அவசரமாக விசாரிக்க வேண்டும் “திஹார்”-ல் ” விலைவாசி ” எப்படி இருக்கும் …?

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும்,
உயர்நீதி மன்றத்தையும் வாங்குவது இவர்களுக்கு
பெரிய காரியமே அல்ல என்று போனவாரம் தான்
இங்கு எழுதினோம் ….

நாம் மிகச் சிறிய மனிதர்கள்…
மிகவும் குறுகிய வட்டத்திலேயே யோசித்திருக்கிறோம்..
எலெக்ஷன் கமிஷனையே வாங்க முயற்சி
செய்திருக்கிறாரே அண்ணன்….!!!

ஐம்பது கோடியாவது, அறுபது கோடியாவது –
ஒரு பைஎலெக்ஷனுக்கே 89 கோடி செலவு
செய்யக்கூடியவர்களுக்கு இதெல்லாம் “சில்லி” மேட்டர்…?
—–

யாரது சுகேஷ்…?
அப்படியா சொன்னார்கள்…?
நான் பார்த்ததே இல்லையே…
பார்த்ததே இல்லை என்கிறேன் –
அப்புறம் தெரியாதவரிடம்
எப்படி பேசியிருக்க முடியும்…?
யாரோ சதி பண்ணுகிறார்கள்…
சம்மன் தானே… வரட்டும்… சட்டப்படி சந்திப்பேன்…!!!
———-

டெல்லி போலீஸ் இன்று கைது செய்திருப்பதால்,
இன்று தான் அதற்கு விஷயம் தெரிய வந்திருக்கிறது
என்று அர்த்தமல்ல….

முன்னரே மோப்பம் பிடித்து ( அனேகமாக எலெக்ஷன்
கமிஷனிலிருந்தே, இந்த சின்னத்தை வாங்கும் முயற்சி
தொடங்கும்போதே, கிரைம் பிரான்ச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும்…)
டெல்லி க்ரைம் பிரான்ச் தொடர்ந்து இந்த ஆளை
கவனித்து, அவன் நடவடிக்கைகளை கவனித்து –
பொறி வைத்து, கையும் களவுமாக –
பணத்துடன்பிடித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே நான்கு முறை அண்ணனை அவன்
சென்னையில் நேரில் சந்தித்து “டீல்” பேசி
முடித்திருக்கிறான். நேற்று, 40 நிமிடங்கள் இருவரும்
தொலைபேசியில் பேசியதன் ரெக்கார்டு க்ரைம் பிரான்ச்
வசம் இருக்கிறது என்று தெரிகிறது …!!

துணை கமிஷனர் டெல்லியிலிருந்து கிளம்பி விட்டாராம்…
ஆனால், சென்னையில் கைது இருக்காது….
டெல்லியில் வைத்து விசாரணை துவங்கிய பிறகு தான்
என்று சொல்லப்படுகிறது ….

இதற்குள்ளாகவே அண்ணன் தரப்பில் முயற்சிகள்
தொடங்கி இருக்கும்…
“திகாரி”-ல் விலைவாசி எப்படி இருக்கும்….?
யாரை, எங்கே பிடிக்க வேண்டும்…?

இது இந்தியா தானே….?
காசு செல்லாத இடம் உண்டா சார்…?
விலைக்கு கிடைக்காத வசதி உண்டா சார்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அவசரமாக விசாரிக்க வேண்டும் “திஹார்”-ல் ” விலைவாசி ” எப்படி இருக்கும் …?

 1. hari சொல்கிறார்:

  Now they will be checking the rate of the Crime Branch, Thats it, very simple

 2. Sundar Raman சொல்கிறார்:

  I am really at a loss , Cant’t these IT /ED catch these people who flash their foreign cars and expensive lifestyle , can’t they ask – where is the money from ? Shame on IT circle Chennai . Shame on CA’s if any one is associated with him or helped him to file returns etc.,

  With these kind of people in helm of affairs – IT can not do anything on PC, Karthik, Maran,Sashikala & gang and Jagan Reddy, . It they have not touched Sukesh how will they go anywhere near to big fish. And KM sir , you were saying IT people are going harass ,

