திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அன்று எம்ஜிஆரின் மனநிலை ….

மக்கள் யாரை நினைத்து,
எதை எதிர்பார்த்து –
தங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்பதைப்பற்றி
சற்றும் கவலைப்படாமல்,
மக்கள் என்ன நினைக்கிறார்கள்
என்பதைப்பற்றி சற்றும் யோசனையே செய்யாமல்,

ஆட்சி கையில் இருக்கிறது, அதிகாரம் கையில்
இருக்கிறது – பணம் இருந்தால் போதும் –
எதையும் செய்ய முடியும்… யாரையும் விலைக்கு
வாங்கிவிட முடியும்…யார் தங்களை என்ன செய்து விட
முடியும் என்கிற இறுமாப்பில் அலைந்து
கொண்டிருந்தவர்கள் –

இன்று அந்த ஆட்சி, அதிகாரம் பறி போகும் சூழ்நிலை
உருவானவுடன் எதை வேண்டுமானாலும் விட்டுக்
கொடுக்கவும், யார் காலில் வேண்டுமானாலும்
விழத் தயாராகவும் அலைவதைப் பார்க்கும்போது –

இந்த கேடுகெட்ட சுயநலவாத அரசியல் கும்பலுக்காகவா
எம்.ஜி.ஆர். அன்று கட்சியை உருவாக்கினார் என்று
தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை……

—————–

நாகராஜ ராவ் தான் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆஸ்தான
ஸ்டில் புகைப்படக்காரர். பின்வந்த காலங்களில்,
அவரது மருமகன் சங்கர் ராவ் எம்.ஜி.ஆர். படங்களில்
பணி புரிந்து வந்தார்.

ஒரு சமயம் தனக்கு ஹிரண்யா ஆபரேஷன் நிகழ்ந்தபோது
எம்.ஜி.ஆர். செய்த உதவியைப்பற்றியும், தொடர்ந்து

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அன்று எம்.ஜி.ஆர்.
அவர்களின் மனநிலையைப் பற்றியும், கூடவே இருந்து
பார்த்த சங்கர்ராவ் கூறும் ஒரு கட்டுரை கிடைத்தது…

இன்றைய தினம் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்பினேன் – கீழே….


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அன்று எம்ஜிஆரின் மனநிலை ….

 1. தமிழன் சொல்கிறார்:

  முன்பே இதனைப் படித்திருக்கிறேன். மற்றவர்கள் எழுதியதையும் (என்ன நிகழ்ந்தது என்று) படித்திருக்கிறேன்.

  எம்ஜியார் கொஞ்சம்கூடக் கலங்கவில்லை. எல்லோருக்கும் லட்டு வினியோகம் பண்ணணும் என்றார். வீட்டில் பாயாசம் செய்து அனுப்பச் சொல்லி படப்பிடிப்பின்போது பகிர்ந்துகொண்டார்.

  எம்ஜியார் எப்போதும் பொதுவெளியில் தன்னுடைய பிம்பத்தை நல்லவிதமாகக் கட்டமைப்பவர் (இயல்பாக நல்லவராகவும் ஏழைக்கு இரங்கும் மனம் பெற்றவராயிருந்தபோதும்). அதனால்தான், கடுமையான சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியபோதும், கூட்டமேடைக்கு துள்ளலுடன் ஏறி வந்தார்.

  கருணானிதிக்கு, விதி, எம்ஜியார் ரூபத்தில் வந்தது. ஒரு சமயத்தில் மிஞ்சி இருந்த அன்பழகனும் போய்விடுவாரோ என்ற கவலையில் இருந்தார் கருணானிதி. இதுல எனக்கு என்ன அதிசயமாத் தோணுது என்றால், பேச்சில் வல்லமை பெற்ற கருணானிதியால், மக்களிடம் ‘தான்’ நல்லவன் என்பதை விதைக்கவே முடியவில்லை. பேச்சு வல்லமை இல்லாத எம்.ஜி.யார் சொன்ன எல்லாவற்றையும் மக்கள் நம்பினார்கள். ‘எம்ஜியார்’ மோசமானவர் என்று 99%பேர் சொல்லமாட்டார்கள். கருணானிதி ‘வல்லவர்’ என்று சொல்லும் கருணானிதியின் ஆதரவாளர்களே, அவர் ‘நல்லவர்’ என்பதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

  “இந்த கேடுகெட்ட சுயநலவாத அரசியல் கும்பலுக்காகவா
  எம்.ஜி.ஆர். அன்று கட்சியை உருவாக்கினார்” – இந்த எண்ணம் தவறு. எம்ஜியார் கட்சி உருவாக்கியதன் நோக்கம் கருணானிதி பதவிக்கு வரக்கூடாது என்பதே. அந்த நோக்கத்தை, அவரது வழித்தோன்றலான ஜெ. அவர்கள் மறையும்வரை, நிறைவேற்றினார்.

