரணம் , பெண்கள் நிலைமை மிக மோசம் , யோகி தான் காரணம் என்று நீங்களும் எழுதுவீர்கள் , டிவியில் கத்துவார்கள் . உங்களை எல்லாம் மாற்றவே முடியாது

  • இளங்கோ சொல்கிறார்:

   Sundar Raman

   // உங்களை எல்லாம் மாற்றவே முடியாது //
   ( இது உங்களுக்காக நீங்களே எழுதிக்கொண்டது போலும் )

   மோடிக்கு கூஜா தூக்கவும், வறட்டு தத்துவம் பேசவும் தவிர
   வேறு என்ன தெரியும் sundar raman ? விவசாயிகளின் கோரிக்கை
   என்னவென்றாவது தெரியுமா ?

   தமிழக விவசாயிகள் போராடுவது முக்கியமாக
   3 விஷயங்களுக்காக

   1) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க

   2) நதிகளை இணைக்க

   3) தமிழக விவசாயிகளின் வங்கிக்கடன் களை ரத்து செய்ய

   சுப்ரீம் கோர்ட்டே சொல்லியும் கர்நாடகா எலெக்ஷனை கருத்தில் கொண்டு
   காவிரி ஆணையம் அமைக்காமல் காலந்தாழ்த்துகிறார் மேடிஜி..

   நதிகளை இணைக்கும் விஷயத்தில் கடந்த 3 ஆண்டுகளில்
   மத்திய அரசு என்ன செய்து கிழித்தது ?

   தாது வருஷ பஞ்சத்துக்குப் பின் வரலாறு காணாத வறட்சியை
   சந்தித்து வருகிறது தமிழ்நாடு. வங்கிக்கடன் களை ரத்து செய்யவோ,
   குறைக்கவோ மத்திய அரசு ஏன் முன்வரவில்லை ?

   பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏதோ பெரிதாக பி…. கிழித்து விடுவார்கள்
   என்று மக்கள் நினைத்தது தவறு என்பதை நன்றாக உணர்த்தி விட்டீர்கள்..
   நீங்கள் எல்லாம் இங்கே எழுதலாம். டிவியில் கத்தலாம்.
   தெருவில் இறங்கி நாலு பேரிடம் பேசுங்கள் பார்க்கலாம்.
   ALL INCORRIGIBLE JAALRAAS.

   • Sundar Raman சொல்கிறார்:

    இங்கே வறட்டு தத்துவம் என்னவோ …சொன்னால் தெளிவடைவேன் . காவேரி மேலாண்மை அமைத்தால் மட்டும் போதுமா – நம் மாநிலத்துக்குள் உள்ள நதிகளை இணைக்க என்ன செய்தார்கள் ? காவேரி பாசனம் இல்லாத இடங்களில் விவசாயிகள் என்ன செய்து , எப்படி உழுது , எப்படி தங்களை காத்து கொள்கிறார்கள். டாஸ்மாக்கும் , சினிமாவும் மோடி கொண்டு வந்ததா , இது இரண்டும் தானே , விவசாயத்துக்கு வேலையாள் கிடைக்காமல் – பெரிய தடையாக இருப்பது . வங்கி கடன் மட்டும் தான் காரணமா ? இந்த நிலைமைக்கு …மணல் கொள்ளை, செயற்கை உரம் , அடிமாட்டுக்கு கால்நடைகள் விற்பனை , பூச்சி மருந்து ….இது போன்ற காரணங்கள் இல்லையா.

    • இளங்கோ சொல்கிறார்:

     சுந்தர் ராமன்

     கரெக்டாக ப்ரூவ் பண்ணி விட்டீர்கள்.
     இதே எஸ்கேப் தான் பாஜக ஜால்ரா எல்லாரும்;
     நான் கேட்டது காவிரி மேலாண்மை வாரியம்
     ஏன் அமைக்கவில்லை என்று.
     அதற்கு பதில் சொல்ல உங்களால் முடியவில்லை.
     அமைத்தால் மட்டும் போதுமா என்று கேட்கிறீர்கள்.
     நான் கேட்டது நதிகளை இணைக்க
     என்ன கிழித்தீர்கள் என்று – பதிலே காணோம்.

     நான் கேட்டது வங்கிக்கடனில் ஏன் உதவவில்லை என்று
     பதில் வங்கிக்கடன் மட்டும் தான் காரணமா எங்கிறது.
     வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
     INCORRIGIBLE JAALRAAS களிடமிருந்து ?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      என் சுமையை குறைக்கும் இளங்கோவிற்கு நன்றி.
      ஆனாலும் இவ்வளவு சூடு வேண்டாம்…. 🙂 🙂

      சுந்தர்ராமன்,

      உங்கள் வாதம் எல்லாமே சொதப்பல்.
      கண்களை மூடிக்கொண்டு மோடிஜியை
      ஆதரித்தால் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியது தான்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சுந்தர்ராமன்,

      சொல்ல நினைத்தேன் – விடுபட்டுப் போனது…

      காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது
      மோடிஜி தமிழ்நாட்டுக்கு இழைக்கும் பச்சை துரோகம்.