  Biggest challenge is Bureaucracy .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுந்தர்ராமன்,

   // And KM sir , you were saying IT people are going harass ,
   Biggest challenge is Bureaucracy //

   ————-

   Income Tax Department,
   Enforcement Directorate –
   இவை எல்லாம் எந்த அமைச்சரின்
   அதிகாரத்தினுள் வருகின்றன…?
   இவர்களை எல்லாம் control செய்யாமல் –

   திறமையற்ற அதிகாரிகளை,
   ஊழல் அதிகாரிகளை தூக்கிஎறியாமல்
   அதே இடத்தில் வைத்துக் கொண்டிருப்பது ஏன்..?
   உங்கள் கண்களுக்கே தெரிய வரும் குறைகள் –
   சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, பிரதமருக்கோ
   தெரியாதா…?

   தெரிந்தும், குறைகளை களையாமல் –
   அமைச்சர் வாயில் விரலை வைத்து
   சப்பிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு
   இருப்பது ஏன்…?
   அதே அதிகாரிகள், அவர் சொல்லும் மற்ற
   வேலைகளை அவருக்கு வசதியாக செய்து
   கொடுப்பதால் தானே…?

   நல்லது நடந்தால், அமைச்சருக்கு credit,
   பிரதமருக்கு credit –
   நிர்வாகத் திறமையின்மை என்றால்,
   ஊழல் என்றால், அதிகாரிகள் காரணமா..?

   Central Vigilance Commissioner-ஐ
   தேடி கண்டுபிடித்து, குஜராத்திலிருந்து கூட்டி
   வந்தவர் யார்…?
   அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்…?

   காரில் தொங்கிக்கொண்டு ஊர் ஊராக
   சுற்றிக் கொண்டிருக்கவா மக்கள் அவரை
   தேர்ந்தெடுத்தனர்…?

   சரியான அதிகாரிகளை,
   சரியான இடத்தில் அமர்த்தி,
   சிறப்பாக நிர்வாகம் நடத்தாமல் –

   ஆட்சிக்கு வந்து பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள்
   ஆன பின்னும் ஊழல் நிர்வாகத்தை சீரமைக்க
   துப்பில்லாமல் –
   அதிகாரிகளை காரணம் காட்டுபவர்களை,

   கண்டிக்க மனமின்றி சப்பைக்கட்டு கட்டும்
   கண்மூடி ஆதரவாளர்கள்
   இருக்கும் வரை நிர்வாகம் இப்படித்தான் இருக்கும்…

   நிர்வாகச் சீர்கேட்டுக்கு யார் காரணம்…?
   சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பில்லையா…?
   அவரை அந்த பதவியில் நியமித்தவர் பொறுப்பில்லையா..?

   என்னை கேள்வி கேட்டு என்ன பயன்…?
   உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் –
   இந்த சீர்கேடுகளை களையத் தெரியாதவர்களை
   இனியும் கண்மூடித்தனமாக
   பாராட்ட வேறு வேண்டுமா என்று…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sundararaman சொல்கிறார்:

    Sure…. Jaitley is the weakest link in the whole set up.

    But to clear all corruption from all the Governance… Punish everyone is not possible humanly… I still hope very strong action is taken against the big fish. Public knows whether Modi is hanging or working tirelessly for public…. Your conclusion is out of frustration, I don’t know for what.

    Judiciary and Bureaucracy is a major problem.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     // Your conclusion is out of frustration,
     I don’t know for what. //

     Frustration அல்ல ANGER …

     எப்போதெல்லாம் –
     ஒரு நடிகர் அரசியல் பேசத்துவங்குகிறாரோ –

     எப்போதெல்லாம் –
     ஒரு அரசியல்வாதி நடிக்கத் துவங்குகிறாரோ –

     அப்போதெல்லாம் ஏற்படும் கோபம்….!
     உணர்ச்சியுள்ள சாதாரணனுக்கு ஏற்படும் கோபம்…

     உங்களுக்கு புரியாது…
     வேறு விஷயங்கள் உங்கள் கண்களை மறைக்கின்றன…

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • Sundar Raman சொல்கிறார்:

