மனதுக்கு பிடித்த சில ஹிந்தி பாடல்கள்…. ( என் விருப்பம் – 8 )சில நல்ல ஹிந்தி பாடல்கள்…
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை….

“ஆந்தி” (புயல்…) – இந்த ஹிந்தி படம் எமெர்ஜன்சி
காலத்தில் வெளிவந்தது. புகழ்பெற்ற படைப்பாளி –
குல்சார் -ன் ஆக்கம். அன்னாள் பிரதமர் இந்திரா
காந்தி மற்றும் அவரது கணவர் ஃபெரொஸ் காந்தி
ஆகியோரின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதாக
அமைந்த காரணத்தால் – இந்திரா அரசு இந்த படத்தை
திரையிடப்பட்ட சில நாட்களிலேயே தடை செய்து விட்டது.
(நான் அதற்குள்ளாகவே பார்த்து விட்டேன்…!!)

அந்த படத்தில் இந்திராவிற்கு எதிராக எதுவுமே இல்லை…
மிக இயற்கையான கதை…படம்…. தேவையற்ற தடை…!
சில வருடங்களுக்குப் பிறகு, ஆட்சி மாறிய பிறகு இந்த
படத்தின் மீதான தடை விலக்கப்பட்டது…!

நீண்டகால பிரிவிற்குப் பிறகு, எதேச்சையாக சந்திக்க
நேரிடும் கணவனும் – மனைவியும் ….
தங்கள் தேவையில்லாத பிரிவை நினைத்து
வருந்துகின்றனர்…..

(படத்தில் சஞ்சீவ் குமார் மற்றும் சுசித்ரா சென் –
நிஜத்தில் – ??? ஃபெரொஸ் காந்தி மற்றும் இந்திரா…!!!)
(ஆர்.டி.பர்மன் இசையில் கிஷோர்குமார், லதா…)

———————–

1991-ல் வெளிவந்த ம்யூசிகல் ஹிட் – “சாஜன்”
நதீம் – ஷ்ராவன் இசையமைப்பு ….
மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், சல்மான் கான் நடித்தது…

மாதுரி தீக்ஷித்தின் இளமையும், அழகும் பொருந்திய
இயற்கையான நடிப்பு, அருமையான
வண்ணக்கலைவையுடன் கூடிய சிறந்த ஃபோட்டோகிராபி –

அனுராதா பொடுவால் பாடிய ஒரு பாடல்…
“பஹுத் ப்யார் கர்தே ஹைன் துஜ்கோ சனம்…

—————

ராஜபுதன ஹிந்து இளவரசி ஜோதா பாய், அரசியல்
காரணங்களுக்காக மொகலாய மன்னன்
அக்பரை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது…

கணவன், மனைவியிடையே சரியான புரிதல்
இன்னும் ஏற்படாத நிலை – அக்பரின் உறவினர்கள்
அவர் மனதைக்கலைக்க முயற்சிக்கும் நேரத்தில் –
ஜோதாவின் – கண்ணனை வேண்டும் இனிய பாடல்
இருவரையும் இணைய வைக்கிறது….

ஏ.ஆர்.ரெஹமான் இனிய இசையில் –
“மனமோகனா…..”
( ஜோதாவின் அத்தனை பாடல்களுமே இனிமை…)

————–

இதே ஜோதா அக்பர் படத்தில் எனக்கு பிடித்த
இன்னொரு பாடல் – “க்வாஜா மேரே க்வாஜா”

அற்புதமான சுஃபி இசையில் –
உணர்வுபூர்வமான ஒரு காட்சி –
பாடலுக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்கிற அவசியமே
இல்லை…. உணர்வுகளே உணர்த்தி விடும்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to மனதுக்கு பிடித்த சில ஹிந்தி பாடல்கள்…. ( என் விருப்பம் – 8 )

  1. Ramesh சொல்கிறார்:

    Sir,

    I love all whatever you write.
    Everything you write is interesting.
    So these songs also.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.