  ஸ்டாலின் ‘நல்லவர்’ என்ற பிம்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ‘திமுக’வும் மக்களின் அபிமானத்தைப் பெறவில்லை. சூரியன் இருக்கும் வரை, சந்திரன் துவக்கிய கட்சி (அல்லது திமுகவைத் தோற்கடிக்கக்கூடிய கட்சி) தமிழகத்தில் இருக்கும்.

  • mekaviraj சொல்கிறார்:

   எனக்கு எப்போதும் மனதில் இருக்கும் ஒரு கேள்வி – எம்.ஜி.ஆர் ஏன் தனது கடைசி காலத்தில் கூட தனக்கு பின் கட்சியின் எதிர்காலம் குறித்து எதையும் யோசிக்கவில்லை ??

   • தமிழன் சொல்கிறார்:

    எம்ஜியார் மட்டுமல்ல, பொதுவாகவே பல தலைவர்கள், தங்களுக்கு அடுத்தது யார் வருவார்கள் என்று அடையாளம் காட்டுவதில்லை. கம்யூனிஸ்டுகளிடம்தான் அந்த ஒரு தேவையான ஒழுங்கைப் பார்க்கிறேன். அதாவது, apt person கட்சியின் Elite உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது, அதை அனேகமாக அனைவரும் ஒத்துக்கொள்வது. அரசியலில், இரண்டாம் கட்ட, மூன்றாம்கட்டத் தலைவர்கள், அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், இரண்டு இடங்களிலும் Power base இருப்பதனால் தடுமாறுவார்கள் (தலைவர், அதற்குப் பின்னால் தலைமை ஏற்றுக்கொள்பவர்). இதனைப் பல கட்சிகளில் நாம் பார்க்கிறோம். இன்னொரு காரணம், Survival of the Fittest. அதாவது எம்ஜியார், ஜெ. போன்றவர்கள், அடுத்து சரியான தலைமையை மக்கள் காட்டுவார்கள் என்று தைரியமாகக் கட்சியை விட்டுச்செல்வது. இப்போதும் நான் நம்புவது, அதிமுக என்ற கட்சி சரியான நபரிடம் போய்ச்சேரும், அதனை மக்கள் உணர்த்துவார்கள் என்பது. காங்கிரஸ் போன்று ராகுலிடம் கட்சியை விட்டுச் செல்வதும், அதன்மூலம் காங்கிரஸ் என்ற கட்சியையே அழிப்பதும், திமுக போன்று குடும்ப உறுப்பினர்களிடம் கட்சியை விடுவதும் என்னால் ஏற்க முடியவில்லை.

 2. Lala சொல்கிறார்:

  எம்ஜீஆரால் வந்ததுதான் இவ்வளவு வினையும்.
  அவரை நினைத்துப்பார்க்க வேண்டிய தேவை தமிழக மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

 3. புதியவன் சொல்கிறார்:

  எம்ஜியாரை, மகராசன் என்று நினைத்துப்பார்க்கவேண்டிய தேவை, அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் 40+% மக்களுக்கும், ‘ஐயோ நம்மைக் கொள்ளையடிக்கவிடாமல், தீயசக்தி என்று பெரும்பான்மை மக்கள் மனதில் பதியவைத்துவிட்டாரே’ என்று கருணானிதி மற்றும் அவர் குடும்பம், ஆதரவாளர்களும் (25%) இப்போதும் நினைத்துப்பார்க்கவேண்டிய தேவையுள்ளது. 65% தமிழக மக்கள் மூன்றில் இரு பங்குக்கும் மேல்.

  • Lala சொல்கிறார்:

   கருணா தீய சக்தி என்பதில் மாற்றுக் இருந்ததில்லை.
   ஆனால் அதற்கு மாற்றாக தியேட்டரில் தலைவனை தேடியதால்தான் தமிழகத்துக்கு இவ்வளவு சீர்கேடுகள் வந்தது.

  • Lala சொல்கிறார்:

   கருணாநிதிக்கு மாற்றாக வடிகாலாக வேறு வழியின்றி எம்ஜிஆரையும் ஜெயாவையும் மக்கள் தேர்ந்தெடுத்தார்களே தவிர அவர்களை மகராசன் மகாராணி என்று நினைத்தல்ல.

 4. Nalini சொல்கிறார்:

  I agree with Mr. tamilan. When you compare MGR with Karunaanithi , MGR is a much better person in many aspects. MGR did not want Jaya would be the next successor of ADMK, that happened with out his will after his death. Now, Jaya is gone with out second level leaders. No matter what Sasi and her Kumbal should be out of ADMK or they should ban for minimum 15 years from politics.. The next generation would select a different group, I hope. .