      உங்களுடைய உணர்வுகள் புரிகின்றது ,

      நிச்சயமாக , இரு கருத்துக்கு இடமே இல்லாமல் , ஊழல் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் . அதற்கான தைரியம் வேண்டும் , மோடி அவர்களின் கடந்த காலத்தை பார்க்கும் பொழுது , 12 ஆண்டுகள் முதல் அமைச்சராக , ஊழல் இல்லாத ஆட்சியை தந்தாலும் , சிறிய அல்லது பெரிய ஊழல் பெருச்சாளிகளை தண்டித்தாக செய்திகள் இல்லை ( அல்லது எனக்கு தெரிய வில்லை ) …பெரிய அளவுக்கு ஊழல் இல்லாமல் பார்த்துக்கொண்டார் . அதே பழக்கத்தை ( formula ) , மத்திய அரசிலும் பின்பற்ற பார்க்கிறார் , இந்த ஒரு ஸ்டைல் எடுபடாது , இப்போது உங்களை போன்றோர் , கொஞ்ச நாள் கழித்து என்னை போன்றோர் என எல்லாரும் அவருக்கு எதிராக திரும்புவார்கள் .

      ஆகவே மனதை திட படுத்தி – நீதி மன்றத்தை கூட்டிக்கொண்டு , இந்த ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும் திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் .

      அப்படி இல்லை என்றால் கெஜ்ரிவால் போன்ற நிறய கோமாளிகள் உருவெடுப்பார்கள்

 3. selvarajan சொல்கிறார்:

  சுகேஷ் சந்திரா — பலே கில்லாடி — அவரது குற்றங்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் பெயர்களையே உபயோகப்படுத்தி இருப்பதும் — ஆனால் எந்த அரசியல்வாதியும் தனிப்பட்ட முறையில் – தங்களின் பெயரை பயன்படுத்தியதற்கு ” எந்த புகாரும் ” இவர் மீது பதியாமல் இருந்ததற்கு — காரணம் என்ன என்பதும் புரியாத புதிர் ,,, ? …

  // மோசடி மன்னனாக வலம் வந்த சுகேஷ் சந்திரா யார்? அதிரவைக்கும் ஷாக் ரிப்போர்ட் // http://www.dinamani.com/india/2017/apr/17/who-is-this-sukesh-chandra-2686021–1.html . தோண்டினால் இன்னும் பல கட்சி பிரமுகர்கள் பலரும் மாட்டுவார்களா ….?

 4. புதியவன் சொல்கிறார்:

  அரசு இயந்திரத்தில் அதிகாரம் படைத்தது போலீஸ். அடுத்தது நீதிமன்றங்கள். அரசியல்வாதிகள் இதனை MANIPULATE செய்வதால்தான் அவற்றில் குறை ஏற்படுகிறது. மாறனின் தொலைதொடர்பு வசதியை சன் தொலைக்காட்சிக்கு ஏற்படுத்திச் செய்த பி.எஸ்.என்.எல். ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பவர், அப்போது சென்னை பொது மேலாளராக இருந்தவர். குற்றம் புரிபவர்களுக்கும் (அது டிரக்ஸ் ஆகவோ அல்லது கள்ளச்சாராயமாகவோ, பாலியல் சம்பந்தமானதோ அல்லது என்ன வகைக் குற்றமாக இருந்தாலும்) அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்தக் குற்றங்களைச் செய்யாதவர்களே கிடையாது என்பதால், அரசியல்வாதிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் காட்டிகொடுப்பதில்லை. (எந்த திசையிலிருந்தும் விஷத்தைக் கக்கும் சு.சுவாமி போன்றவர்களும் சந்திராசாமி நரசிம்மாராவ் போன்ற பலரைப் பற்றியும் வெளியில் சொல்லுவது கிடையாது).