      காவிரி பாயும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த நீங்கள்
      கண்களை மூடிக்கொண்டு இந்த விஷயத்திலும் மோடிஜியை
      ஆதரிப்பது தமிழராகப் பிறந்தும் தமிழ் மண்ணுக்கு நீங்கள்
      செய்யும் துரோகம்.

      -காவிரிமைந்தன்

  • R KARTHIK சொல்கிறார்:

   நீங்கள் சொல்வது ஒரு அளவிற்கு சரி, ஆனால் இவ்வளவு போராட்டம் செய்றவங்கள தில்லியில் பார்க்காதவர் இங்க ஒரு சிலை திறப்பு விழாவிற்கு வந்தது சரியா?

   மத்திய பிரதேசம், குஜராத் ஒற்றுமையால் நர்மதா திட்டம் சாத்தியம் ஆகுது. இங்க கர்நாடகாவையும் தமிழ்நாட்டையும் எங்க சேர விடுறீங்க.

   வயசானவங்க அங்க போராடுறாங்க, வயசுக்காவது மரியாதை வேண்டாம். சின்னப்பிள்ளை கால்ல விழுந்து மரியாதை தந்த வாஜ்பாய் எங்க …

 4. Sundar Raman சொல்கிறார்:

  மேலும் முத்ரா லோன் மூலம் சின்ன சின்ன தொழில் செய்யலாம் – அதற்க்கு அடகு வைக்க வீடோ அல்லது வேறு சொத்தோ தேவை இல்லை . நாட்டில் மின் உற்பத்தி ஓரளவுக்கு உயர்ந்திருக்கிறது , அதன் மூலம் பம்ப் செட் இயங்க முடியம் . நரேகா திட்டம் மூலம் கூடுதல் வேலை வாய்ப்பு. நாட்டில் பணமே இல்லாமல் ஆகப்போகிறது என்ற கிளப்பிய ஆட்கள் – வேறு ஏதாவது காரணம் கண்டு பிடிக்க காத்திருக்கிறார்கள். ஆக்க பூர்வமாக ஏதேனும் சொல்லுங்கள் , அரசும் அதை நிச்சயம் அமல் படுத்தும் .

  எனக்கும் இந்த அரசு மேல் – மோடி மேல் ஒரு புகார் உண்டு – சிதம்பரம் , கார்த்தியை இன்னும் உள்ளே அனுப்ப வில்லை ( எதோ நடக்கிறது , போதாது ) , மாறன் , ஜெகன் ரெட்டி , பெப்பர் ஸ்பிரே ரெட்டி , ஷரத் பவார் , இன்னிக்கி இன்னொரு ரெட்டி ( பாலாஜி டிஸ்டெல்லரி) … இவங்களை எல்லாம் ஒரு பிடி பிடிக்கணும் . கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம் .

  • Sundararaman சொல்கிறார்:

   KM sir, it’s OK… I come and post my comment because you allow it. Neither Elango nor you contested facts… How can linking river can by done in a national level immediately… It’s long term project. Just open your eyes and see how AP linked kothavari and Krishna, where as you do post about his son’s crores. Sand mafia, fertilizer, pesticide, not going for natural farming is also the major issue. I did say that not just linking, Narmatha dam was made and a new river brought to Gujarat. As far as writing off loans… First realize that TN fails to insure the farmers unlike it’s neighbor… I had also commented that Modi anti corruption action is not sufficient ( at all).
   Crop insurance, soil testing, neem coating, mudra loan, conversion of waste in to manure, swatch Bharat, gas to women folks in rural area….. All this is happening and will change the rural life.

 5. A.Thiruvengadam சொல்கிறார்:

  Sundar ramen has forgotten another fact.In the last twenty years how many tanks lakes and other water storage an minor irrigation reservoirs were encroached and converted into housing complexes.Linking of Cauvery with GNga was mooted by Rao in 1960s and was shot down by all the states and water guzzling cash crops also played their role for the tragedy. Some of the actions could have been taken by the political groups jointly when the were kingmakers. Even the agriculturists who were allowed the encroachment and filling up water sources are also to be blamed.Thiruvengadam

 6. selvarajan சொல்கிறார்:

  சாதனைப்பட்டியல் தொடருமா … ? // மத்திய அரசுத் துறைகள் மீதான ஊழல் புகார்கள் 67% அதிகரிப்பு: சிவிசி // http://www.dinamani.com/india/2017/apr/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-67-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-2684031.html …. வந்த புகார்களே இப்படி என்றால் கொடுக்காமல் விட்ட புகார்கள் எவ்வளவோ … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.