 5. புதியவன் சொல்கிறார்:

  நிறையபேர் என்ன நினைக்கின்றார்களென்றால், தமிழர்கள் திரையரங்குகளில் அவர்களின் முதல்வரைத் தேடுகிறார்கள் என்று. இது மக்களை மிகவும் இழிவாகப் பேசுகின்றவர்கள் பேசுகிற பேச்சு. ஒரு மேசையில் உட்கார்ந்துகொண்டு, அரசியல்வியாதிகள் ‘மக்கள் இதை நினைக்கிறார்கள், அதை நினைக்கிறார்கள்’ என்று கட்டுக்கதை விடுவதைப்போன்றது. கருணானிதி, தனக்கு வேண்டியபோது, தமிழர்கள் நெடிய வரலாறு உடையவர்கள், புத்திசாலிகள் என்று பேசுவார். மக்கள் புத்திசாலித்தனமாக அவரைத் தோற்கடிக்கும்போது, ‘சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என்பார். அதைவிட மோசமானது ‘திரையரங்குகளில் தலைவர்களைத் தேடுகிறார்கள்’ என்பது.

  எம்ஜியாரும் ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து வந்ததனால், மக்கள் அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்டார் என்று சொன்னால், ஏன் அவர்கள், ‘லதா’வையும், ‘வெண்ணிற ஆடை நிர்மலா’வையும், ‘எஸ்.எஸ். ராஜேந்திரனையும்’, ‘டி.ஆர்.ராஜேந்திரனையும்’, விஜயகாந்தையும், ஸ்டாலினையும், குஷ்புவையும் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை? கருணானிதியும் திரைத்துறை சம்பந்தப்பட்டவர்தானே.. பாவம் முதல்வர் பதவியை வகித்துக்கொண்டு, காசுக்காக சினிமா வசனம் எழுதினவர்தானே. வசனம் நன்றாக எழுதவேண்டும் என்பதற்காக, திரைத்துரையினர் மத்தியில் அமர்ந்து தனக்குத் தானே பாராட்டுக்கூட்டம் அமைத்துக்கொண்டவர்தானே.

  சரி.. ஏன் திரைத்துறையில் உள்ளவர்கள், அவர்களுக்கு மக்கள் சேவை செய்யும் தகுதி இருக்கும்போது, தலைவர்களாக வரக்கூடாது? அரசியல்வாதிகளாக வருவதற்கு M.A. Political Science படித்திருக்கவேண்டுமா? ‘மக்கள் சேவை’ செய்து மேலே பதவிக்கு வந்தவர்கள் யார் என்று இப்படி உளறுபவர்கள் சொல்வார்களா? ஒருவன் எந்தப் பின்னணியிலும் அரசியல்வாதியாகலாம். அவன் எப்போது நிஜமான தலைவர், நமக்கு நன்மை செய்வார் என்று மக்கள் நம்புகிறார்களோ, அப்போதுதான் அவர்கள் பெரிய இடங்களுக்கு வருகிறார்கள்.

  வேறு வழியின்றி எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறுவது மதியீனம். 6 கோடிப்பேர் தமிழகத்தில் இருந்தார்களே. அவர்களில் யாரையும் ஏன் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை? பெரும்பாலான கம்யூனிஸ்டுகள், மற்றும் பல போராளிகள், மக்களுக்காகத்தான் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். மற்ற போராளிக் குழுக்களாவது, பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவைகளை, ஜீரணிக்கமுடியாதவைகளை தங்கள் லட்சியமாகக் கொண்டவர்கள். 95%க்கு மேல், கம்யூனிஸ்டுகள் மக்களுடனே இருந்தவர்கள். சோற்றால் அடித்தாலும் சாணியால் அடித்தாலும் (தேர்தல் வெற்றி, தோல்வியைக் குறிப்பிடுகிறேன்) அதைப் பற்றிப் பெரிய கவலை இல்லாமல், எல்லா மக்கள் போராட்டங்களிலும் அவர்கள் கூடவே இருந்தார்கள். அப்படி இருந்தும், ஏன் மக்கள் எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா மேல் அன்பு வைத்திருந்தார்கள், தேர்ந்தெடுத்தார்கள்? ஏனென்றால், மற்ற எல்லோரையும் விட, எம்ஜியாரும், ஜெயலலிதாவும் சிறந்தவர்களாக (அந்த அந்தக் காலகட்டங்களில் அவர்கள் வெற்றி பெற்றபோது) மக்கள் நினைத்தார்கள். அந்த மக்கள் நினைப்பைக் கொச்சைப் படுத்தி எழுதுவதற்கு முன், தமிழக அரசியல் வரலாற்றை முழுமையாகப் படிப்பது நல்லது.

 6. Ramesh சொல்கிறார்:

  Mr.Laala –

  புதியவன் has given a beautiful explanation.
  Simply if you don’t like somebody, don’t denigrate them.
  Both MGR and Jayalalitha were loving
  the downtrodden from their heart. All their activities
  and programmes were oriented towards the lowest rung of
  the tamil soceity.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.