  இன்றைக்கும் தினகரனின் லீலைகள், அரசியல் ரீதியாகத்தான் வெளியில் வருகின்றன. திருடனோ, கொள்ளைக்காரனோ, சட்டம் என்ன சொல்கிறது.. கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஆதரிப்பவர்தான் கட்சியின் RECOGNIZED தலைவர் (அல்லது நிர்வாகி). ஆனால் தினகரனுக்கு ரெட்டை இலை இல்லை. 12 பேர் மட்டும் ஆதரிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் தினகரன் கும்பலுக்கும் ஒரே மரியாதை. ‘மன்னார்குடி கும்பல் மாஃபியா’ என்பதால், நாம் இந்த நிலைப்பாடை ஆதரிக்கிறோம். ஆனால் இது சட்ட ரீதியாக சரியானதல்ல. நம்ம ஊரில் எல்லா முடிவுகளும் அரசியல்ரீதியானதுதான். இல்லாட்டா, எப்படி நாம, ரிடையர் ஆன தலைமை நீதிபதி உடனேயே கவர்னராக நியமிக்கப்படுவதை சரி என்று சொல்லமுடியும்? அதேபோன்று, நாராயணன் (வி.பு. வழக்கில் முனைந்திருந்தவர், ஸ்ரீலங்காவுக்கான அரசியல் ரீதியான கொள்கை முடிவுகளை பரிந்துரைப்பவர்) எப்படி கவர்னராக முடியும்?

  இன்றைக்கு தினகரனின் செய்கைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன என்றே நான் நினைக்கிறேன் (அயோக்கியர்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், இவர்கள் மட்டுமே அயோக்கியர்கள் இல்லை. உண்மையில் யோக்கியர்களை பூதக்கண்ணாடி கொண்டுகூட கண்டுபிடிக்க முடிவது கடினம், இந்திய அரசியலில்). தேர்தல் கமிஷனோ அல்லது சி.பி.ஐயோ அல்லது மற்ற அரசு இயந்திரங்களோ – எல்லோருமே அரசியல்ரீதியான முடிவுகளையே மேற்கொள்ளுகிறார்கள். நியாயம் என்பதை யாரும் பார்ப்பதில்லை.

  அரசியல்வாதிகளில் நடிக்கத் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு வேளை குழந்தை ராகுலுக்கு அவ்வளவு நடிப்புப் பயிற்சி போதாதாக இருக்கலாம். ப.சி பேசிக் கேட்டுப்பாருங்கள். யோக்கியர் போலவே பேசுவார். கருணானிதி கும்பல், ஊருக்கெல்லாம் குறி சொல்லும் பல்லி.

  அது கிடக்கட்டும். நான், அதிமுக இரு அணி சேரும் திட்டத்தில் ஏதோ ஒரு பிளான் இருப்பதாக நினைக்கிறேன். ஓபிஎஸ் இன்னும் தலைவர் இடத்துக்கு வரவில்லை. ஒருவேளை பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் (அதிமுக தொண்டர்களால்) அது சாத்தியமாகலாம். ஒரு RECOGNIZED தலைவர் இல்லாமல், ‘குழு’ வை அமைத்து ஆட்சி செய்வது, குறைந்த கால நிவாரணம், ஆனால் அதிமுகவுக்கு அது நன்மை செய்யாது. அதிமுக தொண்டர்களால் பொதுச் செயலாளராக யார் நியமனம் பெற்றாலும் (ஓபிஎஸ்தான் வருவார் என்று நினைக்கிறேன்), அவர்கள் உடனேயே மன்னார்குடி கும்பலைத் துரத்துவது மட்டுமல்லாது, அவர்களுக்காகக் கட்சியைக் காட்டிக்கொடுத்த வளர்மதி, ஓ.எஸ் மணியன், சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில், சி.வி.சண்முகம் போன்ற புல்லுருவிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும். இல்லாவிட்டால், சின்னம் கிடைத்தபிறகு அதிமுகவை மன்னார்குடி கும்பல் கைப்பற்றிவிடும். (எப்படிக் கைப்பற்றும்? வேற என்ன.. கொள்ளையடித்த காசை வைத்துத்தான். அதனால்தானே, கேவலம் 2 பாட்டில் விஸ்கிக்காக தன் தன்மானத்தையே சி.வி.சண்முகம் அடகுவைத்தார்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.